சொத்துகள் தொடர்பான பதிவுகளை ஆய்வுக்குட்படுத்துவது முக்கியமாக ஒரு உள்ளூர் செயற்பாடாகும்.
சில நாடுகளில், காணியொன்று அல்லது வீடொன்று யாருக்கு உரித்தாகவுள்ளது என்பதை ஒன்லைன் மூலம் மிகவும் இலகுவாகக் கண்டறியலாம், ஆனால் வேறு சில இடங்களில் நீங்கள் அரச அலுவலகங்களுக்குச் சென்று பதிவுகளைத் தேடவேண்டியதாக இருக்கும். உரிய பதிவுகள் இருந்தால் மாத்திரமே அவ்வாறு சாத்தியமாகும். உலகின் அநேகமான பகுதிகளில் சொத்துகள் தொடர்பான பதிவுகள் பேணப்படுவதில்லை. அல்லது அவை சொத்து உரிமையாளர்களைப் பாதுகாப்பதற்காக இரகசியமாக வைக்கப்பட்டிருக்கும்.
அதனால் பல தடைகள் காணப்படுகின்றன. என்னென்ன பதிவுகள் உள்ளன என்பதைக் கண்டுபிடிப்பதற்காக சொத்து நிர்வவாகம் தொடர்பான சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளைப் பற்றி நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். இதற்கு சாத்தியமான மூலகர்த்தாக்களாக உள்ளூர் அதிகாரிகள், சொத்து விற்பனைத் தரகர்கள் மற்றும் சட்டத்தரணிகள் ஆகியோர் உள்ளனர்.
மேலும் பல இடங்களில் காணிகளில் போடப்பட்டிருக்கும் தலைப்புகளே அவற்றின் உரித்து தொடர்பன உத்தியோகபூர்வ பதிவுகளாகக் காணப்படும். காணியின் எல்லைகள் மற்றும் அமைவிடம் ஆகியன நில அளவைப் படங்களில் விவரிக்கப்பட்டிருக்கும். இந்த பதிவு முறைகள் ஒன்றாகவோ அல்லது தனித்தனியாகவோ காணப்படலாம். காணி மதிப்பீடு, வரிகள், காணிப் பயன்பாடு மற்றும் கட்டடங்கள் தொடர்பான தகவல்கள் தொடர்பான பதிவுகள் வேறு எங்காவது காணப்படலாம்.
உங்களால் கண்டுபிடிக்கக்கூடியது எது
வேறுபாடுகள் மற்றும் சிக்கல்கள் இருந்தபோதிலும், அரசாங்கப் பதிவுகள் வளமான ஆதாரங்களாகும்.
சாத்தியமான கண்டுபிடிப்புகளில் அடங்குபவை:
- உரிமையாளர் பெயர்,
- முகவரி மற்றும் பொதியிலக்கம்,
- காணி எல்லைகள் பற்றிய பௌதீகவியல் விவரக் குறிப்புகள்,
- காணியின் சிறப்புகள் மற்றும் கட்டடங்கள் தொடர்பான விவரக் குறிப்புகள்,
- சொத்துக்காக இறுதியாக செலுத்தப்பட்ட விலை,
- முன்னைய விற்பனைகள் பற்றிய பதிவுகள்,
- தற்போதைய மற்றும் கடந்தகால வரி மதிப்பீடுகள்,
- சொத்துக்காக அனுமதிக்கத்தக்க பயன்பாடுகள் மற்றும் கட்டுப்பாடுகள்,
- காணியுரிமையாளருக்கான உரிமைகள் மற்றும் காணி தொடர்பான கட்டுப்பாடுகள்,
- நீதிமன்றத்தினால் சொத்து மீது விதிக்கப்பட்டுள்ள பற்றுரிமைகள்,
- சொத்து பற்றிய சட்டச் சிக்கல்கள்,
- காணியில் நிர்மாணங்களை மேற்கொள்வது பற்றிய பதிவுகள், குறிப்பாக கட்டுமான அனுமதிகள்,
- காணிக்கு முட்டுக்கட்டையாகவுள்ள அடைமானக் கடன்கள்,
- அடிமைத்தனங்கள், முட்டுக்கட்டைகள், பொது உரிமைக் கட்டுப்பாடுகள்.
தகவல்களைப் பெறுவதில் பல்வேறு முட்டுக்கட்டைகள் காணப்படலாம். பல நாடுகளில், காணியுரிமையாளரின் பெயரை அறிந்துக்கொள்வதற்கு தனியுரிமைச் சட்டங்கள் தடையாக இருக்கின்றன. தகவலை வழங்குவதற்காக கட்டணம் அறவிடப்படலாம். தகவல்களின் தரம் மற்றும் நேர்த்தி என்பன சந்தேகத்திற்குரியவையாக இருக்கலாம். உண்மையான உரித்துடைமை மாறுபட்டதாக இருக்கலாம், ஒருவேளை உறவினர் ஒருவரின் பெயரிலோ அல்லது நிழல் நிறுவனத்தின் பெயரிலோ காணப்படலாம், இது மற்றுமொரு ஆராய்ச்சிக்கான சவாலை எற்படுத்தலாம்.
வேறு எங்கு தேடுவது
காணிப் பதிவுகள் மாத்திரம் தகவல்களின் சாத்தியமான மூலாதாரங்கள் அல்ல.
சொத்து தகராறுகள் பற்றிய நீதிமன்றப் பதிவுகளைத் தேடுவதும் பலனளிப்பதாக அமையும்.
சில ஆய்வாளர்கள், பதிவுகளுக்குரிய உத்தியோபூர்வ வர்த்தமானி அறிவித்தல்கள் மற்றும் அரசாங்க வௌியிடுகளை அதிர்ஷ்டவசமாகப் பெற்றுக்கொள்கின்றனர். காணிப் பயன்பாட்டு மாற்றங்கள் மற்றும் கட்டட அனுமதிகளை அவர்கள் வௌிக்கொண்டுவர முடியும். சுரங்க அகழ்வு உரிமைகள் உட்பட வெவ்வேறு வகையான காணியுரிமைகள் தொடர்பான பதிவுகளும் காணப்படலாம். பண்ணைகளுக்கான மானிய உதவிக் பற்றிய தகவல்கள் கூட உதவியாக அமையலாம். அரசாங்கப் பதிவுகளில் மாத்திரம் தங்கியிராமல், நிறுவன அறிக்கைகள் மற்றும் இணையத்தளங்கள், ஊடக அறிக்கைகள், விளம்பரங்கள், மற்றும் சமூக ஊடகங்கள் என்பவற்றையும் ஆய்வாளர்கள் பரிந்துரைக்கின்றனர். வான்வழிப் படங்களும் கிடைக்கலாம்.
சொத்து விற்பனைக்கான பட்டியல்கள்கூட பயனுள்ள தகவல்களை வழங்கலாம். ஐக்கிய அமெரிக்காவின் தேசிய ரீதியான இணையத்தளங்களான Zillow , வர்த்தக நோக்கிலான ஐக்கிய அமெரிக்க சொத்துகள் பற்றிய Loopnet.com , தென்னாபிரிக்காவின் Windeed , சீனாவின் Lianjia , இந்தியாவின் Magic Bricks மற்றும் பல இணையத்தளங்களையும் பரிசீலிக்கலாம்.
சொத்து விற்பனைத் தரகர்கள், வங்கிகள், காப்புறுதி நிறுவனங்கள், சட்டத்தரணிகள், மற்றும் சொத்து வாங்கல் – விற்றல்கள் தொடர்பில் அறிந்துகொள்வதில் ஆர்வமுள்ளவர்கள் கூட சாத்தியமான மூலாதாரங்களாக இருக்கலாம். காணியுரிமைகள் தொடர்பான பிரச்சினைகள் மீது அக்கறை செலுத்தும் அரச சார்பற்ற நிறுவனங்களும் உதவியாக அமையக்கூடும்.
களவிஜயங்கள் மூலம் ஈவுத்தொகைகள் செலுத்தப்படலாம். உங்களால் எதனைப் பார்க்கமுடியும்? சுற்றிவரக் கேட்டுப்பாருங்கள்.
சர்வதேச புலனாய்வு ஊடகவியல் வலையமைப்பு (GIJN)