Wednesday, January 22, 2025
27 C
Colombo

உங்களின் அடுத்த புலனாய்வுச்செய்தி ஆய்வுக்காக இணையத்தின் ஆவணக்காப்பகமான ‘வேபக் இயந்திரத்தினை” (Wayback Machine) பயன்படுத்துவதற்கான சில ஆலோசனைகள்

இணைய காப்பகம் என்பது ஒரு இலாப நோக்கற்ற நூலகமாகும், இது “அனைத்து அறிவையும் அணுகக்கூடிய  உலகளாவிய நோக்கு” என்ற குறிக்கோளை முன்னெடுத்து வருகையில், இந்த ஆண்டு தனது  25வது ஆண்டு நிறைவினைக்கொண்டாடுகிறது. இது தற்போது  என்னால்(Mark Graham) நிர்வகிக்கப்படும் சேவையான வேபேக் மெஷினுக்கு (Wayback Machine) க்கு  மிகவும் பிரபலமானது – இது ஒரு நாளைக்கு 1 பில்லியனுக்கும் அதிகமான பொது  இணைய முகவரிகளையும் (URL)  பக்கங்களையும் காப்பகப்படுத்தி பின்னர் அவற்றை கையாள வழி செய்கிறது.

இலவசமாக பயன்படுத்தக்கூடிய இந்த Wayback Machine செயலியை  பத்திரிகையாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், உண்மை சரிபார்ப்பவர்கள், செயற்பாட்டாளர்கள்  மற்றும் பொது மக்கள் தினசரி பயன்படுத்த பல்வேறு வழிமுறைகள் உள்ளன.

கடந்த காலங்களில் ஆயிரக்கணக்கான  கட்டுரைகள் எங்களின் தளம் பற்றி  எழுதப்பட்டுள்ளது மட்டுமின்றி  எங்களது சேவைகள் பற்றியும் குறிப்பிடுகின்றன. உண்மையில், 2020 ஆம் ஆண்டிற்கான GIJN இன் ‘எனக்கு பிடித்த கருவிகள்’ தொடரில், பல முன்னணி புலனாய்வு பத்திரிகையாளர்கள் இதை தங்கள் பணியின் முக்கிய தளமாக அடையாளம் காட்டினர்.

தங்களின் அடுத்த புலனாய்வுச்செய்தி  அறிக்கையிடலுக்கு எவ்வாறு  வேபேக் இயந்திரத்தை (Wayback Machine) பயன்படுத்தலாம் என்பது பற்றி ஆர்வமுள்ள நிருபர்களுக்கான அறிமுகம் பின்வருமாறு:

இணையத்தள முகவரிகளை (URLs) காப்பகப்படுத்தல்

ஒரு வலைத்தளத்தைக் குறிக்கும் ஒரு கட்டுரையை நீங்கள் வெளியிட்டால், அந்த தளத்தின் உரிமையாளர்கள் அதன் முக்கிய பக்கங்களை அல்லது தளத்தை அகற்றினால், அவை காப்பகப்படுத்தப்படாவிட்டால் அவை என்றென்றும் இழக்கப்படலாம். உங்களுக்கு அது நடக்க அனுமதிக்காதீர்கள்!

வேபேக் மெஷினின் “இப்போது இந்த பக்கத்தை சேமி” என்ற சேவையினூடாக  பயனர்களினால்  ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான URL முகவரிகள் காப்பகப்படுத்தப்படுகின்றன.

யார் வேண்டுமானாலும் URL முகவரிகளைச் சமர்ப்பிக்கலாம், நீங்கள் ஒரு இலவச காப்பகக் கணக்கினுடாக  உள்நுழைந்திருந்தால், நீங்கள் கையகப்படுத்த  விரும்பும் பக்கத்திலுள்ள எவ்வாறான வெளித்தொடுப்பு  இணைப்புகளையும் (Outlinks)  காப்பகப்படுத்த கேட்கலாம், மேலும் அவ்வாறு காப்பகப்படுத்தப்பட்ட செயல்முறையின் ஓர் மேலோட்டமான அறிக்கையை மின்னஞ்சல் மூலம் பெற்றுக்கொள்ளவும் முடியும்.

இப்போது தொழில்நுட்பம் சார்ந்த ஒரு சிறு குறிப்பு: நீங்கள் காப்பகப்படுத்த விரும்பும் URL களின் பட்டியல் இருந்தால், அவற்றை ஒரு Google Sheets -தாளின் “நிரல் A” இல் சேர்த்து “இங்கே இந்த பக்கத்தை சேமி”- Save this page”  என்ற கூகிள் தாள்கள் (Google Docs) சேவையின் மூலம் சமர்ப்பிக்கவும், அச்செயன்முறையை  நீங்கள் இங்கே காணலாம். B ,C  மற்றும் D நிரல்கள் ஒரு நிலைக் குறியீடுகளினால்  காப்பகப்படுத்தப்பட்ட  இணைய முகவரிகள் (URL) அல்லது ஏற்கனவே வேபேக் (Wayback) இயந்திரத்தால் காப்பகப்படுத்தியிருந்தால் அதனை எடுத்துக்காட்டும் கொடி(Flag) என்பவற்றால் பூரணப்படுத்தப்பட்டு இருக்கும்.

இன்னுமொரு வழிமுறை என்னவென்றால், ஒரு URL ஐ “[email protected]” க்கு மின்னஞ்சல் செய்வதன் மூலம் சமர்ப்பிக்க வேண்டும், மேலும் நீங்கள் “வெளியிணைப்புகளை கையகப்படுத்துக’ என்ற வசதியை செயற்படுத்துவதன் மூலம் அவை பாதுகாக்கப்படும். செயல்முறை முடிந்ததும் மீண்டும் ஒரு மின்னஞ்சல் அறிக்கையைப் பெறுவீர்கள்.

இறுதியாக, தொழில்நுட்ப ரீதியாக திறமையானவர்களுக்கு,  வேபேக் (Wayback) மெஷின் ஒரு பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம்– (Application Programming Interface (API)  அல்லது நிரலாக்க இடைமுகத்தை வழங்குகிறது, இது நீங்கள் ஏற்கனவே பயன்படுத்தும்  மென்பொருள் பணிப்பாய்வுகளில் ஒருங்கிணைக்க அனுமதிக்கும், அல்லது புதிய பயன்பாடுகளை உருவாக்கும்போது, உங்கள் வேலையை தானியக்கமாக்க உதவும். இதற்கு ஒரு உதாரணம்  என்னவென்றால், உலகளாவிய ஊடகத்துறையை  வலுப்படுத்த மென்பொருள் மற்றும் அது சார்ந்த  முன்முயற்சிகளை உருவாக்கும் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவை தளமாகக் கொண்ட தொழில்நுட்ப இலாப நோக்கற்ற மீடன் (Meedan) என்னும் நிறுவனமானது – அதன் “Check” சேவையை வேபேக் (wayback) இயந்திரத்துடன் ஒருங்கிணைத்துள்ளது.

வெவ்வேறு காப்பகப்படுத்தப்பட்ட பதிப்புகளில் மாற்றங்களை ஒப்பிடுதல்

ஒரே வலைப்பக்கத்தின் இரண்டு பதிப்புகளுக்கிடையேயான வேறுபாட்டைக் கண்டுபிடித்து காண்பிக்க நீங்கள் எப்போதாவது விரும்பியிருக்கிறீர்களா?- ஒரு நிறுவனம் அல்லது தனிநபர் தங்கள் தளத்தை எவ்வாறு மாற்றியிருக்கிறார்கள் அல்லது தங்களின் பக்கத்தை எப்படி தகவமைத்திருக்கிறார்கள்  என்பதைப் பார்க்க “மாற்றங்கள்-Changes” என்ற சிறப்பு வசதியூடாக  நீங்கள் அதைச் செய்யலாம்.

இதை முயற்சிக்க, வேபேக் (Wayback) மெஷினின் முகப்புப்பக்கத்தில் உள்ள தேடல் பொறியில் எந்த காப்பகப்படுத்தப்பட்ட ஒரு URL இனை  உள்ளிடவும். பின்னர் “மாற்று-Change” விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

பல்வேறு தேதிகள் மற்றும் நேரங்களின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்புகளின் பட்டியல் உங்களுக்குக் காண்பிக்கப்படும்; நிறக்குறியீடுகளை உள்ளடக்கிய இந்த மாற்றங்கள் ஒரு காப்பகப்படுத்தப்பட்ட URL இலிருந்து அடுத்த மாற்றத்திற்கான  அளவைக் குறிக்கும் வண்ணம் அமைந்திருக்கும்.

அடுத்து, URL இன் இரண்டு நேர அளவீடுகளைக்  கொண்ட பதிப்புகளைத் தேர்ந்தெடுக்கவும், அவை பக்கவாட்டாக அமைந்திருக்கும் அதேவேளை சொற்களுக்கிடையிலான வேறுபாடுகள் நீல மற்றும் மஞ்சள் நிறங்களினால் மேற்கோள்  காட்டப்பட்டிருக்கும்.  இந்த அம்சம் ஒரு பிரிட்டிஷ் வலைப்பதிவர்  மற்றும் அரசியல் ஆலோசகர் வரலாற்றை எவ்வாறு மீண்டும் எழுத முயற்சித்ததை எடுத்துக்காட்ட பயன்படுத்தப்பட்டது. இது கீழே உள்ள கணினி திரை (Screen shot) படம் மூலம்  விளக்கப்பட்டுள்ளது.

வேபேக் (Wayback) மெஷினின் “மாற்றங்கள்” சிறப்பம்சத்தினுடாக, பிரிட்டிஷ் பிரதமரின் முன்னாள் தலைமை ஆலோசகரான டொமினிக் கம்மிங்ஸ் தனது முன்னைய வலைப்பதில்  (இடது) திருட்டுத்தனமாக சேர்க்கப்பட்டவை  (நீலம், வலது) படம்

ஆழமான காப்பகத் தேடல்கள்

வேபேக் (Wayback)  மெஷினில் காப்பகப்படுத்தப்பட்ட URL கள் தொடர்பான உரைகள் (Text)  குறியீடுகள் மூலம் வகைப்படுத்தப்படாமையால், சேவையால் இன்னும் முழு உரைசார் -தேடல் இடைமுகத்தை வழங்க முடியாதுள்ளது. இதன் பொருள்,  பயனர்கள் பக்கத்தின் காப்பகங்களைக் கண்டுபிடிக்க அவர்கள் தேடும் URL இனை அறிந்திருக்க வேண்டும். ஆனால் வேபேக் மெஷினின்  பொறியாளர்கள் தற்போது காப்பகங்களின் குறிப்பிட்ட தொகுப்பிற்காக வலைப்பக்கங்கள் தொடர்பான பல்வேறு மெட்டாடேட்டாக்களை (metadata) குறியிட்டு அட்டவணைபடுத்தும்  பணியில் ஈடுபட்டுள்ளனர்.

(இணைய காப்பக முகப்பு பக்கத்தில் கிடைக்கும் குறிப்பிட்ட  தொகுப்பிற்கான சேவைகளைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள முடியும்.)

வேபேக் (Wayback) மெஷினுடன் API களைப் பயன்படுத்துதல்

“இப்போது இந்த பக்கத்தைச் சேமி”- “Save this page” என்ற சேவையின் மூலம் காப்பகத்தில் ஆவணப்படுத்த உதவும்  API  தவிர, குறிப்பிட்ட சில URL கள் ஏற்கனவே காப்பகப்படுத்தப்பட்டள்ளதா என்பதைப் பார்க்க வேபேக் இயந்திரத்தை வினவுவதற்கு வேறு சில APIகளும் பயன்படுத்தப்படலாம். அவற்றைப் பற்றி மேலும்  இங்கே படிக்கலாம்.

அதன் பெரும்பாலான சேவைகளைப் போலவே, வேபேக்கானது  (Wayback) அதன் API களின் பயன்பாட்டின் அதிர்வெண்ணில் (Frequency)  முறையான அதிகபட்ச அளவை  காட்டாது. இருப்பினும், இது எப்போதாவது பயன்பாட்டினை பொறுத்து திணறும்  நடவடிக்கைகளை செயல்படுத்தக்கூடும்.

வேபேக் மெஷினின் பயன்பாடு தொடர்பான ஏதேனும் சிக்கல்களை நீங்கள் சந்தித்தால், எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள் அல்லது ட்விட்டரில் ( Twitter)  எங்களுக்கு நேரடியாக தகவல் அனுப்பவும். ஊடகவியலாளர்களை ஆதரிக்கும் விடயத்தில் நாம் அதிக முன்னுரிமை கொடுக்கிறோம். 

காப்பகப்படுத்தப்பட்ட பக்கங்களுக்கான அமைப்புசார் கருத்துக்களைச் சேர்த்தல்

எந்தவொரு காப்பகத்தையும் முழுமையாகப் புரிந்துகொள்ள சூழலும் ஆதாரமும் மிக முக்கியமானவை  என்பதை நாங்கள் நன்கு அறிவோம். இதைக் கருத்தில் கொண்டு, எங்கள் காப்பகத்தினால் ஆவணப்படுத்தப்பட்ட வளங்களை நன்கு புரிந்துகொள்ள புலமையாளர்களுக்கு  உதவும்பொருட்டு அவற்றின் சூழ்நிலைசார் விடயங்களை விளக்கும் பதாகைகளைச் சேர்க்கத் தொடங்கினோம்.

இவ்வகையான பதாகைகளைப் (posters)  பயன்படுத்தி காப்பகப்படுத்தப்பட்ட ஒரு  வலைப்பக்கமானது  அகற்றப்பட்டிருக்கிறதா  அல்லது அறியப்பட்ட ஓர்  ஆராய்ச்சி நிறுவனத்தால் அப்பக்கம்  எழுதப்பட்டிருக்கிறதா என அறிந்து கொள்ள முடியும்.

வேபேக் (Wayback) மெஷினில் காப்பகப்படுத்தப்பட்ட பக்கங்களின் வெளிப்புற பயன்பாடுகளுடன் இணைக்கும் மஞ்சள் தலைப்புகள் உள்ளன, மேலும் பக்கத்தைப் பற்றிய கூடுதல் வரலாற்றுசார் தகவல்களை வழங்கும் வகையில்  “About this capture”  எனும் தொடுப்பை கொண்டுள்ளது. படம்: கணினி திரையை படம்பிடிக்கப்பட்டது. (Screen shot)

ஒரு வலைப்பக்கத்தை உருவாக்கும் காப்பகப்படுத்தப்பட்ட ஒவ்வொரு URL களின் ஆதாரமும் அந்தப் பக்கத்தைப் புரிந்துகொள்ள முக்கியமான ஒரு விடயமாக இருக்கும். உதாரணத்திற்கு , காப்பகப்படுத்தப்பட்ட வலைப்பக்கத்தில் உள்ள சில படங்கள் பக்கத்தின் பிற கூறுகளைப் போலவே ஒரே நேரத்தில் மற்றும் தேதியில் கைப்பற்றப்பட்டதா? காப்பகப்படுத்தப்பட்ட ஒவ்வொரு URL பின்னணி பக்கத்தின் மேல் வலதுபுறத்தில் உள்ள “About this capture” என்ற இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் அந்த தகவலைக் காணலாம்.

எங்கள் காப்பகங்களின் நேர்மைத்தன்மைக்கு  நாங்கள் செலுத்திய கவனிப்பும் கவனமும், பல ஆண்டுகளாக  நாம் கொண்டிருந்த  வெளிப்படைத்தன்மையும், வேபேக் மெஷினில் மக்கள் வைத்திருக்கும் ஒட்டுமொத்த நம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக அமைந்தன. அதனால்தான் வேபேக் மெஷினில் சேமிக்கப்பட்ட சான்றுகள் உலகளவில் பல நீதிமன்றங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

எங்கள் “Save this page”  என்ற அம்சத்துடன் நீங்கள் உருவாக்கிய காப்பகங்களுக்கு அமைப்புசார் சூழலைச் சேர்ப்பதை நாங்கள் பரிசீலிக்க விரும்பினால், தயவுசெய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.

இணைய உலாவி நீட்டிப்புகள்

நீங்கள் எதிர்பார்ப்பது போல, சஃபாரி (Safari), பயர்பாக்ஸ் (Firefox) மற்றும் குரோம் (Chrome) ஆகியவற்றிற்கான இணையை உலாவி நீட்டிப்புகள் மற்றும் iOS மற்றும் Android க்கான சொந்த மொபைல் பயன்பாடுகள் எங்களிடம் உள்ளன. மேலும், ஒரு சிறப்பம்சமாக , வலைதளங்களின் வழி உலாவும்  அனுபவங்களின் சூப்பர்-ஈஸி வேபேக் மெஷின் ஆதரவுக்காக அதன் உலாவியில் 404 எனப்படும் பிழை  கண்டறிதலை உருவாக்க பிரேவ் (Brave) என்ற  ஒரு தேடுபொறியுடன் நாம்  கூட்டுசேர்ந்தோம்.

எல்லாவற்றிற்கும் மேலாக, இணைய காப்பகம் மற்றும் வேபேக்(Wayback) மெஷின் சம்பந்தப்பட்ட மேலதிக தகவல்கள்  மற்றும் சந்தேகங்களுக்கு எம்மை மின்னஞ்சல் அல்லது ட்விட்டர் மூலம்  நேரடி குறுந்தகவல் (DM) மூலம் தொடர்பு கொள்ள முடியும்.

உங்கள் கேள்விகள், கோரிக்கைகள், பிழையாக பெற்றுக்கொள்ளப்பட்ட அறிக்கைகள் மற்றும் வெற்றிக் கதைகளைப் பகிரவும். எங்கள் சேவைகளைப் பற்றி நீங்கள் கொண்டிருக்கும் விமர்சனங்களையும்  கூட  நாங்கள் கேட்க விரும்புகிறோம், அல்லது எந்த அம்சங்களை மேம்படுத்த வேண்டும் அல்லது சேர்க்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அவற்றினையும் எமக்கு அறியத்தரவும். அந்த வகையில் பத்திரிகையாளர்களின் தேவைகளையும் விருப்பங்களையும் ஆதரிக்கும் ஒரு சிறந்த வேலைத்திட்டத்தை  செய்ய நாம் தொடர்ந்து பணியாற்ற முடியும்.

ஆனால் காத்திருங்கள்! இன்னும் இருக்கிறது…

பொது வலைபக்கங்களின் பெரும்பகுதியை காப்பகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இணைய காப்பகமானது தனது  இணைய காப்பக புலமையாளர் சேவையின் மூலம் 25 மில்லியனுக்கும் அதிகமான திறந்த அணுகல் புலைமைசார்  ஆவணங்கள் உட்பட பிற பொருட்களின் தொகுப்புகளை பாதுகாத்து வழங்குகிறது; கிட்டத்தட்ட 30 மில்லியன் மின்புத்தகங்கள் மற்றும் நூல்கள் முன்னோட்டமிடப்படலாம், கடன் வாங்கலாம் அல்லது பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்; மற்றும் மில்லியன் கணக்கான மணிநேர காப்பகப்படுத்தப்பட்ட தொலைக்காட்சி செய்திகள் (10 ஆண்டுகளின் சிறந்த பகுதிக்கான டஜன் கணக்கான நிலையங்கள்) தொடர்புடைய மூடிய தலைப்புகளின் குறியீடுகள் மூலம் அட்டவணைபடுத்தியதால் சுலபமாக தேடப்படக்குதுடியதாக உள்ளது.

இணைய காப்பகம் மற்றும் வேபேக் (Wayback) மெஷினின் திட்டங்கள் மற்றும் சேவைகள் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள, தயவுசெய்து எங்களை ட்விட்டர்இல் @internetarchive மற்றும் @waybackmachine ஆகியவற்றில் பின்தொடர்ந்து எங்கள் வலைப்பதிவு இடுகைகளையும்  படிக்கவும்.

மேலதிக உசாத்துணை வளங்கள்

இணைய காப்பகம் என்றால் என்ன, அதில் நான் என்ன கண்டுபிடிக்க முடியும்?- What is the Internet Archive and What Can I Find on It?

இணைய காப்பகத்தின் வேபேக்(Wayback) இயந்திரத்தை எவ்வாறு பயன்படுத்துவது – How to Use the Internet Archive’s Wayback Machine

OSINT விசாரணைகளுக்கு Archive.org ஐப் பயன்படுத்துதல் – Using Archive.org for OSINT Investigations

GIJN Webinar: வீட்டிலிருந்து செய்தியறிக்கையிட  திறந்த தகவல் மூலங்களை பயன்படுத்துதல் – GIJN Webinar: Using Open Source Info to Report from Home

GIJN வள மையம்: இணையத்தின் ஆராய்ச்சி கருவிகள் – GIJN Resource Center: Online Research Tools

மார்க் கிரஹாம் (Mark Graham) ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக வேபேக் (Wayback) இயந்திரத்தை நிர்வகித்து வருகிறார். அதற்கு முன்பு, அவர் NBC  News  Digital என்ற நிறுவவனத்தில்  மூத்த துணைத் தலைவராக இருந்தார். கிரஹாம் முதல் அமெரிக்க-சோவியத் இடையிலான மின்னஞ்சல் சேவையை இயக்க உதவினார்; இணையத்தின்  விவாத முறைமைக்கான முதல் இணைய அடிப்படையிலான இடைமுகத்தை உருவாக்க ஒரு திட்டத்தைத் தொடங்கியது மட்டுமின்றி பெண்களுக்கான ஆரம்ப ஆன்லைன் சேவையான  iVillageஐ   இயக்க அவர் பெரிதும்  உதவியுள்ளார்.

மூலம்

This story was originally published by the Global Investigative Journalism Network (GIJN)

Hot this week

ගංවතුරේ පාවෙන ජා-ඇල ජීවිත

2024 වසරේ මාස හයක් තුළ ගංවතුර අවස්ථා තුනක්... ඔක්තෝබර් ගංවතුරෙන්...

CIR and SCOPE host workshop for women journalists on GBV

The Centre for Investigative Reporting (CIR) and Strengthening Social...

GBV and Women’s Political Participation – A Workshop for Women Journalists

‘Towards New and Inclusive Narratives,’ a workshop on GBV...

Panel discussion on ‘Election Disinformation, Online Hate & Women’s Political Representation’

The Center for Investigative reporting (CIR) will host a...

Topics

ගංවතුරේ පාවෙන ජා-ඇල ජීවිත

2024 වසරේ මාස හයක් තුළ ගංවතුර අවස්ථා තුනක්... ඔක්තෝබර් ගංවතුරෙන්...

CIR and SCOPE host workshop for women journalists on GBV

The Centre for Investigative Reporting (CIR) and Strengthening Social...

GBV and Women’s Political Participation – A Workshop for Women Journalists

‘Towards New and Inclusive Narratives,’ a workshop on GBV...

Related Articles

Popular Categories