Wednesday, February 5, 2025
26 C
Colombo

உள்நாட்டு முயற்சிகளுக்கான கனேடிய நிதியுதவியைப் பெறும் பங்குதாரர்களில் ஒருவராக சீ.ஐ.ஆர். யும் கனேடிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

கொழும்பு, 2020 செப்ரெம்பர் 28: இலங்கைக்கும், மாலைதீவுக்குமான கனேடிய உயர்ஸ்தானிகராலயமானது, உள்நாட்டு முயற்சிகளுக்கான கனேடிய நிதியுதவிக்கு (CFLI) இவ்வருடம் தெரிவு செய்யப்பட்டுள்ள பயனாளிகளினை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது.

இலங்கையிலும், மாலைதீவிலும் உள்நாட்டு பங்காளர்களால் உருவாக்கப்பட்டு, வடிவமைக்கப்படட சிறு அளவிலான, உயர்தாக்கத்தைக கொண்ட செயல்திட்டங்களுக்கு CFLI ஆதரவளிக்கின்றது. சமூக மட்டத்தில் பணியாற்றுவதன் மூலம், உள்நாட்டு தேவைகளுக்குப் பிரதிபலிப்பதற்கு கனடாவிற்கு ஏதுவாக்குகின்றது. சம அளவு முக்கியத்துவத்துடன், CFLI ஆனது, சிவில் சமூகம் மற்றும் உள்நாட்டுச் சமூகங்களோடு கனடாவின் உறவுமுறைகளைப் பலப்படுத்துவதற்கு சேவையாற்றுகிறது.

இந்த வருடம் CFLIஆனது, உள்ளடக்கமான நிர்வாகம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலைச் செயற்பாடு, மற்றும் பெண்களின் பொருளாதார உரிமைகள் உள்ளடங்கலாக அனைவருக்குமான வளர்ச்சி ஆகிய முக்கிய கருப்பொருள் விடயங்களில் கவனம் செலுத்தும் பிரேரணைகளுக்கு அழைப்பு விடுத்திருந்தது.

தற்போதைய தொற்றுநோய் காலத்தில் CFLI நிகழ்ச்சித் திட்டமானது, கொவிட்-19 சார்ந்த செயல்திட்டங்களுக்கும் முன்னுரிமை வழங்கியிருந்தது. வீடற்றவர்கள் மற்றும் மாலேயில் கொவிட்-19இன் தாக்கத்திற்குள்ளான இலகுவில் பாதிக்கப்படக் கூடிய சமூகங்களுக்கு அடிப்படை சேவைகளை வழங்கும் மாலைதீவு அரசாங்கத்திற்கான 100,000 கனேடிய டொலர்கள் உதவியும் இதில் உள்ளடங்கும்.

இலங்கையில், தெரிவு செய்யப்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு PPE வழங்கல் உள்ளடங்கலாக வன்முறையற்ற நம்பகமான பாராளுமன்றத் தேர்தல்களுக்காக CMEV மற்றும் PFFREL ஆகியவற்றிற்கு ஏற்கனவே CFLI உதவியளித்துள்ளது

தொற்றுநோயிற்கு பிரதிபலித்தல் முதல், தேர்தல் கண்காணிப்பு, பெண்களின் பொருளாதார வலுவூட்டல் மற்றும் காலநிலைச் செயற்பாடு வரை, இலங்கை மற்றும் மாலைத்தீவைச் சேர்ந்தவர்களுக்கு முக்கியமான விடயங்களில் தீர்வுகளை கண்டறிவதற்கு இணைந்து பணியாற்றுவதில் நாம் பெருமிதம் கொள்வதாக உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

CFLI உதவியைப் பெற்றுக்கொள்ளும் ஏனைய பங்குதாரர்கள் வருமாரு: பாலினம், குடும்ப மற்றும் சமூக சேவைகள் அமைச்சு, மாலைதீவு, சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு (PAFFREL), வரையறுக்கப்பட்ட சுற்றுச்சூழல் நிதியம் (Environment Foundation Limited – EFL), தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் (CMEV), பிளனற்ரறா (Planeterra), இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் (SLPI),  வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கி (NCDB) மற்றும் ஸீரோ வேஸ்ட் மாலைதீவு (Zero Waste Maldives)

Hot this week

ගංවතුරේ පාවෙන ජා-ඇල ජීවිත

2024 වසරේ මාස හයක් තුළ ගංවතුර අවස්ථා තුනක්... ඔක්තෝබර් ගංවතුරෙන්...

CIR and SCOPE host workshop for women journalists on GBV

The Centre for Investigative Reporting (CIR) and Strengthening Social...

GBV and Women’s Political Participation – A Workshop for Women Journalists

‘Towards New and Inclusive Narratives,’ a workshop on GBV...

Panel discussion on ‘Election Disinformation, Online Hate & Women’s Political Representation’

The Center for Investigative reporting (CIR) will host a...

Topics

ගංවතුරේ පාවෙන ජා-ඇල ජීවිත

2024 වසරේ මාස හයක් තුළ ගංවතුර අවස්ථා තුනක්... ඔක්තෝබර් ගංවතුරෙන්...

CIR and SCOPE host workshop for women journalists on GBV

The Centre for Investigative Reporting (CIR) and Strengthening Social...

GBV and Women’s Political Participation – A Workshop for Women Journalists

‘Towards New and Inclusive Narratives,’ a workshop on GBV...

Related Articles

Popular Categories