- செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள். செயற்கை நுண்ணறிவினால் முதலாவது சிதைவுற்ற விடயம் உண்மை மற்றும் ஆதாரபூர்வமான அறிக்கையிடலாகும். “ தேர்தல்கள் ஒரு தனித்துவமான நிகழ்வு என்பதால் தொழில்நுட்ப சீர்குலைவினை துரிதப்படுத்துவதாக அமைகின்றன. இதுவொரு பூஜ்ஜியத் தொகையைக் கொண்ட விளையாட்டாகும். நீங்கள் நடிகர்களுக்கு ஊக்கமளிக்கிறீர்கள், உங்களிடம் நிறைய பணம் உள்ளது, மற்றும் வித்தியாசமான விடயங்களை நீங்கள் முயற்சி செய்வதுடன் அதில் என்ன ஒட்டிக்கொள்கின்றது என்பதை அவதானி்கும் திறன் உங்களிடத்தில் காணப்படுகின்றது,” என்று காட்வொலடர் கூறியுள்ளார். முன்னர் டுவிட்டர் என அழைக்கப்பட்ட X மற்றும் பேஸ்புக் போன்ற சமூக ஊடக நிறுவனங்கள் கடந்த தேர்தல்களின்போது பயன்படுத்தியிருந்த வடிகட்டல் (Filters) செயற்பாடுகளை நீக்கி, சர்வாதிகாரப் போக்குடனான பிரசாரம் மற்றும் தவறான தகவல்களுக்கு அனுமதி வழங்கியிருந்தன.
- தேர்தல் தொடர்பாடல்களை மேற்கொள்ளும் நிறுவனங்கள். தகவல் தொடர்பாடல் நிறுவனங்கள் மற்றும் ஆலோசகர்களால் தவறான தகவல்களை பரவச்செய்யும் புதிய கருவிகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. அநேகமான நாடுகளில் கடந்த ஐந்தாண்டுகளாக சுதந்திரமான தேர்தல்கள் ஏற்கனவே சீர்குலைந்துள்ளன. அவர்களுடைய விளையாட்டுப் புத்தகம் ஏனைய நாடுகளுக்கும் நகலெடுக்கப்படுகின்றது. “அங்கே பெருமளவு பணம் உள்ளது. தளங்களுக்கு இடையில் வௌிப்படைத்தன்மை கிடையாது. மேலும் அவை மக்களை பொய் மற்றும் வெறுப்பில் ஆழ்த்துகின்றன,” என CLIP க்கான பிரேஸில் புலனாய்வாளரும், லத்தீன் அமெரிக்க புலனாய்வு ஊடகவியல் மையத்தின் புலனாய்வாளரும், சர்வதேச ரீதியாக ஊடகவியலாளர்களுடன் இணைந்து பணியாற்றக்கூடியவருமான ஸ்பானிய மொழி பேசும் ஜூலியானா டெல் பிவா, தீவிரவாத வேட்பாளர்களுக்கும், பிரசார ஆலோசனை நிறுவனங்களுக்கும் இடையிலான தொடர்புகளை விளக்கியுள்ளார். \
- எதிரொலிக்கும் அறைகள். அரை உண்மை சொல்வது சிறந்த பொய்யாகும் எனக் கூறப்படுகின்றது. போலிச் செய்திகளை விட உண்மைகளை ஆயுதமாக மாற்றுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கொலம்பியா பல்கலைக்கழகத்தின் டிஜிட்டல் ஊடகவியலுக்கான டோ நிலையத்தின் சிரேஷ்ட ஆய்வாளரான பிரியஞ்சனா பெங்கானி தெரிவித்துள்ளார். பல கட்சிகள் இணைந்து அல்லது ஒரே கதையை முன்னோக்கித் தள்ளுவதற்கான கூட்டிணைவை” ஏற்படுவதற்கான சரவுண்ட்-சவுண்ட் முறையிலான கேட்பொலி பசுமைத்திட்டம் அல்லது பசுமை அவை முறைக்குள் நாம் வரவேண்டும்” என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த குழுக்கள் தொலைக்காட்சி, இணையத்தளம், மற்றும் வானொலி ஆகியவற்றின் ஊடாக இவற்றை பிரசாரம் செய்வதன் மூலம் மக்கள் அதையே திரும்பத்திரும்ப கேட்கின்றனர். எனவே அந்த கதை உண்மையாகின்றது – மற்றும் ஆதார அடிப்படையிலான அறிக்கையிடல் என்பது ஒரு வற்புறுத்தும் கருவியாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
- தோல்வியின்போது அதிகாரம் படைத்தவர்கள் வெற்றி பெறுகிறார்கள். தேர்தலை கேள்விக்குட்படுத்துவதும், ஜனநாயகம் மீதான நம்பிக்கையை சிதைப்பதும், தோல்வியின்போதிலும் அதிகாரம் படைத்தவர்களை வெற்றியடையச் செய்கின்றது. “தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பது தற்போது கிடையாது. அதுவொரு முக்கிய நாடகமல்ல என்பதை நாம் டிரம்ப் மற்றும் இப்போது பொல்சனரோ விடயங்களில் அவதானித்தோம், தேர்தல் பற்றிய எமது புரிதலை நாம் மறுவடிவமைக்க வேண்டும்” என ஒப்சோவர் மற்றும் கார்டியன் புலனாய்வு செய்தியாளரும், பேஸ்புக் – கேம்ப்பிரிட்ஜ் அனலிடிக்கா தரவு ஊழலை அம்பலப்படுத்திய புலிட்ஸர் பரிசுக்கான இறுதி தேர்வாளருமான கரோல் கட்வொலடர் கூறியுள்ளார்.
- ஊடகவியலாளர்களுக்கு எதிரான பாலின அடிப்படையிலான வன்முறைகள். ஊடகவிலாளர்களை மௌனிக்கச் செய்யவும், மிரட்டுவதற்கும் பாலின அடிப்படையிலான வன்முறையைப் பயன்படுத்துவது, சர்வாதிகாரத் தலைவர்கள் பற்றிய வலுவான புலனாய்வுத் தகவல்களை வௌியிடுவோரை இலக்குவைக்கும் ஒரு வழிமுறையாகும். “பொல்சனரோ ஜனாதிபதியாக இருந்தபோது பெண்களாகிய நாம் பெரும்பாலும் அவரது இலக்குகளாக இருந்தோம்,” என பாலியல் துன்புறுத்தல் மற்றும் இணையவழி தாக்குதல்களை மேற்கோள்காட்டி டெல் பிவா குறிப்பிட்டிருந்தார். “அவரை புலனாய்வு செய்வதில் பெண்களாகிய நாம் ஈடுபட்டிருந்தோம், அவர் எங்களைப் பின்தொடர்ந்தார்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
தேர்தல்களைப் புலனாய்வு செய்வதற்கான 10 உதவிக் குறிப்புகள் மற்றும் கருவிகள்
அரசியல்வாதிகள் மற்றும் தேர்தல்களை புலனாய்வு செய்வதற்கான சிறந்த நடைமுறைகளை பெங்கானி, கட்வோல்டர், மற்றும் டெல் பிவா ஆகியோர் முன்மாதிரியாகக் காட்டியுள்ளனர்.
- சிறியதாக தொடங்குவதையிட்டு அச்சமடைய வேண்டாம். பிரசாரங்கள் மற்றும் அரசியல்வாதிகளின் சாறுள்ள நிதித் தகவல்களைப் பெற்றுக்கொள்ள நீண்ட காலம் எடுக்கலாம். அடிப்படையான மற்றும் தொடர்ச்சியான அறிக்கையிடலை முன்னெடுக்கும்போது, நிதிநிலை ஆவணங்களை நீங்கள் பெறுவீர்கள். தனக்குப் பாரிய தகவல் கசிவுக்கான ஆதாரம் கிடைக்கவில்லை எனினும், “ஸ்பைடர் முறை”யில் நடுவில் இலக்கு வைக்கப்படும் அரசியல்வாதியுடன் ஒரு அட்டவணையை வரைந்து, அவரது வலையைமைப்பைச் சுற்றியுள்ள அனைவரையும் அவதானித்தமை மிகவும் பயனுள்ள விடயமாக இருந்தது என டெல் பிவா கூறியுள்ளார்.
- பிரசாரத்தை ஆரமப்பிக்கும் மற்றும் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தும் மூன்று மிகப் பெரிய பெயர்கள் மீது கவனம் செலுத்துங்கள். ஏனென்றால் வழமையாகவே அவர்கள் மிகப்பெரிய பாத்திரத்தை வகிப்பவர்களாக இருப்பார்கள். எனவே தகவல்மூலங்கள் கொண்ட ஒரு வரைபடத்தை முன்கூட்டியே உருவாக்கிக் கொள்ளுங்கள்.
- அரசியல்வாதி ஒருவரது பின்புலம் உங்களுக்குத் தெரியும் என நீங்கள் எண்ணவேண்டாம். ஏனெனில் நீங்கள் பல வருடங்களாக அவர்களைப்பற்றி அறிக்கையிடலில் ஈடுபட்டிருப்பீர்கள். எப்போதும் அவர்களுடைய கடந்த காலத்தைப் பாருங்கள். கவனிக்கப்படாத சில காரணிகள் முன்னரைவிட இப்போது மிகவும் பொருத்தமானதாக இருக்கலாம். மேலும் பொதுவாக ஒரு காலத்தில் அரசியல்வாதிகளுடன் நெருக்கமாக இருந்தவர்கள் அல்லது இப்போது அவர்களின் விரோதிகள் அல்லது அலட்சியப்படுத்தப்பட்ட / கவனிக்கப்படாதவர்கள் என உணர்கின்ற நண்பர்கள் சிறந்த ஆதாரங்கள் என்பதை நினைவில் வைத்திருங்கள்.
- அதிக பணமுள்ள அல்லது செல்வாக்கு செலுத்தக்கூடிய நிறுவனங்கள், மற்றும் சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்கள் ஆகியோரைக் கண்டுபிடியுங்கள். அவர்களுடைய வலையமைப்புகளை பின்தொடர்ந்து, அவர்கள் யார் என்பதைக் கண்டறிய முயற்சியுங்கள். அவர்கள் கூறுவதை வேறு யார் பெரிதுபடுத்துகிறார்கள்? அவர்கள் ஒரு எதிரொலிக்கும் அறையை உருவாக்குகின்றார்களா? அதன் பின்புலத்தில் இருப்பவர்கள் யாராக இருக்கலாம்?
- தேர்தல்களில் செல்வாக்கு செலுத்தும் நிறுவனங்களின் பேஸ்புக் விளம்பரங்களைக் கண்காணிப்பதுடன், பின்தொடருங்கள். இயன்றவரையில் டிஜிட்டல் பிரசார விளம்பரங்களின் தொகை மற்றும் தகவல்முலங்களை கண்டறியவும். டிஜிட்டல் செலவினங்கள் சில சந்தர்ப்பங்களில் பிரசார செலவின சட்டங்களை மீறுவதற்காக பயன்படுத்தப்படுகின்றன. ஆகவே அவற்றைப் பின்தொடர்வது கடினமான காரியமாகும்.
- பக்கச்சார்பு உணர்வுகளைத் தவிர்ப்பதற்கு, அனைத்து ஆதாரங்களையும் காண்பிக்கக்கூடிய மற்றும் வாசகர்களுக்கு வழங்கக்கூடிய கதைகளை பிரசுரிக்கவும்.
- இயலுமாயின், மற்றைய ஊடகங்கள் மற்றும் வௌிநாடுகளுடன் இணைந்து பணியாற்றுங்கள். தேர்தல்களைப் புலனாய்வு செய்வது என்பது கடிகாரத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் அதிக நேரத்தை செலவிடும் ஒரு செயற்பாடாகும். சில அரசியல் கையாள்கை விளையாட்டுகள் பல நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன.
- உங்களால் புலனாய்வு செய்யப்படும் விடயங்கள்ள தேர்தல் முடிவுகாளில் செல்வாக்கு செலுத்தக்கூடியவை என்பதை நம்பாமவர்கள் கூறுவதை செவிமடுக்காதீர்கள். உங்களுடைய செயற்பாடுகள் சட்டபூர்வமானவையா, இல்லையா என்பதில் கவனம் செலுத்துங்கள்.
- ஒரு மாறுபட்ட செய்தியறை வேண்டும். வெவ்வேறு பின்புலங்களைக் கொண்ட ஊடகவியலாளர்கள் எதிர்பாராத உள்ளடக்கங்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்குவார்கள்.
- அடுத்த தேர்தல்களுக்கு நீங்கள் எவ்வாறு தயாராக வேண்டும் என்பதைப்பற்றி உங்களுடைய செய்தியறையில் உரையாடல்களை நடத்துங்கள். இப்போது ஒரு திட்டத்தை உருவாக்குங்கள்.
ஜனநாயகத்திலிருந்து சர்வாதிகாரத்தை நோக்கிய சரிவானது உலகளாவியது. பாதுகாப்பின் முன்னரங்காக ஊடகவியலாளர்கள் செயற்படுகின்றனர். “ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததைவிட இந்த தருணத்தில் உலகின் இருபது சதவீத ஆட்சி சர்வாதிகார அரசாங்கங்களின் கீழ் அதிகரித்துள்ளன,” என கட்வொலடர் கூறுகின்றார். “குதிரைப் பந்தயம் போன்று தேர்தல்களை தொடர்ந்தும் நாங்கள் மறைக்க முடியாது.”
சர்வதேச புலனாய்வு ஊடகவியல் வலையமைப்பு (GIJN)