முழு நாட்டிற்கும் நல்லிணக்கப் பாடம் கற்பித்த அம்பலாந்தோட்டை கிராமம்

0
11

தெற்கு மாவட்டமான ஹம்பாந்தோட்டையின் தெலைதூர கிராமமான மலே கொலணியில், ஒற்றுமை மற்றும் மத சகிப்புத்தன்மையை அங்குள்ள மதத் தலைவர்கள் கட்டியெழுப்பி வருகின்றமை சிறந்தவொரு முன்னுதாரணமாகும்.

மலே கொலனி கிராம பௌத்த மதகுரு, அங்குள்ள முஸ்லிம் சமூகத்தினருடன் இணைந்து, விஹாரையை அனைத்து மதப் பிரிவினருக்குமான பொதுவான ஓரிடமாக மாற்றி வருகின்றார். புனித ரமழான் மாதத்தில்  சூரிய அஸ்தமனத்தின்போது முஸ்லிம்கள் நோன்பை முடித்துக்கொள்ளும் இப்தார் வைபவத்தை நடத்தும் இடமாக விஹாரை தேர்ந்தெடுக்கப்பட்டது.  இந்த விஹாரையானது வெறுமனே மதப் போதனைக்கான பாத்திரத்தை மட்டுமே வகிக்காமல், அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைக்கும் ஓரிடமாக திகழ்கின்றது. சிறிய கிராமத்தில் பெரும்பான்மையாக வாாழும் முஸ்லிம்கள் இந்த விஹாரைக்கு பெருந்தன்மையுடன் ஆதரவு வழங்குகின்றனர். இதற்கான சம வகிபாகத்தை உள்ளூர் இஸ்லாமிய மதத் தலைமை முன்னெடுத்து வருகின்றது. வேற்றுமையில் ஒற்றுமையை எடுத்தியம்பும் இதயபூர்வமான முன்னுதாரணத்தை அவர்கள் நிரூபித்துக் காட்டியுள்ளார்கள்.

HashTags:

#UNDPSriLanka #EUSrilanka #StoriesofOne #DiversityStorytelling

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here