Wednesday, May 14, 2025
28.7 C
Colombo

அரசியல்வாதிகளை ஆராய்தல்

அரசியல்வாதி ஒருவரது நிதி நிலைமைகள் மற்றும் அரசியல் பதிவுகளைத் தோண்டி எடுப்பதற்குப் பல வழிகள் உள்ளன.

உத்தியோகபூர்வ ஆதாரங்கள் அந்த ​செயற்பாட்டை ஆரம்பிப்பதற்கு ஒரு சிறந்த இடமாகும். இருந்தபோதிலும், அவற்றில் அடிக்கடி வரம்புகள் ஏற்படாலம்,  நீங்கள் காணக்கூடியவை:

  1. வருமானம் மற்றும் சொத்து பிரகடனங்கள்;
  2. பிரசார நிதி வெளிப்பாடுகள்;
  3. நீதிமன்றப் பதிவுகள்;
  4. அலுவலக  நடவடிக்கைகள் பற்றிய பொதுவான பதிவுகள்.

இந்த ஆதாரம் உத்தியோகபூர்வ பதிவுகளைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்துவதுடன், நீங்கள் இணையத்தைப் பயன்படுத்துவீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஊடகத் தேடல்கள், பேச்சுகள் மற்றும் நேர்காணல்களைப் பற்றி அறிந்துகொள்வதற்கான ஒரு முக்கிய முறையாகும், அதே போல் அதிகாரிகளின் கருத்துகளை வெளிப்படுத்தும் கட்டுரைகளுக்கும் முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது, ஆனால் அனைத்துமே நிகழ்நிலையில் (Online) காணப்படுவதில்லை.

அகல்நிலையில் (Offline), மக்களுடன் பேசுவதற்கு முயற்சிக்கவும். குறிப்பு: எதிர்ப்பாளர்கள் மற்றும் விமர்சகர்கள் முக்கியமான தகவல்களின் சிறந்த ஆதாரங்களாக இருக்கலாம் (ஆனால் மிகவும் சந்தேகத்திற்குரியதாகும்).

கவனம் செலுத்தவேண்டிய சொத்துப் பிரகடனங்கள்
சுமார் 160 நாடுகளில் தெரிவுசெய்யப்பட்டுள்ள அரசியல்வாதிகள் தங்கள் வருமானம் மற்றும் நிதிச் சொத்துக்கள் தொடர்பில் சில தகவல்களை கட்டாயமாக வெளியிட வேண்டும்.

வெளிப்படுத்தப்பட்ட விபரங்கள் பெரும்பாலும் முழுமையடையாதவை ஆகும், ஆனால் கூர்மையான கண்கள் கொண்ட வாசகர்கள் இதுபோன்ற அவணங்களில் ஏராளமான கதைகளைக் கண்டறிந்துள்ளனர். குறிப்பு: உரிமைகோரல்களை யதார்த்தத்துடன் ஒப்பிடுவது ஒரு வளமான வாழ்விடத்தை உருவாக்கும்.

சொத்து வெளிப்பாடுகளின் ஒரு பங்கையும், மறைக்கப்பட்ட சொத்துக்களைத் தேடுவதற்குத் தேவையான சில கருவிகளையும் ஒன்றிணைத்து சர்வதேச புலனாய்வு ஊடகவியல் வலையமைப்பு (GIJN) ஆனது சில சிறந்த புலனாய்வுக் கதைகளைத் தொகுத்துள்ளது, இதில்  சொத்து வெளிப்படுத்தல்கள் பற்றிய GIJN இன் GIJN’s Resource on Asset Disclosure எனும் இணைப்பின் ஊடான ஆதாரத்தைப் பார்க்கவும்.

துரதிர்ஷ்டவசமாக ஒவ்வொரு நாட்டினதும் தனித்தனியான விபரங்கள் அடங்கிய பட்டியல் காணப்படவில்லை.  எனவே “உள்ளூர்” ஆய்வை மெற்கொள்ள வேண்டியுள்ளது.

இருப்பினும், சில நாடுகளில், ஊடகவியலாளர்கள் மற்றும் ஏனையவர்களால் உத்தியோகபூர்வ சொத்து வெளிப்படுத்தல்களின் பதிவுகளை மேம்படுத்துவதற்கும் அவற்றைப் பயன்படுத்துவதை எளிதாக்குவதற்கும் தரவுத்தளங்களை உருவாக்கியுள்ளனர்.

121 உள்ளூர் அரசியல்வாதிகளின் சொத்துக்கள் தொடர்பாக புலனாய்வு செய்ததன் அடிப்படையில், பொஸ்னியாவின் புலனாய்வு அறிக்கையிடலுக்கான மையம் Millionaires Among the Nominees என்ற கதையைத் தொகுத்து வௌியிட்டுள்ளது. அதன் ஊடகவியலாளர்கள் நிலப் பதிவுகளில் இருந்தும், வேட்பாளர்களின் சொத்துகள் மற்றும் சொத்துகள் பிரகடனம் என்பவற்றில்  இருந்தும் இந்த கதையைத் தொகுத்துள்ளனர். அவற்றை CIN தரவுத்தளத்தில்  “politicians’ assets.” என இணைத்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் இதுபற்றி DisclosureBot எனும் ஒரு புத்திசாதுரியமான கருவி உருவாக்கப்பட்டுள்ளது,  அரசியல்வாதிகள் தங்கள் பிரகடனங்கள் தொடர்பான படிவங்களைத் திருத்தும்போது அதுதொடர்பாக அந்த ட்வீட்களை அனுப்புகிறது.

தேசிய ரீதியாக பிரகடனப்படுத்தல் வழிமுறைகள் எவை, மற்றும் கிடைக்ககூடிய விபரங்கள் எவை என்பதைப் பற்றி அறிந்துகொள்ள, தேர்தல் சீர்திருத்தம் அல்லது வெளிப்படைத்தன்மைக்காக முன்நிற்கும் பிரஜைகள் குழுக்களைத் தேடிப்பிடியுங்கள். அத்தகைய பகிரங்க அரச வழக்குரைகளின் படி, பிரகடன விதிகளுக்கு உட்பட்டவர்கள் யார், என்ன தகவல்கள் கிடைக்கின்றன மற்றும் அதை எங்கு கண்டுபிடிப்பது என்பன நம்பகமான ஆதாரங்களாக இருக்கலாம்.

துரதிர்ஷ்டவசமாக, பல சட்டங்கள் தெளிவின்றியும், குறைவான அறிக்கையிடலுக்கும் அனுமதியளிக்கின்றன. உத்தியோகபூர்வ பிரகடனப்படுத்தல் படிவங்கள் பிரசுரிக்கப்பட்டதும், இந்த ஆவணங்கள் அடிப்படை தொடக்கப் புள்ளிகளாக சிறந்த முறையில் பார்க்கப்படுகின்றன என்பது பெரும்பாலும் தெளிவாகிறது.

இருப்பினும், வெளிப்படுத்தப்பட்டவற்றின் உண்மைத்தன்மையை சரிபார்த்தால், தவறுகளும், முரண்பாடுகளும் இருக்கலாம். வெளிப்படுத்தப்பட்ட விடயங்களை மாத்திரம் பார்க்காமல், வௌிப்படுத்தப்படாத விடயங்கள் எவை எனப் பார்க்கவும்.

கவனம் செலுத்தவேண்டிய வேறு விடயங்கள்

அரசியல்வாதிகளின் நிதி உரிமைகோரல்களின் உண்மைச் சரிபார்ப்பிற்கு உதவும் பிற தகவல்மூலங்கள் உள்ளன.

சட்டத் தரவுத்தளங்களைத் தேடினால் தொடர்புடைய சொத்துகள் பற்றிய தகவல்கள் கிடைக்கலாம். விவாகரத்து நடவடிக்கைகள், உயில்கள் மற்றும் காணித் தகராறுகளைச் சரிபார்க்கவும். (மேலும் கீழே காண்க.)

சொத்து உரிமை பதிவுகளும் பயனுள்ளவையாகஇருக்கும்.

அரசியல்வாதிகளது குடும்ப உறுப்பினர்களின் சமூக ஊடக கணக்குகள் சில சந்தர்ப்பங்களில் உதவிகரமாக இருந்துள்ளன.

அரசியல்வாதி ஒருவரது  வாழ்க்கைமுறையை மேலும் முறைசாரா முறையில் பார்ப்பது தகவல் திரட்டுவதற்கான மற்றுமொரு வழிமுறையாகும். ஆசிய பிராந்திய அரசியல்வாதி ஒருவர் அணியும் பல விலையுயர்ந்த கைக்கடிகாரங்களின் அணிவகுப்பு பற்றி கண்காணித்து தகவல் வௌியிட்டதை அடுத்து,  அவருடைய அளவுக்கதிகமான செலவினங்கள் பற்றிய தகவல்கள் அம்பலத்திற்கு வந்தன. மணிக்கட்டுடன் பல புகைப்படங்களை சேகரித்து ஊடகவியலாளர் ஒருவர் பிரசுரித்திருந்தமை குறிபபிடத்தக்கது.

பிரசார நிதி வெளிப்பாடுகள்

பிரசார பங்களிப்பு பதிவுகள், எவ்வளவு பணம் நன்கொடையாக வழங்கப்பட்டது என்பதை மட்டுமல்லாது, அதை யார் கொடுத்தார்கள் என்ற விடயத்தையும் வௌிப்படுத்துவதாக இருக்கும். அரசியல்வாதி ஒருவரது ஆதரவாளர்களைப் பற்றியும் அறிந்துகொள்ள முடிகின்றது.

சில நாடுகளில், வேட்பாளர்களின் பிரசாரங்களுக்கான பங்களிப்புகளை வெளியிடுவதை சட்டங்கள் கட்டாயமாக்கியுள்ளன.

ஜனநாயகம் மற்றும் தேர்தல் ஒத்துழைப்புக்கான சர்வதேச நிறுவனம் மூலம் அரசியல் நிதி தரவுத்தளம் (The Political Finance Database) ஊடாக தேசிய சூழலை வழங்க முடியும். ஆனால் அது தேசிய ரிதியான வெளிப்படுத்தல் தளங்களுக்கான இணைப்புகளை வழங்கவில்லை. தேர்தல் கண்காணிப்பு மற்றும் மதிப்பீடுகள் தொடர்பாக ஜனநாயக நிறுவனங்கள் மற்றும் மனித உரிமைகளுக்கான அலுவலகத்தால் வௌியிடப்பட்ட அறிக்கைகளி்ன்  பிரகாரம் பிரசார நிதியின் ஆட்சி தொடர்பாக, பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான ஐரோப்பிய அமைப்பு (The Organization for Security and Co-operation in Europe) விவரிக்கின்றது.

அமெரிக்காவைப் பொறுத்தவரையில், இந்த விபரங்கள் அடங்கிய தரவுத்தளம் ( database) கூட்டாட்சி தேர்தல் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் உள்ளது. opensecrets.org எனும் பதிலளிக்கக்கூடிய அரசியலுக்கான மையத்தின் மற்றும் FollowtheMoney.org ஆகிய இணையத்தள இணைப்புகள் பயனுள்ளவையாகும். பெரும்பாலும் ஒரு கட்டணச் சுவர் காணப்படும். அதுபற்றி politicalmoneyline.com எனும் இணைப்பின் ஊடாக அறிய முடியும். 

நன்கொடையாளர்களின் பெயரை அறிந்துகொள்வதன் மூலம், அவர்கள் யார் மற்றும் அவர்கள் ஏன் நன்கொடை வழங்கினர் என்ற மேலும் பல கேள்விகள் தோன்றலாம்.

இதனால் இந்த வழிப்பாதை நீண்டு செல்கிறது. பிரசாரத்திற்கான  பங்களிப்புகளை பரப்புரையாளர்களின் வெளிப்பாடுகளுடன் ஒப்பிடுவது ஒரு பாதையாகும். சில நாடுகளில், பரப்புரையாளர்கள் பதிவுசெய்து தங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் செலவினங்களைப் பற்றிய வெளிப்படுத்தல்களைை மேற்கொள்ள வேண்டும்.

உத்தியோகபூர்வ நடவடிக்கைகள் பற்றிய பொதுப் பதிவுகள்

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகள், மற்றும் தேர்ந்தெடுக்கப்படாத அரசியல்வாதிகள் கூட, படிப்படியாக தடங்களை விட்டுச் செல்கின்றனர்.

இவற்றை மந்தமான பின்வரும் இடங்களில் காணலாம்:

  • வர்த்தமானி அறிவித்தல் போன்ற உத்தியோகபூர்வ பதிவுள்ள வெளியீடுகள்;
  • சட்டமன்ற நடவடிக்கைகளின் பதிவுகள்;
  • வாக்களிப்பு சரிபார்த்தல்;
  • கூட்டங்களின் குறிப்புகள்;
  • முகவர் நிறுவனங்கால் பேணப்படும் ஆவணங்கள்;
  • முகவர் நிறுவன வெளியீடுகள்.

இந்த வளங்களின் தனித்தன்மைகள் நாட்டுக்கு நாடு வேறுபடும். அவை ஆன்லைனில் அல்லது இற்றைப்படுத்தப்பட்ட நிலையில் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆயினும்கூட, அவற்றுள் கணிசமானவை நிலையானவை, மற்றும் அதிகாரபூர்வமானவை ஆகும்.

குறிப்பு: நூலகர்களிடம் உதவி கேட்கலாம்; அவர்கள் அதிக விடயங்களை அறிந்திருப்பர்.

சில நாடுகளில், உத்தியோகபூர்வ பதிவுகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு பகுப்பாய்வு செய்யப்படுகின்றன. உதாரணமாக, OpenAustralia வைப் பார்க்கவும்.

நபர் ஒருவர் பணிபுரிந்த நிறுவனத்திற்கு தகவல் சுதந்திர (FOI) கோரிக்கையை தாக்கல் செய்வதால் ஏதேனும் மாற்றம் ஏற்படலாம்

நீதிமன்றப் பதிவுகள மற்றும் எனையவை

பின்வருவனவற்றை அறிய நீதிமன்றப் பதிவுகளைப் பரிசீலிக்கவும்:

  • நபர்கள் சம்பந்தப்பட்டிருக்கக்கூடிய வழக்கு;
  • வங்குரோத்து நிலை;
  • வரி பற்றுரிமைகள்;
  • விவாகரத்துப் பதிவுகள்;
  • குற்றவியல் குற்றச்சாட்டுகள்.
  • அங்கிருந்து, பார்க்க வேண்டிய ஏனைய இடங்களைப் பற்றி சிந்தியுங்கள்.
  • ரியல் எஸ்டேட் பங்குகள்;
  • இராணுவப் பதிவுகள்;
  • வாகன உரிமை;
  • விமானம் மற்றும் நீர் ஊர்திகள் (Watercraft)  உரிமை;
  • சொந்தமான அல்லது இயக்கப்படும் வணிகங்கள்;
  • தொழில்சார் உரிமங்கள்;
  • கல்வி சரிபார்த்தல்.

சர்வதேச தரவுத்தளங்கள்

அரசியல்வாதிகளின் தகவல்களை பெரும்பாலும் அவரவர்களின் நாடுகளிலேயே அறிய முடியும். அதிகமாக பயன்படுத்தப்படும்  சில சர்வதேச தரவுத்தளங்களும் காணப்படுகின்றன.

மை சொசையிட்டி (mySociety) என்ற ஐக்கிய இராஜ்ஜியத்தின் அரச சார்பற்ற நிறுவனத்தினால் தொகுக்கப்பட்ட உலகின் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் தகவல்களை EveryPolitician தரவுத்தளம் ஊடாக பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். அதில் 233 நாடுகளைச் சேர்ந்த 76,800 அரசியல்வாதிகள் பட்டியலிடப்பட்டுள்ளதுடன், அவர்களது மிகவும் அடிப்படையான விடயங்களே அதில் தரப்பட்டுள்ளன. சில வேளைகளில் அவற்றுள் சமூக ஊடக முகவரிகளும், தொடர்புத் தகவல்களும் வழங்கப்பட்டுள்ளன.

அரச நிதிப் பிரசாரம் தொடர்பிலான தேசிய கொள்கைகளை அறிந்து கொள்வதற்காக, ஜனநாயகம் மற்றும் தேர்தல ஒத்துழைப்புகளுக்கான சர்வதேச நிறுவனத்தின் அரசியல் நிதித் தரவுத்தளத்தை (Political Finance Database) பார்வையிடவும். 43 அடிப்படைக் கேள்விகளுக்கான பதில்களை அடிப்படையாக்கொண்டு, 180 க்கும் அதிகமான நாடுகளின் அரசியல் நிதிக் கொள்கைகள் அதில் விவரிக்கப்பட்டுள்ளன. சுவீடன் நாட்டைத் தளமாகக் கொண்ட குழுவொன்று நான்கு விரிவான வகைப்படுத்தல்களை மேற்கொண்டுள்ளது. அ) தனிப்பட்ட வருமானத்தின் மீதான தடைகள் மற்றும் வரையறைகள், ஆ) பொது நிதி, இ) விதிமுறைகள், மற்றும் ஈ) செலவினம் மற்றும் அறிக்கையிடுதல்,மேற்பார்வை மற்றும் தடைகள். இந்த தரவுத்தளம் தேசிய நிகழ்நிலை (Online) வளங்களுடன் இணைக்கப்படவில்லை.

திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் ஊழல் அறிக்கையிடல் திட்டத்தின் (OCCRP) அணுசரணையில் உருவாக்கப்பட்டுள்ள Investigative Dashboard Database தரவுத்தளமானது, பல கூட்டு நிறுவனங்கள் உட்பட, உலகம் பூராகவும் இருந்து பெறப்பட்ட தரவு மூலங்களில் இருந்து திரட்டப்பட்ட மில்லியன் கணக்கான தகவல்களைக் கொண்டுள்ளது.

அரசியல் ரீதியாக பகிரங்கப்படுத்தப்படும் நபர்களுக்காக (PEPs)”விடா முயற்சியுடன்” ஆராய்ச்சியில் ஈடுபடும் நிதி நிறுவனங்கள் மற்றும் எனைய வணிகங்களுக்கான வர்த்தக சேவைகள் காணப்படுகின்றன. இத்தகைய சந்தா சேவைகளில்  Dow Jones Risk & Compliance  நிறுவனமும் அடங்குகின்றது.

சர்வதேச புலனாய்வு ஊடகவியல் வலையமைப்பு (GIJN)

Hot this week

Fellowship for in-depth reporting on South Asia, South Asian diaspora [Worldwide]

Journalists interested in covering South Asia or the South...

Journalism award honors youth reporting [Worldwide]

News outlets around the world that collaborate with young...

Sir Harry Evans Global Fellowship in Investigative Journalism open [Worldwide]

Early-career journalists around the world are eligible for an...

From War to Weather: Tamil Women in Sri Lanka Confront a New Crisis

The island nation's north saw the last phase of...

Warmer oceans, acidification endanger Sri Lanka’s maritime heritage

By Malaka Rodrigo   Sri Lanka’s waters are home to over...

Topics

Fellowship for in-depth reporting on South Asia, South Asian diaspora [Worldwide]

Journalists interested in covering South Asia or the South...

Journalism award honors youth reporting [Worldwide]

News outlets around the world that collaborate with young...

Sir Harry Evans Global Fellowship in Investigative Journalism open [Worldwide]

Early-career journalists around the world are eligible for an...

Warmer oceans, acidification endanger Sri Lanka’s maritime heritage

By Malaka Rodrigo   Sri Lanka’s waters are home to over...

Sweltering conditions put young lives and learning at risk

By Malaka Rodrigo   Although the annual school sports events concluded...

The disastrous floods of Kalutara

 BY Buddhika Samaraweera Climate change-related weather events prove to be...

Climate Change Justice Fellowship

IPS is offering an exceptional opportunity for two journalists...

Related Articles

Popular Categories