Sunday, December 22, 2024
32 C
Colombo

எனக்குப் பிடித்த ஊடகவியல் சார் கருவிகள்: Craig Silverman ( BuzzFeed)

‘ஊடகவியலாளர்களுக்கு விருப்பமான கருவிகள்’ பற்றிய எங்கள் தொடருக்காக, BuzzFeed News இன் ஊடக ஆசிரியர் கிரேக் சில்வர்மேனிடம் (Craig Silverman)  நாங்கள் பேசினோம்.

இணையத்தின் இன்னொரு பக்கமான தவறான தகவல்கள் மற்றும் “போலிச் செய்திகள்” தொடர்பான உலகத்தை ஆராய்வதில் நிபுணரான சில்வர்மேன், அவ்வாறான செய்திகளை அடையாளம் கண்டுகொள்வது முதல், பிழையான ஊடக திரிபுபடுத்தல்களை கட்டவிழ்ப்பது வரை இது தொடர்பாக பல்வேறு நூல்களை எழுதியும் ஆசிரியராக பதிப்பித்தும் உள்ளார். அவற்றில் இலவசமாக  பயன்படுத்தக்கூடிய டிஜிட்டல் ஊடகங்களில் வரும் உள்ளடக்கத்தைச் சரிபார்ப்பதற்கான ஒரு உறுதியான வழிகாட்டி கையேடுதான்  Verification Handbook: A Definitive Guide to Verifying Digital Content for Emergency Coverage என்பதாகும்.  

அமெரிக்க  ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப்  தேர்தெடுக்கப்பட்ட 2016 தேர்தலுக்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு, சில்வர்மேன், மாசிடோனியாவில் (Macedonia) உள்ள ஒரு சிறிய நகரம் எவ்வாறு  அரசியல் நோக்கத்தோடு பரப்பப்படும்  தவறான தகவல்களின் தொழிற்சாலையாக மாறியது என்பதை வெளிப்படுத்தும் விதத்திலான புலனாய்வு அறிக்கையினை  வெளியிட்டிருந்தார். இது பின்னாட்களில்  பரவலாக மேற்கோள் காட்டப்படக்கூடிய ஒரு புலானய்வு விசாரணையாக மாறியது.

டிரம்பிற்கு சார்பான சுமார்  100 இணையதளங்களை இயக்கி, மாசிடோனிய இளைஞர்கள் கணிசமான எண்ணிக்கையிலான அமெரிக்க வாக்காளர்களின்  வாக்களிக்கும் முடிவில் செல்வாக்கு செலுத்தும் வகையில் தமது செயற்பாடுகளை  வெற்றிகரமாக முன்னெடுத்தனர்.

இந்த ஆண்டு, சில்வர்மேன் தனது கவனத்தை COVID-19 கொள்ளைநோய் தொற்றினை ஆதாரமாக கொண்டு சுரண்டும் வணிக மோசடியாளர்கள் தொடர்பில் தனது கவனத்தை திருப்பியுள்ளார்.

GIJN இனால் அண்மையில் நடாத்தப்பட்ட, COVID-19 கொள்ளை நோய்த்தொற்று தொடர்பாக பரப்பப்படும் தவறான தகவல்கள் குறித்து அறிக்கையிடும் இணையக் கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய அவர், ஊடகவியலாளர்கள் தாங்கள் OSINT எனப்படும் (திறந்த மூல நுண்ணறிவு/ open-source intelligence) எனப்படும் டிஜிட்டல் புலனாய்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும் – மேம்பட்ட கருவிகளை பயன்படுத்துவதற்கு முதலில் தங்கள் தேடல்கள் மற்றும் அவர்களின் கணணித்திரையில்  தென்படும் வலைப்பக்கங்களைப் பற்றி சிந்திக்குமாறு வலியுறுத்தினார்.

பேஸ்புக் பக்கங்கள், ஒரு குறிப்பிட்ட பக்கத்தை உருவாக்கியவர் பற்றிய ஏராளமான தகவல்களை வழங்க முடியும் என்று அவர் கூறினார். மிக முக்கியமாக கவனத்தில்கொள்ளப்பட  வேண்டியவை: பக்கம் தொடர்பில் வெளிப்படைத்தன்மை பெட்டி, தொடர்புடைய பக்க பரிந்துரைகள், பக்கப்பட்டி (sidebar items) உருப்படிகள், உட்பொதிக்கப்பட்ட URLகள் மற்றும் ஒரு குறிப்பிட்ட பக்கத்தில் பதிவேற்றப்பட்ட முந்தைய புகைப்படங்கள் என்பனவாகும்.

“விஷயம் என்னவென்றால், ஊடகவியலாளர்களுக்காக நிறைய கருவிகள் உருவாக்கப்படவில்லை, ஏனெனில் செய்தி அறைகளில் அதற்காக நிறைய பணம் இல்லை,” என்று அவர் GIJN இடம் கூறினார். “எனவே நான் பயன்படுத்தும் பல கருவிகள் சந்தைப்படுத்துபவர்கள் அல்லது தகவல் பாதுகாப்பு நபர்களுக்காக உருவாக்கப்பட்டவை, எனவே ஊடகவியலாளர்கள் நினைவில் கொள்ள வேண்டியது என்னவென்றால், பிற நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட கருவிகளைப் பயன்படுத்த நாம் அடிக்கடி கற்றுக் கொள்ள வேண்டியதுடன் அவற்றை நமது தேவைகளுக்காக  மாற்றுவதற்கான வழிமுறைகளையும் நாம் கைக்கொள்ள வேண்டும். .”

சில்வர்மேன் கூறுவது என்னவென்றால் , Facebook பக்கங்களில் உள்ள நிலையான அம்சங்கள், பக்க வெளிப்படைத்தன்மை பெட்டி- Page Transparency box (மேலே) மற்றும் தொடர்புடைய பக்கங்கள் பெட்டி- Related Pages box, போன்றவை தவறான தகவல் வலையமைப்புக்கள் தொடர்பில் புதிய திறப்புக்களுக்கு வழிகோலும் வகையில் அமையலாம் என்பதாகும்.  படம்: திரையைப்படம் பிடித்தல்/Screenshot

மே மாதம் CrowdTangle எனப்படும்  சமூக ஊடகங்களைக் கண்காணிக்கும்  கருவியினைக்கொண்டு  தவறான தகவல்களைப் பற்றிய புகார்களை புலனாய்வு செய்யும்போது சில்வர்மேன், அரிசோனாவில் உள்ள ஒரு தீவிர சிகிச்சைபிரிவில் பணிபுரியும் தாதிய ஊழியர் ஒருவரினால எழுதப்பட்டு பரவலாக Facebookஇல்  பகிரப்பட்ட பதிவினைக் கண்டார்.  அதில், எரிக் சர்டோரி, வைரஸ் என்பதில் ஒன்றும் உண்மையில்லை என்ற புரளி கூற்றுகளின் அடிப்படையில் இயங்கி வரும் குழுவினரால் அவரும் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் சக தாதிய ஊழியர்களும்  இணையவழி  துஷ்பிரயோகம் மற்றும் மரண அச்சுறுத்தல்களுக்கு இலக்காகிறார்கள் என்று குறிப்பிட்டார். மேலும் சர்தோரி ஒரு “நெருக்கடி நடிகர்” என்றும் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டார்.

அந்த நபர் உண்மையில் ஒரு தாதிய உத்தியோகத்தர்  என்பதை உறுதிப்படுத்த, சில்வர்மேன் இணையத்தில்  அவர் தொடர்பில் சில அடிப்படை விடயங்களை ஆராய்ந்தார். பின்னர் மெசஞ்சர் மூலமாக அவரை நேரடியாக அணுகி, தொலைபேசி பேட்டியைத் தொடர்ந்தார்.

அவரது இந்த செய்தியறிக்கையானது, அவரின் மிகப்பிரபலமான செய்திப்புலனாய்வுகளில் ஒன்றாக இல்லாதுவிடினும், சில்வர்மேன் தனிப்பட்ட முறையில் ட்ரோலிங் (trolling) செய்தல் எனப்படும் இணையரீதியான தொந்தரவுகள் தொடர்பில் மிகுந்த கரிசனை கொண்டிருந்தார்.

“என்னைப் பொறுத்தவரை, உலகின் மிகவும் நம்பகமான தொழில்களில் ஒன்றான தாதியத்தொழில்  இந்த வழியில் தாக்கப்பட்டது அதாவது, அவர்கள் இப்போது தங்கள் தனிப்பட்ட பாதுகாப்பில்  மிகுந்த அக்கறை கொள்ள வேண்டியிருப்பதுடன், மேலும் தவறான தகவல்களின் திட்டமிட்ட பரவலுக்கும் இலக்காகியுள்ளமை மிகவும் தொந்தரவாக இருந்தது” என்கிறார் சில்வர்மேன்.  “திடீரென்று, மக்கள் தாதியர்களை பொய்யர்கள் என்று அழைத்தனர். இது, ஒரு தாதியருக்கு, மிகவும்  கஷ்டமான ஓர் சூழ்நிலையாகும். அமெரிக்காவில், தொடர்ச்சியாக 17 ஆண்டுகளாக மிகவும் நம்பகமானதாக இருந்த ஒரு தொழில்முறை தாதிய நிபுணரின் கருத்தை [நியாயமற்ற முறையில்] மாற்றும் வகையில்  தவறான தகவல்களின் பாதிப்பை இக்கதை மிருதுவானதாக அமைத்தது என்று நான் நினைக்கிறேன்,”

டிஜிட்டல் விசாரணைகளுக்கான சில்வர்மேனின் சிறந்த கருவிகள்

ஊடகங்களை பிழையாக கையாளுதல் தொடர்பாக புலனாய்வு செய்வதற்கான சிறந்த கருவிகள்

CrowdTangle  

 “இப்பட்டியலின் முதலாவதாக CrowdTangle இருக்க வேண்டும். குறிப்பாக, CrowdTangle தேடல் வசதி, இது உண்மையில் இலவசம், ஆனால் நீங்கள் இதற்காக ஒரு இலவச கணக்கைப் தொடங்கியிருக்க வேண்டும். Instagram, Facebook மற்றும் Reddit போன்ற தளங்களில் மக்கள் எவ்வாறான விடயங்களைப் பகிர்கிறார்கள் என்பதைப் பார்க்க, நேரம், நாடு, மற்றும் பல [அளவுகோல்] வாரியாக வடிகட்டி தவல்களை பெறலாம். ஒரு விடயம் தொடர்பில் மிக முக்கியமான தேடல் கண்டுபிடிப்புக்களை செய்வதற்கு இது உதவியாக இருக்கும். இது மிகவும் நேரடியான ஒரு  தேடல் கருவியாகும். இது இதுவரை இருக்கும்  சிறந்த Facebook மற்றும் Twitter தளங்களுக்கான தேடல் கருவியாகும். இது 2016 இல் இந்த வடிவத்தில் இருந்திருந்தால்!

“நான் TweetDeck தளத்தையும் பரிந்துரைக்கிறேன், ஏனென்றால் நீங்கள் குறிப்பிட்ட ஹேஷ்டேக்குகள்/குறி சொற்கள் (hashtags) அல்லது அமைவிடங்களை அடிப்படையாகக்கொண்டு தகவல்களைப்பெற வடிகட்டிகளைப் பயன்படுத்தலாம்; இது ஒரு முக்கிய கண்காணிப்பு கருவியாகும். TweetDeck மற்றும் CrowdTangle இடையே, உங்கள் பகுதியில் ட்விட்டரில் செயற்படும் Facebook பயனர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தால், நீங்கள் ஒரு விஷயத்தில் நல்ல தெளிவான விளக்கத்தை பெறலாம்

DNSlytics

 “ஒரு இணையதளம் ஒரு பாரிய வலையமைப்பின் ஒரு பகுதியாக இருக்குமா என்பதை நீங்கள் கண்டுபிடிக்க முயற்சிக்கும்போது, DNSlytics அதை இயக்கும் நபரை அடையாளம் காண உதவுவதுடன், நீங்கள் ஆராயும் தளம் தனித்து இயங்குகிறதா இல்லையா என்பதையும் கண்டுபிடிக்க உதவுகிறது. இது குறிப்பாக நிதி சார்ந்து ஆராய்பவர்களுக்கு மிக உதவியாக இருக்கும், ஏனென்றால் அதே Google விளம்பர அடையாளமானது (ID) மற்ற தளங்களில் உள்ளதா என்பதை உங்களுக்குத் தெரிவிக்கும் பட்சத்தில் தொடர்ந்து தேடுதல் தொடர்பான மேலதிக  உந்துதலைக் கொடுக்கும்.

“இதில் ஒரு இலவச நிலை உள்ளது, ஆனால் அது மிகவும் விலை உயர்ந்தது அல்ல. அமெரிக்க டொலர் ($27) க்கு மாதாந்திர அனுமதியை பெறலாம். நீங்கள் ஒரு டொமைனில் (domain) தொடங்கலாம், மேலும் சில IP தகவல்களையும், அதே Google Analytics குறியீடு மற்றும் IP முகவரியைப் பகிரக்கூடிய பிற தளங்களைப் பற்றிய தகவலையும் நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும்.  ஒரு டொமைனை மற்ற தளங்களுடன் இணைப்பதற்கான சில அற்புதமான கருவிகள் இதில் உள்ளன. நீங்கள் AdSense ஐடி அல்லது டொமைனை உள்ளிடலாம், அது இணைக்கப்பட்ட இடங்களைக் காண்பிக்கும். அதைச் செய்வதற்காக  சில சேவைகள் உள்ளன, ஆனால் இது ஒரு நல்ல தரமான தரவுத்தளத்தைக் கொண்டிருப்பதை நான் காண்கிறேன்.”

 “Hoaxy 

 “Hoaxy எனப்படும் செயலியானது இந்தியானா பல்கலைக்கழகத்தின் ஒரு திட்டமாகும். நீங்கள் ட்விட்டர் உரையாடல்களை காட்சிப்படுத்தலாம். குறிப்பாக ஒரு ஹேஷ்டேக் அல்லது ஒரு குறிப்பிட்ட உரையாடல் எங்கிருந்து தொடங்கியது அல்லது அதில் மிகவும் செல்வாக்கு மிக்கவர்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறீர்கள் என்றால் அதற்கு , Hoaxy மிகவும் உதவியாக இருக்கும். இது பெரும்பாலும் ஆங்கில மொழி தரவுத்தளத்தைக் கொண்டுள்ளது, ஆனால் நீங்கள் அரபு, பங்களா, ஃபார்ஸி, சீனம், பிரஞ்சு உள்ளிட்ட சுமார் 10 மொழிகளில் தேடலாம். நிறைய ஊடகவியலாளர்களுக்கு  இதைப் பற்றி தெரியாது, மேலும் இது இவ்வாறான புலனாய்வு விசாரணைகளுக்கு மிக உதவியானவற்றில்  ஒன்றாக இருக்கும்.

{Credit} ட்வீட்ஸ் மற்றும் ஒரு செய்திக்கதையின் “பரவல் வலையமைப்பு ” புரளி பற்றிய பகுப்பாய்வு. ஸ்கிரீன்ஷாட்

விளம்பர உளவு கருவிகள்

“நீங்கள் குறிப்பாக தயாரிப்பு மோசடிகள் மற்றும் கொரோனா கொள்ளை நோய்தொற்று வைரஸ் தொடர்பான போலி குணப்படுத்துதல்களில் கவனம் செலுத்துகிறீர்கள் என்றால், நீங்கள் உண்மையில் விளம்பரத்தில் சில தெரிவுநிலைகளைக் கொண்டிருக்க வேண்டும், ஏனெனில் இது மோசடிகள் மற்றும் போலியான சிகிச்சைகளுக்கு வழிசெய்யும்  ஒரு பெரிய கருவியாக  உள்ளது. மக்கள் தளங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் பல இடங்களில் விளம்பரம் செய்கிறார்கள், எனவே அவர்களைக் கண்காணிக்க உங்களுக்கு தானியங்கி  உதவி தேவையாகும்.”

“ஒரு நல்ல கருவி Adbeat.com என்று அழைக்கப்படுகிறது. இது பெரும்பாலும் மோசடியான விளம்பரங்களில் சிலவற்றைப் கண்காணித்து அடையாளம் காணும், ஏனெனில் அவை தொடர்புடைய சந்தைப்படுத்துபவர்களை நோக்கியவை, ஆனால் அவை மிகவும் விலை உயர்ந்தவை. Adbeat மாதத்திற்கு சுமார் $250 வரை அறவிடுகிறது. WhatRunsWhere என்று ஒரு தளம் உள்ளது, இது முதற்குறிப்பிட்ட செலவுகளுக்கு ஒத்தது, ஆனால் ஒரு மாதத்திற்கு அதற்கான செலவு $300 ஆகும்.

GIJN இதுவரை வெளியிட்ட தவறான தகவல்கல் தொடர்பில் மேலும் படிக்க

6 Tools and 6 Techniques Reporters Can Use to Unmask the Actors behind COVID-19 Disinformation

White Noise, Damn Lies, Deep Fakes and What Really Scares Craig Silverman

Tailoring Fact-Checking Tools to Local Trends: Tips From India, Senegal, and Turkey

Tips on Investigating Disinformation Networks from BuzzFeed’s Craig Silverman

ரோவன் பில்ப்(Rowan Philp) GIJN இன் ஒரு ஊடகவியலாளர் ஆவார். ரோவன் முன்பு தென்னாப்பிரிக்காவின் சண்டே டைம்ஸ் (SundayTimes) பத்திரிகையில்  தலைமை ஊடகவியலாளராக  இருந்தார். ஒரு வெளிநாட்டு நிருபராக, உலகெங்கிலும் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து செய்திகள், அரசியல், ஊழல் மற்றும் மோதல்கள் குறித்து அறிக்கை அளித்துள்ளார்.

மூலம்

This story was originally published by the Global Investigative Journalism Network (GIJN)

Hot this week

CIR and SCOPE host workshop for women journalists on GBV

The Centre for Investigative Reporting (CIR) and Strengthening Social...

GBV and Women’s Political Participation – A Workshop for Women Journalists

‘Towards New and Inclusive Narratives,’ a workshop on GBV...

Panel discussion on ‘Election Disinformation, Online Hate & Women’s Political Representation’

The Center for Investigative reporting (CIR) will host a...

NPP sweeps the polls including the Tamil majority areas signalling a deep political shift in island politics

NPP receives a historic mandate countrywide including Tamil majority...

Topics

CIR and SCOPE host workshop for women journalists on GBV

The Centre for Investigative Reporting (CIR) and Strengthening Social...

GBV and Women’s Political Participation – A Workshop for Women Journalists

‘Towards New and Inclusive Narratives,’ a workshop on GBV...

Reporting on Non-Economic Loss and Damage from Environmental Disasters

𝐌𝐞𝐞𝐭 𝐭𝐡𝐞 𝐂𝐈𝐑 𝐅𝐞𝐥𝐥𝐨𝐰𝐬 Four Journalism Fellows under a special...

Women encounter a toxic internet that robs their voice- Shreen Saroor

Men and women experience the internet differently. Women experience...

Related Articles

Popular Categories