Tuesday, April 1, 2025
25 C
Colombo

அரசாங்கங்களைப் புலனாய்வு செய்தல்

அரசாங்கங்கள் மற்றும் அவற்றின் செயற்பாடுகளைப் புலனாய்வு செய்தல் மிகப் பெரிய சவாலாகும். அதற்காக பயன்படுத்தும் கருவிகள் உள்ளன. கோட்பாடுகள் மற்றும் நடைமுறைகளில் அவை எவ்வாறு செயற்படுகின்றன எனுமிடத்தில் இருந்து சுய-கற்றல்களை ஆரம்பிப்பது சிறந்ததாகும். புலனாய்வு இலக்கு என்னவாக இருப்பினும், அரசாங்கம் எவ்வாறு இயங்குகின்றது என்பதைப்பற்றிய அடிப்படை அறிவை பெற்றுக்கொள்வதன் ஊடாக வெற்றி மேம்படுகின்றது.

எண்ணிப் பார்க்கவேண்டிய சில அடிப்படை அம்சங்கள் பின்வருமாரு:

  • உங்கள் விடயத்துடன் தொடர்புடைய சட்டங்களும், ஒழுங்குவிதிகளும்,
  • பின்புல வரலாறு,
  • அதிகாரக் கட்டமைப்பு,
  • முடிவெடுக்கும் செயன்முறைகள்,
  • அதிகாரிகளின் உள்ளகத் தலையீடுகள்,
  • வௌியார் “பங்குதாரர்கள்”,
  • பதிவுப் பிரசுரங்கள்,
  • வரவு-செலவுத்திட்டங்கள், விலைமனு கோரல்கள், மற்றும் நிதிநிலை அறிக்கைகள் போன்ற மற்றும் பல உத்தியோகபூர்வ ஆவணங்கள்.

இவை அதிகம் என உணர்ந்தால், தேவையானவற்றை தேர்வுசெய்யவும், இத்தகைய பொதுமைப்படுத்தல்கள், அரச சுற்றுச்சூழல் முறையை காட்சிப்படுத்துவதற்கு உதவியாக அமையும்.

தலையீடு செய்வோர் யார்?

நீங்கள் கவனம் செலுத்தியுள்ள   விடயத்தில் செல்வாக்கு செலுத்துவொர் யார்?

தேர்வு செய்யப்பட்ட அதிகாரிகளை மட்டும் கவனத்திற்கொள்ளாது, சமன்பாட்டின் ஒரு பகுதியாக வேறு யாரெல்லாம் இருக்கலாம் என்பது உள்ளடங்கலாக:

  • அதிகாரச் செருக்குள்ளவர்கள்,
  • விசேட ஆர்முடைய குழுவின் பிரதிநிதிகள்
  • சிவில் தலைவர்கள்,
  • வர்த்தக சமூக தலைவர்கள்,
  • துறைசார் நிபுணர்கள்,
  • கல்வியியலாளர்கள், ஏனைய.

உலகளாவிய ரீதியாக தெரிவுசெய்யப்பட்ட அரசியல்வாதிகளின் விபரங்களைப் பட்டியலிடுவதற்கு everypolitician.org எனும் இணையத்தளம் முயற்சித்து வருகின்றது. ஆனால் உள்ளூர் அறிவு மேலும் முழுமையானதாக இருத்தல் வேண்டும்.

சம்பந்தப்பட்ட அரசாங்கக் கட்டமைப்புகளின் தகவல்களை வாசித்தறிவதுடன், அவற்றின் நடவடிக்கைகள், அரச தலைவர்கள் மற்றும் ஏனையவற்றையும் அறிந்துகொள்ள வேண்டும். பெயர் குறிப்பிடப்படும் நபர்கள் மீது கவனம் செலுத்துங்கள். தலைப்பு தொடர்பில் யாரெல்லாம் கருத்து தெரிவிக்கின்றார்கள் என்பது தகவலுக்காக மக்களை தொடர்புகொள்ள முக்கிய அம்சமாக இருக்கும்.

உங்களிடமே பின்வரும் கேள்விகளைக் கேட்டுப்பாருங்கள்:

  • அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் யார்?
  • அதிகம் கரிசனை கொள்பவர்கள் யார்?
  • என்னுடைய தலைப்பு தொடர்பில் யார் ஆர்வம் காட்டுகின்றார்கள்?

இத்தகைய தகவல்களைத் திரட்டுவதானது உங்களுடைய புலனாய்விற்கு உதவியாக பெறுமதிமிக்க ஒரு “வரைபடத்தை” உருவாக்கிக் கொடுக்கும்.

ஒன்லைன் மற்றும் ஓவ்லைன் (Online and Offline)

ஒன்லைன் மூலமான தேடுதல் நிச்சயமாக ஒரு ஆரம்பப் புள்ளியாக இருப்பினும், அது போதுமானதாக இருக்காது.

இணையவழி ஆராய்ச்சிக்கும், அரசாங்கத்தின் வௌிப்படைத்தன்மைக்கும் அனைத்து வகையிலும் நவீனத்துவத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதால், நீங்கள் தெரிந்துகொள்ள விரும்புவது ஒன்லைனில் இல்லாமலும் இருக்கலாம்.

அரச நிறுவனங்களினது இணையத்தளங்களை ஆராய்ச்சி செய்வது அவசியமாகும். எனினும், அது அறிவூட்டுவதாக இருக்காது.

நபருக்கு நபர் நேரடி தொடர்பு கொள்வது புலனாய்வின் முக்கிய அம்சமாகும்.

கூட்டங்களுக்கு சமூகமளியுங்கள். யார் அங்கு பங்கேற்கின்றார்கள் மற்றும் அவர்களின் அங்க அவையங்களின் அசைவுகள் என்பவற்றை அவதானிப்பது எதிர்பாராத பயனைத் தரக்கூடும்.

 நீங்கள் கையாளுகின்ற விடயம் குறித்து அறிந்துள்ள ஒருவரை அரசாங்கத் தரப்பில் தேடிக் கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். மிகவும் கீழ் மட்டத்தில் இருக்கின்ற ஒரு நிபுணரைக் கண்டுபிடிப்பதற்காக ஒரு வளையைத் தோண்டுங்கள். ஊழியர்களிடம் கேள்விகளைக் கேட்டுப்பாருங்கள். ஊடகங்களின் கேள்விகளுக்குப்  பதிலளிப்பதற்காக அரசாங்கத்தின் தகவல் தொடர்பு உத்தியோகத்தர்கள் தயார்நிலையில் இருப்பார்கள், ஆனால் தொடர்ந்தும் முயற்சியில் ஈடுபடுவது துன்பத்தை ஏற்படுத்தாது.

அரசாங்கத்திற்கு வெளியில், உங்களின் ஆர்வத்திற்குரிய விடயங்கள் தொடர்பாக எதேனும் விடயங்களைப் பகிர்ந்துகொள்வார்கள், மற்றும் தகவல்கள் அல்லது துப்புகளை வைத்திருப்பார்கள்.

“என்னால் வேறு என்ன விடயங்களைக் கற்க முடியும்?” அல்லது “நான் வேறு யாருடன் பேசலாம்?” போன்ற திறந்த கேள்விகளை எப்போதும் கேட்டுப்பாருங்கள்.

உங்களது புலனாய்வின் குறிப்பிட்ட சில விடயங்கள் நிச்சயமாக ஆய்வின் குறிக்கோளுக்கு கட்டளையிடுவதாக அமையலாம்.

நீங்கள் இறுதிநிலையில் இருந்தால், வளவசதியுள்ளவராகவும், பிடிவாதமும் சிறந்த விளையாட்டாக அமையலாம். ஆயினும், அரசாங்க தகவல்களை வௌிக்கொண்டு வருவதற்கு சில சட்டரீதியான கருவிகள் உள்ளன.

தகவல் தொடர்பான சட்டங்களை அணுகுதல்

125 க்கும் மேற்பட்ட நாடுகளில் அரச ஆவணங்களைத்  தேடுவதற்காக பொது மக்களுக்கு உரிமையளிக்கும் தகவல் சுதந்திர சட்டங்கள் (FOI) காணப்படுகின்றன. இந்த சட்டங்கள் அரச ஆவணங்களைக் கோருவதற்கும், மறுக்கப்பட்டால் அதற்காக மேன்முறையீடு செய்வதற்குமான உத்தியோகபூர்வ வழிமுறைகளைக் கொண்டுள்ளன.

இந்த வழிமுறை நீண்டதாகவும், வெறுப்பை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருந்தாலும் இறுதியில் பயனளிப்பதாக அமையும். எனினும், இந்த தகவல் சுதந்திர சட்டம் (FOI) பற்றி பழங்கதைகள் இருந்தாலும் முக்கியமாக ஊடகவியலாளர்களும், பிரஜைகளும் இதனைப் பயன்படுத்துகின்றனர்.

சர்வதேச புலனாய்வு ஊடகவியல் வலையமைப்பின் (GIJN) தகவல் சுதந்திர சட்டம் (FOI) தொடர்பான வளநிலையத்தில் அநேகமான நடைமுறை ஆலோசனைகள் மற்றும் நாடு ரீதியான தகவல்கள் காணப்படுகின்றன.

தகவல் சுதந்திர சட்டம் தொடர்பில் டசின் கணக்கான நிபுணர்களின் ஆலோசனைகளை நாம் மதிப்பாய்வு செய்து, அவர்களின் பல்வேறு உதவிக் குறிப்புகளை வடிகட்டியுள்ளோம்.

சர்வதேச புலனாய்வு ஊடக வலையமைப்பின் (GIJN) முக்கிய எட்டு குறிப்புகள்

  1. முன்கூட்டி திட்டமிடல்: உங்களுக்கு என்ன வேண்டும் என்பதைக் கண்டுபிடியுங்கள். அனுபவம் வாய்ந்த சகலரும் முன்கூட்டியே ஆராய்ச்சி செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றனர்.
  • சுற்றிவர நோண்டுதல்: வேறு வழிகளிலும் முயற்சிக்கவும். உத்தியோகபூர்வ தடத்திற்குள் நுழைவதற்கு முன்னதாக உத்தியோகபூர்வமற்ற வழிகளில் தகவல்களை கோரியும், மாற்று தகவல்முலங்களுக்கு அழுத்தம் பிரயோகித்தும் முயற்சிகளை செய்து பார்க்கவும்.
  • சதி: தகவல் எங்குள்ளது என்பதை அறிந்துகொள்ளுங்கள். நீங்கள் எதனைத் தேடுகிறீர்கள் என்பதைப்பற்றி மட்டுமல்லாது, அந்த தகவல்கள் அரசாங்கத்தினுள் எங்கு அமையப்பெற்றுள்ளது என்பது குறித்து அறிந்துகொள்வது முக்கியமாகும்.
  • தயார்படுத்தல்: சட்டம்பற்றி அறிந்துகொள்ளல். நீங்கள் பயன்படுத்தக்கூடிய அணுகல் முறை சட்டத்தைக் கற்றுக் கொள்ளுங்கள். உதாரணமாக, என்ன கட்டணங்கள் காணப்படுகின்றன? பதில்களுக்கான காலக்கெடு என்ன? உங்களுடைய உரிமைகள் எவை? என்பனவாகும்.
  • துல்லியமான கேள்விகளை முன்வைத்தல் (சரியான இடமறிந்து கேட்டல்). தௌிவான கேள்விகள் கேட்கப்படுவதன் பெறுமதியை அனைத்து நிபுணர்களும் வலியுறுத்தியுள்ளனர். தௌிவின்றி கேட்பதால் அவை உங்களுக்கு எதிராகத் திரும்பலாம். கவனம் செலுத்தப்படும் கேள்விகளைக் கேட்பதால் உங்கள் கோரிக்கையின் செயலாக்கத்தைை விரைவுபடுத்துவதற்கு உதவியாக அமையும். சில நிபுணர்கள் சிறிய கேள்விகளை வரிசைக் கிரமமாக முன்வைப்பதை விரும்புகின்றனர். “அனைத்து விடயங்களையும் தரவும்” என்ற வினவல்கள் அவற்றுக்குரிய இடத்தை சரியாக வகிக்கின்றன. ஆனால் அவை மிகப் பயனுள்ள அல்லது திறமையான கேள்விகள் அல்ல. “ஏன்” எனும் கேள்விகள் சரியாக செயற்பட மாட்டாது. நீங்கள் கொண்டுள்ள ஆர்வத்தின் அடிப்படையில் கேள்விகளை துல்லியமாக மொழிபெயர்க்கவும். “பணிப்பாளர் என்ன செய்கிறார்?” என கேட்பதற்குப் பதிலாக “தயவுசெய்து பணிப்பாளரின் பணிக்குரிய விபரங்களைத் தாருங்கள்” என கேட்கலாம்.
  • விளையாட்டை விளையாடிப் பாருங்கள்: பின்தொடர்வதன் மூலம் இலாபம் கிடைக்கின்றது. ஒரு கோரிக்கை செயல்வடிவம் பெறும்வரை வெறுமனே காத்திருக்க வேண்டாம். அதற்குப் பொறுப்பான உத்தியோகத்தர்களுடன் தொடர்பில் இருங்கள். முடியுமாயின் நட்புறவுடன் இருங்கள் பொறுமையும், விடாமுயற்சியும் அவசியம். ஒருவேளை இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளவும்.
  • மேன்முறையீடு: அதனைச் செய்யுங்கள். தகவல் மறுக்கப்படுவது பொதுவானதாகும். எனவே தயார் நிலையில் இருங்கள். நீங்கள் வழக்கு  (தொடர்வதாயினும்) தொடரவில்லை ஆயினும்,  மேன்முறையீடு செய்ய பரிந்துரைக்கப்படுகின்றது.
  • பிரசுரிக்கவும்: தயக்கம் காட்ட வேண்டாம். நீங்கள் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பாக முதலில் எழுதுங்கள், வெற்றியோ அல்லது தோல்வியோ, விளைவுகளைப் பற்றி எழுதுங்கள்.

திறந்த தரவுகள்

அரசாங்கங்கள் மேலும் மேலும் தமது தரவுகளை திறந்தவையாக மாற்றிவருகின்றன.

மாசடைவு, கைதுகள், சொத்து மதிப்பீடுகள், விதிமுறை மீறல்கள், உத்தியோகபூர்வ சம்பளம், பாடசாலைக்கான வருகைகள், போன்ற பல்வேறு அரசாங்க விடயங்களைத் தளங்களில் நீங்கள் தேடலாம் என்பதே இதன் பொருளாகும்.

தரவுகள் ஒன்லைன் மூலம் ஏற்கனவே வௌியிடப்படவில்லை எனில், அவற்றைக் கேளுங்கள். தரவுகள் தகவல் சுதந்திர சட்டத்திற்குள் (FOI) உள்வாங்கப்பட்டவையாகும்.

பணத்தைப் பின்தொடர்க

அரசாங்கங்கள் எவ்வாறு செலவிடுகின்றன என்பதை அறிந்துகொள்ள முற்படுவது உங்களுடைய தேடலில் ஒரு பகுதியாக இருக்கலாம். ஆனால் பல நாடுகளில் இந்த தகவலைத் திரட்டுவது சிரமமான ஒரு காரியமாகும்.

அரசாங்கத்தினால் வௌியிடப்படும் வரவு-செலவுத்திட்டத்தின் செலவீன ஏற்பாடுகள் பற்றிய ஆவணங்களையும், உண்மையான செலவினங்கள் பற்றிய ஆவணங்களையும் திரட்டுவது ஒரு ஆரம்பக்கட்ட  நடவடிக்கையாகும்.

இவை போதிய அளவான விபரங்களைக் கொண்டிருக்கலாம், அல்லது கொண்டிராமலும் இருக்கலாம். இன்னும் அதிக விடயங்களைத் தேடவேண்டியுள்ளதாக வைத்துக்கொள்வோம். இதன்பொருட்டு தகவல் சுதந்திர சட்டத்தின் (FOI) கீழ் கோரிக்கையொன்று விடுப்பது அவசியமாகும்.

அரசாங்க கொள்முதல்கள் மற்றும் ஒப்பந்தங்கள்  பற்றி நீங்கள் பின்தொடர்வதாயின், அவற்றில் ஆவணப்படுத்தக்கூடிய ஆவணத் தடமொன்று உள்ளது. பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக அரசாங்கங்கள் பொருட் கொள்வனவு மற்றும் ஒப்பந்தகாரர்களை அமர்த்துகின்றன. மேலும் சில குழுக்களால் இத்தகைய தகவல்கள் சேகரிக்கப்பட்டிருக்கலாம். உதாரணமாக, கிழக்கு ஐரோப்பாவில் இருந்து கிடைக்கின்ற ஒப்பந்தங்கள் பற்றிய தகவல்களை ELVIS அமைப்பு சேகரிக்கின்றது.

அரசாங்கங்களின் ஒப்பந்த ஆவணங்களை வௌியிடுமாறு சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்து வருகின்ற போதிலும், அவற்றின் வௌிப்பாடுகள் நாடு ரீதியாக பெருவாரியாக மாற்றமடைந்து காணப்படலாம். இதற்கு சமாந்திரமாக தகவல் சுதந்திர சட்டத்தின் (FOI) கீழ் கோரிக்கை விடுக்கப்படலாம்.

அரச செலவினங்கள் பற்றி புலனாய்வுகளில் அல்லது கணக்காய்வுகளில் அதிகாரிகள் ஈடுபட்டிருக்கலாம். அவர்களின் அறிக்கைகள் கிடைக்கக்கூடியவையாக இருக்கலாம்.

உங்களுடைய சொந்த தரவுத் தளத்தை உருவாக்குதல்

பணம் செலவழிக்கப்பட்டதா, மற்றும் எவ்வாறு செலவழிக்கப்பட்டது என்பதைப்பற்றி பிரஜைக் குழுக்கள் கையடக்கத் தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி தகவல்களை சேகரித்து வருகின்றமை அதிகரித்து வருகின்றது. உதாரணமாக, பாடசாலைகளுக்காக உண்மையில்  எத்தனை பாடநூல்கள் கொள்வனவு செய்யப்பட்டன என ஆராயலாம்.

இந்த கண்ணோத்தில், முன்கூட்டியே தகவல்களைத் திரட்டுவதானது, சிறந்த முடிவுகளைத் தரக்கூடும்.

சர்வதேச புலனாய்வு ஊடகவியல் வலையமைப்பு (GIJN)

Hot this week

Climate Change Justice Fellowship

IPS is offering an exceptional opportunity for two journalists...

How climate change impacts Sri Lanka’s dengue disease burden

Three-year-old Nethmi Sehansa* from Dematagoda, a suburb of Colombo,...

Death Behind Bars

By Aanya Wipulasena With overcrowding, more than double the capacity,...

Webinar – Uncounted: How to Cover Hard-to Quantity Climate Change Impacts Along the Bay of Bengal Coast

Earth Journalism Network is holding a webinar on those...

Rathugala adivasis struggle to preserve ‘bee honey harvesting’ amidst climate change

By Kamanthi Wickramasinghe For Danigala Mahabandalage Suda Wannila Aththo, the...

Topics

Climate Change Justice Fellowship

IPS is offering an exceptional opportunity for two journalists...

How climate change impacts Sri Lanka’s dengue disease burden

Three-year-old Nethmi Sehansa* from Dematagoda, a suburb of Colombo,...

Death Behind Bars

By Aanya Wipulasena With overcrowding, more than double the capacity,...

Rathugala adivasis struggle to preserve ‘bee honey harvesting’ amidst climate change

By Kamanthi Wickramasinghe For Danigala Mahabandalage Suda Wannila Aththo, the...

ගංවතුරේ පාවෙන ජා-ඇල ජීවිත

2024 වසරේ මාස හයක් තුළ ගංවතුර අවස්ථා තුනක්... ඔක්තෝබර් ගංවතුරෙන්...

CIR and SCOPE host workshop for women journalists on GBV

The Centre for Investigative Reporting (CIR) and Strengthening Social...

Related Articles

Popular Categories