Monday, September 9, 2024
HomeResource Centerஅரசியல்வாதிகள் யாருக்கு சொந்தமானவர்கள்?

அரசியல்வாதிகள் யாருக்கு சொந்தமானவர்கள்?

ஒரு போட்டி, வேட்பாளர், அல்லது அளவீடு பற்றிய கதையில் பணியாற்றிக் கொண்டிருக்கையில், அது உண்மையில் என்ன கதை என்பதைக் கண்டறிவதில் அடிக்கடி சவாலுக்கு உள்ளாக நேரிடும்.

பின்வரும் வினாக்களுக்கு விடை காண்பதன் மூலம் நீங்கள் கதையை ஆரம்பிக்கலாம்:

  • மிகப் பெரிய பங்களிப்பாளர்கள் யார்?
  • என்ன வகையான பங்களிப்பாளர்களாக அவர்கள் உள்ளனர்? அவர்கள் சிறியளவிலான நன்கொடையாளர்களாக (தனிப்பட்டவர்கள்) அல்லது பெரு நிறுவனங்களாக இருக்கலாம். தொழிற்சங்கங்கள், வர்த்தக குழுக்கள், வேறு துறைகளைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம்.
  • ஒரு தனிப்பட்ட தொழிற்துறையிலிருந்து (உதாரணமாக மருந்துப்பொருள் விநியோகஸ்தர்கள் அல்லது கப்பல்துறை)  அல்லது வேறு நபர்களிடம் இருந்து பணம் வருகின்றதா?
  • பணம் எங்கிருந்து வருகின்றது? பெரும்பாலும் வேட்பாளர்களது தொகுதிக்கு வௌியில் இருந்து பணம் கிடைக்கின்றதா?

குதிரையின் வாயிலிருந்து

அரசியலுக்காக பணம் எங்கிருந்து கிடைக்கின்றது என்பதை நீங்கள் உணர முடியுமாயின், அதுவே சில நேர்காணல்களுக்கான சந்தர்ப்பமாக அமையும். சில சாத்தியமான காரணிகள் உள்ளடங்கலாக:

  • வேட்பாளர்கள் அல்லது அவர்களின் பிரசார உத்தியோகத்தர்கள்.
  • முன்னணி வேட்பாளர்களுக்கு என சில குறிப்பிடத்தக்க நன்கொடையாளர்கள்.
  • அரசியல் விஞ்ஞானிகள், அவர்கள் தேசிய ரீதியாக பிரபல்யம் பெற்றவர்களா அல்லது உள்ளூர் அரசியலில் நிபுணர்களா என்பன.
  • நடைமுறை விவகாரங்கள் பற்றிய ஒரு தொலைநோக்கினை கொண்டுள்ள முன்னாள் அரசியல்வாதிகள்.

தனித்திறன்கள் மற்றும் பிற விடயங்களை அறிந்துகொள்ளல்

அரசியல் நன்கொடைகள் பெரும்பாலும் எதிர்பாராத வழிகளில் பெருக்கெடுப்பவையாகும். நன்கொடையாளர்களிடம் இருந்து அரசியல்வாதிகளுக்கு மட்டுமன்றி அலுவலக உத்தியோகத்தர்கள் இடையேயும் பணம் புரள்கின்றது. அரசியல்வாதியின் வீட்டில் இருந்தே பணம் வரவேண்டிய அவசியமில்லை. அது சர்வதேசம் உட்பட வேறு எங்கிருந்தும் வரமுடியும்.

  • அரசியல்வாதிகள் தங்களுக்காக ஓடக்கூடிய துணைகள் மற்றும இரண்டாம் பிடில்கள் மூலமாக ஒருவருக்கொருவர் பணத்தைப் பரிமாற்றிக் கொள்கின்றனர். இது ஒருபோதும் ஒரு பகிரங்க ஆதரவாக இருக்காது. இதுபோன்ற கண்ணுக்குப் புலப்படாத அநேகமானவை இருக்கின்றன.
  • ஒரு அரசியல்வாதியின் நிலைகளுக்கு ஏற்றவாறு பங்களிப்புகளும் பெரும்பாலும் அதற்கேற்ற வடிவங்களில் காணப்படும். அவர்களுக்கு இடையிலான ஆர்வங்கள் எவ்வாறு இ​ணைந்துகொள்கின்றன என்பதை அவதானியுங்கள். குறிப்பாக சகாதார அமைச்சு மருந்துப் பொருட்களுடனும், விவசாயம் பூச்சிக்கொல்லி வர்த்தகத்துடனும், விதி அபிவிருத்தி நிர்மாண நிறுவனங்களுடனும் இணைகின்றன.
  • நேரடி ஆதாரமொன்று இல்லாமல், ஒரு அரசியல்வாதி வாக்குகளை வாங்குவதற்காக நன்கொடையைப் பெற்றார் என்று நீங்கள் கூறமுடியாது. அது தொடர்புபடும் விதத்தைக் காண்பிப்தற்கான ஒன்றாகும். முடிவுகளை எடுப்பது என்பது மற்றொன்றாகும்.

கதைகூறல் குறிப்புகள்

“அரசியலில் பணம்” எனும் கதைகள் டொலர்கள் மற்றும் ரூஃபியாக்களுடன் இணைந்ததாகும். எனினும், மக்கள் – அரசியல்வாதிகள், பெரு நன்கொடையாளர்கள், தொகுதிகள்- உள்ளடங்கலாக கட்டியெழுப்பப்படும் அரசியல் கதையின் இன்றியமையாத ஒரு பகுதியாகும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

நினைவில் கொள்ளவேண்டிய ஏனைய விடயங்கள்.

  • எண்களுக்கு உயிர்கொடுப்பதாயின், அவற்றை விளக்கமளிக்கும் வகையில் வேறுபடுத்திக் கொள்க: வேட்பாளர் ஒருவர் ஒரு நாளைக்கு எவ்வளவு தொகையை திரட்டுகிறார்?ஒரு ஒரு நாளுக்குரிய பிரசார செலவினம் எவ்வளவு (செலவுகளில் இருந்து)?
  • அறிக்கையிடலை எளிமையாக வைத்திருங்கள். புள்ளிவிபரங்கள் மூலம் பொதுமக்களை குழப்பத்தில் ஆழ்த்தவேண்டாம். பத்திகளில் கூறப்படும் எண்களை அனைவராலும் உள்வாங்குவது கடினமாகும். அதனால் தான் புல்லட் (bullet) பட்டியல்கள் சிறப்பாக அமைகின்றன.

சர்வதேச புலனாய்வு ஊடகவில் வலையமைப்பு (GIJN)

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments