தகவல் கல்வியறிவை ஊடகவியலாளர்கள் மற்றும் அது பற்றி ஆவலுள்ள பிரஜைகள் மத்தியில் ஊக்குவிப்பதற்காக இலங்கை புலனாய்வு ஊடகவியல் மையம் (CIR), கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்துடன் (UNDP) இணைந்து நாடளாவிய ரீதியில் இணையத்தளம் வழியாக CIR இன் ஊடக கல்வியறிவு அடிப்படைகள் தொடர்பான பயிற்சி செயலமர்வுகளை நடத்தும் முயற்சிகளை ஜூன் மாத நடுப்பகுதியில் இருந்து முன்னெடுத்து வருகின்றது.
இந்தப் பயிற்சி செயமர்வு சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தலா இரண்டு அமர்வுகள் வீதம் நடத்தப்படவுள்ளது.
பயிற்சி செயலமர்வில் பங்குபற்றுபவர்களுக்கு, நாட்டில் தகவல் கல்வியறிவை மேம்படுத்தும் முயற்சியின் ஓரங்கமாக அடிப்படை பயிற்சிகள் வழங்கப்படும். அத்துடன் இதன்போது தகவல் கல்வியறிவு உபாயங்கள் மற்றும் அது பற்றிய புரிந்துணர்வை ஊடகவியலாளர் சமூகத்தினருக்கு அப்பால் கொண்டு செல்வதற்கான பயிற்சியும் வழங்கப்படும். இந்தப் பயிற்சியானது ஊடக உள்ளடக்க உருவாக்குநர்களையும் ஊடக பயனாளர்களையும் நேர்மையாக இருப்பதற்கான உபாயங்கள் மற்றும் நெறிமுறை கூறுகளை ஊக்குவிப்பதற்கான நோக்குடன் இந்த பயிற்சித் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர்கள், ஊடகத்துறை மாணவர்கள், பிரஜை ஊடகவியலாளர்கள், ஊடக கல்வியியலாளர்கள், வலைப்பதிவர்கள், காணொளிக் கதைகூறுபவர்கள் மற்றும் ஊடகப் பயனாளர்கள் உட்பட 300 பேருக்கு இந்த திட்டத்தின் ஊடாக பயிற்சியளிக்கப்படவுள்ளது.
விண்ணப்ப இணைப்பு/படிவம்: