Tuesday, April 16, 2024
HomeResource Centerஊடகவியலாளர்கள் விரும்பும் புலனாய்வு செய்தியறிக்கையிடுதலுக்கான கருவிகள்

ஊடகவியலாளர்கள் விரும்பும் புலனாய்வு செய்தியறிக்கையிடுதலுக்கான கருவிகள்

கடந்த வாரம் நாங்கள் வெளியிட்ட ஒரு அறிக்கையில், பொதுவாக முன்னணி ஊடவியலாளர்கள் தங்களுக்குப் பிடித்தவையாகக் குறிப்பிடும்  பல புலனாய்வு தந்திரோபாயங்களை GIJN பகிர்ந்து கொண்டுள்ளது . நாங்கள் குறிப்பிட்டது போல, மழுப்பலான-சந்தேகத்திற்கிடமான ஆதாரங்கள் மற்றும் தரவுகளை அணுகுவதற்கும், ஊடகவியலாளர்களுக்கு உதவக்கூடிய ஊழல்கள் தொடர்பான (Muckraking) பல செய்தி சேகரிக்கும் நுட்பங்கள் உள்ளன. ஆனால், இந்த இரண்டு செய்திக்கதைகள் மூலம், GIJN கடந்த ஆண்டு நேர்காணல்களில் ஊடகவியலாளர்கள் மீண்டும் மீண்டும் பாராட்டி மெச்சிய அணுகுமுறைகளை முன்னிலைப்படுத்த விரும்புகிறது.

இங்கே, இதே குழுவில் கிட்டத்தட்ட எந்த புலனாய்விலும் , குறிப்பாக கொஞ்சம் டிஜிட்டல் திறன்கள் தேவைப்படும் அல்லது தேவைப்படாத புலனாய்விலும் பெறுமதிமிக்கதாகக் கண்டறிந்த பல டிஜிட்டல்  கருவிகளைப் பகிர்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

இங்கே Flourish-பற்றி முக்கியமாக குறிப்பிட வேண்டும் – இது ஒரு இலவச, பயனர் நட்பு வரைபட உருவாக்கம் மற்றும் தரவு காட்சிப்படுத்தல் கருவியாகும், இது உலகளவில் பெருமளவில் விரும்பப்படுவதாகத் காணப்படுகின்றது – மேலும் BBC Africa Eye குழுவால் தொகுக்கப்பட்ட 200 கருவிகளைக் கொண்ட இணையப் பக்கங்களிலும் இத்தளம் உள்ளடக்கப்பட்டுள்ளது. இது புலனாய்வு எனும் வகையால் வகைப்படுத்தப்பட்டுள்ளபோதும் , உலகின் தென்பகுதி (Global South) நாடுகளைச் சார்ந்த  சில குறிப்பிட்ட தரவுத்தொகுப்புகளையும்  உள்ளடக்கியது.

pix credit- இரண்டு டசின் புலனாய்வு வகைகளுக்குள் 200 க்கும் மேற்பட்ட டிஜிட்டல் கருவிகளைக் கையாளும் BBC Africa Eye இன் “தடவியல் இணையப்பக்கம்”. படம்: திரையைப்படம் பிடிக்கப்பட்டது.

வீடியோ கிளிப்களைப் கண்டெடுக்கவும் பதிவிறக்கவும் இலவச தளங்கள். ஜனவரி 6 அன்று US Capitol இல் நடந்த கலவரத்தின் போது, இலாப நோக்கற்ற புலனாய்வு செய்தித்தளமான Bellingcat இன் நிருபர்கள் ஒரு முக்கியத்துவமான நிகழ்வின் சாத்தியமான ஆதாரங்களைத் கண்டெடுக்க, ஒரு பொதுவான நுட்பத்தைப் பயன்படுத்தினர்: அவர்கள் சமூக ஊடக கிளிப்புகள், ஸ்ட்ரீம்கள்எனப்படும் நேரலைகள்  (streams)மற்றும் படங்களை TweetDeck நெடுவரிசைகளில் அனுப்பினர். ட்விட்டருக்கு twittervideodownloader.com, Facebook வீடியோவிற்கு FBdown.net மற்றும் YouTube க்கு y2mate.com ஆகிய தளங்களைப் பயன்படுத்தி அவர்கள் கண்டறிந்த விடயங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டு காப்பகப்படுத்தப்பட்டது. சமூக ஊடகப் பயனர்கள் தமது உள்ளடக்கத்தை பின்னர் அகற்றியிருந்தாலும், அன்று வாஷிங்டன், டிசியில் என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்வதற்கு அவர்கள் அந்த காட்சிகோவைகளையும்  தம்மிடம் வைத்திருந்தார்கள் என்பதே இதன் பொருள்.

இந்த மூன்றாம் தரப்பு தளங்களிலிருந்து ஏதேனும் இயங்குதள உரிமைக் கொள்கைகளை மீறும் அபாயம் இருந்தால், YouTube-dl போன்ற கட்டளைகளை கொண்டியங்கும் மென்பொருளைப் பயன்படுத்தி YouTube பதிவிறக்கங்களைப் பயன்படுத்தவும்.

ஊடகவியலாளர்கள் காப்பகப்படுத்துவதற்கும், ‘தமக்கு விரும்பிய நேரத்தில் திரும்பி எடுப்பதற்கும்’ உதவும் கருவிகள். மோசமான பேர்வழிகள்  சில சமயங்களில் அவர்கள் செய்த தவறுக்கான இணைய ஆதாரங்களை மாற்றவோ அல்லது அகற்றவோ முயற்சி செய்கிறார்கள் – குறிப்பாக நீங்கள் அவர்களை அணுகி உங்கள் கண்டுபிடிப்புகளை தெரிவித்த பிறகு. அந்த ஆதாரத்தைப் பாதுகாக்க, முன்னணி ஊடகவியலாளர்கள்  இந்தக் கருவிகளைப் பயன்படுத்த விரும்புகிறார்கள்: Hunch.ly — இது உங்கள் இணைய தேடலைக் காப்பகப்படுத்துகிறது; Wayback Machine -வேபேக் மெஷின் – GIJN சமீபத்தில் விரிவாக அறிக்கை செய்த ஒரு தளம்; மற்றும் archive.today, இது வலைப்பக்கங்கள் மற்றும் நீண்ட உரையாடல் தொடர்களை நகலெடுத்து பாதுகாக்க முடியும்.

டெலிகிராமில் தவறான தகவல்களையும் தீவிர வலதுசாரி குழுக்களையும் கண்காணிக்க புதிய கருவிகள்.

Facebook தேடல் தளமான CrowdTangle பல ஆண்டுகளாக, Facebook, Instagram மற்றும் Twitter போன்ற சமூக ஊடகங்களில்  பகிரப்படும் தவறான தகவல்களைக் கண்காணிப்பதற்கான ஓர் முக்கிய தளமாக இருப்பதுடன்  முன்னணி சைபர் குழுக்களை புலனாய்வு செய்வதற்கான கருவிகளில் ஒன்றாகவும்  உள்ளது.

தவறான தகவல்களைக் கண்காணிப்பதில் முன்னோடியான  ProPublica தளத்தின்  நிருபர் கிரேக் சில்வர்மேன்(Craig Silverman)  – கடந்த ஆண்டு தனக்குப் பிடித்தவற்றைப் பற்றிய ஒரு நேர்காணலில் CrowdTangle ஐ தனது சிறந்த கருவிகளில் ஒன்றாக பட்டியலிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இந்த கருவி கூட, தீவிர வலதுசாரி, சர்வாதிகார மற்றும் போராளிக் குழுக்களால் விரும்பப்படும் சில புதிய சமூக ஊடக தளங்களான டெலிகிராம் போன்றவற்றில் வேலை செய்யாது.

சமீபத்தில், BuzzFeed தளத்தினைச் சேர்ந்த  Jane Lytvynenko போன்ற தவறான தகவல் தொடர்பில் புலனாய்வு செய்யும் ஊடகவியலளார்கள் Telegram இல் சேனல்களை எவ்வாறு பின்பற்றுவது என்பதில் முன்னேற்றம் கண்டனர்; அவர்கள்  tgstat, Telegago  போன்ற தேடல் தளங்களில் முக்கிய குறி சொற்களை தேடல்களுக்குப் பயன்படுத்தினார், மேலும் Site:t.me/* போன்ற வைல்டு கார்டுகளுடன் (wildcards) Google இல் குறிப்பிட்ட தேடல் சொற்களைப் பயன்படுத்தினர்.   இந்த விடயத்தை பின்தொடரும் ஊடகவியலாளர்கள், OSINTcurio.us தளத்தில் வாரந்தோறும் வெளியாகும் புதிய  தேடல் அணுகுமுறைகள் பற்றிய விடயங்களை தாம் கற்றுக்கொள்வதாக கூறுகிறார்கள். தவறான தகவல் பிரச்சாரங்களை மேப்பிங் செய்வதற்கு அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் மற்றொரு முக்கியமான தளம் Hoaxy ஆகும்.

மெய்நிகர் உதிரி தொலைபேசிகள் (Virtual burner phones)

அண்மைக்காலமாக ஹேக்கிங் மற்றும் இணைய துன்புறுத்தல் அச்சுறுத்தல்கள் இணையத்தில் அதிகரித்து வருவதால், பல ஊடகவியலாளர்கள் – குறிப்பாக சுயாதீன ஊடகவியலாளர்கள், Google Voice சேவையை ஒரு முக்கிய கருவியாகக் கண்டறிந்துள்ளனர்.

 இது உங்களின் தற்போதைய தொலைபேசி  எண்கள் மற்றும் எப்போதாவது பயன்படுத்தும் உங்களின் ஹோட்டல் அறை எண்ணையும் கூட, இலகுவில் கண்டுபிடிக்க முடியாத ஒற்றை எண்ணுடன் இணைக்க இந்த சிஸ்டம் உங்களை அனுமதிக்கிறது –ஒரு வகையில் இதுவே  உங்களுக்கு எப்போதும் தேவைப்படும் ஒரே எண்ணாகவும் இருக்கும். இது தேடக்கூடிய குரல் அஞ்சல் (voicemail )செய்தி  வழங்குவதோடு ஒரு மெய்நிகர் உதிரி தொலைபேசி என்ற வகையில் ஊடகவியலாளர்களை துன்புறுத்தல்களிலிருந்து  பாதுகாக்கவும் முடியும்.

“செய்ய வேண்டிய பணிகளின் பட்டியல்களை  (to-do lists) நிர்வகிக்கும் கருவிகள். புதிய டிஜிட்டல் நிறுவன கருவிகள் சிக்கலான புலனாய்வுகளை   மேற்கொள்வதில் வியக்கத்தக்க வகையில் பயனுள்ளதாக இருப்பதாக ஊடகவியலாளர்கள்   கூறுகின்றனர். அவர்கள் Things app  போன்ற இயங்குதளங்களையும், கோப்புறைகளுக்குப் பதிலாக ஊடாடும் குறிப்புகளையும்  பயன்படுத்தும் குறைந்தபட்ச, இணைய அடிப்படையிலான WorkFlowy  திட்ட மேலாண்மைக் கருவியையும் பரிந்துரைக்கின்றனர்.

ஊடக  கண்காணிப்பு மற்றும் நெருக்கடி உள்ள நாடுகளில் ஊடகவியலாளர்கள்  அடக்குமுறை அதிகாரிகளால் தங்கள் உபகரணங்களை  கையகப்படுத்தபடுவதை தவிர்க்கும் முகமாக தமது ஆவணக்கோப்புறைகளை VeraCrypt குறியாக்க கருவி மூலம் பாதுகாக்க முடியும். இது அந்த கோப்புறைகளை மறைத்துவிடும், அதனால் அவை தவறான கைகளுக்கு சென்றாலும் அவர்களின் கவனத்தை ஈர்க்காது.

Pix credit – ஈரானின் கோமில் (Qom)COVID-19 கொள்ளைநோய் தாக்கத்தின்போது இறந்தவர்களை புதைப்பதற்காக தோண்டப்பட்ட பாரிய புதைகுழிகள். பட உதவி: செயற்கைக்கோள் படம் ©️2020 Maxar Technologies

உங்கள் புலனாய்வு  தொடர்பான இலவச செயற்கைக்கோள் படங்கள். செயற்கைக்கோள் (Satellite )படங்கள் சில சமயங்களில் விசாரணைக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும், உதாரணமாக, போட்ஸ்வானாவின் புலனாய்வு லாப நோக்கமற்ற நிருவனமான -Ink இல் உள்ள இரண்டு பத்திரிகை உதவி ஆசிரியர்கள் ஒரு முறை செயற்கைக்கோள் நிறுவனத்திடமிருந்து ஒரு படத்தை வாங்குவதற்காக தமது தனிப்பட்ட சம்பளத்தில் ஒரு பகுதியை கொடுக்க வேண்டி இருந்தது. போட்ஸ்வானாவின் ஜனாதிபதி ஒரு தனியார் விளையாட்டு விடுதியை உருவாக்க இராணுவ வளங்களைப் பயன்படுத்தினார் என்பதை இச்செய்மதிப்  படம் நிரூபித்தது. இருப்பினும், பல செயற்கைக்கோள் பட நிறுவனங்கள் தங்கள் புலனாய்வுகளுக்கு  இவ்வாறான செய்மதிப்பட ஆதாரங்களை இலவசமாக வழங்குவதைக் கண்டு பல ஊடகவியலாளர்கள் ஆச்சரியமடைந்திருந்தனர்.  உதாரணமாக, ஈரானில் கோவிட்-19 இறப்பு எண்ணிக்கை பற்றிய அரசாங்கத்தின் கூற்றுகளை இது போன்ற ஒரு செய்மதிப்படம்  நிராகரித்தது. இது தொடர்பான GIJN இன் விரிவான வழிகாட்டியை இங்கே பார்க்கவும்.

கிரேக் சில்வர்மேனின் முக்கியமான டிஜிட்டல் கருவிப்பெட்டி. சில்வர்மேனின் இலவச-பயன்பாட்டு சரிபார்ப்பு கையேட்டை ஊடகவியலாளர்கள்,  சர்ச்சைக்குரிய கூற்றுக்களை சரிபார்ப்பதற்கும் இணையத்தில்  மோசமான நடிகர்களைக் கண்காணிப்பதற்கும் திறந்த மூலக் கருவிகளின் ஒரு வகையான சுவிஸ் இராணுவ கத்தி என்று ஒப்பிட்டு விவரிக்கின்றனர்.

கண்காணிப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான புதிய தரவுத்தளங்கள். GIJN உறுப்பு நிறுவனமான  Forbidden Stories தலைமையிலான பெகாசஸ் ப்ராஜெக்ட் The Pegasus Project மற்றும் UK-ஐ தளமாகக் கொண்ட ஆய்வு நிறுவனமான Forensic Architecture தயாரித்த டிஜிட்டல் வன்முறை தளம் (Digital Violence platform) அரசாங்கங்களால் உளவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான நிழல் உலகத்தைப் பற்றிய அழ்ந்த புரிதலை வழங்குகிறது, மேலும் அவை  குறிப்பாக ஊடகவியலாளர்கள் மற்றும் அதிருப்தியாளர்களுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் குறித்தும்  எடுத்துக்காட்டின.

இதற்கிடையில், Citizen Lab இன் சமீபத்தியRunning in Circles report அறிக்கையானது புதிய வகையான கண்காணிப்பு தொழில்நுட்பத்தை பெற்றுகொண்டுள்ள  25 அரசாங்கங்களை பட்டியலிடுகிறது, அவை, உங்கள் தொலைபேசியை ஹேக் செய்யாது அதன் ஊடுருவலின் எந்த ஒரு தடயமும் இல்லாமல் உங்கள் தொலைபேசியின்  தகவல்தொடர்புகளை இடைமறித்துக் கேட்க  முடியும். Electronic Frontier Foundation, மற்ற நாடுகளில் உள்ள சட்ட அமலாக்க உளவு அமைப்புகள் பற்றிய விசாரணைகளுக்கு ஒரு கருத்தியல் திட்ட வரைபடத்தை வழங்குவதோடு அதன் தரவுத்தளத்தின் 8,000 முக அங்கீகாரம் (facial recognition) மற்றும் அமெரிக்காவில் உள்ள பிற போலீஸ் கண்காணிப்பு அமைப்புகள் பற்றிய தகவல்களைக்கொண்டுள்ளது.

இலவச, பயனர் நட்பு குறியாக்க கருவிகள் encryption tools. ஊடகவியலாளர்கள் பாதுகாப்பான மின்னஞ்சல் தொடர்புகளுக்கா க புரோட்டான்மெயில் (Protonmail) கணக்கையும், பாதுகாப்பான குறுஞ்செய்திகளுக்காக  சிக்னல் (Signal) கணக்கையும் திறக்கலாம். GIJN ஆல் கலந்தாலோசிக்கப்படும் புலனாய்வு ஊடகவியலாளர்களும்  LastPass போன்ற இலவச கடவுச்சொல் நிர்வாகியை பரிந்துரைக்கின்றனர், இது நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு முதன்மை கடவுச்சொல்லுடன் இணைக்கப்பட்ட பாதுகாப்பான கடவுச்சொற்களை உருவாக்கும். Firefox போன்ற நன்கு பாதுகாக்கப்பட்ட இணைய உலாவியைப் பயன்படுத்துவதோடு Internet Explorer போன்ற பாதுகாப்பற்ற உலாவிகளை நீக்கவும்.

நேர்காணலுக்கான  Otter  அல்லது  Pear Note   போன்ற தானியங்கு டிரான்ஸ்கிரிப்ஷன் (transcription) கருவிகள். இவை நேரத்தை மிச்சப்படுத்துவது மட்டுமின்றி, முக்கியமான குறி வார்த்தைகளால் தேடக்கூடியதாக இருப்பதன் மூலம் ஒத்த வடிவங்களை  இணைக்க உதவுவதாகவும் ஊடகவியலாளர்கள்  கூறுகின்றனர்.

சக்திவாய்ந்த புதிய கடல் மார்க்க வழங்கி வலையமைப்புக்களை கண்காணிக்கும் கருவிகள்(shipping and supply chain trackers) . உலகின் சுமார் 90,000 கப்பல்களின் போக்குவரத்தை  நெருக்கமாக கண்காணிப்பதற்கான புதுமையான முறைகளை ஊடகவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர், மேலும் GIJN அவர்கள் அதிகம் பயன்படுத்தும் வளங்களின் விரிவான பட்டியலை தொகுத்துள்ளது. Marine Traffic app செயலியானது அவர்களின் விருப்பங்களில் ஒன்றாகும். வர்த்தகத்தில் திறந்த மூல தரவுகளுக்கு, UN Comtrade தரவுத்தளத்தை முயற்சிக்கவும். வணிக இணையதளங்களுக்கு, Panjiva, Datamyne அல்லது ImportGenius ஐ முயற்சிக்கவும்.

மேலே இருந்து ஆதாரங்களைக் கண்டறிதல் – மற்றும் நேரத்தின் மூலம் காட்சி ஊடாக  பயணித்தல்.  Google Earth Pro மூலம் தடயவியல் ஆய்வுகள் முதல் சிக்கலான சுற்றுச்சூழல் திட்டங்கள் வரை – ஊடகவியலாளர்கள் முக்கிய செய்திக்கதைகளை வெளிக்கொண்டு வந்திருக்கின்றனர். இது ஊடகவியலாளர்கள் நிகழ்வுகளின் துல்லியமான இருப்பிடத்தைக் கண்டறிவது மட்டுமல்லாமல், காலப்போக்கில் அந்தக் காட்சியில் ஏற்படும் மாற்றங்களையும் பார்க்க அனுமதிக்கிறது. அதன் நிலப்பரப்பு (landscape) அம்சம், ஒரு காட்சியை உங்கள் கதையின் கருப்பொருளாகப் பார்க்க உங்களை அனுமதிப்பதோடு watch icon முன் மற்றும் பின் ஒப்பீடுகளுக்கான தேதி வரம்பையும்  வழங்குகிறது.

மேலதிக வளங்கள்

The Forensic Methods Reporters Are Using to Reveal Attacks by Security Forces

My Favorite Tools 2020: Top Investigative Journalists Tell Us What They’re Using

GIJN Resource Center: Reporting Tips and Tools

ரோவன் பில்ப்(Rowan Philp) GIJN இன் ஒரு ஊடகவியலாளர் ஆவார். ரோவன் முன்பு தென்னாப்பிரிக்காவின் சண்டே டைம்ஸ் (SundayTimes) பத்திரிகையில்  தலைமை ஊடகவியலாளராக  இருந்தார். ஒரு வெளிநாட்டு நிருபராக, உலகெங்கிலும் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து செய்திகள், அரசியல், ஊழல் மற்றும் மோதல்கள் குறித்து அறிக்கை அளித்துள்ளார்.

மூலம்

This story was originally published by the Global Investigative Journalism Network (GIJN)

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments