Wednesday, January 22, 2025
27 C
Colombo

அவசரகால சூழ்நிலைகளில் ஊடகவியலாளர்களுக்கான முக்கிய படிமுறைகள்

அச்சுறுத்தல்களை எதிர்நோக்கும் ஊடகவியலாளர்கள் சில மணிநேரங்களில் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டியிருக்கும். இருப்பினும், மோதல்கள் பெரும்பாலான நேரங்களில் கணிக்கக்கூடியவை, அதனால்தான் ஆபத்தான  பகுதிகளில் இருப்பவர்கள் எப்போதும்  அவ்விடத்தை விட்டு உடனடியாக வெளியேறும் திட்டத்தையும், முக்கிய ஆவணங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இந்த ஆவணங்கள் தேவைப்படும் போது ஊடகவியலாளர்களுக்கு  பயணம் செய்ய உதவுவது மட்டுமல்லாமல், பாதுகாப்பான பகுதி அல்லது ஓர் நாட்டிற்குச் செல்லவும் உதவலாம். கீழே, இது தொடர்பாக எந்தெந்த ஆவணங்களை சேகரிக்க வேண்டும் என்பதையும், எந்தெந்த நிறுவனங்கள் ஊடகவியலாளர்களை இடமாற்றம் செய்வதற்கு  அனுசரணையாக உள்ளன என்பதையும் பட்டியலிட்டுள்ளோம்.

எப்போதும் தயாராக வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள்

கீழே பட்டியலிடப்பட்டுள்ள ஆவணங்களின் அசல் அல்லது பிரதிகளை வைத்திருக்கவும்.

உங்கள் ஆவணங்களை புகைப்படங்களாக எடுத்து, நீங்கள் நம்பும் இணையப்பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட ஓர் கிளவுட் (Cloud) சேவையில் (உதாரணமாக Dropbox, Sync.com) அல்லது நீங்கள் உங்கள் ஸ்மார்ட் தொலைபேசியை தொலைக்கும் பட்சத்தில் மீளப்பெற்றுக்கொள்ளும் முகமாக வேறொரு இரண்டாவது சாதனத்தில் அனைத்தையும் ஆவணங்களையும்  சேமித்து வைக்கவும். உங்கள் குடும்பத்தினர் அல்லது வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்குகூட பாதுகாப்பாக வைக்கும் பொருட்டு அனுப்பலாம்.

  • கடவுச்சீட்டு (passport), தேசிய அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம்.
  • இவற்றின் காலாவதி தேதிகளை கவனிக்கவும். சில மாதங்களுக்குள் அவை காலாவதியாகுமானால், முடிந்தால் உடனடியாக புதுப்பிக்கவும்.
  • உங்களிடம் அடையாளம் தொடர்பான பல ஆவணங்கள் இருந்தால், அவற்றை தனித்தனி இடங்களில் வைத்திருப்பதன் மூலம் ஒன்றை மட்டும் இழக்க நேரிடலாம்.
  • பிறப்புச் சான்றிதழ் (அல்லது தேதி மற்றும் பிறந்த இடத்தை நிரூபிக்கும் வகையில் ஏதேனும் அதிகாரப்பூர்வ ஆவணம்).
  • மற்றவை: திருமணச் சான்றிதழ், பல்கலைக்கழகப் பட்டங்கள் (டிப்ளோமா, பட்டப்படிப்பு மற்றும் வருகைக்கான சான்றிதழ்கள்), ஊடகவியலாளர் அடையாள அட்டை, தொழில்முறை சான்றிதழ்கள், தடுப்பூசி சான்றிதழ், பிற மருத்துவ ஆவணங்கள்.

பின்வரும் தகவல்களை ஆங்கிலத்தில் ஓர் ஆவணமாக உள்ளீடு செய்து, கிளவுட் சேவை மற்றும் உங்கள் ஸ்மார்ட் தொலைபேசியில் சேமித்து, நீங்கள் அனுப்ப விரும்பும் எவருக்கும் நகலாக அனுப்ப தயார் நிலையில் இருக்கும் வண்ணம் வைத்துக்கொள்ளவும் :

  • சட்டப்பூர்வமான முழுப்பெயர், இடம் மற்றும் பிறந்த தேதி.
  • கடவுச்சீட்டு எண், வெளியீட்டு எண் மற்றும் காலாவதியாகும் தேதி.
  • தற்காலிக இருப்பிடம் — இணையத்தள குறுஞ்செய்தியாக  இதைப் பகிர்வதில் கவனமாக இருக்கவும்.
  • மின்னஞ்சல் முகவரி.
  • தொலைபேசி எண் மற்றும் வேறு எண்களாயின் வாட்ஸ்அப் (WhatsApp)  மற்றும் சிக்னல் (Signal) எண்கள்.
  • உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் பணிபுரியும் இடம்/வேலையை உறுதிப்படுத்தும் வகையில் உள்ள சான்றுகள்.

உங்களுக்கு நம்பகமான நண்பர் அல்லது வெளிநாட்டில் ஏதாவது தொடர்பு இருந்தால், இந்த ஆவணங்களில் டிஜிட்டல் நகல்கள் மற்றும் தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் பொருட்டு அவர்களுக்கு அனுப்பவும்.

தனிப்பட்ட ஆவணங்கள்

  • புகைப்படங்கள் மற்றும் நீங்கள் முக்கியமானதாகக் கருதுவதும், நினைவில் வைத்திருக்க விரும்பும் எந்த ஆவணங்களையும் டிஜிட்டல் நகல்களாக உருவாக்கவும்.
  • நீங்கள் நம்பும் ஓர்  கிளவுட் (Cloud ) சேவையில் இவை அனைத்தையும் சேமித்து வைக்கவும்.

தடுப்பு நடவடிக்கைகள்

  • நீங்கள் தற்காலிகமாக நாட்டை விட்டு, மிகவும் இலகுவாக வெளியேறுவதற்கு  வழி தேவைப்பட்டால், பாதுகாப்பான ஓர் வெளிநாட்டின் சுற்றுலா விசாவிற்கு விண்ணப்பிக்கவும்.
  • கடந்த காலத்தில் நீங்கள் பணியாற்றிய சர்வதேச நிறுவனங்களைத் தொடர்புகொள்ளவும் (செய்தி அறைகள், இணைய இதழ்கள், நீங்கள் ஆலோசகராக கடமையாற்றிய அல்லது பணிபுரிந்த NGOக்கள்).
  • நீங்கள் குறிப்பிட்ட நிறுவனத்தில் பணி புரிந்தமைக்கான பதிவுச்சான்று  அல்லது ஆதாரத்தையோ ஆங்கிலத்தில் கேட்கவும் (உதாரணமாக: நீங்கள் மேற்கொண்ட  பணி/வேலைவாய்ப்பு அல்லது உதவியாளராக கடமையாற்றிய  தேதிகளுக்கு சான்றளிக்கும் வகையில் தலைமை ஆசிரியர் அல்லது மனித வள பிரதிநிதியின் கையொப்பமிடப்பட்ட  ஓர் ஆவணம்).
  • அவர்களுக்கு தேசிய அரசாங்க மட்டத்தில் தொடர்புகள் உள்ளதா என்றும் நீங்கள் அந்த நாட்டில் அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பித்தால் அவர்கள் உங்களுக்காக உறுதியளிக்க முடியுமா என்றும் கேளுங்கள்.
  • ஆங்கிலத்தில் இலத்திரனியல் மூலமாக மேலதிக ஆவணங்களை பெறவும் , உங்கள் வழக்குக்கு உதவ நிறுவனத்தில் உள்ள ஒருவரை தொடர்பு கொள்ளும் வகையில் உதவி கேட்கலாம்.
  • நீங்கள் உறுப்பினராக உள்ள சர்வதேச தொழில்முறை நிறுவனங்களைத் தொடர்புகொண்டு, ஆங்கிலத்தில் அவர்களிடமிருந்து சான்று  கடிதம் கோரலாம் அல்லது  உறுப்பினர் அல்லது நிறுவன ஈடுபாட்டிற்கான உறுதிப்படுத்தும் முகமாக கடித ஆதாரத்தை கேட்கலாம்.
  • உங்களின் உடனடி குடும்ப உறுப்பினர் (பெற்றோர், தாத்தா, பாட்டி, உடன்பிறந்தவர்கள், மனைவி, குழந்தை) இருக்கும் நாடுகளில் தொடங்கி, பிற நாடுகளில் புகலிடம் மற்றும் அகதி அந்தஸ்துக்கான வழிமுறைகளைப் பாருங்கள்.
  • இது தொடர்பில் எங்கு தொடங்குவது என்று உங்களுக்குத் தெரியாமலிருந்தால், நீங்கள் ஆர்வமுள்ள நாடுகளின் தூதரகங்களைத் தொடர்புகொண்டு, நடைமுறைகளைப் பற்றி அவர்களிடம் கேட்கலாம்;
  • அகதிகள் உதவி நிறுவனங்களையும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம், அதனால் அவர்கள் வேறொரு நாட்டில் அகதியாக மாறுவதற்கான சட்ட கட்டமைப்பைப் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவ முடியும்.

டிஜிட்டல் மற்றும்  உடல் ரீதியான பாதுகாப்பு வழிமுறைகள்

GIJN இன் டிஜிட்டல் பாதுகாப்பு உதவிக்குறிப்பு இது தொடர்பான அத்தியாவசி விடயங்களை உள்ளடக்கியதுடன் இந்த விஷயத்தில் உங்களுக்கு உதவக்கூடிய நிறுவனங்களை உங்களைப் பரிந்துரைக்கிறது.

GIJN இதழியல் பாதுகாப்பு மதிப்பீட்டுக் கருவியை எடுத்துக் கொள்ளுங்கள்.

GIJN இன் மறை குறியீடு மூலம் பாதுகாக்கப்பட்ட செயலிகள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கான திட்டங்கள்.

ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் குழு (The Committee to Protect Journalists -CPJ) உடல் , டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் சட்ட உதவியைப் பெறுவதற்கான விரிவான ஆலோசனைகளை வழங்குகிறது.

தொடர்பு கொள்ள வேண்டிய நிறுவனங்கள்

தங்கள் பணியின் காரணமாக ஆபத்தில் இருக்கும் ஊடகவியலாளர்களுக்கு   அவசர உதவி வழங்கும் நிறுவனங்களின் பட்டியல் கீழே உள்ளது:

ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கான குழு – Committee to Protect Journalists -CPJ “போர் முனையிலிருக்கும்  ஊடகவியலாளர்களுக்கு ஆதரவையும், காயம் அடைந்த, சிறையில் அடைக்கப்பட்ட அல்லது அவர்களின் பணியின் காரணமாக தப்பிச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ள பத்திரிகையாளர்களுக்கு விரைவான உதவியையும் வழங்குகிறது.” அவர்களைத் தொடர்புகொள்வதற்கான விரைவான வழி மின்னஞ்சல் ([email protected]).

Canadian Journalists for Free Expression –CJFE நிறுவனமானது பின்வரும் நிபந்தனைகளின் கீழ் நிதி உதவியை வழங்குகிறது:

  • விண்ணப்பதாரர் ஒரு ஊடகவியலாளராக  இருக்க வேண்டும் என்பதுடன், IFEX உறுப்பினர் அல்லது அவசர உதவி வழங்கும் நிறுவனத்தால் தரப்படும் விடயங்கள் சரிபார்க்கப்பட வேண்டும்.
  • வழங்கப்பட்ட தொகை பொதுவாக $500 முதல் $1,500 CAD வரை இருக்கும் (US$400-$1,200)
  • ஊடகவியலாளர்கள் CJFE இலிருந்து அதிகபட்சம் இரண்டு தனித்தனியான  மானியங்களை பெறுவதற்கு  தகுதியுடையவர்கள்.
  • CJFE ஆங்கிலத்தில் மட்டுமே விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்கிறது.
  • CJFE நிதி உதவியில் ஊடகவியலாளர்கள் தடுத்து வைக்கப்படும் போது சட்டக் கட்டணம், மருத்துவச் செலவுகள், பாதுகாப்பிற்கான போக்குவரத்துச் செலவுகள் மற்றும் பாதுகாப்பான நாட்டில் மீள்குடியேற்றச் செலவுகள் ஆகியவை அடங்கும்.

Free Press Unlimited (FPU) தற்காலிகமாக வேலை செய்ய முடியாத ஊடகவியலாளர்களுக்கான குறுகிய கால ஆதரவை அல்லது பாதுகாப்பற்ற/ பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலையில் இருந்து தற்காலிகமாக தப்பிச் செல்வதற்கான செலவுகளை உள்ளடக்கும். நீங்கள் இங்கே விண்ணப்பிக்கலாம். FPU இன் தளத்தின் படி, விண்ணப்பிக்க தேவையான விடயங்கள்:

  • “நீங்கள் ஒரு ஊடக நிறுவனம் அல்லது தற்போது செயலாற்றும்  ஒரு ஊடக வல்லுநர்;
  • உங்கள் அவசரகால சூழ்நிலையானது ஊடக நிபுணராக நீங்கள் செய்த பணியின் நேரடி விளைவாகும்;
  • இந்த உதவி கட்டமைப்பு ரீதியானது அல்ல, ஆனால் தற்செயலான (ஒரு முறை) அடிப்படையில் வழங்கப்படுகிறது என்பதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்கள்;
  • எங்களின் ஆதரவின் நோக்கம், கூடிய விரைவில் உங்கள் வேலையை மீண்டும் தொடங்குவதே என்பதை நீங்கள் அறிவீர்கள்;
  • உங்களைத்தவிர, குறைந்தபட்சம் இரண்டு வேறு நம்பகமான ஆதாரங்கள் மூலம் உங்கள் நிலைமையை உறுதிப்படுத்த முடியும்.

Freedom House ஒரு அவசர உதவி திட்டத்தை நடத்துகிறது. விண்ணப்பத்தை சமர்ப்பிப்பது பற்றி விசாரிக்க, அவர்களை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் ([email protected]).

சர்வதேச பத்திரிகையாளர் கூட்டமைப்பு  International Federation of Journalists (IFJ)  ஒரு பாதுகாப்பு நிதியை வழங்குகிறது, அதற்கு நீங்கள் இங்கே விண்ணப்பிக்கலாம்.

சர்வதேச ஊடக ஆதரவு –International Media Support (IMS) “நாள் முழுவதும்(24/7) தொடர்பு இலக்கங்கள், பாதுகாப்பான வீடுகள், பாதுகாப்பு நிதி, பாதுகாப்பு உபகரணங்கள், சட்ட உதவி, அவசர உதவி” மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பாதுகாப்புப் பொதியை வழங்குகிறது.

சர்வதேச மகளிர் ஊடக அறக்கட்டளை International Women’s Media Foundation (IWMF)  உளவியல் மற்றும் மருத்துவ பராமரிப்பு, தற்காலிக இடமாற்ற உதவி (3 மாதங்கள்) மற்றும் சட்ட உதவி ஆகியவற்றிற்கு உதவும் ஒரு அவசர நிதியைக் கொண்டுள்ளது. நீங்கள் இங்கே நிதிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிப்பதற்கு தகமைகளைக் கொண்டிருக்க  வேண்டும்.

Journalisten helfen Journalisten (ஊடகவியலாளர்கள் சக ஊடகவியலாளர்களுக்கு உதவுதல்). ஜெர்மனியைத் தளமாகக் கொண்ட இந்த  நிறுவனத்துடன் தாங்கள் இடம் மாறுவது தொடர்பாக  விண்ணப்பிக்க, அவர்களை மின்னஞ்சல் ([email protected]) மூலம் தொடர்பு கொள்ளவும்.

எல்லைகளற்ற நிருபர்கள்  Reporters Without Borders (RSF) ஆபத்தில் உள்ள ஊடகவியலாளர்களின்  உதவிக்கான கோரிக்கைகளை [email protected] க்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறது அல்லது +33 1 4483 8466 என்ற எண்ணிற்கு அழைக்க முடியும் .

  • நாடுகடத்தப்பட்ட பத்திரிகையாளர்களுக்கான RSF இன் வழிகாட்டி UNHCR, சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், அமெரிக்கா மற்றும் கனடா ஆகியவற்றுக்கான புகலிடம் மற்றும் அகதிகள் நடைமுறைகளை உள்ளடக்கியது.
  • புதுப்பிப்புகளுக்கு RSF இன் ரஷ்ய Twitter பக்கத்தை பின்தொடரவும்.
  • RSF இன் ஜெர்மன் பிராந்திய நிருபர் Ohne Grenzen இடமாற்றத்திற்கு விண்ணப்பிப்பதற்கான உதவியை வழங்குகிறார். அவரை [email protected]  என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள முடியும்.

சர்வதேச புலமைப்பரிசில்கள்

நேரம் அனுமதித்தால், பதற்றமான நிலை தணியும் வரை தங்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய ஊடகவியலாளர்கள்  இந்த சர்வதேச புலமைப்பரிசில்களில் ஒன்றிற்கு விண்ணப்பிக்கலாம், இது பெரும்பாலும் விசா நடைமுறைக்கு உதவுவதோடு உதவித்தொகை மற்றும் வீட்டுவசதிகளையும்  வழங்குகிறது.

மூலம்

This story was originally published by the Global Investigative Journalism Network (GIJN)

Hot this week

ගංවතුරේ පාවෙන ජා-ඇල ජීවිත

2024 වසරේ මාස හයක් තුළ ගංවතුර අවස්ථා තුනක්... ඔක්තෝබර් ගංවතුරෙන්...

CIR and SCOPE host workshop for women journalists on GBV

The Centre for Investigative Reporting (CIR) and Strengthening Social...

GBV and Women’s Political Participation – A Workshop for Women Journalists

‘Towards New and Inclusive Narratives,’ a workshop on GBV...

Panel discussion on ‘Election Disinformation, Online Hate & Women’s Political Representation’

The Center for Investigative reporting (CIR) will host a...

Topics

ගංවතුරේ පාවෙන ජා-ඇල ජීවිත

2024 වසරේ මාස හයක් තුළ ගංවතුර අවස්ථා තුනක්... ඔක්තෝබර් ගංවතුරෙන්...

CIR and SCOPE host workshop for women journalists on GBV

The Centre for Investigative Reporting (CIR) and Strengthening Social...

GBV and Women’s Political Participation – A Workshop for Women Journalists

‘Towards New and Inclusive Narratives,’ a workshop on GBV...

Related Articles

Popular Categories