Friday, November 15, 2024
30 C
Colombo

தகவல்களை  வெளிப்படுத்துபவர்களுடன் (Whistleblowers) பணியாற்றுதல்

நிறுவனங்களுக்குள் உள்ள  ஊழல் அல்லது சட்டவிரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தும் உள் நபர்களான  தகவல்களை வெளிப்படுத்துபவர்கள் எல்லா இடங்களிலும் உள்ள ஊடகவியலாளர்களுக்கு ஒரு முக்கிய செய்தி மூலமாக  உள்ளனர். அரசாங்கங்கள், நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகளுக்குள் தங்களின் பதவி நிலையிலிருந்தவாறே, அவர்கள் முக்கியமான செய்திகளுக்கான வழிகாட்டுதல்கள், ஆதாரங்களை வழங்க முடிவதோடு சில நேரங்களில் மறுக்கப்பட முடியாத “முக்கிய சாட்சியாளர்களாகவும்”- (smoking guns”) அவர்கள் மாறக்கூடும். இவை மோசடிகள் மற்றும் வீண்விரயம் முதல் குற்றவியல் சதிகள் மற்றும் போர்க்குற்றங்கள் வரை அனைத்தையும் அம்பலப்படுத்துகின்றன.

ஊடகவியலாளர்கள் தகவல்களை வெளிப்படுத்துபவர்களின் நோக்கங்களைக் கண்டறிந்து அவர்களின் தகவல்களைச் சரிபார்ப்பது முக்கியம். அத்தோடு அவ்வாறானவர்களை எவ்வாறு சிறந்த செய்தி ஆதாரங்களாகப் பாதுகாப்பது என்பதை அறிந்து கொள்வதும் மிகவும் இன்றியமையாததாகும். அதிர்ஷ்டவசமாக, தகவல்களை  வெளிப்படுத்துபவர்கள் பற்றிய ஏராளமான விடயங்கள் உள்ளதுடன் இது தொடர்பாக உலகெங்கிலும் உள்ள நிபுணத்துவம் வாய்ந்த அரச சார்பற்ற நிறுவனங்களின் (NGO) எண்ணிக்கையும் இதில் உள்ளடங்குகின்றது.

இந்த சவாலான ஊடகப்பரப்பினை கையாள ஊடகவியலாளர்களுக்கு உதவும் பொருட்டு, GIJN பின்வரும் வளங்களின் பட்டியலை உருவாக்கியுள்ளது. ஒரு குழு அல்லது தொடர்பான வளம்  சேர்க்கப்பட வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், எங்களுக்கு [email protected] என்ற இமெயிலுக்கு எழுதவும்.

தகவல்களை  வெளிப்படுத்துதல் என்பது, பொது நலனில் நம்பிக்கை வைத்து, ஊழல், சட்டவிரோத, மோசடி அல்லது தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஓர் நிறுவனம் ஈடுபட்டிருந்தால், அவன் / அவள் பணியாற்றும் அவ்வமைப்பின் நலனைப் புறக்கணித்து குறிப்பிட்ட விடயத்தை பொதுவெளியில் அம்பலப்படுத்தும்  ஒரு ஆண் அல்லது பெண்ணின் செயலாகும்.

                           – ரால்ப் நாடர், நுகர்வோர் வழக்கறிஞர் மற்றும் ஆர்வலர்

நிபுணர்களிடமிருந்து வழிகாட்டுதல்

தகவல்களை வெளிப்படுத்துபவர்கள்  உங்களுக்கு தகவலை வழங்க தயாராக இருந்தால், அவர்கள் சிறப்பு கவனத்துடன் நடத்தப்பட வேண்டும்.

GIJN பல்வேறு வளங்களிலிருந்து தகவல்களை வெளிப்படுத்துபவர்களுடன் பணிபுரிவதற்கான வழிகாட்டுதலை தொகுத்துள்ளது. அவ்அறிக்கைகள் அதிக விவரங்களைக் கொண்டிருக்கின்றதோடு முழுமையாகப் படிக்கத் தகுதியானவை.

ஊடகவியலாளர்களுக்கான பெருகியா கோட்பாடுகள்-The Perugia Principles for Journalists, “டிஜிட்டல் யுகத்தில் தகவல்களை  வெளிப்படுத்துபவர்களுடன் பணிபுரிதல்” என்ற துணைத் தலைப்புடன் வெளியானது. மற்றும் ஜூலி போசெட்டி (Julie Posetti) , டாக்டர். சுலெட் டிரேஃபஸ் (Dr. Suelette Dreyfus) மற்றும் நவோமி கொல்வின் (Naomi Colvin ) ஆகியோரால்  2019 இல் எழுதி  வெளியிடப்பட்டது. 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இத்தாலியில் உள்ள பெருகியாவில் சுதந்திர பேச்சுக்கான  மாதிரியை (Blueprint ) தொகுத்து வழங்கிய நிகழ்வில்  20 சர்வதேச ஊடகவியலாளர்கள்  மற்றும் நிபுணர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் பெருகியா கோட்பாடுகள் ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டது. பின்னர் அதன் 12 கொள்கைகளை மேலும் செம்மைப்படுத்தும் முகமாக  ஆசிரியர்கள் பரந்த புலனாய்வு இதழியல், சட்ட மற்றும் கல்விச் சமூகங்களுடன் ஆலோசனை நடத்தினர்.

1. முதலில், உங்கள் செய்தி மூலங்களைப்  பாதுகாக்கவும். கோரப்படும் போது அவற்றின் அநாமதேயத்தை பாதுகாக்கவும்.

2. சாத்தியமான இடங்களில் இருந்து உங்களுடன் ‘முதல் தொடர்பை’ ஏற்படுத்த மூலங்களுக்கு பாதுகாப்பான வழிகளை வழங்கவும்.

3. தகவலை வெளிப்படுத்தலின் போது ஏற்படும் செலவைக் முன்னமே கண்டறிந்து கொள்வதுடன், அச்செய்தி விவரண வெளியீட்டினை எப்படிச் சமாளிப்பது என்பதை முன்கூட்டியே சிந்திக்கும்படி அவர்களைத் தூண்டவும்.

4. தகவலை வெளிப்படுத்துபவரின் தனிப்பட்ட பார்வைகளோ, உங்களது அல்லது ஒர் செய்தி மூலத்தின் சொந்த கருத்துக்களையோ கவனத்தில் எடுக்காது தகவலின் பொது நலன் தொடர்பில் கவனம் செலுத்தி அதன் உள்ளடக்கத்தைச் சரிபார்க்கவும்.

5. உங்கள் டிஜிட்டல் பாதுகாப்பிற்கு முழுமையாக பொறுப்பேற்று, குறியாக்கத்தைப்(encryption) பயன்படுத்தவும். குறியாக்கம் உங்கள் மூலத்தை முழுமையாகப் பாதுகாக்காவிட்டாலும், இது முக்கியமான முதல்-வரிசை பாதுகாப்பை வழங்குகிறது.

6. உங்களுக்கும் உங்களது செய்தி மூலத்துக்குமான ஆபத்துக்கள் தொடர்பில் ஆராய்ந்து நீங்கள் எடுக்க வேண்டிய குறிப்பிட்ட நடவடிக்கைகள் என்ன என்பதைத் தீர்மானிக்கவும்.

7. உங்கள் செய்தி மூலம்  அல்லது தகவலை வெளிப்படுத்துபவருக்கு டிஜிட்டல் பிரசுரம் மூலம் ஏற்படும் அபாயங்கள் தொடர்பில் விளக்குங்கள். முக்கிய செய்திக்கதைகளில், அடிப்படை டிஜிட்டல் பாதுகாப்பு தொடர்பில் உங்கள் செய்தி மூலங்களுக்கு பயிற்றுவிக்கவும்.

8. கதைகளில் தரவுத்தொகுப்புகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அசல் ஆவணங்கள் மற்றும் முழுத்தரவுத்தொகுப்புகளை முடிந்தவரை பாதுகாப்பான இடங்களில் பிரசுரிக்கவும்.

9. நெறிமுறை, சட்டப்பூர்வ மற்றும் தொழில் வழங்குனர் கடப்பாடுகள் காரணமாக இரகசிய ஆதாரங்களைப் பாதுகாப்பதற்காக கேட்குமிடத்து மூலங்களினால்  வழங்கப்படும் தரவை பாதுகாப்பாக நீக்கவும்.

10. இரகசிய ஆதாரங்கள் மற்றும் தகவல்களை  வெளிப்படுத்துபவர்களுக்காக  டிஜிட்டல் டிராப் பாக்ஸ்கள் (drop boxes) மிகச் சிறந்த பாதுகாப்பை வழங்குவதையும், அதிக ஆபத்துள்ள விடயங்கள் தொடர்பில் பெயரை வெளிக்காட்டாது அநாமதேய முறையில் மேற்கொள்ளுவதையும்  உறுதிசெய்யவும்.

11. இரகசிய செய்தி மூலங்கள் மற்றும் தகவல்களை வெளிப்படுத்துபவர்களை  பாதுகாப்பதற்கான நாடு, பிராந்திய, சர்வதேச சட்ட மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பைப் புரிந்து கொள்ளுங்கள்.

12.ஊடகவியலாளர்கள், மூலங்கள் மற்றும் சேமிக்கப்பட்ட விடயங்களுக்கு  சரியான தரவுப் பாதுகாப்பை வழங்குவதற்கும், அவர்களை வழிகாட்டுவதற்குத் தகுந்த பயிற்சி மற்றும் கொள்கைகளோடும் தங்கள் பொறுப்பை நடைமுறைப்படுத்த ஊடக வெளியீட்டாளர்களை ஊக்குவிக்கவும்.

இந்த அறிக்கை கொள்கைகள் தொடர்பில் விரிவாகக் கூறுகிறது. இது ரஷ்ய, கிரேக்கம், ஸ்பானிஷ் மற்றும் ஜெர்மன் மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

தகவல்களை  வெளிப்படுத்துபவர்களுடன் பணிபுரியும் ஊடகவியலாளர்களுக்கான  10 குறிப்புகள். ஊடகவியலாளர் ரோவன் பில்ப் (Rowan Philp) 2019 இல் எழுதிய இந்த கட்டுரை ஜெர்மனியின் ஹாம்பர்க்கில் GIJC 2019 மாநாட்டில் தமது பங்களிப்பினை வழங்கியவர்களினால் பகிரப்பட்ட செய்திகளின் சுருக்கமாகக் கூறுகிறது.

தகவல்களை வெளிப்படுத்துபவர்களுடன்  பணிபுரிதல்: ஊடகவியலாளர்களுக்கான ஓர்  வழிகாட்டி இரண்டு அமெரிக்க நிறுவனங்களால் உருவாக்கப்பட்டது: முன்னணி தகவல் வெளிப்படுத்துவோர் பாதுகாப்பு மற்றும் இலாப நோக்கமற்ற நிறுவனமான அரசாங்க பொறுப்புக்கூறல் திட்டம் – Government Accountability Project (GAP), மற்றையது தொழில்முறை ஊடகவியலாளர்களின் சங்கம் (Society of Professional Journalists). இது 2017 இல் வெளியிடப்பட்டது.

“ஊடகவியலாளர்கள் தற்செயலாக தகவல் வெளிப்படுத்துபவர்களின் அடையாளத்தை அம்பலப்படுத்தி  அவர்கள் பழிவாங்கப்படும்  நடவடிக்கைகளை எதிர்நோக்க வேண்டி வருவதற்குப் பதிலாக, அவர்கள் தகவல்   வெளிப்படுத்துபவர்களுக்கு  பக்க பலமாக  இருக்க இது உதவக்கூடியதாக  இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று 36 பக்க வழிகாட்டியின் முன்னுரை கூறுகிறது. இது பின்வரும் ஆலோசனைகளைக் கொண்டுள்ளது:

  • தகவல்களை வெளிக்கொண்டு வருபவர்கள் பழிவாங்கபடுவதற்கான  அபாயம் அதிகமாக இருப்பதாலும், இது தொடர்பான சட்ட ரீதியான விடயங்கள் சிக்கலானதாக இருப்பதாலும், தரப்பட்ட தகவல் தொடர்பில் அடுத்த நடவடிக்கை எடுக்க முன்னர் ஊடகவியலாளர்கள் மற்றும் செய்தி மூலங்கள்  இருவரும் GAP அல்லது தகவல்களை  வெளிப்படுத்துபவர்களுக்கான சட்டத்தில் தேர்ச்சி பெற்ற மற்ற வழக்கறிஞர்களுடன் கலந்து ஆலோசிப்பது மிக உதவியாக இருக்கும்.
  • இரகசிய தகவல்களின் அடிப்படையிலான எந்தவொரு செய்திக்கதையும் தகவல் தருபவரின் மீது வழக்குத் தொடரலாம் என்பதை உளவுத்துறை சார்ந்த தகவல்களை வெளிப்படுத்துபவர்களுடன்  பணிபுரியும் ஊடகவியலாளர்கள் உணர வேண்டும்.
  • ஊடகவியலாளர்கள் செய்திக்கதையில் தங்களை ஒருபோதும்  சம்பந்தப்படுத்தி கொள்ளக் கூடாது ; நீங்கள் அங்கு ஒரு மூலோபாய நிபுணராகவோ அல்லது பொதுமக்கள் தொடர்புகள் (PR) ஆலோசனையை வழங்கவோ இல்லை, மேலும் நீங்கள் தகவலை வெளிப்படுத்துபவரின்  வழக்கறிஞராகவும் இருக்க முடியாது. ஆனால் உங்கள் மீதான நம்பிக்கையை வளர்த்துக்கொள்வதன் மூலமும், தகவல் வெளிப்படுத்துதலில்  உள்ள சில ஆக்கபூர்வமான கருத்தாய்வுகளைப் பற்றிய விழிப்புணர்வை வெளிப்படுத்துவதன் மூலமும், உங்கள் செய்தி மூலங்களின் பாதுகாப்பை அதிகப்படுத்தும் போது மதிப்புமிக்க தகவல்களின் அறிக்கைகளை ஊக்குவிக்கலாம்.
  • மனித உரிமை மீறல்கள், சுற்றுச்சூழல் சார் அச்சுறுத்தல்கள் அல்லது தேசிய பாதுகாப்பு தொடர்பான கடுமையான தவறுகள் பற்றிய தகவலை ஒரு ஊழியர் உங்களிடம் கொண்டு வந்திருந்தால், ஊடகவியலாளர்கள் அப்பணியாளருடன் தொடர்புகொள்வதில் மிகுந்த  கவனம் செலுத்த வேண்டும். அவர் தகவலை வெளிப்படுத்துவதற்கான சிறந்த மற்றும் பாதுகாப்பான வழிகளைப் பற்றிய தேர்வுகளைச் செய்வதற்கான அனைத்து விருப்பங்களையும் கருத்தில் கொண்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

அமெரிக்காவில் உள்ள தொழில்முறை ஊடகவியலாளர்களின் சங்கத்தின் (Society of Professional Journalists) தகவல் வெளிப்படுத்துபவர் திட்டம்-The Whistleblower Project எனப்படும் முன்னெடுப்பின் கீழ் இத்தலைப்பு  தொடர்பான கட்டுரைகளை கொண்டுள்ளதுடன் பாதுகாப்பான தகவல்தொடர்புகளின் தேவை பற்றிய விவாதத்தையும் உள்ளடக்கயுள்ளது.

தகவல் வெளிப்படுத்தல் தொடர்பில் அறிக்கையிடல்: ஊடகவியலாளருக்கான 6 உதவிக் குறிப்புக்கள் (Covering Whistleblowers: 6 Tips for Journalists): – டெனிஸ்-மேரி ஆர்ட்வேயினால் (Denise-Marie Ordway)  2019 இல் வெளியான  இந்தக் கட்டுரை Journalist’s Resource  தளத்தில்  வெளியானது. இக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ள ஆறு குறிப்புகள் பின்வருமாறு:

  1. ஒரு தகவல் வெளிப்படுத்துவரின் அடையாளத்தைப் பற்றிய விவரங்களை வெளிப்படுத்தும் முன், அந்தத் தகவலின் மதிப்பு, சம்பந்தப்பட்ட தகவல் வெளிப்படுத்துனர் மற்றும் பிறர் எதிர்கொள்ளக்கூடிய தீங்கை விட அதிகமாக உள்ளதா என்பதைக் கவனியுங்கள்.

2. தகவல் வெளிப்படுத்துனர்கள் ஏன் முன்வருகிறார்கள் என்பதில் கவனம் செலுத்த வேண்டாம்.

3.தகவல் வெளிப்படுத்துனர்கள் மற்றும் செய்தியை “கசிய விடுபவர்கள்” (leakers ) இடையே உள்ள வேறுபாடுகளைப் புரிந்து கொள்ளுங்கள்.

4.எப்போதும் பாதுகாப்பான தகவல்தொடர்புக்கான உத்திகளைக் கொண்டிருங்கள்.

5. நீங்கள்  ஓர் தகவல் வெளிப்படுத்துனர் தொடர்பில் அறிக்கையிடும்போது  குறிப்பிட்ட நபருக்கும் பொருந்தக்கூடிய தகவல் வெளிப்படுத்தல் தொடர்பான  பாதுகாப்புச் சட்டங்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

6. தகவல் வெளிப்படுத்தல் தொடர்பான சிக்கல்களைப் புரிந்துகொள்வதற்கான உதவிக்கு எங்கு செல்ல வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

தகவல் வெளிப்படுத்துனருடன் பணிபுரியும் கலை (The Art of Working with Whistleblowers) என்னும் தலைப்பிலான இந்தக் கட்டுரை, Journalism.co.uk, என்னும் பிரிட்டனில் உள்ள புலனாய்வு இதழியல் பணியகத்தின் -Bureau of Investigative Journalism (BIJ) ஆசிரியரான Meirion Jones இன் பாடங்களைக் கொண்டுள்ளது. “மிக முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்று, உங்கள் செய்தி மூலத்தின் அனாமதேயத் தன்மை மற்றும் பாதுகாப்பைப் பாதுகாப்பதாகும் என்று ஜோன்ஸ் கூறினார்.  மேற்குறிப்பிட்ட விடயங்கள் சமரசம் செய்யப்படுவதில் சிறிதளவு ஆபத்து இருகுமானால், அச்செய்திக்கதையை வெளியிடாமல் இருப்பது விரும்பத்தக்கது, அல்லது கணிசமான பகுதி நீக்கப்பட்டு, செப்பம் செய்யப்பட்ட  பதிப்பை வெளியிடுவது நல்லது, ”என்று கட்டுரை கூறுகிறது.

தகவல்களை வெளிப்படுத்துபவர்கள் பற்றி ஊடகவியலாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது- What Journalists Need to Know About Whistleblowers என்பது US National Whistleblowers Centre இனால் வெளியிடப்பட்ட ஓர் வழிகாட்டியாகும். இதில் ஐந்து தலைப்புகள் உள்ளடக்கப்பட்டுள்ளன: சட்டங்களை அறிதல், அநாமதேயத்தை பாதுகாத்தல், தகவல் வெளிப்படுத்துபவருக்கு என்ன ஆபத்தில் உள்ளது என்பதை அறிவது, “உளவுத்துறையில் இருக்கும்  தகவல் தெரிவிப்பாளர்களுக்கென்று சில சொந்த விதிகள் உள்ளன” மற்றும் செய்தியை கசியவிடுதல் மற்றும் தகவல் தெரிவித்தலுக்கிடையேயான வேறுபாடு என்பனவாகும்.

டிஜிட்டல் யுகத்தில் செய்தி மூலங்கள் மற்றும் தகவல் வெளிப்படுத்துபவர்களை  பாதுகாத்தல்-Protecting Sources and Whistleblowers in a Digital Age, லண்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள மேம்பட்ட சட்ட ஆய்வுகள் நிறுவனத்தில் (Institute of Advanced Legal Studies )உள்ள தகவல் சட்டம் மற்றும் கொள்கை மையம் (Information Law and Policy Center), 25 புலனாய்வுப் ஊடகவியலாளர்கள், தொடர்புடைய அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஊடக வழக்கறிஞர்கள் மற்றும் சிறப்பு ஆய்வாளர்கள் அடங்கிய சிறப்புக் குழுவுடன் செப்டம்பர் 2016 இல் நடத்திய விவாதங்களின் அடிப்படையில் இவ்அறிக்கையை வெளியிட்டது. ஊடகவியலாளர்களுக்கு மற்றும் செய்தி நிறுவனங்களுக்கு அறிக்கை பின்வருவனவற்றை பரிந்துரைக்கிறது:

  • பாதுகாப்பான தொழில்நுட்பம், செய்தி மூலங்களில் விசேட கவனம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான கொள்கைகளை மேலும் வலுப்படுத்துங்கள்.
  • அநாமதேயமாக இருக்க விரும்பும் செய்தி மூலங்களுடன்  அவர்கள் எவ்வாறு ஈடுபடுகிறார்கள் என்பது தொடர்பில்  மதிப்பாய்வு செய்யவும்.
  • செய்தி மூலத்தின்  பாதுகாப்பு தொடர்பில் போதுமான பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

யுனெஸ்கோவின் டிஜிட்டல் யுகத்தில் இதழியல் மூலங்களின் பாதுகாப்பானது 120 நாடுகளில்  செய்தி மூலங்களின் பாதுகாப்பிற்கான சட்ட வரைமுறைகள்  பற்றிய விரிவான ஆலோசனைகளையும் தகவல்களையும் வழங்குகிறது.

சர்வதேச பார் அசோசியேஷன் (International Bar Association).  IBA ஆனது “தகவல் வெளிப்படுத்துபவர் தொடர்பான பாதுகாப்பு: ஒரு வழிகாட்டி”யை 2018 இல் வெளியிட்டது, இது சட்டங்கள் பற்றிய நல்ல கண்ணோட்டத்தை வழங்குவதோடு தேசிய சட்டங்கள் பற்றிய தகவல்களுடன் பின்னிணைப்பை உள்ளடக்கியுள்ளது. IBA தளத்திற்குச் சென்று “whistleblowers” என்று தேடுங்கள்.

சர்வதேச நிறுவனங்கள்

சர்வதேச தகவல் வெளிப்படுத்துபவர்களின்  வலையமைப்பு –Whistleblowing International Network (WIN) என்பது அரசுசார நிறுவனங்கள்  மற்றும் சிவில் சமூகக் குழுக்களின் சர்வதேச வலையமைப்பாகும். ஸ்காட்லாந்தை தளமாகக் கொண்ட WIN உறுப்பினர்களுக்கு சட்ட மற்றும் நடைமுறை நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்ளவும், உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் தகவல் வெளிப்படுத்துவதற்கான ஜனநாயகப் பதில்களை உருவாக்கவும், உலகெங்கிலும் உள்ள தகவல் வெளிப்படுத்துபவர்களை பாதுகாப்பதற்கான  வினைத்திறனை ஆதரிக்கவும் ஒரு தளமாக விளங்குகிறது. உலகெங்கிலும் உள்ள தகவல் வெளிப்படுத்துபவர்களை பாதுகாத்தல் மற்றும் ஆதரிக்கும் சிவில் சமூக அமைப்புகளுக்கு WIN ஆலோசனை, கருவிகள் மற்றும் நிபுணத்துவத்தை வழங்குகிறது. EU Whistleblowing Meter ஆனது 2019 EU அறிவுறுத்தலை தேசிய சட்டமாக மாற்றுவதற்கு EU நாடுகள் எடுக்கும் முயற்சிகளை தொடர்ந்து கண்காணிக்கிறது.

National Whistleblower Center (NWC) என்பது வாஷிங்டன், டிசியில் உள்ள ஒரு இலாப நோக்கமற்ற நிருவனம் மட்டுமின்றி தகவல் வெளிப்படுத்துதல் தொடர்பில் நாடுரீதியாக சட்டங்கள் மற்றும் வளங்களை மேம்படுத்தும் நோக்கில் உள்ளடக்கி இணைய தரவுத்தளம் உட்பட, தகவல் வெளிப்படுத்துதலுக்கான ஆதரவு குரலாகவும், கல்வி மற்றும் உதவித் திட்டங்களுக்கு நிதியுதவி செய்கிறது. NWC ஆனது ஊடகவியலளர்கள், சுதந்திரமான பேச்சுக்காக குரல் கொடுப்போர், வழக்கறிஞர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுடன் இணைந்து செயல்படும் ஒரு சிறிய சர்வதேச திட்டத்தையும் கொண்டுள்ளது. The New Whistleblower’s Handbook   என்னும் கையேடு 2019 இல் வெளியிடப்பட்டது. NWC தொடர்ச்சியாக இயங்கும் வலைப்பதிவு தளத்தையும் கொண்டுள்ளது.

வாஷிங்டன், டி.சி.யை தளமாகக் கொண்ட அரசாங்க பொறுப்புக்கூறல் திட்டம்- Government Accountability Project, அதன் நோக்கமாக  “தகவல் வெளிப்படுத்துபவர்களை  பாதுகாப்பதன் மூலமும், தொழில்சார் சுதந்திரமான பேச்சை மேம்படுத்துவதன் மூலமும், குடிமக்கள் ஆர்வலர்களை மேம்படுத்துவதன் மூலமும் பெருநிறுவன மற்றும் அரசாங்கப் பொறுப்புணர்வை மேம்படுத்துவது” என்று கூறுகிறது. இது தகவல் வெளிப்படுத்துபவர்களுக்கான வழிகாட்டிகளையும் தொடர்ந்து இயங்குவதற்கான  உதவிக்குறிப்புகளையும் வெளியிட்டது. GAP ஆனது 1977 முதல் 8,000க்கும் மேற்பட்ட பொது மற்றும் தனியார் துறை தகவல் தெரிவிப்பாளர்களுக்கு உதவியுள்ளது. இது Caught Between Conscience & Career: Expose Abuse Without Exposing Your Identity  என்ற புத்தகத்தை வெளியிட்டது, இது தகவல் வெளிப்படுத்துபவர்களுக்கான முதன்மையான  ஓர் வழிகாட்டயாகும்.

டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் Transparency International (TI), அரசாங்கம், வர்த்தக மற்றும் சிவில் சமூகத்துடன் இணைந்து ஊழலை நிறுத்தவும், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றை மேம்படுத்தவும் செயல்படுகிறது. TI ஆனது பெர்லினில் உள்ள அதன் சர்வதேச செயலகத்துடன் உலகம் முழுவதும் 100 க்கும் மேற்பட்ட தேசிய கிளைகளைக் கொண்டுள்ளது. மூன்று தேசிய TI அலுவலகங்கள் தகவல் வெளிப்படுத்தல் குறித்து  குறிப்பிட்ட நிபுணத்துவம் பெற்றவை. அவையாவன: குவாத்தமாலாவில் உள்ள அசியோன் சியுடடானா ( Accion Ciudadana), டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அயர்லாந்து மற்றும் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ரஷ்யா ஆகும்.

Digital Whistleblowing Fund  என்பது ஹெர்ம்ஸ் சென்டர் ஃபார் டிரான்ஸ்பரன்சி மற்றும் டிஜிட்டல் மனித உரிமைகள் மற்றும் புதுப்பிக்கத்தக்க சுதந்திர அறக்கட்டளையின் (the Hermes Center for Transparency and Digital Human Rights and Renewable Freedom Foundation) ஒரு சிறிய மானியத் திட்டமாகும், இது அவர்களின் சமூகப் பணியின் ஒரு பகுதியாக, தகவல் வெளிப்படுத்தல்  முயற்சிகளை ஊக்குவிக்கும் பொருட்டு, புலனாய்வுப் பத்திரிகை குழுக்கள் மற்றும் உள்ளூர் மனித உரிமைகள் அமைப்புகளுக்கு பாதுகாப்பான டிஜிட்டல் முறையைத் தொடங்க நிதி, செயல்பாட்டு மற்றும் மூலோபாய ஆதரவைப் பெறவும் விண்ணப்பிக்கவும் உதவுகிறது.. கடந்தகாலத்தில் நிதிஉதவி பெற்ற புலனாய்வு அறிக்கையிடல் திட்டம் இத்தாலி – Investigative Reporting Project Italy (IRPI), தகவல் வெளிப்படுத்துபவர்கள் தமது  தகவல்களை  பாதுகாப்பாக அனுப்புவதற்கு ஒரு தளத்தை நிறுவுவதற்கு எதிர்பார்க்கிறது.

சர்வதேச ஊழல் எதிர்ப்பு மாநாடு International Anti-Corruption Conference  என்பது ஊழலின் சவால்களைப் பற்றி விவாதிக்க அரசாங்கம், சிவில் சமூகம் மற்றும் தனியார் துறையின் பிரதிநிதிகளை ஒன்றிணைக்கும் ஒரு உலகளாவிய மன்றமாகும். மாநாட்டில் பொதுவாக தகவல் வெளிப்படுத்துபவர்கள் மற்றும் குறிப்பிட்ட விடயங்கள் இடம்பெறும். டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனலில் உள்ள ஐஏசிசி (IACC)குழுவால் நடத்தப்படும் இந்த மாநாடு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடாத்தப்படுகிறது.

கருவிகள்

செக்யூர் டிராப் –Secure Drop என்பது அமெரிக்காவில் உள்ள ஃப்ரீடம் ஆஃப் தி பிரஸ் ஃபவுண்டேஷனால் (Freedom of the Press Foundation) நிர்வகிக்கப்படும் ஒரு  திறந்த தகவல் வெளிப்படுத்தல் சமர்ப்பிப்பு (open-source whistleblower submission)அமைப்பாகும், இதை அனைத்து ஊடக நிறுவனங்களும் அநாமதேய ஆதாரங்களில் இருந்து ஆவணங்களை பாதுகாப்பாக ஏற்றுக்கொள்ள பயன்படுத்தலாம். அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில்  இருந்து வெளியேறிய இவ்அறக்கட்டளை, செக்யூர் டிராப்பைப் பயன்படுத்துவதற்கான தொழில்நுட்ப உதவி மற்றும் பயிற்சியையும் வழங்குகிறது.

GlobaLeaks ஆனது Tor இணைய உலாவி வழியாக மட்டுமே அணுகக்கூடிய பாதுகாப்பான தளங்களை உருவாக்குவதற்கான மென்பொருளை வழங்குகிறது, இது தகவல் வெளிப்படுத்துபவர்களை பாதுகாப்பாக தகவல்களை கசிய அனுமதிப்பதோடு மட்டுமில்லாது ஊடகவியலாளர்களை   தமது செய்தி ஆதாரங்களை பாதுகாப்பாக தொடர்பு கொள்ளவும் அனுமதிக்கிறது. இது ஒரு திறந்த மூல தகவல் வெளிப்படுத்தல் கட்டமைப்பாக உள்ளமையினால் ஊடக நிறுவனங்கள், ஆர்வலர் குழுக்கள், பொது நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் உள்ளது.  மிலனில் (Milan) உள்ள வெளிப்படைத்தன்மை மற்றும் டிஜிட்டல் மனித உரிமைகளுக்கான ஹெர்ம்ஸ் மையத்தால் (Hermes Center for Transparency and Digital Human Rights)நடத்தப்படும், GlobaLeaks  தகவல் வெளிப்படுத்தல் நடைமுறையை ஆதரிக்கும் முயற்சிகளுக்கான மென்பொருள் கருவிகளையும்  வழங்குகிறது.

Tools for Whistleblowers என்பது பென்சில்வேனியாவின் பிட்ஸ்பர்க்கில் வசிக்கும் புலனாய்வு நிருபர், சுதந்திர ஊடகவியலாளர் மற்றும் எழுத்தாளரான மைக்கேல் வெரெஸ்காகின் (Michael Wereschagin )மூலம் தொகுக்கப்பட்ட சுருக்கமாகும். செய்தி நிறுவனங்கள் மற்றும் தனியாள் ஊடகவியலாளர்கள் பயன்படுத்தும் அமைப்புகளை அவர் பட்டியலிடுகிறார்.

நாடுகள் ரீதியிலான நிறுவனங்கள்

கீழேயுள்ள பட்டியலில் பல இலாப நோக்கற்ற குழுக்கள் உள்ளன, அவை தகவல் வெளிப்படுத்துவோருக்காக  வாதிடும் மற்றும் / அல்லது தகவல் வெளிப்பாட்டுக்கான  பாதுகாப்பான வழிகளை வழங்குகின்றன. பொதுவாக, தகவல் வெளிப்பாட்டுக்கான நடைமுறைகளைக் கொண்ட சட்ட நிறுவனங்களையோ அல்லது மென்பொருளை வழங்கும் நிறுவனங்களையோ நாங்கள் சேர்க்கவில்லை, இருப்பினும் அவற்றின் சில இணையதளங்களில் பயனுள்ள தகவல்கள் உள்ளன. நாம் [email protected]என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் பரிந்துரைகளை வரவேற்கிறோம்.  

ஆபிரிக்கா

பொது

செய்திக்கசிவுகளுக்கு பாதுகாப்பான டிராப்பாக்ஸைப் (dropbox) பயன்படுத்தும் ஆபிரிக்க செய்தி நிறுவனங்களின் கூட்டணியால் AfriLEAKS   நடத்தப்படுகிறது. இதில் தனிநபர்கள் ஆவணங்களை நேரடியாக அனுப்ப முடிவதோடு அதன் உறுப்பினர் அமைப்புகளில் எது புலனாய்வை மேற்கொள்ள வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கலாம். இது வெளிப்படைத்தன்மை மற்றும் டிஜிட்டல் மனித உரிமைகளுக்கான ஹெர்ம்ஸ் மையத்துடன் விசாரணை அறிக்கையிடல் (Hermes Center for Transparency and Digital Human Rights) மற்றும் ஆபிரிக்க  புலனாய்வு ஊடகவியல் நிறுவனங்களின் வலையமைப்பினதும் (African Network of Centers for Investigative Reporting)கூட்டுத் திட்டமாகும்.

பாரிஸைத் தளமாகக் கொண்ட ஆபிரிக்காவில் உள்ள தகவல் வெளிப்படுத்துபவர்களை  பாதுகாப்பதற்கான தளம்-Platform to Protect Whistleblowers in Africa, 2020 ஆம் ஆண்டில் சர்வதேச புலனாய்வுப் ஊடகவியலாளர்களின்  கூட்டமைப்பிற்கு(International Consortium of Investigative Journalists) ஆவணங்களை (மின்னஞ்சல்கள், குறிப்புக்கள், விளக்கக்காட்சிகள், விலைப்பட்டியல் மற்றும் ஒப்பந்தங்கள்) வழங்கிய ஒரு வழக்கறிஞர் மற்றும் சட்டக் குழுவாகும். இப்புலனாய்வு பின்னாட்களில் முன்னாள் அங்கோலா ஜனாதிபதியின் பில்லியனர் மகள் டாஸ் சாண்டோஸ் மீது விரிவாவன புலனாய்வு அறிகையிடலுக்கு வழி வகுத்தது.

தென்னாப்பிரிக்கா

ODAC எனப்படும் (Open Democracy Advice Center) – இன் நோக்கம் திறந்த மற்றும் வெளிப்படையான ஜனநாயகத்தை மேம்படுத்துவதாகும்; பெருநிறுவன மற்றும் அரசாங்க பொறுப்புக்கூறல் கலாச்சாரத்தை வளர்ப்பது; மற்றும் மனித உரிமைகள் குறித்து குடிமக்களுக்கு விழிப்புணர்வை உண்டாக்குதல் என்பன ஆகும். இந்த அமைப்பு  வெளிப்படைத்தன்மையை ஊக்குவிப்பதோடு  தகவல் மற்றும் திறந்த தரவுகளுக்கான அணுகலை மேம்படுத்துவதுடன் தகவல் வெளிப்படுத்துபவர்களையும் ஆதரிக்கிறது.

ஐரோப்பா

பொது

பெர்லினில் உள்ள தகவல்  உரிமைகளுக்கான ஐரோப்பிய மையம்- European Center for Whistleblower Rights, தகவல் வெளிப்படுத்துபவர்களுக்கு  உதவி வழங்குகின்றதுடன் இத்துறை சார்  மேம்பாட்டுக்காகவும் பாடுபடுகிறது. விசில் வயர் (Whistle Wire) என்ற காலாண்டு இதழின் முதல் இதழ் 2019 கோடையில் வெளியிடப்பட்டது.

The Southeast Europe Coalition on Whistleblower Protection என்பது 12 நாடுகளைச் சேர்ந்த அமைப்புகளின் கூட்டணியாகும்.

Fishyleaks என்பது  Funding Fish, நிறுவனத்தினால் ஐரோப்பிய ஒன்றிய கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை பற்றிய குறிப்புகளை கோருவதற்காக உருவாக்கப்பட்ட Our Fish என்ற செயற்றிட்டம் மூலம் முன்னெடுக்கப்படுவதாகும்.

அல்பேனியா

The Center for the Study of Democracy and Governance ஆனது அல்பேனியன் மொழியில் தகவல் வெளிப்படுத்தல் மற்றும் தகவல் வெளிப்படுத்துபவர்களுக்கான வழிகாட்டியை உருவாக்கியுள்ளது.

ஆஸ்திரியா

Whistleblowing Austria 2011 இல் நிறுவப்பட்ட இந்த நிறுவனம், போது மக்கள் தவறான செயல்கள் மற்றும் தவறான நடத்தைகளை வெளிப்படுத்த நடவடிக்கை எடுக்க உதவுகிறது.

பிரான்ஸ்

Transparency International France நடாத்தும் ஓர் தளம், ஊழல் குறித்து புகாரளிக்க தகவல் வெளிப்பட்டுத்துபவர்களுக்கு அனுமதிக்கிறது.

La Maison des Lanceurs d’Alerte  என்பது ஒரு பிரெஞ்சு அமைப்பாகும், இது நீதித்துறை உதவி, உளவியல் மற்றும் ஊடக ஆதரவு, அத்துடன் தேவைப்படும் தகவல் வெளிப்படுத்துபவர்களுக்கு நிதி உதவி போன்றவற்றை வழங்குகிறது. இது இணையத்தில்  இது தொடர்பான வளங்களையும்  (வழிகாட்டிகள், தொடர்புகள், உதவிக்குறிப்புகள் மற்றும் சட்டத் தகவல்) வழங்குகிறது.

ஜெர்மனி

Whistleblower Network  என்பது 2006 இல் ஊடகவியலாளர்கள் மற்றும் தகவல் வெளிப்படுத்துபவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு தன்னார்வ உறுப்பினர் அமைப்பாகும். தகவல் வெளிப்படுத்துபவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு தேவைப்படும் பட்சத்தில்  இச்சங்கம் ஆலோசனை மற்றும் தனது சேவைகளை வழங்குகிறது. இந்த தளம் தகவல் வெளிப்படுத்துபவர்கள் பற்றிய தகவலுக்கான ஓர் தளமாக விளங்குவதுடன் தினசரி புதுப்பிக்கப்பட்ட செய்திகளுடன் ஒரு வலைப்பதிவை வழங்குகிறது.

ஹங்கேரி

K Monitor Watchdog for Public Funds ஹங்கேரிய மற்றும் சர்வதேச ஊழல் தொடர்பான வழக்குகளை செய்திகளில் முன்கொண்டு வருவதற்கான ஒரு மன்றமாக 2007 இல் நிறுவப்பட்டது. புலனாய்வு இதழியல் மூலம் ஒரு அறிவார்ந்த  தகவல் சமூகமாக மாறுவதை சங்கம் ஊக்குவிக்கிறது. அத்துடன் வலைத்தளம் ஊடகவியலாளர்களுக்கான  தரவுத்தளத்தையும், தகவல் வெளிப்படுத்துபவர்களுக்கான வளங்களை கொண்டுள்ளது.

அயர்லாந்து

Transparency International Ireland பொது மற்றும் தனியார் துறைகளுக்கு ஒரு “சமனான பொது வெளியை” உருவாக்கும் நோக்குடன் 2004 இல் நிறுவப்பட்டது. கல்வி, தகவல் மற்றும் ஆய்வு மூலம் மக்களை மேம்படுத்துவதே இதன் நோக்கம். அதன் Speak Up Safely Guide கையேட்டினை இங்கே பதிவிறக்கவும். இது  அயர்லாந்தின் தகவல் வெளிப்படுத்துதல் தொடர்பான  சட்டத்தைப் புரிந்துகொள்ள தொழிலாளர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Creative Commons photo c / o Ollie Brown, Flickr

 இத்தாலி

IrpiLeaks என்பது புலனாய்வு ஊடகவியலின் இத்தாலிய மையமான IRPI இன் தகவல் வெளிப்படுத்துதல் தளமாகும். இது குறிப்பாக இங்கிலாந்தில் உள்ள மாஃபியாவில் செய்திக்கசிவுகளைத் தேடுகிறது.

நெதர்லாந்து

House for Whistleblowers “தகவல் வெளிப்படுத்தல் ஆலோசனை மற்றும் உளவியல் ஆதரவை வழங்குவதுடன் தகவலை வெளிப்படுத்தியோர் துஷ்பிரயோகதிற்குட்பட்டிருந்தால் அதற்கான சிகிச்சையும் வழங்குகிறது.

மேலும் நேர்மை மீறல்களைத் தடுப்பதில் பங்களிப்பதோடு அவை பற்றிய ஆய்வுகளையும் நடத்துகிறது. மேலும் தகவல் வெளிப்படுத்துபவர்களுகான  தொழில்நுட்ப பயிற்சி மற்றும் அறிவையும் வழங்குகிறது.”

PubLeaks என்பது 40க்கும் மேற்பட்ட டச்சு ஊடகங்களால் ஆதரிக்கப்படும் ஒரு பாதுகாப்பான தளமாகும். Hermes Center  உருவாக்கிய GlobaLeaks மென்பொருள் தொகுப்பை அடிப்படையாகக் கொண்ட இத்தளம் 2013 இல் நிறுவப்பட்டது

போலந்து

Stefan Batory Foundation என்பது 1988 இல் நிறுவப்பட்ட ஒரு சுயாதீனமான தனியார் போலந்து அறக்கட்டளை ஆகும், இது ஒரு திறந்த, தகவல் மற்றும் ஜனநாயக சமுதாயத்தை உருவாக்குவதற்கான நோக்கத்துடன் உள்ளது.

ரஷ்யா

Transparency International Russia  டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ரஷ்யா, ஊழலை எதிர்த்துப் போராட ஊடகங்கள் உட்பட சிவில் சமூகத்தை அணிதிரட்டுவதோடு பொது மற்றும் தனியார் துறைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் கொள்கைகளை நிறுவனமயமாக்க வேலை செய்கிறது. இது 1999 இல் நிறுவப்பட்டது.

செர்பியா

Pistaljka, செர்பிய மொழியில் “விசில்”, புலனாய்வு விசாரணைகளை நடத்துகிறது, தகவல் வெளிப்படுத்துபவர்கள் சமர்ப்பிப்பதற்கான பாதுகாப்பான தளம் ஒன்றும் உள்ளதுடன் தேவைப்படின் அவர்களுக்கு சட்ட உதவியையும் வழங்குகிறது.

ஸ்பெயின்

XNET தகவல் வெளிப்படுத்துவோரின் பாதுகாப்பிற்காக வாதிடுகிறது. இது ஒரு மறைகுறியாக்கப்பட்ட தகவல் வெளிப்படுத்தல் அமைப்பைப் பராமரிக்கிறது.

உக்ரைன்

Initiative 11  என்பது உக்ரைனில் தகவல் வெளிப்படுத்துவோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த போராடும் சிவில் சமூக அமைப்புகளின் கூட்டணியாகும்.

ஐக்கிய இராச்சியம்

Protect, (முன்னர் Public Concern at Work என அறியப்பட்டது) இது 1993 இல் நிறுவப்பட்டது. இது தகவல் வெளிபடுத்தல் வேலையைச் செய்ய உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனால் ஆபத்துகள், தவறுகள் மற்றும் பொது நலனுக்கு அச்சுறுத்தலாக இருக்கும்  தீவிர அபாயங்கள் முன்பே கண்டறியப்பட்டு தடுக்கப்படுகின்றன அல்லது கடுமையான சேதம் ஏற்படுவதனைக் குறைக்க முடிகின்றது. PCW ஒரு இலவச ரகசிய ஆலோசனை சேவையையும் இயக்கி தொடர்புடைய நிறுவனங்களுக்கு ஆதரவு மற்றும் சேவைகளை வழங்குகிறது, மேலும் இது கொள்கை வேலை மற்றும் பொது கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது.

The Whistler என்பது ஒரு புலமைப்பரிசில் வழங்கும் கூட்டணியாகும், இது இனம், மதம் அல்லது அரசியலைப் பொருட்படுத்தாமல் அனைத்து தகவல் வெளிப்படுத்துவோரையும் பாதுகாக்கும் நோக்கத்துடன் Compassion in Care மற்றும் Center for Investigative Journalism ஆகியவற்றை ஒன்றிணைக்கிறது. இது தகவல் வெளிக்கொணர்பவர்களால், தகவல் வெளிப்படுத்தலுக்கென சட்ட, உணர்வு ரீதியான மற்றும் நிதி விஷயங்களில் தொழில்முறை ஆதரவு, ஆலோசனை மற்றும் உதவியை வழங்கும் ஓர் அமைப்பாகும்.

லத்தீன் அமெரிக்கா / கரீபியன்

குவாத்தமாலா

Accion Ciudadana1996 இல் நிறுவப்பட்டது இந்த நிறுவனமானது 2006 முதல் Transparency International இன்அத்தியாயமாக இருந்து வருகிறது. இது குவாத்தமாலாவில் வெளிப்படைத்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்காக பணிபுரியும் ஒரு சிவில் சமூக அமைப்பாகும்.

மெக்சிகோ

MexicoLeaks  என்பது எட்டு மெக்சிகன் நிறுவனங்களால் ஆதரிக்கப்படும் ஒரு தளமாகும்: Animal Politico, emeequis, Másde131, Periodistas de a Pie, Poder, Proceso, R3D, மற்றும் Arestegui Noticias.

 வட அமெரிக்கா

கனடா

Anti-Corruption and Accountability Canada தகவல் வெளிப்படுத்துபவர்களுக்கு இலவச ஆரம்ப ஆலோசனைகளை வழங்குகிறது.

Creative Commons photo c / o Flickr

அமெரிக்கா

அரசாங்க பொறுப்புக்கூறல் திட்டம்- Government Accountability Project (GAP)  என்பது வாஷிங்டன், DCஐ தளமாகக் கொண்ட ஓர்  இலாப நோக்கற்ற பொதுநலக் குழு ஆகும், இது தகவல் வெளிப்படுத்தலை  ஆதரிக்கிறது.

Project on Government Oversight (POGO) என்பது வாஷிங்டன், DC-ஐ தளமாகக் கொண்ட ஒரு சுயாதீன கண்காணிப்பு அமைப்பாகும், இது அரசாங்கத்தின் நல்ல சீர்திருத்தங்களைச் செயல்படுத்த தகவல் வெளிப்படுத்துவோர், ஊடகவியலாளர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுகிறது.

National Whistleblower Center  வாஷிங்டன், DC-ஐ தளமாகக் கொண்ட இலாப நோக்கற்ற அமைப்பாகும், இது தகவல் வெளிப்படுத்துதல், கல்வி மற்றும் அது தொடர்பான உதவித் திட்டங்களுக்கு நிதியுதவி செய்கிறது.

Whistleblower Aid என்பது வாஷிங்டன், DC இல் உள்ள ஒரு இலாப நோக்கமற்ற சட்ட அமைப்பு. “சட்டப்பூர்வமாக, அரசாங்கம் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் சட்டத்தை மீறுவது தொடர்பாக  புகாரளிக்கும் நபர்களை நாங்கள் ஆதரிக்கிறோம்.”

The Whistleblower Support Fund  என்பது ஒரு இலாப நோக்கற்ற நிறுவனமாகும், இது “மூலோபாய ஆலோசனை, ஊக்குவிப்பு மற்றும் தொழில்முறை ஆதரவு, சட்டத்தரணிகள், சமூக சேவையாளர்கள், தொழில் ஆலோசகர்கள் மற்றும் / அல்லது ஊடகவியலாளர்களுக்கு பரிந்துரைத்தல் மற்றும் திறமையான தகவல் வெளிப்படுத்துபவர்களுக்கு தொழில்நுட்ப உதவி ஆகியவற்றை வழங்குகிறது.” 

The Whistleblower Blog என்பது “ஒரு சுதந்திரமான செய்தி மற்றும் தகவல் ஊடக மூலம்” ஆகும், இது  Kohn, Kohn & Colapinto, LLP இன் அனுசரணையுடன் நடாத்தப்படும் ஓர் பொதுநலச் சேவை திட்டமாகும்.

The National Council of Nonprofits ஆனது, இலாப நோக்கற்ற நிறுவனங்களுடன் இணைந்து தகவல் வெளிப்படுத்தல் கொள்கைகள் தொடர்பான வளங்களை பட்டியலிடுகிறது.

ஆசியா

IndonesiaLeaks ஆனது தகவல் தருபவர்களுக்கு தகவல்களை இரகசியமாகவும் பாதுகாப்பாகவும் சமர்ப்பிப்பதற்கான இடத்தை வழங்குகிறது, அத்தகவல்களைக் கொண்டு ஊடகவியலாளர்கள் விரிவான புலனாய்வை தொடர்ந்து மேற்கொள்வர்.

மூலம்

This story was originally published by the Global Investigative Journalism Network (GIJN)

Hot this week

To restore faith in news, journalists must start doing their job with a sense of professionalism – Hana Ibrahim

Social media is the new source of information for many...

Reporting on Non-Economic Loss and Damage from Environmental Disasters

𝐌𝐞𝐞𝐭 𝐭𝐡𝐞 𝐂𝐈𝐑 𝐅𝐞𝐥𝐥𝐨𝐰𝐬 Four Journalism Fellows under a special...

Women encounter a toxic internet that robs their voice- Shreen Saroor

Men and women experience the internet differently. Women experience...

John S. Knight Journalism Fellowships open [Worldwide]

Journalists who want to collaborate with others to pursue...

Topics

Reporting on Non-Economic Loss and Damage from Environmental Disasters

𝐌𝐞𝐞𝐭 𝐭𝐡𝐞 𝐂𝐈𝐑 𝐅𝐞𝐥𝐥𝐨𝐰𝐬 Four Journalism Fellows under a special...

Women encounter a toxic internet that robs their voice- Shreen Saroor

Men and women experience the internet differently. Women experience...

John S. Knight Journalism Fellowships open [Worldwide]

Journalists who want to collaborate with others to pursue...

Grants fund investigative journalism [Worldwide]

Investigative journalists can apply for a reporting grant. The grants,...

Sri Lanka requires policies to increase women’s representation in Parliament: Commissioner General of Elections

To increase women’s political representation at the parliamentary level,...

Boost: Reporting Grants for Journalists

ICFJ’s Reporting Grants program is designed to expand ICFJ’s...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img