Thursday, April 18, 2024
HomeEventsஊடக எழுத்தறிவு அடிப்படைகள் - மெய்நிகர் பயிற்சித் தொடர்

ஊடக எழுத்தறிவு அடிப்படைகள் – மெய்நிகர் பயிற்சித் தொடர்

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்துடன் (UNDP) இணைந்து இலங்கை புலனாய்வு ஊடகவியல் மையம் (CIR) நடாத்தும் ஊடக எழுத்தறிவு அடிப்படைகள் தொடர்பான மெய்நிகர் பயிற்சித் தொடரின் முதலாவது தமிழ்மொழி மூல பயிற்சி செயலமர்வு சனிக்கிழமை (ஜூலை 31) ஆரம்பமாகவுள்ளது.

நாட்டிற்குள் தகவல் அறிவை மேம்படுத்துவதற்கான ஊடக எழுத்தறிவு தொடர்பான அடிப்படை பயிற்சிகள் பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்படுவதுடன், ஊடக எழுத்தறிவை மேம்படுத்திக் கொள்வதற்கான கருவிகள் மற்றும் ஊடகவியலாளர் சமூகம் தொடர்பான புரிந்துணர்வு ஆகியன ஏற்படும் வகையில் கற்பித்தல் முன்னெடுக்கப்படவுள்ளது. ஊடக ஒருமைப்பாட்டுக் கருவிகள் மற்றும் ஊடக நெறிமுறைகள் குறித்து ஊடக உள்ளடக்க உருவாக்குநர்கள் மற்றும் ஊடகப் பாவனையாளர்களை வலுவூட்டும் வகையில் இந்த பயிற்சித்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்கள், ஊடகக் கற்கையில் ஈடுபடுகின்றவர்கள், பிரஜை ஊடகவியலாளர்கள், ஊடக கல்வியியலாளர்கள், வலைப்பதிவர்கள், காணொளி மூலம் கதைகூறுபவர்கள் மற்றும் ஊடகப் பாவனையாளர்கள் என 300 பேருக்கு இந்த பயிற்சித் திட்டத்தின் ஊடாக பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.

ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணைப்பின் ஊடாக தரப்பட்டுள்ள படிவத்தைப் பூர்த்தி செய்து தங்களை பதிவுசெய்துகொள்ள முடியும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments