Tuesday, December 3, 2024
27 C
Colombo

முறையான வெளிநாட்டு பயணமும் தொழில்திறனும் இருந்தால் வேலை வாய்ப்பு வழங்கலாம்

இலங்கையில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டார்கள். இதனால் இக்கால பகுதியில் வேலை வாய்ப்புகளும் குறைவாகவே காணப்பட்டன.

ஒவ்வொருவரும் தனக்குத் தெரிந்த சிறு சிறு வேலைகளைச் செய்து கொண்டிருந்த வேளையில் தான் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பலர் வேலை வாய்ப்புகளைப் பெற்று சென்றனர் .

இத்தகையதொரு நிலையில் தான் குத்தூஸிக்கும் சவுதி செல்ல வாய்ப்பு தோன்றியது. ஊரிலூள்ள முபா கொன்ஸ்ரெக்ஸனுடன் சேர்ந்து பல வேலைகளைச் செய்த அனுபவங்களைப் பெற்றுக் கொண்டு லேபர் தொழிலுக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

மற்றவர்களுடன் சேர்ந்து வேலைகளைச் செய்வதிலும், கற்றுக் கொள்வதிலும் அனுபவம் கொண்டதுடன் முறையான தொழில் வழங்குநர் சேவைகளையும் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புக் கிடைத்தது. 

இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்ட அவர் லேபர் தொழிலாளியாக 1991 ஆம் ஆண்டு சவுதிக்கு சென்று அங்கு  poclain Operator  பொக்லைன் ஒப்ரேட்டராக வேலை செய்யும் அனுபவத்தையும் பெற்றுக் கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது.

அத்துடன் ஐந்து வருடங்களுக்குப் பின் தான் அங்கு பெற்ற கொண்ட அனுபவத்தோடு 1996 ஆம் ஆண்டு இலங்கையை வந்து அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்கான வழிகள் கிடைக்கப் பெறுகின்றன.

பொக்லைன் ஒப்ரேட்டருடன் (poclain operator)  டெலிவரி பொருட்களை ஏற்றி இறக்குவதிலும் அனுபவங்கள் பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்புக் கிடைக்கின்றது. 2004 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட சுனாமியின் போது கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களும் பலர் பாதிக்கப்பட்டனர்.

இதனை கருத்தில் கொண்டு இலங்கை அரசாங்கம் மத்திய கிழக்கு நாடுகளுடன் ஏனைய நாடுகளுக்கும்  செல்வதற்கான வசதியினையும் வாய்ப்பினையும் வழங்கின. இது இன்னொரு வகையில் அவுஸ்திரேலியா செல்வதற்கான வாய்ப்புகளை அதிகரித்தன. 

இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவுஸ்திரேலியா தூதரகத்துக்கு சென்று தான் பெற்ற அனுபவங்களையும், கற்றுக்கொண்ட முறையான தொழில் பயிற்சியையும் அதற்கான ஆவணங்களையும் காண்பித்து ஆலோசனை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது. 

அந்த ஆலோசனையின் ஊடாக அவுஸ்திரேலியா தூதரகத்தின் உதவியுடன், 2005 ஆம் ஆண்டு வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து அஸ்திரேலியா செல்லுகிறார்.

அவுஸ்திரேலியாவில் ஆரம்பத்தில் மொழி பிரச்சினை, வேலைக்கு ஏற்ற ஊதியம் கிடைக்காமை முதலான சில பிரச்சினைகளைத் தோற்றுவித்தன.

காலப்போக்கில் கம்பெனிகள் பல வேலைக்கு அழைத்தன. சாதாரண லேபர் தொழில்முதல் கம்பெனிகளின் கனரக வாகனங்கள், இயந்திரங்கள்  இயக்குதல் முதலான பல வேலைகளைக்கு ஆட்கள் சேர்க்கப்பட்டனர். இதனால்அனுபவம் உடையவர்களின் தேவைகள் ஏற்பட்டன.

கம்பனிகளுக்கு வேலைக்குச் செல்ல முன் டெக்ஸீ ரைவராக வேலை செய்யக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது.

பின்னர் கம்பனியில் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் கம்பெனியிலிருந்து  கிழமைக்கு ஒருதடவை ஊதியமும் கிடைத்தது.

2011 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா நாட்டு பிரஜையாக உரிமம் கிடைத்தது. இந்த வாய்ப்பானது மேலும் தன்னை வளர்த்துக் கொள்வதற்கான சந்தர்ப்பங்களை அதிகரித்தது. 

இவ்வாறான சூழ்நிலையில் இலங்கையில் கடந்த 30 வருடங்களாக நடந்த யுத்தமானது  2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வருகின்றது நாடு ஒரு ஸ்திரமான நிலைக்குள்ளாகியது. அவரது வாழ்விலும் வசதியை ஏற்படுத்தியது.

இதே காலப்பகுதியில் தான் கிண்ணி யாவையும் திருகோணமலையும் இணைக்கும் சுமார் 396 மீட்டர் நீளமான கடல் மேம்பாலம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் திறந்து வைக்கப்பட்டது.இது கிண்ணியா மக்களின் வாழ்வுக்கும்,வளத்துக்கும்,வாய் ப்பாக அமைந்தது மட்டுமல்லாமல்  இதுவே எரிபொருள் நிரப்பு நிலையத்தின் வளர்ச்சிக்கும் துணையாக அமைந்தது.

2010 ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்த அவர் தனது சகோதரர்களை அழைத்து கிண்ணியாவில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைப்பது பற்றி ஆலோசித்து திருகோணமலை-மட்டக்களப்பு பிரதான வீதிக்கு அருகில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு திட்டம் வகுத்தனர்.

இது பற்றி மூத்த சகோதரர் முபாரக் கூறும்போது “நாங்கள் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைப்பதற்கு திட்டமிட்ட இடம் காடாக இருந்தது அவ்வாறான கஷ்டமான இடத்தில் தான் எதிர்காலத்தில் நன்மை கிடைக்கும் நாங்கள் நினைத்தோம்” என கூறியதுடன் .பின்னர் அக் காணியை 50 லட்சம் ரூபாவுக்கு வாங்கியதாகவும் கூறினார்.

 2011 களில் எரிபொருள் நிரப்பு  நிலையம். அரசாங்கத்தின் அனுமதியுடன் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் அனுசரணையுடன்  2011 ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் கட்டுமான பணிகள் முடிவடைந்து 2012 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டன .

“எரிபொருள் நிரப்பு நிலையம் அமைப்பதற்கு சுமார் 7 கோடி ரூபா செலவு செய்துள்ளதாக” மூத்த சகோதரர் முபாரக் கூறினார். 

2010 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை வந்த போது  எரிபொருள் நிரப்பு நிலையம் பற்றி அவரிடம் கேட்டபோது, “தான் வெளிநாட்டில் சம்பாதித்ததை எனது நாட்டில் முதலீடு செய்து அதனூடாக பல பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு நீண்ட காலமாக தனக்கு இருந்தது ” என்று கூறினார்.

அத்துடன் “திருகோணமலை மாவட்டத்திலேயே மிகப்பெரிய எரிபொருள் நிரப்பு நிலையமாக அமைக்க உள்ளதாகவும்” கூறினார்.

அவுஸ்திரேலியாவில் சம்பாதித்த பணத்தை பயன்படுத்தி ஆறு பம்பிகள் கொண்ட மண்ணெண்ணெய், டீசல், பெட்ரோல் முதலானவற்றை கொண்ட எரிபொருள் நிரப்பு நிலையமாக அமைக்கப்பட்டது.

திருகோணமலை, மட்டக்களப்பு, கண்டி, கொழும்பு, தம்புள்ளை, அக்கரைப்பற்று, கல்முனை, யாழ்ப்பாணம் முதலான பல்வேறு நகரங்களுக்கு செல்லும் பிரதான வீதியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைந்திருப்பதனால் நாள் தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிபொருள் நிரப்பிச் செல்லும் முக்கிய நிலையமாக மாறியது.

“நாள் ஒன்றுக்கு ஆறு லட்சம் ரூபாய்க்கு அதிகமாக எரிபொருள் விற்பனையாகும். இதில் மூன்று இலட்சம் ரூபாய் வருமானமாகக் கிடைக்கும்” என முபாரக் கூறினார். 

இப்போது இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை முகாமைத்துவம் செய்வது அவரின் இரண்டாவது சகோதரர். அவர் அதில் தேர்ச்சி பெற்றவராக இருந்தார்.

“எமது எரிபொருள் நிரப்பு நிலையத்தில் முகாமையாளர், எக்கவுண்டன், ஊழியர்கள் உட்பட சுமார் 17 பேர் வேலை செய்கின்றனர்” எக்கவுண்டனுக்கு மாதம் 30,000 – 35.000 ஆயிரம் ரூபாய் வழங்குகிறோம். முகாமையாளருக்கு 35.000 – 40.000 ஆயிரம் ரூபாய் வழங்குகிறோம்”என முபாரக் கூறினார்.

இரவு பகலாக இயங்குகின்ற இந்த எரிபொருள் நிரப்புநிலையத்தில். எரிபொருள் நிரப்ப வருகின்ற வாகனங்களுக்கு “ஊழியர்களாக  சுமார் 15 பேர் வேலை செய்கின்றனர்.இவர்களுக்கு மாதம் சம்பளமாக 25,000 – 30,000 ஆயிரம் ரூபாய் வழங்குகின்றோம். சில சந்தர்ப்பங்களில் அதிக விற்பனையாக நின்ற போதும் நெருக்கடியான நேரங்களிலும், சிப்ட் அதிகமாக கிடைக்கின்ற போதிலும் அவர்களுக்கு மேலதிகமான சம்பளத்தை நாங்கள் வழங்குகின்றோம்” எனக் கூறினார்.

“எரிபொருள் விற்பனையில் கிடைக்கின்ற இலாபத்தில் பணியாளர்களுக்கு போனஸ்ஸாக பணமும்,வருடப்பிறப்பு முதலான விசேட நாட்களில் 25 000  – 30 000 ஆயிரம் ரூபாய் பணமும் ஆடையும் விசேடமாக வழங்கி வருவதாகவும்” கூறினார.

இவ்வாறு ஊக்கி விற்பதன் மூலம் பணியாளர்களும், தங்கள் பணிகளை சிரத்தையுடன் செய்கின்றார்கள்.

சில சமயங்களில் எரிபொருள் பெற்றுக் கொள்ள நீண்ட வரிசைகளில் வாடிக்கையாளர்கள் காத்திருக்கின்ற சந்தர்ப்பங்களில்  பணியாளர்களுடன் சேர்ந்து, எக்கவுண்டன், முகாமையாளர்களும் ஒத்துழைப்பு வழங்குவது வேலையைச் சுருக்கி நேரத்தை மீதப்படுத்துவதாக அமைகின்றது.

“பணம் உழைப்பதில் திருப்தி காண முடியாது தாம்  உழைத்த பின் அப்பணத்தின் மூலம் 10 குடும்பங்கள் பயன் பெறுவார்களாயின் அதுதான் உண்மையான திருப்தி”என இளைய சகோதரன் பைசல் கூறினார்.

உண்மையில் திருப்தியான  சேவை வழங்குவதில் இவர்களது கூட்டுப் பொறுப்பு சிறந்ததாகவே முயற்சியாகவே காணப்படுகின்றது.

ஏற்கனவே கூறியது போல பணியாட்களின் குடும்பங்களில் 75 க்கும் மேற்பட்ட நபர்கள் நன்மை அடைகின்றார்கள். தனி ஒருவராக உழைத்து அதன் மூலம் பலருக்கு வேலை வாய்ப்பு வழங்குவது சிறப்பான ஒன்றாகும்.

முறையான இடப்பெயர்வு முறையாக கற்றுக்கொண்ட தொழில் என்பன நம் நாட்டில் வாழ்பவர்களுக்கு வேலை வாய்ப்புகளை தன் ஏற்படுத்திக் கொடுத்துள்ளன.

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வேலை செய்யும் முகமத் ஆஷிக்  என்பவர்  “எங்களுக்கு சம்பளம் தருகின்ற போது மேலும் வேலைகளைச் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் குறையாக பேசுவது அதனைச் சுட்டி காட்ட  மாட்டார்கள் ஏனென்றால் நாங்கள் நம்பிக்கையுடன் வேலை செய்கின்றோம்” எனக் கூறினார்.

“எங்களுக்கு வழங்குகின்ற சம்பளம் பணமாகவே வழங்குகின்றனர் அது எங்களுக்கு திருப்தி அளிக்கிறது” என்று மற்றொரு ஊழியர் இம்ரான் சொன்னார். 

குத்தூஸ் அவுஸ்திரேலியாவின் நிரந்தர வாழ்விட பிரஜையாக   உரிமை பெற்றதனால் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒரு முறை  இலங்கைக்கு வந்து செல்வது வழக்கம்.அவ்வாறு வரும்போது எரிபொரு நிலையத்தை முகாமைத்துவம் செய்வது வழக்கம் சகோதரனின் மேற்பார்வையும், நடத்தும் முறையும் அவருக்கு திருப்தியாக அமைந்தது.

ஒரு வவ்சரில் 13200 லீட்டர் எரிபொருள் காணப்படும் அந்த பவுசரில் நான்கு கொம்பாட்கள் காணப்படும். அதில் ஒவ்வொன்றிலும் நான்கு வகையான எரிபொருட்கள் காணப்படும். சில வவுசர்களில் 19900 லீட்டர் எரிபொருள் காணப்படும் இது வவுசர்களின் நீளம் உயரம் என்பனவற்றை பொறுத்து அமையும். 

தற்பொழுது 8 கோடி ரூபாய்க்கு சொந்தக்காரர் சுமார் 75 க்கும் மேற்பட்ட நபர்களின் வாழ்வுக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளார் .

தான் மற்றும் வாழாது பிறரும் வாழ வேண்டும் என்ற உதவியை செய்துள்ளார். இதன் மூலமாக தான் உழைத்த பணத்தில் தான் மட்டும் வாழாது மற்றவர்களுக்கும் வாழக்கூடிய வாய்ப்பு கிடைத்ததுள்ளது .

இடப் பெயர்வின் மூலம் வாழ்வின் வளத்தை உருவாக்க முடியும் அதற்குத் தகுந்த தகுதியான முடிவு எடுக்கப்பட வேண்டும். இடம் பெயர்ந்து செல்பவர்கள் அனைவரும் செல்வந்தர்கள் அல்ல இருந்த போதிலும் செல்வந்தராகிக்கொள்ள நிறைய வழிகள் உண்டு முறையான தொழில் பயிற்சியும்,நேர்மையான பயணமும் வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ள எதுவாக அமைகின்றது.

அவுஸ்திரேலியாவில் கற்றுக்கொண்ட அனுபவங்கள் மூலம் தொழிலை முறைகளைப்  பயன்படுத்தி இலங்கையில் பலருக்கு வேலை வழங்கக்கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளன.

முறையான இடப்பெயர்வும்,கற்றுக் கொண்ட தொழிலும் அனுபவமும் உரிய இடத்தில் பயன்படுத்தி வாழலாம் என்ற எண்ணத்தையும் இவரின் வாழ்க்கை ஒரு பாடமாக அமைகின்றது.

எனவே வெளிநாடு செல்லும் ஒவ்வொருவரும் முறையான தொழில் பயிற்சியுடனும் அங்கீகாரத்துடனும் சென்றால் இவ்வாறான நல்ல  நிலையினை அடைய முடியும் என்பது நிச்சயம்.

கிண்ணியா நிருபர் 

இந்தக் கட்டுரை முதலில் செப்டம்பர் 12, 2023 அன்று வீரகேசரி இணையதளம் இதழில் வெளியிடப்பட்டது.

Hot this week

GBV and Women’s Political Participation – A Workshop for Women Journalists

‘Towards New and Inclusive Narratives,’ a workshop on GBV...

Panel discussion on ‘Election Disinformation, Online Hate & Women’s Political Representation’

The Center for Investigative reporting (CIR) will host a...

NPP sweeps the polls including the Tamil majority areas signalling a deep political shift in island politics

NPP receives a historic mandate countrywide including Tamil majority...

To restore faith in news, journalists must start doing their job with a sense of professionalism – Hana Ibrahim

Social media is the new source of information for many...

Topics

GBV and Women’s Political Participation – A Workshop for Women Journalists

‘Towards New and Inclusive Narratives,’ a workshop on GBV...

Reporting on Non-Economic Loss and Damage from Environmental Disasters

𝐌𝐞𝐞𝐭 𝐭𝐡𝐞 𝐂𝐈𝐑 𝐅𝐞𝐥𝐥𝐨𝐰𝐬 Four Journalism Fellows under a special...

Women encounter a toxic internet that robs their voice- Shreen Saroor

Men and women experience the internet differently. Women experience...

John S. Knight Journalism Fellowships open [Worldwide]

Journalists who want to collaborate with others to pursue...

Related Articles

Popular Categories