Friday, April 19, 2024
HomeResource Centerநிபுணர்களிடமிருந்து சுகாதாரப் பாதுகாப்பை புலனாய்வு செய்வதற்கான சிறந்த 10 உதவிக்குறிப்புகள்

நிபுணர்களிடமிருந்து சுகாதாரப் பாதுகாப்பை புலனாய்வு செய்வதற்கான சிறந்த 10 உதவிக்குறிப்புகள்

COVID-19 தொற்றுநோய் உயிர்ப்புள்ள வாழ்க்கை நினைவுச்சட்டகங்களில்  முன்னொருபோதும் இல்லாத ஒரு பொது சுகாதார நெருக்கடியை உருவாக்கியுள்ளது. இது எல்லா இடங்களிலும் வாசகர்களை தடுப்பூசி சம்பந்தப்பட்ட செய்திகளின்  அடிமைகளாக மாற்றியுள்ளது மட்டுமின்றி வழமையாக நீதிமன்ற வழக்குகளை பின்தொடரும் ஊடகவியலாளர்களைக்கூட மருத்துவ சோதனை முடிவுகள்  சம்பந்தமாக அறிக்கையிடும் சுகாதார செய்தியாளர்களாகவும்  மாற்றியுள்ளது.

கடந்த பல மாதங்களாக உலகின் மிகப்பெரிய பேசுபொருள் விடயமாக கருதப்பட்டது கொரோனா வைரஸ் பரவலும், சுகாதாரம்,  பொதுநலம்  மற்றும் உலகப் பொருளாதாரம் ஆகியவற்றில் அது ஏற்படுத்திய தாக்கம் என்பனவையாகும். ஊடகவியலாளர்கள் இவ்வாறான சடுதியான மாற்றங்களை பார்வையாளர்களுக்குத் தெரியப்படுத்துவதன் நிமிர்த்தம் அவற்றை உடனுக்குடன் பின்தொடர வேண்டியுள்ளது.

ஆனால் GIJN  இது சம்பந்தமாக உங்களுக்கு  உதவ உள்ளது. இன்று நாம் சுகாதாரப் பாதுகாப்பு குறித்து புலானய்வு செய்வதற்காக  விரிவான புதிய வழிகாட்டியொன்றினை  வெளியிடுகிறோம்.

சுகாதார விவகாரங்களை புலனாய்வு செய்து அறிக்கையிடல் மற்றும் அவற்றை விவரணப்படுத்துவதில் நிபுணத்துவம் பெற்ற ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான ரீ-செக் ((Re-Check))இன் நிறுவனர்களான கேத்தரின் ரிவா ( Catherine Riva ) மற்றும் செரீனா டினாரி (Serena Tinari )ஆகியோரால் எழுதப்பட்ட இந்த வழிகாட்டியுடன் கூடிய பயிற்சிநெறியானது, ஊடகவியலாளர்களுக்கு COVID-19 தொற்றுநோய், தடுப்பூசி மற்றும் மருந்தாக்கல் அபிவிருத்தி,  பெருநிறுவனங்களின் செல்வாக்கு மற்றும் ஆதாய முரண் சம்பந்தமாக மேலும் ஆழமாக புலனாய்வு செய்வதற்கு மிகவும் உதவியாக உள்ளது.

சுகாதாரம்  மற்றும் மருத்துவத்தில் ஆழமாக புலனாய்வு செய்ய உதவும் GIJN இன் புதிய வழிகாட்டி.

உலகளாவிய பெருந்தொற்றுநோய் தொடர்பில் நாடுகளின்  தேசிய சுகாதார அமைப்புகளின் எதிர்வினை  மற்றும் புதிய மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்து அதிகமான பத்திரிகையாளர்கள் தொடர்ந்து அறிக்கையிட்டுக்கொண்டிருக்கும் இவ்வேளையில், இது ஒரு அத்தியாவசிய கருவிகளை உள்ளடக்கிய உதவிக்குறிப்புகளின்  தொகுப்பாகும்.

நீங்கள் சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பாக அறிக்கையிடும்  ஒரு பத்திரிகையாளராக இருந்தால், இதைப் படிப்பது இந்த ஆண்டு நீங்கள் முதலீடு செய்யும் சிறந்த இரண்டு மணிநேரங்களாக இருக்கலாம். வழிகாட்டி- PDF ஐ இங்கே பதிவிறக்கவும்.

இவ்வழிகாட்டியின் ஆசிரியர்களே கூறியது போல்: “சுகாதார பாதுகாப்பு பற்றி விசாரிப்பது சிக்கலானது மற்றும் சவாலானது. இந்தத் துறையில் ஊடக அறிக்கையிடல்  என்பது நீண்ட ஆவணங்களைப் படிப்பது மற்றும் மருத்துவ வாசகங்களை நன்கு அறிவது. எண்கள் மற்றும் புள்ளிவிவரங்கள் கூட விளையாட்டின் ஒரு பகுதியாகும். கற்றல் செயல்முறையின் வளைவு செங்குத்தானதாக இருந்தாலும், புலனாய்வு பத்திரிகைத்துறையின் இந்த சிறப்புப் பகுதியில் உங்களுக்கு செய்திகளுக்கு எப்போதும் பஞ்சம் இருக்காது,”

மருத்துவத்தில் திட்டமிட்டு பரப்பப்படும்  தவறான தகவல்கள் தொடர்பான உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, GIJN “உடல்நலம் மற்றும் மருத்துவத்தை புலனாய்வு செய்தல்: சிறந்த அறிக்கையிடலுக்கான உத்திகள் மற்றும் உதவிக்குறிப்புகள்” என்ற தலைப்பில் இரு ஆசிரியர்களையும் உள்ளடக்கிய ஒரு இலவச இணைய வழியிலான கருத்துரையினை நவம்பர் 21, சனிக்கிழமையன்று ஒழுங்குசெய்துள்ளது. டிசம்பர் 3, வியாழக்கிழமை அன்று  “COVID-19 தடுப்பூசி பந்தயத்தின் பின்னால்” என்ற இரண்டாவது இணைய வழியிலான கருத்துரையினை  நாங்கள் நடத்த உள்ளோம். தயவுசெய்து இவ்விணைப்பினுடாக எங்களுடன் இணையுங்கள்.

இதற்கிடையில், ஒரு முன்னோட்ட அறிமுகமாக வழிகாட்டியிலிருந்து நாங்கள் தேர்த்தெடுத்த பத்து குறிப்புகளை  இங்கே :

1.            மிகையாக எளிமையாக்கபடுத்தல்  தொடர்பில் கவனம் கொள்க

தற்போதைய உலகளாவிய சூழ்நிலையில் எந்த ஒரு விடயமும் நேரடியானதாகவோ எளிமையாகவோ இல்லை. தொழில்துறையால் செல்வாக்குக்குட்படுத்தப்பட்ட அல்லது அரசாங்கங்களால் வெளியிடப்பட்ட தகவல்கள் குறித்து குறிப்பாக சந்தேகம் கொள்ளுங்கள். சான்றுகளை சுயாதீனமாக மதிப்பிடுவதற்கு நேரம் ஒதுக்குங்கள், தகவல்களை குறுக்கு விசாரணை செய்தல், ஆதாய முரண்கள்(Conflict of Interests) மற்றும் சிக்கலான நிகழ்ச்சி நிரல்கள் சுகாதாரப் பாதுகாப்புத் துறையில் எங்கும் காணப்படுகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள். நாடுகளை ஒப்பிடுவது கடினமான பயிற்சியாகவும், படுகுழிக்குள் தள்ளக்கூடிய மோசமான ஒரு  ஒப்பீடாகவும் இருக்கலாம்.  ஏனெனில் நாடுகளுக்கிடையிலான வேறுபாடுகள் மற்றும் குழப்பமான காரணிகள் இதற்கான பாத்திரத்தை வகிக்கக்கூடும்.

2.            மாதிரிகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்

ஆரம்பகால COVID-19 மாதிரிகள் போதுமான அளவு  தரவு கிடைக்காத நேரத்தில் உருவாக்கப்பட்டன. மேலும், தொற்றுநோய்கள் நேரியல் அல்லாதவை மற்றும் குழப்பமானவையும் கூட, எந்த மாதிரியும் எதிர்காலத்தில்  என்ன நடக்கப் போகிறது என்பதை முன்கூட்டியே எதிர்வுகூறுவதனை மேலும் கடினமாக்க கூடியவை.

3.            கிடைக்கக்கூடிய சிறந்த விஞ்ஞான ஆதாரங்களை  மட்டும்  கருத்தில் கொள்க 

உலகளாவிய COVID-19 நெருக்கடி, ஒரு பெரிய அளவிலான ஆராய்ச்சி கட்;டமைப்பை உருவாக்கும் அதேவேளை மிகவும் சடுதியாக அவற்றின் முடிவுகள்  வெளியிடப்படுகின்றன. இந்த ஆய்வுகளில்  பெரும்பாலானவை வழக்கமான மதிப்பாய்வு செயல்முறைக்கு உட்படுத்தப்படுவதில்லை. தற்போது  மருத்துவ ஆராய்ச்சி உலகில் பெருமளவிலான  சத்தம் உள்ளது,  மேலும் இந்தத் துறையில் நிபுணத்துவம் பெறாத ஒரு ஊடகவியலாளர் ஒருவரிற்கு   அதைப் புரிந்துகொள்வது மிகக்கடினம்.

ஒரு மருத்துவ ஆய்வைப் பார்க்கும்போது, அதன் தராதரமானது (தங்கத்தரம்- gold standard) என்பது ஒரு சீரற்ற கட்டுப்பாட்டு சோதனையாகும். இவை எப்போதும் கிடைக்காமல் போகலாம் என்றாலும், பிற ஆய்வு வடிவங்களின் கட்டுப்பாடுகள் பற்றி மிகவும்  எச்சரிக்கையாக இருங்கள்.

படம்: மார்செல்லே லோ (Marcelle Louw)

4.            கருத்தியல் சூழலை வழங்குதல்

எந்தவொரு எண்ணும் கருத்தியல் சூழலில் வைத்தால் மட்டுமே அர்த்தமுள்ளதாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக, ஒரு COVID-19 சம்பந்தப்பட்ட புள்ளிவிவரம் வழமைக்கு மாறானது அல்லது அசாதாரணமானது என்று கருத முன், வைரஸ் தொற்றுநோய்களின் பின்னணியில் ஒரு சாதாரண அளவீடு என்னவாக இருக்கும்,  நோயாளியின் ஆரோக்கியத்திற்கு சவாலாகும்  பக்க விளைவுகள் என்ன அல்லது எந்தவொரு மருத்துவமனை அமைப்பிலும் நோய் அறிகுறி பொதுவாக எவ்வாறு குறிப்பிடப்படுகிறது என்று அறிந்து வைத்திருத்தல் மிக  அவசியமாகும்.

ஒரு நிகழ்வு உண்மையில் இதற்கு முன் பார்த்ததில்லை, அல்லது சுகாதாரப் பாதுகாப்பு உலகில் பொதுவானதா என்பதை மதிப்பிடுவதற்கான ஒரே வழி கருத்தியல் சார் சூழலை வழங்குவதாகும்.

5.            பரந்த அளவிலான மக்களின் அறிவைப் பெறுங்கள், ஆனால் அவர்களின் தகவல்களை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துங்கள்

சுகாதாரப் பாதுகாப்பை உள்ளடக்கும் போது நீங்கள் பயன்படுத்தக்கூடிய பலவிதமான சாத்தியமான மூலங்கள்  உள்ளன: மருத்துவ வழங்குநர்கள், கட்டுப்பாட்டாளர்கள், சோதனை ஆராய்ச்சி, நோயாளி குழுக்கள், மருந்துத்தொழில் துறையின்  உள்நாட்டு பிரதிநிதிகள்  மற்றும் பல. வெவ்வேறு நிபுணர்களிடம் பேசுங்கள்: உதாரணமாக, COVID-19 சம்பந்தமாக  தொற்றுநோயியல் நிபுணர்கள் மற்றும் தடுப்பூசி பாதுகாப்பு தொற்றுநோயியல் நிபுணர்களுடன் கலந்துரையாடுவது நல்லது,  ஏனெனில் அவர்கள் முக்கிய உலகளாவிய சுகாதார நிகழ்வுகளின் பரவல் மற்றும் நிர்வாகத்தில் நிபுணத்துவம் பெற்றிருக்கிறார்கள்.

ஆனால் எச்சரிக்கையுடன் ஒரு வார்த்தை: நாங்கள் “நிபுணர்களை” நம்புகிறோம். அவர்களின் சுயவிபரக்கோவையின் நீளத்தை பொருத்து, அவர்களின் அறிக்கைகளுடன் அதிக நம்பகத்தன்மையையும் நாம் இணைக்கிறோம். மேலும்  நாம் உள்ளுணர்வாக நம்பும் சில தொழில் தலைவர்கள் பெரும்பாலும், அதே நேரத்தில், சம்பந்தப்பட்ட  தொழில்துறை ,  அரசாங்கம் மற்றும் உலக சுகாதார அமைப்பு போன்ற சர்வதேச அமைப்புகளுக்கான ஆலோசகர்களாக இருக்கிறார்கள், எனவே ஆதாய முரண்களையும் சற்று கவனியுங்கள்.

6.            மிகைப்படுத்தல் என்னும் மாயையில் விழ வேண்டாம்

ஊடகவியலாளர்கள் செய்யும் பொதுவான தவறு என்னவெனில் பலவீனமான விஞ்ஞான ஆதாரங்களை அடிப்படையாகக்கொண்டு  தவறான முடிவுகளை எடுப்பதாகும். இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில்  ஊடகங்கள் மற்றும் அரசாங்கங்களினால்  வெளியிடப்படும்  செய்திகள் உணர்வலைகளினால் மெருகூட்டப்பட்டவை  என்பதை மறந்துவிடாதீர்கள்; புலனாய்வு பத்திரிகையாளர்கள் இது தொடர்பாக மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும்.

இதே விஷயத்தில், சுகாதாரத்துறை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள கூற்றுக்கள் பற்றிய ஊடக அறிக்கைகள் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.  அவை குறைபாடாக இருக்கலாம் அவை பெரும்பாலும் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டிருக்காது இருக்கலாம். மேலும் பெரும்பாலான நேரம் அவை அரசு மற்றும் தொழில்துறை செய்தி வெளியீடுகளை நம்பியுள்ளன. ஆராய்ச்சி தொடர்பாக முன்வைக்கப்படும் கூற்றுக்களை சுயாதீனமாக மதிப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

      7. மருத்துவ சோதனைகள், அதன் வெவ்வேறு நிலைகள் மற்றும் முடிவுகள் கூறுவது என்ன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்

மருத்துவ பரிசோதனைகளின் பல்வேறுபட்ட  நிலைகள்  எமக்கு  என்ன சொல்ல  முடியும் – மற்றும் சொல்ல முடியாது என்பதை செய்தியாளர்கள் சரிவரப்புரிந்து கொள்ள வேண்டும். கல்விசார் பத்திரிகை கட்டுரைகள் வழியாக அல்லாமல் பத்திரிகை வெளியீடுகள் மூலமாக அறிவிக்கப்பட்ட விஞ்ஞான தரவு குறித்த அறிவிப்புகளில் மிகுந்த எச்சரிக்கையாக இருங்கள். தடுப்பூசிகளைப் பற்றி அறியப்பட்டவற்றின் வரையறைகளை  புரிந்துகொள்ள உங்கள் பார்வையாளர்களுக்கு உதவுங்கள். மருத்துவ பரிசோதனை தரவுத்தளங்களைத் தேடும்போது, ஆய்வு வடிவமைப்பு, சோதனையில் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை, அவர்களை சேர்ப்பதற்கும் விலக்குவதற்குமான  காரணங்கள் மற்றும் முடிவுகள் வெளியிடப்பட்டிருந்தால் அவற்றை உன்னிப்பாகப் பாருங்கள். கேரி ஸ்விட்சர் (Gary Schwitzer)தனது அத்தியாவசிய வழிகாட்டியான மருத்துவ ஆராய்ச்சி அறிக்கையிடலில் கூறிய இந்த கருத்தை நினைவில் கொள்ளுங்கள : “எல்லா ஆய்வுகளும் சமமானவை அல்ல. அப்படி அவை இருப்பதைப் போல அறிக்கையிடவும் கூடாது,”

படம்: மார்செல்லே லோ (Marcelle Louw)

      8. “கெட்ட நபர்” விவரிப்பு குறித்து கேள்வி எழுப்புங்கள்

இந்தத் துறையில்இ நீங்கள் வழக்கமான “கெட்ட நபரை” தேடுகிறீர்களானால், நீங்கள் தவறாக விளங்கிக்கொள்ளுவது மட்டுமின்றி   – இதனால் தவறாக சித்திரிப்பதாகவும் முடியலாம். இந்தத் துறையில் நீங்கள் மேலும் அனுபவத்தைப் பெற்றவுடன், இந்த பார்வை மிகவும் எளிமையானது என்பதை நீங்கள் உணர்வீர்கள். நீங்கள் உண்மையிலேயே ஆழமாக ஆராயும்போது நோயாளிகளுக்கு பக்கபலமாக இருப்பதாக காட்டிக்கொள்ளும்  வெளிப்படைத்தன்மை குறைந்தவர்கள் கூட அவர்களுடைய சொந்த, பெரும்பாலும் சிக்கலான நிகழ்ச்சி நிரல்களைக் கொண்டிருக்கலாம் என்பது தெளிவாகத் தெரியும்.

      9. பெரிய‘ஆட்டக்கார வீரர்களையும்’ கேள்வி கேளுங்கள்

மருந்துத் துறையின் செல்வாக்கு பரவலாக உள்ளது, மேலும் மருத்துவ சந்தைப்படுத்தல் மேலும் உயர்ந்து சென்று கொண்டிருக்கிறது. மருந்துகள் எவ்வளவு உதவிகரமாக இருக்கின்றன,  எந்த மருந்துகள்  எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதையும் உள்ளடக்கி கேட்க வேண்டிய கேள்விகள் பல உள்ளன. மருத்துவ பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட சான்றுகள் உட்பட அனைத்தையும் கேள்வி கேளுங்கள்.

பயோமெடிக்கல் (biomedical ) ஆய்வு சஞ்சிகைகள் பயன்படுத்தப்படும் வணிக மாதிரி என்பது விளம்பரங்களின் மூலம்  அதன்  உள்ளடக்கத்தின்  நடுநிலைத்தன்மையை  பாதிக்கக்கூடும் என்பதாகும், மேலும் சில பத்திரிகைகள் “மறுபதிப்புகளை” நம்பியுள்ளன. மேலும்  வெளியிடப்பட்ட ஆய்வுகளின் மொத்தமாக அச்சிடப்பட்ட பிரதிகளுக்கான  முழுச் செலவு அதே தொழில்துறையால் செலுத்தப்பட்டு சந்தைப்படுத்தல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

     10. சிவப்பு சமிக்சைகளுக்கான வேட்டை

ஒரு குறிப்பிட்ட மருந்து அல்லது தடுப்பூசியின் ஒப்புதல் செயல்முறையின் அனைத்து விவரங்களையும் கவனமாக உற்றுப் பாருங்கள். தரநிலைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை மதிப்பிடுங்கள். அவை  ஏதேனும் நிறுவனத்தின் அனுசரணையுடன்  சலுகைகளைப் பெற்றிருந்தால் – உதாரணமாக, மருந்து கட்டுப்பாட்டாளர்கள் நிறுவனத்தின் முக்கிய தராதாரத்தின் இலக்கை நிவர்த்தி செய்வதில் அதன் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு மருந்துகளின் செயல்திறனைக் காட்டாது  மாறாக “மாற்று  இறுதிப் புள்ளியை” surrogate endpoint) அல்லது“ மாற்று விளைவினை ” (surrogate outcome) அடிப்படையாக கொண்டு அனுமதித்திருக்கலாம்.

பக்க விளைவுகளைச் சரிபார்த்து ஒப்புதல் செயல்முறையை கேள்விக்குள்ளாக்குங்கள். வழிகாட்டியில் விவரிக்கப்பட்டுள்ள ஒரு சம்பவத்தின் பிரகாரம் , விஞ்ஞானி ஒருவர் தோடம்பழங்களைக் கொண்ட பொதியை யோனி வலையாக ( vaginal mesh) பிரகடனப்படுத்தி அங்கீகாரம்  பெற முடிந்தது: இது செயல்முறைகள் எப்போதும் ஒருங்கே செயற்படாது என்பதற்கான ஒரு சான்று.

மூலம்

This story was originally published by the Global Investigative Journalism Network (GIJN)

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments