Monday, April 28, 2025
29.4 C
Colombo

மேம்பட்ட இணையத் தேடல்

இணையம் தொடர்பான புலனாய்வுகளில்  முன்னணி சர்வதேச நிபுணரான பால் மியர்ஸுடன் Paul Myers GIJN இரண்டு வெபினார்களை மே 2021 இல் நடத்தியது.  பிபிசியில் பணிபுரியும் மியர்ஸ், GIJN மாநாடுகளில் மிகவும் வேண்டப்பட்ட ஒருவராகவும் விளங்கினார். அவர் மக்களைப் பற்றிய தகவல்களைத் ஆழ்ந்து புலானய்வு செய்து  எடுப்பதற்கான சிறந்த கருவிகள் மற்றும் உத்திகள் குறித்த தனது உதவிக்குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார்.  கீழே உள்ள அவரது உதவிக்குறிப்பைப் பாருங்கள். இது ஏப்ரல் 2021 இல் புதுப்பிக்கப்பட்டது.

தயவுசெய்து கவனிக்கவும்: இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் ஒப்புதலாக கருதப்பட முடியாது; பிற பொருட்கள் மற்றும் சேவைகள் உள்ளன.

நபர்களைக் கண்டறிதல்: கூகுள் (Google) 

மேலும் திறம்பட கூகுளில் தேடுவது எப்படி: அடிப்படைகள்

  • சொற்றொடர்களைச் சுற்றி மேற்கோள் குறிகளைப் பயன்படுத்துவதன் மூலமோ அல்லது தேவையற்ற வகையறாக்களுக்குள் இட்டுச் செல்லும் வகையில் இருக்கும் சொல்லுக்கு முன் கழித்தல் (-) குறியைப் பயன்படுத்துவதன் மூலமோ உங்கள் தேடலை மையப்படுத்துங்கள்.
  • உதாரணமாக , வெறுமனே மைக்கேல் ஜோர்டானுக்குப்(Michael Jordan) பதிலாக “மைக்கேல் ஜோர்டான்” “Michael Jordan” என்று தேடுங்கள். இது ஜோர்டான் மற்றும் மைக்கேல் என்ற வார்த்தைகளை குறிப்பிடும் வரிசைப்படுத்தப்படாத பக்கங்களை தவிர்த்து கூடைப்பந்தாட்ட விளையாட்டு  நட்சத்திரத்தைப் பற்றிய பக்கங்களைப் பெறுவதை உறுதி செய்யும்,
  • நீங்கள் தேவையில்லாத  தேடல்களை தவிர்க்கும் பொருட்டு, தேடலில் நெகிழ்வுத்தன்மையைச் சேர்க்கும் நோக்கில் , விருப்பக் குறிச்சொற்களுக்கிடையில் பெரிய எழுத்துக்களில் “OR” என்ற வார்த்தையைச் சேர்ப்பதன் மூலம், எடுத்துக்காட்டாக ஆப்பிள் அல்லது ஆண்ட்ராய்டு (apple OR android app)
  • ““site:”என்ற முன்னொட்டுடன் உங்கள் தேடலை ஒரு குறிப்பிட்ட டொமைனில் மட்டும் கவனம் செலுத்தலாம். குறிச்சொல்லில் எந்த இடைவெளியும் விடதேவையில்லை.
  • எடுத்துக்காட்டு. இந்திய அரசாங்க இணையதளத்தில் கோவிட் பற்றிய அனைத்து குறிப்புகளையும் கண்டுபிடிக்க, இவ்வாறு தேடலாம் – site:gov.in COVID.
  • உங்கள் தேடலில் ext:pdf என்ற குறியீட்டை பயன்படுத்துவது, pdf கோப்புகளை பிரத்தியேகமாகப் பார்க்க Google கட்டாயப்படுத்துகிறது. அந்த ஆவணத்தில் இருக்கும்  சில சொற்கள் உங்களுக்குத் தெரிந்தால், அவற்றை Google இல் மேற்கோள்களாகப் போட்டு, அதே ஆவணத்திற்கு வேறு ஏதேனும் ஆதாரங்கள் உள்ளதா எனப் பார்க்கவும்.

கால பயணம்:

சில நேரங்களில் இணையத்தில் இருந்து நீக்கப்பட்ட ட்வீட், இணையதளம் அல்லது Facebook கணக்கு போன்ற தகவல்கள் உங்களுக்குத் தேவைப்படும். இவ்வாறான தகவல்களை மீண்டும் கொண்டு வர உதவும் பல கருவிகள் உள்ளன.

1. தேடுபொறி தற்காலிக சேமிப்புகள்

குறிப்பிட்ட தகவல் சமீபத்தில் நீக்கப்பட்டு, இன்னும் கூகுள் தேடலில் வந்திருந்தால், தேடல் முடிவுகளில் அதன் உள்ளீட்டிற்கு அடுத்துள்ள சிறிய கருப்பு முக்கோணத்தைக் கிளிக் செய்யவும். இது தேடுபொறியின் தற்காலிக சேமிப்பில் சேமிக்கப்பட்ட நகலுக்கான பிரதியை உங்களுக்கு வழங்கக்கூடும்.

  • இந்த ஃபேஸ்புக் பக்கம் நீக்கப்பட்டாலும், கூகுளின் தற்காலிக சேமிப்பில் அதன் நகல் இன்னும் உள்ளது.

திகதி வரம்பு தொடர்பான தேடல்கள்

  • சில தனிப்பட்ட தகவல்கள் பின்னர் வெளியான செய்திகள் மூலம் மேலும் பின்னோக்கி புதைக்கப்பட்டிருக்கலாம். ஒரு முக்கியமான  செய்தி வெளியிடப்படுவதற்கு முந்தைய காலத்திற்குச் செல்ல, “கருவிகள்”- Tools” என்பதைக் கிளிக் செய்து, நேர் கீழ்தோன்றும் பெட்டியிலிருந்து திகதி  வரம்பைத் தேர்வு செய்யவும்:

காப்பகங்கள்

  • Archive.is Archive.is என்னும் தளமானது நீக்கப்பட்ட சமூக ஊடகங்களிலுள்ள பதிவுகள் மற்றும் கணக்குகள் தொடர்பில் ஆராய்வதற்கு மிகவும் பிரயோசமானது.
  • வேபேக் மெஷின்-Wayback Machine, மற்றும்  www.archive.org, என்பன இணைய உள்ளடக்கங்களை  மீட்டெடுப்பதற்கு உதவுகின்றன.

படத்தின் மூலம் தேடுதல்

  • இணையத்தில் ஒரு படம் எங்குள்ளது என்பதைக் கண்டறிவது, படத்தில் உள்ள நபரை அடையாளம் காணும் தகவலுக்கு உங்களை அழைத்துச் செல்லும்.
  • கூகுள் இமேஜின் தேடல் பெட்டியில் உள்ள கேமரா குறியீட்டை கிளிக் செய்வதன் மூலம் கூகிளின் தலைகீழ் படத் தேடலைக் (Google’s reverse image search) காணலாம்.

சரியான நபரை அடையாளம் காணுதல்

பெரும்பாலும் பெயர்கள் மிகவும் பொதுவானதாகவும் சில சமயங்களில் முழுமையற்றதாகவும் இருப்பதால், நீங்கள் தேடும் நபரைப் பற்றி முடிந்தவரை தகவல்களைச் சேகரிப்பது சிறந்தது.

பின்வரும் சிக்கல்களைப் பற்றியும் சிந்தியுங்கள்:

  • பெயர்: எழுத்துப்பிழை, சுருக்கப்பெயர்கள், பிறமொழி எழுத்துக்களில் இருந்து ஒலிபெயர்த்தல், அவர்கள் தமது  பெற்றோரின் மற்றைய  குடும்பப்பெயர், திருமணத்திற்குப் பிறகு பெயர் மாற்றம் மற்றும் தனித்துவமான  பயனர்பெயர்களைப் பயன்படுத்தகூடும்.
  • உறவுகள்: நண்பர்கள் பட்டியலில் உள்ள குடும்ப உறுப்பினர்கள், வெவ்வேறு வலையமைப்புக்களில் இருக்கும்  பொதுவான நண்பர்.
  • வேலைவாய்ப்பு: வேலை, நிறுவனம், முந்தைய வேலை.

இணைக்கப்பட்ட இடங்கள்: அவர்கள் எங்கே பிறந்தார்கள், எங்கே வேலை செய்கிறார்கள்.

மின்னஞ்சல் முகவரி: ஓர் குறிப்பிட்ட  வடிவமைப்பைப் பின்பற்றும் பணியாளரின் வேலைத்தள மின்னஞ்சல் முகவரிகளை இணையதளங்கள் மூலம் கண்டறியலாம்.

அதே நேரம் அந்த நபர் எப்படி இருக்கிறார், அவருடைய ஆர்வங்கள், சித்தாந்தங்கள் மற்றும் பொழுதுபோக்குகள் போன்றவற்றைப் பற்றியும் ஆராயுங்கள்.

மக்கள் தொடர்பான ஆய்வுக்கருவிகள்

சில இணையத்தள வளங்கள் தனி ஒருவரின்  தனிப்பட்ட தரவை தேடக்கூடிய வளமாக சேகரிக்கின்றன.

Pipl ProSpokeo போன்றவை, அர்ப்பணிப்புள்ள மக்கள் தொடர்பான ஆய்வுத்தளங்கள் தளங்கள் ஆக விளங்குவதுடன் உங்கள் புலனாய்வின்  முக்கிய பாத்திரம்  குறித்த தனிப்பட்ட தகவல்களையும்  வழங்குகின்றன. தொலைபேசி எண், மின்னஞ்சல் பெயர் மற்றும் பிற காரணிகளால் Pipl ஐ தேடலாம். Spokeo சில விஷயங்களில் இதனை ஒத்ததாக இருந்தாலும் அமெரிக்க குடிமக்கள் மீது கவனம் செலுத்துகிறது.

சமூக ஊடகங்களில் தேடுதல்

  • மக்கள் தங்கள் வாழ்க்கையின் வெவ்வேறு அம்சங்களுக்கு வித்தியாசமான சமூக வலையமைப்புக்களை கொண்டுள்ளனர். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வகையான பின்பற்றுபவர்கள்  இருப்பார்கள்.
  • அனைத்து தளங்களிலும், Google ஐ விட அந்தந்த தளங்களில் உங்கள் உள் தேடல் பெட்டிகளில் தேடலை தொடங்கவும்; இது அவற்றின் சொந்த தரவுத்தளத்துடன் நேரடி இணைப்புகளைக் கொண்டுள்ளதோடு மேலும் புதுப்பித்த முடிவுகளை வழங்க முடியும்.
  • சில சமூக வலைப்பின்னல்கள், எடுத்துக்காட்டாக, Instagram, மிகவும் அடிப்படையான தேடுபொறிகளைக் கொண்டுள்ளன. உங்கள் Google தேடல் பெட்டியில் site:instagram.com ஐச் சேர்ப்பதன் மூலம் Google வழியாக Instagram இல் சிறந்த முடிவுகளுக்காக தேட முடியும்.

ட்விட்டரில் தேடுதல் 

  • Twitter மிகவும் பயனுள்ள, நெகிழ்வான மேம்படுத்தப்பட்ட தேடல் முறையைக்  கொண்டுள்ளது. பிற வளங்களும் உள்ளன, அவற்றுள்:
  • Tweepsect இல் பயனர் பின்தொடருபவர்கள், பயனரைப் பின்தொடர்பவர்கள் மற்றும் ஒருவரை ஒருவர் பின் தொடர்வோர் தொடர்பான விடயங்களை காண்பிக்கும்.
  • Followerwonkஇரண்டு அல்லது மூன்று கணக்குகளைப் பின்தொடர்பவர்களை ஒப்பிடுகிறது.
  • Tweetbeaver பல பயனுள்ள Twitter தேடல் கருவிகளைக் கொண்டுள்ளது.
  • உங்கள் தேடலுடன் தொடர்புடைய ஹேஷ்டேக்குகளை(hashtags) அடையாளம் காண்பது உங்களுக்கு உதவும்.

முகநூல் தேடல்

  • குழுக்கள் மற்றும் பக்கங்கள் அவற்றின் சொந்த தேடல் பெட்டிகளைக் கொண்டுள்ளன, இது ஒரு குறிப்பிட்ட பதிவை கண்டறிய உதவுகிறது.
  • பேஸ்புக்கின் மிகவும் பயனுள்ள அம்சங்களில் ஒன்று குறிப்பிட்ட கணக்குகளை தேடும் வசதியாகும். நீங்கள் ஒரு பெயரைக் கூட இட்டு தேட வேண்டியதில்லை. நீங்கள் தேடும் நபரின் பெயரின் முதலெழுத்தையும் வேறு சில விவரங்களையும் உள்ளிடவும். உதாரணமாக, நீங்கள் குறிப்பிட்ட ஒரு தொழில், நிறுவனம், நகரம் அல்லது ஒரு பல்கலைக்கழகத்தை வெறுமனே தேடலாம். உங்கள் தேடலுடன் தொடர்புடைய அம்சங்களைக் குறிப்பிட உங்களை அனுமதிக்கும் வடிப்பான்களை (filters) பக்கத்தின் இடது புறத்திலும் காணலாம்.
  • Facebook இல் இருந்து இன்னும் கூடுதலான தேடல் செயல்பாடுகளை பெற்றுக்கொள்வதற்கு www.graph.tips என்ற இணையதளத்தைப் பயன்படுத்தவும். உதாரணமாக தேதி வரம்புகளை அமைத்தல் அல்லது குறிப்பிட்ட  பதிவினை இட்ட பயனர் ஐடியைக் கண்டறிதல் என்பனவாகும்.
  • Facebook பதிவுகளில் முக்கிய வார்த்தைகளைத் தேட பதிவுகள் தேடல் பக்கம் உங்களை அனுமதிக்கிறது. வடிபான்கள் (filters)  ஒரு அடிப்படை ஆதாரம், தேதி மற்றும் Facebook குழுக்களைத் தேட உங்களை அனுமதிக்கின்றன.
  • Facebook இல் உள்ள பதிவுகளில் யாரேனும் எடிட் செய்ததாக உங்களுக்குத் தோன்றினால், மேல் வலதுபுறத்தில் உள்ள மூன்று சிறிய புள்ளிகளைக் கிளிக் செய்து, ‘செப்பம் செய்த வரலாற்றைப்’ – (‘edit history’) பார்க்கவும், இதன் மூலம் குறிப்பிட்ட பதிவின் முந்தைய பதிப்புகளையும் நீங்கள் பார்க்க முடியும்.
  • குறிப்பிட்ட ஓர் முழு பதிவும்  கடந்த காலத்திற்கு பின்நகர்த்தப்பட்டதாக நீங்கள் சந்தேகித்தால், உங்கள் அடையாளக் குறிப்பானை (cursor), Facebook பதிவுக்கு  அடுத்துள்ள சிறிய கடிகார ஐகானில் வைக்கவும், அது சேர்க்கப்பட்ட தேதியை வெளிப்படுத்தும்.

LinkedIn தேடல்

  • லிங்க்ட்இன் (LinkedIn) ஓர் அற்புதமான தேடல் செயல்பாட்டைக் கொண்டுள்ளது, இது தேடல் பெட்டியில் ஒரு நபரின் தற்போதைய மற்றும் முன்னாள் வேலையை வேறுபடுத்தி தேட  அனுமதிக்கிறது.
  • தேடல் பெட்டியில் “Enter” என்பதைக் கிளிக் செய்யவும். நீங்கள் தனிநபர்களைத் தேடுகிறீர்களானால், ஒரு விருப்பமாக “users” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். லிங்க்ட்இனின் முழுத் தேடல் செயல்பாட்டையும் பயன்படுத்த “ more filters”  என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

Instagram தேடல்

இதில் தேடுவது சற்று கடினமானது, ஆனாலும்  உங்கள் இலக்கு இளையவராக இருந்தால் அல்லது குறிப்பிட்ட மக்கள்தொகைக்கு தொடர்புடைய பிரச்சனை குறித்து நீங்கள் ஆராய்வதாக இருந்தால்  மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இன்ஸ்டாகிராமில் பயனுள்ள தேடல்களை வழங்கும் தளங்களில் Picuki.com ஒன்றாகும். இது Instagram படங்களை முழு அளவில் நகலெடுத்துக் கொள்ள அனுமதிக்கிறது.

பதிப்புரிமை (c) Paul Myers 2021. மேலும் தகவலுக்கு, Twitter இல் @paulmyersbbc  என்ற பயனர் கணக்கு மூலம் Paul Myers ஐ பின்தொடர முடியும்.

பால் மியர்ஸ் (Paul Myers)பிபிசியின் புலனாய்வு ஆய்வுகள் தொடர்பான கருத்திட்டத்தில்  முதன்மை ஆலோசகர் ஆவார். அவர் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இணையம் தொடர்பான ஆராய்ச்சியின் குறிப்பிடத்தக்களவு பங்காற்றியதுடன்  இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து சக ஊடகவியலாளர்களுக்கு  பயிற்சியும் அளித்து வருகிறார். அவரது பிபிசி பணிக்கு வெளியே, யுஎன்டிபி, உலக வங்கி, கார்டியன், சிஎன்என் மற்றும் பல புலனாய்வு ஆய்வுக் குழுக்களின் புலனாய்வு அறிக்கையிடல்களுக்கு மையர்ஸ் உதவியுள்ளார். இவர் researchclinic.netஎன்ற இணையதளத்தையும்  நடத்தி வருகிறார்.

மூலம்

Produced by the Global Investigative Journalism Network (GIJN)

Hot this week

Warmer oceans, acidification endanger Sri Lanka’s maritime heritage

By Malaka Rodrigo   Sri Lanka’s waters are home to over...

Sweltering conditions put young lives and learning at risk

By Malaka Rodrigo   Although the annual school sports events concluded...

The disastrous floods of Kalutara

 BY Buddhika Samaraweera Climate change-related weather events prove to be...

Climate Change Justice Fellowship

IPS is offering an exceptional opportunity for two journalists...

How climate change impacts Sri Lanka’s dengue disease burden

Three-year-old Nethmi Sehansa* from Dematagoda, a suburb of Colombo,...

Topics

Warmer oceans, acidification endanger Sri Lanka’s maritime heritage

By Malaka Rodrigo   Sri Lanka’s waters are home to over...

Sweltering conditions put young lives and learning at risk

By Malaka Rodrigo   Although the annual school sports events concluded...

The disastrous floods of Kalutara

 BY Buddhika Samaraweera Climate change-related weather events prove to be...

Climate Change Justice Fellowship

IPS is offering an exceptional opportunity for two journalists...

How climate change impacts Sri Lanka’s dengue disease burden

Three-year-old Nethmi Sehansa* from Dematagoda, a suburb of Colombo,...

Death Behind Bars

By Aanya Wipulasena With overcrowding, more than double the capacity,...

Related Articles

Popular Categories