நீண்ட நாட்களாக பொதுப்பணி, மனித உரிமைகள் செயற்பாடு, பெண்ணியல் செயற்பாடுகளில் ஈடுபட்டவர் அவர் பெண் அரசியல் பிரவேசம் பற்றி பல வருடங்களாக குரல் கொடுத்து வந்தவர்.
தனது கருத்தியல்கள் பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்ற கனவோடு பயணித்த சர்வதேச மனித உரிமைகள் செயற்பாட்டாளர். நளினி ரத்னராஜாவின் கனவு சாத்தியப்படும் தருணமும் கைகூடிவந்தது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்பட்டியலில் பெயரை உள்வாங்குவதாக சில கதையாடல்கள் ஆரம்பமாகின. இந்த கதையாடல் சமூகவலைத்தளங்களில் மிகவேகமாக பரவியது. அந்த பரவலோடு நளினிக்கு எதிரான போலிச்செய்திகளும் காட்டுத்தீ போல பரவ ஆரம்பித்தது.
நளினி ஒரு நடத்தை கெட்டவர், அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் மிக மோசமாக செயற்படுகின்றார் என்றெல்லாம் சமூகவலைத்தளங்களில் போலிச் செய்திகள் அவரது அரசியல் பிரவேசத்தை விரும்பாத சிலரால் பரப்பட்டன.
சர்வதேச புலம்பெயர் ஊடகம் ஒன்று அதன் நிகழ்ச்சியில் அவரது நடத்தை பற்றி மிகமோசமாக விமர்சித்தது.
இன்நிகழ்ச்சியானது பெண்களை பாலியல் போகப்பொருளாக பயன்படுத்துவதாக நளினி விமர்சித்தார். நளினியின் தனிப்பட்ட வாழ்க்கை இதனால் மிகப் பெரியளவில்; அழுத்ததுக்குள்ளானது.தனது அரசியல் அபிலாசைகள் கானல் நீராக ஆரம்பித்தது.
அவர் தனது தாயை கொலை செய்ததாக சமூக ஊடகங்கள் போலிச்செய்தியை பரப்ப அரம்பித்தன.
‘இது என்னை மானசீக ரீதியான பாதிப்புக்கு உள்ளாக்கியது. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஆணாதிக்க அரசியல் சமூகம் என் தாயை நான் கொலை செய்ததாக போலி செய்திகளை வெளியிட்டதை மிகக்கீழ்தரமான ஒரு செயற்பாடாக நான் பார்க்கின்றேன’.
தமிழ் தேசியம் பற்றி அவர் விமர்சித்தார் என்ற கோணத்தில் கருத்துக்கள் சமூகவலைத்தளங்களில் போலியாக பதிவிடப்படவே தமிழ் தேசியக்கூட்டமைப்பு அதன் பட்டியலில் நளினியின் பெயரை போடுவதாக வைத்திருந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டது.
நளினியும் அவரது இந்த வருட பாரளுமன்ற பிரவேசக்கனவை இழக்கவேண்டி ஏற்பட்டது. போலியான செய்திகளின் பரவலாலேயே இந்த இழப்பு ஏற்பட்டது என்பது நிதர்சனம்.
இதே போல கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த பிரபலமான அழகுக்கலை நிபுணர் ஹிமாயா நியாஸ் அவரும் பொதுப்பணியில் ஆர்மாக ஈடுபடுபவர்.
அவர் தேர்தல் களத்துக்குள் வந்து சாதிக்கவேண்டும், தனது சமூகப்பணியை அரசியல் பணியாக மாற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டவர். அவரது ஆசையை நிவர்த்தி செய்துகொள்ள சுயேட்சை குழு ஒன்றின் ஊடாக முயற்சித்தார்.
ஆனால் அவருக்கு முதல் முட்டுக்கட்டையாக அமைந்தது அவரது குடும்பம். முஸ்லிம் பெண்ணாக இருப்பதால் அவரை தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று அவரது குடும்பம் தடுத்தது.
இவரைப்பற்றி பல்வேறுபட்ட விமர்சனங்களை சமூகவலைத்தளங்களில் காணமுடிந்தது. இவரையும் போதைப்பொருள் வணிகத்தையும் தொடர்புபடுத்திப பல செய்திகள் வெளியிடப்பட்டன.
இவரது புகைப்படங்களை தவறான முறையில் செம்மையிட்டு அவரை அவமானப்படுத்தும் வகையில் சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டன. அதனைத்தாண்டி இவர் தற்போது அரசியல் களத்ததுக்குள் பிரவேசித்து வேட்பாளராகவுள்ளார்.
இந்த பொதுத்தேர்தலில் 7400 க்கும் அதிகமான வேட்பாளர்கள் போட்டி இடுகின்றனர். அதில் 800 பேர் மாத்திரமே பெண் வேட்பாளர்கள்.
அவர்களில் 100க்கும் குறைவான பெண்களே தீவிர பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். ஒரு பெண் அரசியல் களத்துக்குள் குதிப்பதற்கு முன்னரே அவரது குடும்பம், சமூகக்காரணிகளால் அவள் அந்த களத்தில் இருந்து புறக்கணிக்கப்படுகின்றார் என்பதை இந்த இரண்டு சம்பவங்களும் எடுத்துக்காட்டுகளாகும்.
மனித உரிமை செயற்பாட்டாளரும் மகளிர் செயற்பாட்டு வலையமைப்பு மற்றும் மன்னார் மகளிர் மேம்பாட்டு கூட்டமைப்பின் இணை நிறுவனருமான ஷரீன் சரூர் இது தொடர்பில் தெரிவிக்கும் போது ‘சமூக வலைத்தளங்கள், ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகள் பல திறமையான, துணிச்சலான பெண்களை அவதூறான விமர்சனங்களுக்கு உட்படுத்தி, அரசியல் அரங்கிலிருந்து விலகுமாறு கட்டாயப்படுத்துகின்றனர்’.
‘ஒரு ஆண் அரசியல்வாதி எதிர்கொள்ளும் சவால்களை விட ஒரு பெண் அரசியல்வாதி எதிர்கொள்ளும் சவால்கள் பல மடங்கு அதிகம் என்பது மறுக்க முடியாத உண்மை. பெண் அரசியல்வாதிகள் எதிர்கொள்ளும் அவதூறான விமர்சனங்கள் குறித்து கட்சித் தலைவர்களும் அரசியல் பிரமுகர்களும் தொடர்ந்து அமைதியாக இருப்பது கவலைக்குரிய விடயம்’ என்று அவர்; கிரவ்ன்ட் வீவ்ஸ் (பசழரனெஎநைறள.ழசப) என்ற இணையத்தளத்துக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.
2020 பொதுத் தேர்தலில் பிரசாரம் நிறைவடைந்த நிலையில், பெண்கள் மீதான துஷ்பிரயோகம் குறித்த முறைப்பாடுகள் அதிகரித்து வருவதை தேர்தல் வன்முறைகள் தொடர்பான கண்காணிப்பு மத்திய நிலையம் (ஊஆநுஏ) தெரிவித்துள்ளது.
‘பல சந்தர்ப்பங்களில் பெண்களுக்க எதிரான தாக்குதல்கள் தங்கள் கட்சிகளுக்குள்ளேயே இருந்து வருகின்றன. இதன் விளைவாக, பெண்கள் தங்கள் சொந்த கட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்ய அச்சப்படுகின்றனர். முறையான முறைப்பாடுகள் இல்லாத நிலையில் நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது’ என்று (ஊஆநுஏ) இன் தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுலா கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
உலகத்தின் முதல் பெண் பிரதமர், இலங்கையின் முதல் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பெண் ஜனாதிபதி என்ற பெருமையை இலங்கைக்கே உரியது.
1978-1988 பாராளுமன்றத்தில் பெண் பிரதிநிதித்துவம் 4.8 வீதமாக இருந்துள்ளது. 1989 – 1994 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் 5.7 வீதமாக இருந்துள்ளது. அதற்கு பிற்பட்ட காலப்பகுதிகளில் அந்த அளவுகளில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
மேற்கூறப்பட்ட காரணங்களின் அடிப்படையிலேயே பெண்கள் பிரதிநிதித்துவம் 5 வீதத்தில் இருந்து அதிகரிக்க முடியாத சூழ்நிலை காணப்படுவதாக பெண்கள் அரசியல் தொடர்பான ஆய்வு மையங்கள் கருத்து தெரிவிக்கின்றன.
இந்த நிலைகளை தாண்டியும் ஒரு பெண் அரசியல் பிரவேசம் எடுக்கின்றாராக இருந்தால் அதிகளவி;ல் குருதிச்சலுகை (Nநிழவளைஅ) , விதவை அரசியல், அனுதாப அரசியல், நட்புச்சலுகை போன்ற விடயங்கள் ஊடாகவே இவர்கள் அரசியலில் பிரவேசிக்கின்ற நிலை காணப்படுகின்றது.
2018 ஆம் ஆண்டு உலக வங்கியின் தரவுகளின் அடிப்படையில் இலங்கையில் 51.97 வீதமான பெண்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மொத்த சனத்தொகையில் 2.91 வீதமான பெண்களே பாராளுமன்றத்தில் உள்ளனர். ஆகாவே சனத்தொகை அடிப்படையில் பார்க்கும் போது அரைவாசிக்கும் அதிகமானவர்கள் நாட்டில் பெண்கள் வாழ்கின்ற போதிலும் அவர்களில் 2.91 வீதமான பெண்கள் மாத்திரமே பாராளுமன்றத்தில் உள்ளனர்.
கடந்த உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் 25 வீதமான் பெண்கள் உள்ளு10ராட்சிமன்றங்களில் உள்வாங்கப்பட வேண்டும் என்ற கருத்தியல் தொடராக முன்வைக்கப்பட்ட போதிலும் போதுமான பெண் வேட்பாளர்கள் இல்லாமை அது சாத்தியப்படாமைக்கு முக்கிய காரணமாக மாறியது.
இந்த வருடம் பொதுத்தேர்தலில் 30 வீதமான பெண்கள் உள்வாங்கப்படவேண்டிய சட்டம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது சாத்ததியப்படாக ஒரு விடயமாகவே மாறியுள்ளது.