Wednesday, September 11, 2024
HomeOpportunitiesஊடகவியலாளர்களுக்கான பேஸ்புக் பயிற்சி நெறிக்காக விண்ணப்பியுங்கள்

ஊடகவியலாளர்களுக்கான பேஸ்புக் பயிற்சி நெறிக்காக விண்ணப்பியுங்கள்

ஊடகவியலாளர்களை வளப்படுத்தும் நோக்கில் நடத்தப்படவுள்ள “பேஸ்புக்கின் ஊடகவியலாளர்களுக்கான அடிப்படைகள்” (Facebook Foundations for Journalists) பயிற்சி நெறிக்காக விண்ணப்பியுங்கள்.

நாடளாவிய ரீதியில் ஊடகவியலாளர்களிடம் இருந்து “பேஸ்புக்கின் ஊடகவியலாளர்களுக்கான அடிப்படைகள்” (Facebook Foundations for Journalists) மூன்று வார பயிற்சி நெறிக்கான விண்ணப்பங்களை  இலங்கை புலனாய்வு அறிக்கையிடல் மையம் (CIR) கோருகின்றது.

ஒன்லைன் மூலம் நடத்தப்படும் இந்த பயிற்சி நெறி வாரத்திற்கு தலா மூன்று மணித்தியால அமர்வினைக் கொண்டிருக்கும்.

பேஸ்புக்கில் ஊடகவியாலாளல்களுக்கான சிறந்த நடைமுறைகள், பேஸ்புக் சமூக நியமங்கள், ஊடகவியலாளர்களுக்கான ஒன்லைன் பாதுகாப்பு மற்றும் பேஸ்புக்கில் சமூகங்களை உருவாக்குதல் ஆகிய விடயங்கள் இந்த பயிற்சி நெறியில் உள்ளடங்குகின்றன. இந்த பயிற்சி தொடர்பான சிறந்த தௌிவைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளிலும் தனித்தனியே பயிற்சி நெறி முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த மூன்று வாரகால ஒன்லைன் பயிற்சி நெறியை முழுமையாக நிறைவு செய்தவர்களுக்கு பங்குபற்றல் சான்றிதழுடன் ஒன்லைன் பங்குபற்றலுக்கான செலவுகளுக்கான தொடர்பாடல் கொடுப்பனவும் வழங்கப்படும்.

“பேஸ்புக்கின் ஊடகவியலாளர்களுக்கான அடிப்படைகள்” (Facebook Foundations for Journalists) பயிற்சி நெறியை  பேஸ்புக் ஊடகவியல் திட்டத்துடன் (Facebook Journalism Project) இணைந்து CIR இலங்கையில் முன்னெடுக்கின்றது.

ஆர்வமுள்ள ஊடகவியலாளர்கள் பின்வரும் ஒன்லைன் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யவும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments