Friday, November 15, 2024
30 C
Colombo

பிழையான தகவல் பிரச்சாரம் மற்றும் இணையவெளி துன்புறுத்தல்களை எதிர்கொள்ள ஊடகவியலாளர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்வது எப்படி?

தனது 15 வருட ஊடகப்பயணத்தில்,  எரிக்லிட்கேவிற்கு (Eric Litke) தனதுசெய்தி அறிக்கையிடலுக்கு எதிர்வினையாக கோபத்துடன் தனக்கு எழுதப்படும் இமெயில்கள்(email) மற்றும்சமூக ஊடகங்களினூடாகஅனுப்பப்படும் செய்திகள் போன்றவற்றை எதிர்பார்ப்பது ஒன்றும் புதிய விடயமல்ல. “அது இந்தத் தொழிலுடன் சேர்ந்து வருவதுதான்,” என்றுஅவர் கூறினார்.

ஆனால்அவர் USA TODAY மற்றும் PolitiFact போன்ற நிறுவனங்களுக்கு உண்மை சரிபார்ப்பவராக பணியாற்ற தொடங்கிய பின்னர், தனது அறிக்கையிடல் தொடர்பானபொதுமக்களின் கருத்துப்போக்கில் ஒரு மாற்றம் நிகழ்ந்திருப்பதை அவர் உணர்ந்தார். PolitiFact Wisconsin என்பது லாப நோக்கற்ற Milwaukee Journal Sentinel மற்றும்PolitiFact என்ற இரண்டு நிருவனங்களிற்குமிடையில் உள்ள ஒரு கூட்டு ஆகும்.  அவர் எப்போதும் தான் பெருமையாக நினைக்கும் தனதுசெய்தி அறிக்கையிடல்களை, சமுக வலைத்தளப்பக்கங்களில் பகிர்வது வழக்கமாயிருந்தாலும், சமீபத்திய மூன்று வருடங்களில் அவர் பெற்றுக்கொண்டவசைச்செய்திகளில் பெரும்பாலனாவை அவருக்கு நெருக்கமான வட்டாரங்களிளிருந்துதான் அதிகமாக வந்திருந்தது.

அறிக்கையிடுவதில் நடுநிலைத்தன்மைக்காக பாடுபட்ட போதிலும், அவரது உண்மைச் சரிபார்ப்பு அறிக்கைகள் சில பேஸ்புக் (Facebook) உள்ளடக்கத்தை சரி செய்ய உதவுகிறது. இவ்வறிக்கைகள், முரண்பாடான அதேநேரம் மிகவும் உணர்ச்சிபூர்வமான எதிர்வினைகளைத் தூண்டுவதாக காணப்படுகிறது. சமீபத்தில் அவரது  ஒரு நீண்டகால நண்பர் பேஸ்புக்கில் அவரிடம் “ஒருகாலத்தில் முக்கியமான வேலைகளைச் செய்தார்” என்று கூறியிருந்தார்.

“நான்ஒருஉண்மையை சரிபார்க்கும் விடயம் தொடர்பாக அறிக்கையிடும்போதும், புலனாய்வுஅறிக்கையிடலைமேற்கொள்ளும்போதும்எதிர்வினையாகவரும் கருத்துகளில் மிகக்குறிப்பிடத்தக்களவு வித்தியாசம் உள்ளது,” என்று லிட்கே கூறினார். “இப்போது உள்ள இந்த உள்ளுணர்வு எதிர்வினையானது, மக்கள் ஆரோக்கியமானவிவாதங்கள், தரவு மற்றும் விமர்சன சிந்தனையுடன் ஒரு கலந்துரையாடலில் ஈடுபடுவதில் ஆர்வம் காட்டவில்லை. அவர்கள் இவ்வாறு யோசிக்கிறார்கள், ‘சரி, நீங்கள் இந்த நபரை இந்த வழியில் மதிப்பிட்டீர்கள், எனவே நீங்கள் இவ்வுலகில் கறைபடிந்த ஒரு நபர், அல்லது நீங்கள் பாராட்டப்பட வேண்டிய ஒரு சிறந்த நபர்,’ – இது நாங்கள் இங்கு எந்தப்பக்கத்தில் நிற்கின்றோம் என்பதை அடிப்படையாகக் கொண்டது.”

இன்னும் மோசமானது என்னவென்றால்அவர் ஒரு அநாமதேய நபரிடமிருந்துபெற்ற மிரட்டல்  தொனியிலான மின்னஞ்சல்தான். அதில், அந்நபர்தெரிவித்தது என்னவென்றால் அவரும் அவரது ஆசிரியர்களும்முடிவு செய்த விடயமானது, காவல்துறையை எச்சரிக்கும் அளவுக்கு தீவிரமானது என்பதே.

“இதுவரை என் வாழ்க்கையில் இப்படி ஒன்று வரவில்லை,” என்று அவர் கூறினார். “இது இன்று விடயங்கள் எங்கே என்ன நிலையில் இருக்கின்றன என்பதற்கான ஒரு குறிகாட்டியாகும், அதே நேரம் இப்படியானமின்னஞ்சல்களை அனுப்ப மக்கள் தயாராக இருக்கிறார்கள், இவற்றினை பார்க்கும்போதுநாங்கள் யோசிப்பது என்னவென்றால்,” ‘நீங்கள் என் வீட்டிற்கு முன்னால் வந்து நிற்கப்போகிறீர்கள் என்று நான் நினைக்கவில்லை, ஆனால் நாங்கள் சிலருக்குத் இது தொடர்பில் தெரியப்படுத்த வேண்டிய கட்டாய நிலையில் இருக்கிறோம். “

நிருபர்களுக்கெதிரான தற்போதைய விரோத மனப்பாங்கு, முன்பு இருந்த சாத்தியக்கூறுகள் தொடர்பில்கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கின்றது: அதாவதுஉடல் அச்சுறுத்தல்கள், தனிப்பட்ட விடயங்களை பகிரல் (doxxing), டிஜிட்டல் தனியுரிமை, பாதுகாப்பு மீறல்கள் மற்றும் அவர்களின் சமூக ஊடக கணக்குகளிலிருந்து அவர்களின் தனிப்பட்ட புகைப்படங்களை எடுத்து திரிபுபடுத்தல் போன்றவையாகும். இத்தகைய தாக்குதல்கள்,ஊடகவியலாளர்களின் பாதுகாப்பிற்கான உயிர்அச்சுறுத்தல்களாகமாறலாம்.

மேலும்அவர்களைசுதந்திரமான வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்தும் அதேவேளை தொழில்துறையை முழுவதுமாக கைவிட்டுவிடும்படி கட்டாயப்படுத்தலாம்.

இணையவெளிகளின்நடுநிலையான-புறநிலைஉண்மைத்தன்மைதாக்குதல்களைஎதிர்கொள்வதால், நிருபர்களும் தங்கள் டிஜிட்டல் பாதுகாப்பைப் பற்றி இருமுறை யோசிக்க வேண்டும்.

பிரிக்கமுடியாத வகையில் இணைப்பு : தவறான தகவல் மற்றும் இணையவெளி  துன்புறுத்தல்

இணையவெளி துன்புறுத்தல் என்பது ஒரு தனிநபர் அல்லது குழு வேறு ஒருவரை கடுமையான, பரவலான மற்றும் தீங்கு விளைவிக்கும் வகையில் குறிவைப்பதாகும். இது வெறுக்கத்தக்க பேச்சு, பாலியல் துன்புறுத்தல், ஹேக்கிங் மற்றும் டாக்ஸிங் உட்பட பல வகையான தந்திரங்களை உள்ளடக்கிய ஒரு பொதுவான சொல் ஆகும்.டாக்ஸிங்  என்பதுஒருவரின் தனிப்பட்ட தகவல்களை இணையவெளியில் பரப்புதலாகும்.

பெண் நிருபர்கள் இந்த இணையவெளிதாக்குதல்களின் தாக்கத்தினைவெகுவாக தாங்கிக்கொள்ள வேண்டியுள்ளனர். ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ)-United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO)  மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கான சர்வதேச மையம்-the International Center for Journalists ஆகியவற்றின் சமீபத்திய அறிக்கைஇணையவெளி துன்புறுத்தலை “பெண் பத்திரிகையாளர்களுக்கு சவால் விடுக்கும் புது முன்னரங்கு (போர்)” என்று அறிவித்தது. ஊடகத்துறையில் உள்ள700 க்கும் மேற்பட்ட பெண்களின் உலகளாவிய கணக்கெடுப்பில், 73% சதவீதத்தினர் எதாவது ஒருவித இணையவெளி வன்முறையை தாம்அனுபவித்ததாகக் கூறினர்.

பாலியல் வன்கொடுமை மற்றும் உடல் ரீதியான வன்முறை, டிஜிட்டல் பாதுகாப்பு தாக்குதல்கள், தங்களின் பாலியல்ரீதியாக திரிபுபடுத்தப்பட்ட புகைப்படங்கள், தவறான மற்றும் துஷ்பிரயோக செய்திகள், அவர்களின் தனிப்பட்ட நற்பெயர் மற்றும் தொழில்முறை நம்பகத்தன்மையை குறைத்து மதிப்பீட்டுக்கு உட்படுத்தும் முயற்சிகள் மற்றும் நிதி அச்சுறுத்தல்கள் போன்ற அச்சுறுத்தல்கள் தங்களுக்கு வந்ததாக பதிலளித்தவர்கள் கூறினர். சுமார் ஐந்தில் இரண்டு பங்கு பேர் தங்கள் மீது நடைபெற்ற  தாக்குதல்கள் திட்டமிடப்பட்ட தவறான தகவல் பிரச்சாரங்களுடன் தொடர்புடையதாகக் கூறினர்.

இணையவெளி துன்புறுத்தல்கள் பெரும்பாலும் பிழையான தகவல் பிரச்சாரங்களுடன் “பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது”, இது செய்தித்தாள்கள் மற்றும் பிற ஜனநாயக நிறுவனங்களை இழிவுபடுத்த முயல்கிறது, ஆனால் தனிப்பட்டரீதியில்ஊடகவியலாளர்கள் மீது நோக்கி திரும்பும் என்று பென் அமெரிக்காவினை (PEN America) சேர்ந்த அமெரிக்காவின் முதல் அரசியலைமைப்பு திருத்தத்திற்கும் மற்றும் வாக்களிக்கும் உரிமைகளுக்காக போறாடும் சட்டத்தரணி நோரா பெனாவிடெஸ் கூறினார். PEN Americaநிறுவனமானதுநாடு முழுவதும் ஊடகவியலாளர்கள் மற்றும் செய்தி அறைகளுக்கு பாதுகாப்பு பயிற்சிகளை வழங்குகிறது.

“இவை இணையவெளியில்ஊடுருவி வரும் பிரச்சனைகளாகும், மேலும் அவை தனித்துவமான வழிகளில் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அவர்களின் தந்திரோபாயமானது மக்கள் மத்தியில்  தொடர்ந்து சந்தேகத்தை விதைப்பதும்மக்கள் பார்க்கும் கதைகளை இழிவுபடுத்துவதாகும்,” என்று அவர் கூறினார்.

இரண்டு சந்தர்ப்பங்களிலும், பாதிக்கப்பட்டவர் சீரற்ற முறையில் இலக்கு வைக்கப்பட்டிருப்பதாக தோன்றினாலும், இத்தாக்குதல்கள் மிகவும் கச்சிதமாகஒருங்கிணைக்கப்பட்டிருக்கலாம்.(Media Manipulation Casebookஎன்பது ஆழ்ந்த விசாரணைகளின் தொகுப்பாகும், இது இணையவெளிதுன்புறுத்தல் மற்றும் தவறான தகவல் பிரச்சாரங்களில் உயர் மட்ட ஒருங்கிணைப்பைக் காட்டுகிறது. கோவிட் -19 கொள்ளைநோயின் ஆரம்ப காலகட்டங்களில், இணையத்தில் உள்ள கறுப்பின சமூகத்தினரை இலக்கு வைத்து நோய்பற்றிய தவறான மருத்துவ தகவல்கள் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.)

“இணையவெளி துன்புறுத்தல் மற்றும் தவறான தகவல் என்பன ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் அல்லது ஒரே ஈட்டியின் இரண்டு முனைகள் என நான் நினைக்கிறேன், இல்லையா?” PEN அமெரிக்காவின் டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் சுதந்திரமாக வெளிப்படுத்தல் திட்டங்களின் இயக்குனர் விக்டோரியா வில்க் (Viktorya Vilk) கூறினார். “இரண்டு நிகழ்வுகளினதும் குறிக்கோள், தவறான தகவல் அல்லது திட்டமிட்டு பரப்பப்படும் பிழையான  தகவல்களை பரப்பி பெரிய அளவில்தாக்கத்தை ஏற்படுத்துவதாகும். அவர்கள் சர்ச்சைக்குள்ளாக்கி, மதிப்பிழக்க முயற்சிக்கும் துல்லியமான தகவல் நம்பத்தகுந்தஆதாரங்களில் இருந்து வருகிறது. அதைச் செய்வதற்கு, அந்த தொழில்முறை நம்பகரமான ஆதாரங்கள் நம்பகமானவை அல்ல என்பதை நிரூபிக்க வேண்டும். மேலும்அதன்நம்பகத்தன்மையைகேள்விக்குட்படுத்த அல்லது நீர்த்துப்போகச் செய்ய விரும்பினால், துல்லியமான, தொழில் ரீதியாக தயாரிக்கப்பட்ட தகவல்களுக்குப் பின்னால் உள்ளஊடகவியலாளர்களை அவமதிக்கவும், மிரட்டவும், அவர்களது குரலை நசுக்கவும்வேண்டியிருக்கும்,”

ஆனால் இரண்டு சிக்கல்களும் எப்பொழுதும் ஒன்றாகச் பயணிக்கின்றன என்று அர்த்தமல்ல. அனைத்து இணையவெளி துன்புறுத்தல்களும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இல்லை; சில நேரங்களில் இது உண்மையிலேயே மிகவும் குழப்பமகரமாக இருக்கிறது, ஏனெனில் கோபமடைந்த சமூக ஊடக பயனர்கள் அனைவரும்தங்கள் கோபத்துக்கு காரணமான ஒருவரை இலக்கு வைத்து செயற்படுவர்.

பிழையான தகவல்கள் மற்றும் இணையவெளி துன்புறுத்தல்களுக்கிடையேயானபலஒற்றுமைகள் இருந்தபோதிலும், அவைஅதே வழியில் ஆய்வு செய்யப்பட்டுபுரிந்து கொள்ளப்படவில்லை. பெனாவிடெஸ்(Benavidez) மற்றும் வில்க் (Vilk) ஆகியோரின் கருத்துப்படி, பிழையான தகவல்தொடர்பான ஆராய்ச்சிகள்,சமூக ஊடகங்களில் மோசமான செல்வாக்கு செலுத்துபவர்களின் வலையமைப்புகள், bots எனப்படும்சமூக ஊடக தானியங்கி கணக்கு வலையமைப்பு மற்றும் போலியான புதிய விற்பனை நிலையங்களை கண்டறிய அர்ப்பணிக்கப்பட்டுள்ள அதேவேளை, இணையவெளி துன்புறுத்தல்கள் தொடர்பில் மிகக்குறைவான விஞ்ஞான ஆராய்ச்சிகளே மேற்கொள்ளப்பட்டுளன. பெரும்பாலும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள்,  தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள சிக்கலானபொறிமுறைகளைத் தோண்டி எடுப்பதற்குப் பதிலாக, டாக்சிங் (doxing) எனப்படும் தனிப்பட்ட ஒருவரின் தகவல்களை வெளியிட்டு அவமானப்படுத்தல் அல்லது வேறுவிதமாக தனிநபர்களை இலக்காகக் கொண்டு நடாத்தப்படும் நிகழ்வுகளில் அதிகமாக கவனம் செலுத்துகிறார்கள்.

“இந்த விஷயங்கள் தொடர்பில்நல்ல தடயவியல் விசாரணைகள் கைவசம்இல்லாததால், எங்களிடம் நிறைய சான்றுகள் இல்லை” என்று வில்க் கூறினார். “இணையத்தின் இருண்ட மூலைகளில் அனைத்து வகையான ஒருங்கிணைப்புகளும் நடக்கலாம். ஆனால் இந்த [துன்புறுத்தல் பிரச்சாரங்கள்] எவ்வாறு ஒருங்கிணைக்கப்படுகின்றன என்பதை அளவிட எங்களுக்கு நிறைய ஆதாரங்கள் இல்லை. “

இலக்கு வைப்படுவதற்கு முன் உங்கள் இணைய இருப்பினை  எப்படி உறுதி செய்வது?

உள்ளூர் ஊடகவியலாளர்கள், டொக்ஸ்ட் (doxxed), எனப்படும் இணையவெளிதுன்புறுத்தல்களுக்குள்ளாவது என்பதுஒருதொலைதூர கற்பனையான சூழ்நிலையைப் போலவும்இது தேசிய ஊடகங்கள் சார்ந்த அல்லது மற்ற நாடுகளில் உள்ள ஊடகவியலாளர்களுக்கு  மட்டுமே நிகழ்கிறது என்றும் உணரலாம்.

“இது இன்னும் பெரும்பாலான மக்களை பொறுத்தவரையில்  தற்போதுநடைபெற்றுக்கொண்டிருக்கும் இணையவெளி தாக்குதல்களின் ஒரு புதிய பதிப்பாகும்” என்று லிட்கே கூறினார். “இவ்வாறான சம்பவம்  யாருக்காவது நடந்தது தொடர்பில் உங்களுக்குத் தெரியாமல் இருக்கும்வரை, அது உண்மையாக இருக்காது என்ற எண்ணமே இருக்கும்.”

ஆனால் பொதுமக்களின்அன்றாடசொற்றாடல் விடயங்களின்ஒவ்வொரு அம்சத்திலும் தவறான மற்றும்திட்டமிட்டு பரப்பப்படும்பிழையான தகவல்கள் ஊடுருவி வருவதால், ஊடகவியலாளர்கள்இணையவெளியில் துஷ்பிரயோகம் செய்பவர்களால் குறிவைக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. PEN அமெரிக்காவின் ஆன்லைன் துன்புறுத்தல் கள கையேட்டின் படி, இணையவெளிதுன்புறுத்தலால் டொக்ஸ்ட் (doxxed), ஆள்மாறாட்டம் அல்லது வேறுவிதமாக இலக்கு வைக்கப்படுவதற்கான சாத்தியப்பாடுகளை கருத்தில்கொண்டு அதனை எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறோம் என்றுஅதற்குதயாராக இருப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தெற்கு புளோரிடாவில் (South Florida) உள்ள செமினோல் ட்ரிப்யூனின் (Seminole Tribune) ஊடகவியலாளர் டாமன் ஸ்காட் (Damon Scott), பிழையான  தகவல்கள் தொடர்பில் அறிக்கையிடுவது மற்றையபெரும்பாலான செய்தித்தலைப்புகளில்அறிக்கையிடுவதை விட வித்தியாசமாக இருப்பதாக உணர்வதாக கூருகின்றார். 2020 ஆம் ஆண்டில், உலகளாவிய உண்மைச் சரிபார்ப்பு நிறுவனமானFirst Draft இன்தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தியாளராக (News Fellow), உள்ளூரில் மேற்கொள்ளப்பட்ட தவறான மற்றும்திட்டமிட்டு பரப்பப்படும்பிழையான தகவல்கள் தொடர்பில்அவர் கண்காணித்தார். கடந்த வருடத்திற்கு முன்புவரை, அவர் பிழையான தகவல்கள் தொடர்பில் ஆழ்ந்த ஆராய்ச்சியில் இறங்கவில்லை. இது தொடர்பில் மிகவும் மேலோட்டமானபார்வையுடன் சென்றிருந்த அவர், இவ்வாறான விடயங்களை பின்னாட்களில், தனதுதினசரி வாழ்க்கையில் அன்றாடம்பயன்படுத்த வேண்டியிருக்கும் என்று நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

“இந்த புலமைப்பரிசிலுக்காகநாங்கள் செய்ததைப் போல, இதற்கு முன்னர்  தவறான தகவல் தொடர்பில்  நான் ஒருபோதும் ஆற அமர்ந்து  பகுப்பாய்வு செய்யவில்லை, மேலும்அது என் மனநிலையையும் என் உயிர்த்துடிப்பையும் எவ்வாறு பாதித்தது என்பதற்கு நான் தயாராக இருக்கவில்லை,” என்று அவர் கூறினார். “முழு அனுபவமும் நான் நினைத்ததை விட மிகவும் வேதனையாக இருந்தது. நான் அதை மீண்டும் செய்ய வேண்டியிருந்தால், நான் அதை செய்வேன், ஆனால் நான் நினைத்ததை விட இது இத்துறைசார்ந்து நிறைய விடயங்களை நான் கற்றுக்கொண்டேன். “

அவர் குறிப்பாக இப்பிரச்சனையின் அளவு தொடர்பாக அவ்வளவு ஊக்கமற்று இருந்திருந்தார். அதற்கு இன்னுமொரு காரணம்,பல சமூக ஊடகங்களில்குறிப்பிடத்தக்க பின்தொடர்வோரை கொண்ட செல்வாக்கு செலுத்தும் நபர்கள்(influencers)பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டதுமாகும்.ஆனால் ஒரு உள்ளூர் நிருபராக புளோரிடா-குறிப்பிட்ட தகவல் கோளாறுகள் பற்றிய செய்திமடல்களைத் தயாரிக்க திரைக்குப் பின்னால் அவர்பெரும்பாலும் பணியாற்றினார். ஸ்காட் தனது டிஜிட்டல் பாதுகாப்பு குறித்து மிதமான அக்கறை கொண்டிருந்த காரணத்தால் சமூக ஊடகங்களில் மோசமாகசெயற்படும் நபர்களுடன்  நேரடியாக தொடர்புகள் எதுவும் கொண்டிருக்கவில்லை.

அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நண்பர்கள் பட்டியலில் அனேகமான எல்லோரையும் நீக்கி, தனது பயனர்பெயர் மற்றும் கணக்கையும் மாற்றி தொழில்சார் ரீதியாக சமூக ஊடகங்களில் தனது இருப்பை கடுமையாக்கினார்.

“இந்த [பேஸ்புக்] குழுக்களில் யாருக்கும் முன்பு நான் யார் என்று தெரிந்திருக்க முடியாது, ஆனால் அவர்கள் என்னை கண்டுபிடிக்க முயற்சித்தால், அவர்களால் கண்டுபிடிக்க முடியும்,” என்று அவர் கூறினார்.

ஒரு ஆதரவு வலையமைப்பை  உருவாக்குவது உயிர்ப்புடன்செயலில் இருக்க மற்றொரு பயனுள்ள வழியாகும். நிருபர்கள் துல்லியமானசெய்தி அறிக்கைகளை  உருவாக்கி, அவர்களின் இணையத்தள சமூகங்களில் நம்பகமான ஆதாரங்களாக மாறினால் அவர்கள் ஹேக்கர்கள் மற்றும் ட்ரோல்களால் தாக்குதல்களுக்குஇலக்காகும்போது பாதிப்புக்குள்ளாவதுகுறைவானதாக இருக்கும். “உங்களிடம் ஒரு நல்ல மதிப்புடன் ஒரு பெயர் கிடைத்தவுடன், உங்களுக்கு என்ன நடக்கிறது என்பதை நீங்கள் மக்களுக்குச் சொல்லலாம், மேலும் அவர்கள் உங்கள் உதவிக்கு வருவார்கள்.  நீங்கள் எந்த வகையான உதவியை விரும்புகிறீர்கள் என்று அவர்களுக்கு சில வழிகாட்டுதல்களையும்  வழங்க முடியும்,”என்றுவில்க் கூறினார்.

உதாரணமாக, ஒரு நிருபர் தொடர்பில்சமூக ஊடகங்களில் ஆள்மாறாட்டம் செய்யப்படுவதைக் கண்டறிந்தால், தான் சார்ந்த வலையமைப்பில் இருப்போரை  இது தொடர்பில் அவர்களை புகாரளிக்க கோருவது குறிப்பிட்ட  கணக்கைவிரைவாக அகற்றப்படும் வாய்ப்பை அதிகரிக்கும்.

“அந்த விஷயத்தில் அதனைப் பற்றி பேசுவது மிகவும் முக்கியம்,” என்று வில்க் கூறினார். “இது நான் அல்ல, தயவுசெய்து இந்தக் கணக்குக்கு எதிராக புகாரளிக்க எனக்கு உதவுங்கள். என்னைப்போல் யாரோ ஆள்மாறாட்டம் செய்கிறார்கள், இந்தக் கணக்கிலிருந்து வரும் எதையும் நம்ப வேண்டாம்.”

நிருபர்கள் தங்கள் வலையமைப்புகளுக்குள் நம்பிக்கையை வளர்ப்பதற்கான ஒரு வழி, சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி அவர்களின் செய்தி சேகரிப்பு செயல்முறை பற்றிய விளக்கங்களை வழங்குவதாகும், என்றுபெனாவிடெஸ் கூறினார்.

“இது சிலவேளைகளில் வீட்டுப்பாடமாகத் தோன்றலாம்ஆனால் அது போன்ற சிறிய விடயங்கள் மூலம் கட்டியெழுப்படுபவை  நம்பமுடியாத அளவிற்கு விடயங்களை நகர்த்தும் அதேவேளை வாசகர்களுக்கும்பிரயோசனமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் கூறினார்.

 “தவறான தகவல் பிரச்சாரம் உங்களை அல்லது உங்கள் செய்தி அறையை குறிவைக்கும்போது நீங்கள் முன்கூட்டியேபயன்படுத்தும் கருவிகளாக அவை உதவும்.”

துஷ்பிரயோகம் செய்பவர்களை விட ஒரு படி மேலே இருக்க மற்றொரு வழி, ஒருவரின் சமூக ஊடக கணக்குகள் மற்றும் இணையவெளி இருப்பை மேலும் இறுக்குவதாகும் என்று வில்க் கூறினார்.

“ஊடகவியலாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால், அவர்கள் விஷயங்களை புலனாய்வு செய்யநன்றாகபயிற்சி பெற்றிருக்கிறார்கள், அனால்அவர்கள் அதை ஒருபோதும் தம்பக்கம்திருப்பிவிட மாட்டார்கள்,” என்று அவர் கூறினார். “ஆனால் அவர்கள் இப்போது அதைத்தான் செய்ய வேண்டும் – அவர்கள் அடிப்படையில் ஒரு டாக்சரைப் போல சிந்திக்க வேண்டும். இணையத்தில் தங்களின் பெயரில்  என்ன இருக்கிறது மற்றும் அந்த தகவலை எப்படிப் பெறுவது என்பதைப் புரிந்து கொள்ள இணையவெளியில்  தங்கள் சொந்த தடங்களை தோண்ட ஆரம்பிக்க வேண்டும்.”

  1. உங்களை நீங்களே கூகிள் செய்து கொள்ளுங்கள்: இது “வெளிப்படையான நகைச்சுவையாக” தோன்றினாலும், வில்க் கூறியது என்னவென்றால் , உங்கள் பெயர், கணக்கு குறிச்சொற்கள், தொலைபேசி எண் மற்றும் வீட்டு முகவரியை பல்வேறு தேடுபொறிகள் மூலம் தேடிப் பாருங்கள். கூகிளில் இருந்து தொடங்கவும், ஆனால் அங்கு நிறுத்த வேண்டாம். கூகிளானதுஒவ்வொரு தனிப்பட்ட பயனருக்கும் விசேடமானதேடல் முடிவுகளைத் தருகிறது, அதாவது ஒரு டாக்ஸர் உங்கள் தனிப்பட்ட தகவலைத் தேடும்போது வெவ்வேறு முடிவுகளைப் பெறுவார். தனிப்பட்டரீதியில் தேடல்  முடிவுகளை வடிகட்டி அளிக்கும் தேடல்போறிகளை தவிர்த்து, பயனர்களின் தனியுரிமைக்கு முன்னுரிமை அளிக்கும் DuckDuckGoபோன்ற தேடுபொறியைப் பயன்படுத்தவும். உங்களின் இணையவெளி  தடம் பற்றிய இன்னும் முழுமையான பார்வைக்கு, சீன தேடுபொறி Baidu மூலம் உங்கள் தகவல்களை கொடுத்து இயக்கவும்.
  2. விழிப்பூட்டல்களை (alerts)உருவாக்கவும்: உங்கள் பெயர் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் இணையவெளியில்  குறிப்பிடப்படுவதை 24 மணிநேரமும் கண்காணிக்க முடியும் என்று எதிர்பார்க்க முடியாது – நீங்கள் அவ்வாறு  செய்ய வேண்டியதில்லை. உங்கள் பெயர், கணக்கு குறிசொற்கள், தொலைபேசி எண் மற்றும் வீட்டு முகவரிக்குGoogle alerts விழிப்பூட்டல்களை அமைக்கவும். உங்கள் தொடர்பான தகவல்கள்இணையவெளியில் பரவத் தொடங்குகிறதா என்று குறைந்தபட்சம் உங்களுக்குத் தெரியும். “நீங்கள் அதை வேண்டுமானால் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் செய்யலாம்” என்று வில்க் கூறினார்.
  3. உங்கள்இணையத்தள இருப்பை கண்காணியுங்கள்: உங்கள் சமூக ஊடகத்தளங்களில் இருக்கும் கணக்குகளில் settings இனை இறுக்குவது மிக முக்கியமான படியாகும், அதனால் மோசமான நபர்களுக்கு உங்கள் தனிப்பட்ட தகவல்களையோ அல்லது உங்கள் அன்புக்குரியவர்களையோ அணுக முடியாது. எந்த நோக்கத்திற்காக நீங்கள் எந்த கணக்குகளைப் பயன்படுத்துகிறீர்கள் என்பது பற்றி அவதானமாகவும் சில உத்திகளையும் கடைப்பிடியுங்கள்என்றுVilk பரிந்துரைகிறார்.
  • நீங்கள்உங்கள் கதைகளைப் பகிரவும், சக ஊழியர்களுடன் பழகவும், உங்கள் பார்வையாளர்களுடன் தொடர்பு கொள்ளவும் ட்விட்டரைப்(Twitter) பயன்படுத்தும் ஒரு ஊடகவியலாளர் எனில், அதைகண்டிப்பாகதொழில்ரீதியான நோக்கத்திற்கு மட்டும் வைத்திருங்கள்.இதுஉங்கள்பூனையின்படங்கள்அல்லது உறவினர்களுடனான விடுமுறை படங்களை பகிரும்இடம் அல்ல, மேலும் நீங்கள் மறந்துபோன சங்கடமான ட்வீட்டுகள் மற்றும் புகைப்படங்களை அகற்றுவது மிகவும் புத்திசாலித்தனமானது. நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள், உங்கள் பிறந்த நாள், உங்கள் செல்போன் எண் அல்லது உங்களது நடமாட்டத்தை கண்காணிக்கப் பயன்படும் வேறு எதையும் பகிர வேண்டாம். “உங்கள் நாய் மற்றும் உங்கள் குழந்தையின் புகைப்படங்களை பகிர  நீங்கள் இன்ஸ்டாகிராமைப் (Instagram) பயன்படுத்துகிறீர்கள் என்றால், உங்கள் கணக்கினை தனிப்பட்டதாக அமைத்து, நீங்கள் விரும்புவதை அங்கே பகிர வேண்டும்,” என்று அவர் கூறினார். “ஆனால் அது பொதுக் கணக்குகளிலிருந்து வேறுபட்டதாகஇருக்க வேண்டும்.”
  • பழையCVகள்மற்றும் சுயவிபரக்கொவைகளை தேடுங்கள்: இணையத்தின் சமீபகால சகாப்தத்தில், ஊடகவியலாளர்கள்  மற்றும் கல்வி ஆராய்ச்சியாளர்கள் தமதுCV கள், ரெஸூம்கள் மற்றும் சுயவிபரக்கொவைகளை தனிப்பட்ட வலைத்தளங்களில் பதிவேற்றுவது வழக்கம். இன்னும் இணையவெளியில் அவ்வாறு மறந்துபோன ஆவணங்களைத் தேடுங்கள், ஏனெனில்  டாக்ஸராக இருப்பவர்களுக்கு இவை  தங்கச் சுரங்கங்களாகச் செயல்படலாம்.
  • தரவு தொடர்பான  தரகர்களை மறந்துவிடாதீர்கள்: ஒரு ஊடகவியலாளராக, ஸ்போகியோ(Spokeo) மற்றும் வைட் பேஜஸ் (Whitepages) போன்ற தரவு சார் தரகர் வலைத்தளங்களை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இத்தகைய வலைத்தளங்கள் தனிப்பட்ட தகவல்களுக்காக இணையத்தை தேடி எடுத்து அதை விற்கின்றன. அவைடாக்ஸர்களுக்கு ஒரு இலக்கைக் கண்டுபிடிக்க மிக எளிதான வழியையும் கொடுக்கின்றன. ஆகஸ்ட் 2020 நிலவரப்படி, பயனர்கள் வலைத்தளத்தின் உதவிப் பக்கத்தில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் அவர்களின் தனிப்பட்ட தகவல்களை Whitepages.com இலிருந்து அகற்றுமாறு கோரலாம். படிப்படியான நெறிமுறை இல்லாத வலைத்தளங்களுக்கு, உங்கள் தனிப்பட்ட தகவல்களை நீக்குமாறு மின்னஞ்சல் மூலம் கோரலாம். இது அதிக நேரத்தை எடுத்துக்கொண்டால், DeleteMeஅல்லது PrivacyDuckபோன்ற சந்தா சேவைகளைக் கருத்தில் கொள்ளவும், இருப்பினும் செலவு ஒரு தனிப்பட்ட ஊடகவியலாளருக்கு ஈடுசெய்ய கடினமாக இருக்கலாம்.
  • நல்லகடவுச்சொல்பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள்:  இது ஊடகவியலார்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் பொருந்தும். உங்கள் அனைத்து இணையத்தள கணக்குகளுக்கும் உங்கள் பிறந்தநாளை ஒரே ஆறு எழுத்து கடவுச்சொல்லாகப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், நீங்கள் தேவையில்லாமல் உங்கள் தனிப்பட்ட தகவல்களை ஹேக்கர்களுக்கு வெளிப்படுத்துகிறீர்கள், மேலும் யாரோ ஒருவர் உங்களைப் போல ஆள்மாறாட்டம் செய்வதை எளிதாக்குகிறீர்கள். நீண்ட கடவுச்சொல்லானது மிகவும் பாதுகாப்பானது. இரண்டு அடுக்குபாதுகாப்பு பொறிமுறையானது (Two-factor authentication) இன்னும் சிறந்தது. ஒவ்வொரு கணக்கிற்கும் வெவ்வேறு கடவுச்சொல்லைப் பயன்படுத்துவது மேலும் புத்திசாலித்தனமானது.

செய்தி அறைகள் தங்கள் ஊழியர்களை எவ்வாறு ஆதரிக்கின்றன

அவர்கள் இணையவெளிகளில் தங்கள் இருப்பை அதிகரிக்க முடியும் என்றாலும், தவறான தகவல் மற்றும் இணையவழி துன்புறுத்தல்போன்றஇரட்டை அரக்கர்களை எதிர்கொள்ள ஊடகவியலாளர்கள் மட்டும் தனித்து விடப்படக்கூடாது. யுனெஸ்கோ அறிக்கையின்படி, பல ஊடக முதலாளிகள், “இணையவழி வன்முறையை தீவிரமாக எடுத்துக்கொள்ள தயங்குவதாக தோன்றுகிறது”. (இணையவெளி துன்புறுத்தல் பற்றி முதலாளிகளிடம் பேச PEN அமெரிக்காவின் வழிகாட்டியைப் பார்க்கவும்.)

“நாம் அனைவரும் ஏதாவது செய்ய வேண்டும்,” என்று வில்க் கூறினார். “தனிப்பட்ட ஊடகவியலாளர்கள் சில குறிப்பிட்ட விஷயங்களைச் செய்ய வேண்டி இருக்கிறது. செய்தி அறைகள், தற்போது செய்வதைவிட மேலும் அதிகமாகச் செய்ய வேண்டும். மேலும் ஊடகவியலாளர்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துகொள்வதற்குத் தேவையான சிறந்த கருவிகள் மற்றும் வளங்களைஇந்தலங்கள் வழங்க வேண்டும். இது ஒரு மிகப்பெரிய பிரச்சனை, இது பல பங்குதாரர்கள் தொடர்புபட்ட ஓர்  தீர்வாக இருக்க வேண்டும். “

தவறான தகவல்கள் மற்றும் அவப்பெயர் ஏற்படுத்தும் பிரச்சாரங்களிலிருந்து துஷ்பிரயோகத்தை எதிர்கொள்ளும் ஊழியர்களுக்கு உதவும் வகையில் கொள்கைகள் மற்றும் நெறிமுறைகளை உருவாக்குவதன் மூலம் மிக மோசமான சூழ்நிலைகளுக்கு செய்தி அறைகள் உதவ முடியும்.

“இதுஅவமதிப்பு பிரச்சாரங்கள் உண்மையானவை என்ற செய்தியை அனுப்புகிறது மட்டுமின்றிசெய்தி அறைகள் அவற்றை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கின்றன,” என்று வில்க் கூறினார், மேலும் ஊடகவியலாளர்கள்தங்களுக்கு என்ன நடக்கிறது என்பதைப் பற்றி நிறுவனத்திற்குள், தாமேமுன்வந்து பேசுவதற்கு வசதியாக இருக்கும் ஒரு கலாச்சாரத்தை இதுஉருவாக்குகிறது.

அவள் எப்போதுமே இது தொடர்பில் வெற்றிபெறவில்லை, ஆனால் வில்க் ஊடகவியலாளர்களுக்கு  குறிப்பாக, கடுமையான தாக்குதல்களை எதிர்கொள்வோர் அவைபற்றி நிறுவனத்திற்குஅறிவிக்கஓர் உள்வீட்டு-அறிக்கையிடல் பொறிமுறையை உருவாக்க செய்தி அறைகளை ஊக்குவிக்கிறார். குறிப்பிட்டசெய்தி நிறுவனம் இந்த சிக்கலை ஒரு தொழில்நுட்ப நிறுவனம், சட்ட அமுலாக்கம் அல்லது ஒரு தனியார் பாதுகாப்பு நிறுவனத்திற்கு கொடுத்து அடுத்த நடவைக்கைகளுக்காக விரிவுபடுத்தலாம். தீவிரமான சூழ்நிலைகளில் ஊடகவியலாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான தெளிவான வழிகாட்டுதல்களை உருவாக்குவது மிக முக்கியமானது.

“சில நேரங்களில், நீங்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படிருக்கும்போது, ​​அது மிகவும் பதட்டமாகவும், பயமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது; நீங்கள் முடங்கிவிட்டீர்கள், “என்று அவர் கூறினார்.”எனவே உங்களிடம் ஒரு நெறிமுறை இருந்தால் நீங்கள் ‘சரி, நான் இதை இப்படி செய்யப் போகிறேன். இது நடக்கும்போது என் செய்தி அறையில் யாரிடம் பேசுவது என்று எனக்குத் தெரியும். ” என்று நம்பிக்கையுடன் செயலாற்றலாம்.

தனியாள் தொடர்பான தகவல்-நீக்கல் சேவைகளுக்கு சந்தா சலுகை வழங்குவதன் மூலமும், மனநல பராமரிப்பு மற்றும் சட்ட ஆலோசனைகளுக்கான ஆதரவு  வழங்குவதன் மூலமும் செய்தியறைகள் தங்கள் நிருபர்களை ஆதரிக்கலாம். இறுதியாக, ஒரு நிருபர் வீட்டில் பாதுகாப்பற்றதாக உணர்ந்தால் – ஒருவேளை அவர்கள் டாக்ஸ் செய்யப்பட்டிருக்கலாம் அதாவது அவர்களின் வீட்டு முகவரி இணையத்தில்பகிரப்பட்டிருக்கலாம் – அவர்களுக்கு செல்ல பாதுகாப்பான இடம் இருப்பதை உறுதி செய்வது அவர்களின் முதலாளியின் பொறுப்பு என்றுவில்க் கூறினார்.

“உண்மையைச் சொல்வதானால், இவ்வாறான விடயங்கள் நிறைய நடக்கவில்லை, ஆனால் அது நடக்கலாம் அல்லது நடந்து கொண்டிருக்க வேண்டும்.”

இத்தகைய விரிவான ஆதரவை தனித்தனியாக வழங்குவது பல பணப்பற்றாக்குறைக்குள்ளான செய்தியறைகளுக்கு சாத்தியமாக முடியாது. தவறான தகவல் மற்றும் இணையவெளி துன்புறுத்தல் பிரச்சாரங்கள் சுதந்திரமான ஊடகத்துறைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் அதே வேளையில், பல செய்தி நிறுவனங்கள் மிகக்குறைந்த வளங்களுடன் உள்ள  இந்த விடயத்தில் பல சவால்களுக்குள் மத்தியில் முன்னெடுத்து செல்கின்றன.

ஆனால் கோவிட் -19கொள்ளைநோய்காலத்தில் பல செய்தி நிறுவனங்கள் உயர்தர அறிக்கையை வழங்குவதற்காகமற்ற நிறுவனங்களுடன் கைகோர்த்ததை ஒரு சிறந்த வாய்ப்பை வில்க் பார்க்கிறார். டாக்ஸ்சிங் மற்றும் இணையவழி துன்புறுத்தல்களிலிருந்து தங்கள் ஊடகவியலாளர்களை பாதுகாக்க அதே கூட்டாண்மை மனப்பான்மை பொருந்தும், என்று அவர் கூறினார். உதாரணமாக, பொதுவான ஓர் பாதுகாப்பு நிபுணர் அல்லது உள் அறிக்கையிடல் அமைப்புக்காக பல செய்தி அறைகள் ஓர் கூட்டிணைவுக்கு முன் வரலாம்.

“இதுதான் எதிர்காலம் என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் கூறினார். “அது நடக்க வேண்டும், ஏனென்றால் தவறான தகவல் மற்றும் துஷ்பிரயோக பிரச்சாரங்கள் எந்த நேரத்திலும் கைவிடப்படும் என்று நான் நினைக்கவில்லை.”

மேலதிக வாசிப்புக்கள்

How to Dox Yourself

Digital Self-Defense for Journalists: An Introduction

Tips on Investigating Disinformation Networks from BuzzFeed’s Craig Silverman

இந்த கட்டுரை முதலில் விஸ்கான்சின்-மேடிசன் பல்கலைக்கழகத்தில் பத்திரிகை நெறிமுறைகள் மையத்தின் (Center for Journalism Ethics at the University of Wisconsin-Madison) இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இது அனுமதியுடன் இங்கே மீண்டும் வெளியிடப்படுகிறது.

ஹோவர்ட் ஹார்டி(Howard Hardee) விஸ்கான்சினின்-Wisconsin மேடிசனை-Madison தளமாகக் கொண்ட ஒரு சுதந்திர ஊடகவியலாளர் ஆவார். 2020 ஆம் ஆண்டில், விஸ்கான்சின் புலனாய்வு இதழியல் மையத்தில் (Wisconsin Center for Investigative Journalism )தேர்தல் ஒருமைப்பாடு செய்தியாளராகவும்First Draft fellow ஆகவும் அவர் சமூக ஊடகங்களில் தவறான மற்றும் திட்டமிட்டு பரப்பப்படும் பிழையான  தகவல்கள் தொடர்பாக அறிக்கையிட்டார். அவர் கலிபோர்னியாவில் இயற்கை பேரழிவுகள் மற்றும் வன ஆரோக்கியம் பற்றியும் விரிவாக எழுதியுள்ளார்.

மூலம்

This story was originally published by the Global Investigative Journalism Network (GIJN)

Hot this week

To restore faith in news, journalists must start doing their job with a sense of professionalism – Hana Ibrahim

Social media is the new source of information for many...

Reporting on Non-Economic Loss and Damage from Environmental Disasters

𝐌𝐞𝐞𝐭 𝐭𝐡𝐞 𝐂𝐈𝐑 𝐅𝐞𝐥𝐥𝐨𝐰𝐬 Four Journalism Fellows under a special...

Women encounter a toxic internet that robs their voice- Shreen Saroor

Men and women experience the internet differently. Women experience...

John S. Knight Journalism Fellowships open [Worldwide]

Journalists who want to collaborate with others to pursue...

Topics

Reporting on Non-Economic Loss and Damage from Environmental Disasters

𝐌𝐞𝐞𝐭 𝐭𝐡𝐞 𝐂𝐈𝐑 𝐅𝐞𝐥𝐥𝐨𝐰𝐬 Four Journalism Fellows under a special...

Women encounter a toxic internet that robs their voice- Shreen Saroor

Men and women experience the internet differently. Women experience...

John S. Knight Journalism Fellowships open [Worldwide]

Journalists who want to collaborate with others to pursue...

Grants fund investigative journalism [Worldwide]

Investigative journalists can apply for a reporting grant. The grants,...

Sri Lanka requires policies to increase women’s representation in Parliament: Commissioner General of Elections

To increase women’s political representation at the parliamentary level,...

Boost: Reporting Grants for Journalists

ICFJ’s Reporting Grants program is designed to expand ICFJ’s...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img