Saturday, April 27, 2024
HomeResource Centerகூட்டு நிறுவனங்கள் மற்றும் அவற்றின் உரிமையாளர்களை ஆராய்தல்

கூட்டு நிறுவனங்கள் மற்றும் அவற்றின் உரிமையாளர்களை ஆராய்தல்

கூட்டு நிறுவனங்கள் தொடர்பில் அறிவதற்காக புலனாய்வில்  ஈடுபடுதலானது புலனாய்வாளர்கள் எதிர்நோக்கும் மிகக் கடினமான ஒரு சவாலாகும், அது துறைசார்ந்தவராயினும் சரி அல்லது தன்னார்வலராயினும் சரி.  துரதிர்ஷ்டவசமாக, உண்மையான உரிமையாளர் பெயர் சட்டரீதியாக மறைக்கப்பட்டிருக்கலாம். நிறுவனங்கள் தொடர்பாக ஆராய்ச்சி செய்வதற்குப் பல வழிகள் காணப்படுகின்றமை ஓர் நற்செய்தியாகும். பின்வருவன உள்ளடங்கலாக:

  • இலவச தரவுத்தளங்கள்
  • சந்தாமுறையிலான தரவுத்தளங்கள்
  • உத்தியோகபூர்வ பதிவுகள்
  • நிறுவன இணையத்தளங்கள்
  • நீதிமன்றப் பதிவுகள்
  • இணையத்தள தேடுதல்கள்

சர்வதேச இலவச வளங்கள்

நிறுவனங்களால் அரசாங்கத்திற்குக் கட்டாயம் வழங்கப்பட வேண்டிய அறிக்கைகளை சில இலாப நோக்கமற்ற குழுக்கள் சேகரிக்கின்றன. இத்தகைய உத்தியோகபூர்வ நிறுவனங்களின் காப்பகங்கள் “பதிவுகள்” என அடிக்கடி அழைக்கப்படுவதுண்டு. சிறந்த தொகுப்புகள் பின்வருமாரு:

OpenCorporates என்பது 150 மில்லியனுக்கும் அதிகமான நிறுவனங்களின் தகவலடங்கிய ஒரு திறந்த தரவு மூலமாகும். தேசிய வர்த்தகப் பதிவுகளில் இருந்து இந்த தரவு மூலங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இத் தரவுத்தளமானது ஒரு நிறுவனத்தின் நிறுவனமாக இணைக்கப்பட்ட திகதி, அதன் பதிவு செய்யப்பட்ட முகவரிகள், பணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகளின் பெயர்கள் போன்ற விடயங்களை வழங்கமுடியும். இது நிறுவனங்களுக்கு இடையேயான தொடர்புகளைக் காட்டலாம். இது கூட்டுநிறுவன  நிகழ்வுகளின் தரவுத்தளத்தையும் உருவாக்குகின்றது. 

திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் ஊழல் அறிக்கையிடல் திட்டத்தின் Organized Crime and Corruption Reporting Project அணுசரணையில் உருவாக்கப்பட்டுள்ள புலனாய்வு விபரப்பலகையில் Investigative Dashboard மில்லியன் கணக்கான தேவைப்படும் விடயங்கள், கூட்டு நிறுவனத் தகவல்கள் அடங்கலாக, உலகம் பூராகவும் இருந்து திரட்டப்பட்டுள்ளன. ஆரம்ப ஆவணங்களை இங்கு தேடவும். (மேலதிக தேடலுக்காக “search” என்பதை கிளிக் செய்யுங்கள்) அனைத்து தரவுத்தளங்களிலும் பொது மக்களால் தேட முடியாது என்றாலும், பெருமளவு தகவல்கள் காணப்படுகின்றன.

சர்வதேச புலனாய்வு ஊடகவியலாளர்களின் கூட்டமைப்பான International Consortium of Investigative Journalists (ICIJ) னால் உருவாக்கப்பட்டுள்ள Offshore Leaks Database எனும் தரவுத்தளத்தில், கிட்டத்தட்ட 785,000 கடல் கடந்த நிறுவனங்கள் மற்றும் நிதியங்களின் ஆவணக் கசிவுகளை அடிப்படையாகக் கொண்ட கூட்டுநிறுவனங்களின் தகவல்கள் காணப்படுகின்றன. பெயர், நிறுவனங்கள், மற்றும் முகவரிகள் தொடர்புபட்டுள்ள கடல் கடந்த உரிமையாளர்கள் மற்றும் அவர்களின் நாடுகள், அல்லது அதிகார வரம்புகள் என்பவற்றை இந்த தரவுத்தளத்தில் கண்டறியலாம்.  ICIJ இன் காப்பகத்திலுள்ள கதைகளில் Panama Papers  வாசிப்புக்கு சிறந்த அம்சங்களைக் கொண்டுள்ளது. அத்தோடு  Beyond Panama: Unlocking The World’s Secrecy Jurisdictions என்பதையும் வாசியுங்கள். இந்த தரவுத்தளத்தைப் பயன்படுத்துவதற்குரிய பின்வரும் மூன்று குறிப்புகள் மீது கவனம் செலுத்துங்கள்.

சிறந்த பின்புல தகவல்களுக்காக, உலக வங்கியின் STAR என்ற (திருடப்பட்ட சொத்துகளை மீட்பதற்கான முயற்சி) திட்டத்தில், 23 நாடுகளினது உண்மையான உரிமையாளர்கள் மற்றும் தொடர்புடைய ஏனைய தரப்புகளை அடையாளம் காண்பதற்கான நடைமுறைகளைக் காட்டும் வழிகாட்டல்கள் beneficial ownership guides எனும் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. 

வர்த்தக தகவல்மூலங்கள்

கூட்டு நிறுவனங்கள் பற்றிய பல பிரத்தியேக தரவுகள் காணப்படுவதுடன், அவற்றில் மிகச் சிறந்த தரவுகளைப் பெற்றுக்கொள்வதற்காக சந்தா செலுத்துவது அவசியமாகின்றது. எனினும், ஆவணக் காப்பகங்களில் இலவச பிரவேசம் காணப்படலாம்.

மிக நீண்ட ஸ்திரமான தரவுத்தளத்தை D&B Hoovers கொண்டுள்ளது. இது  ஐக்கிய அமெரிக்கா மற்றும் வௌிநாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் பற்றிய கோர்வையான தகவல்கள் அடங்கி ஒரு இலவச இணையத்தளமாகும். அதிக தகவல்கொண்ட சந்தா அடிப்படையிலான சேவையை Nexis தளம் கொண்டுள்ளது.

ArachnysORBISBureau van DijkBloombergPrivCo (அமெரிக்க தனியார் வர்த்த நிறுவனங்களுக்கான தகவல்மூலம்), Thomson Reuters, LexisNexis, மற்றும் DueDil என்பன ஏனைய பிரதான சந்தா அடிப்படையிலான தரவுத் தளங்களாகும். வளர்ந்து வரும நாடுகள் மீது  Sayari எனும் தளம் அதிக கவனம் செலுத்தியுள்ளது.

வளங்களை வரிசைக் கிரமமான யோசனையைப் பெற்றுக்கொள்வதற்காக Harvard University Business School போன்ற பல்கலைக்கழக வணிக பாடசாலைகளின் நூலக இணைய சேவைகளைப் பயன்படுத்துக.

உத்தியோகபூர்வ அரச பதிவுகள்

அநேகமான அரசாங்கங்கள் கூட்டுத்தாபனங்களைப் பதிவுசெய்ய நிர்பந்திக்கின்றன. ஆனால் பெரும்பாலானவை குறைந்த தகவல் மற்றும் தவறான தகவல்களுடனேயே பதிவுசெய்யப்படுகின்றன. அவற்றைக் கண்டறிவதற்காக பின்வரும் தளங்களைப் பார்வையிடுக.

  • Commercial-Register என்பது சுவிஸ் ஆராய்ச்சியாளர்களால் பராமரிக்கப்படும் தேசிய ரீதியான பதிவுகளைக் கொண்ட நிறுவனங்களின் பட்டியலாகும்.
  • ஐக்கிய இராஜ்ஜியத்தின் நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் உள்துறை நிறுவனத்தினால் பராமரிக்கப்படும் Another list  எனும்  உலகளாவிய பதிவுகளைக் கொண்ட தளமாகும்.

சில பாரியளவிலான பொருளாதார வளங்களுக்கான இணைப்புகள்

ஐக்கிய அமெரிக்கா

பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவினால் (Securities and Exchange Commission) அதன் EDGAR முறையின் கீழ் கட்டளைக்குரிய கோப்புகள் உட்பட தகவல்கள் பேணப்படுகின்றன. இதற்கான நிகழ்நிலை (Online) முறையில் நிறுவனத்தின் பதிவு ஆவணங்கள், திட்ட விளக்கங்கள், மற்றும் நிதிநிலை அறிக்கைகள் அடங்கலான காலக்கிரம அறிக்கைகள் என்பவற்றைப் பெறமுடியும். நிறுவனத்தினுடைய வணிகம் தொடர்பான முழுமையான பார்வை மற்றும் கணக்காய்வு அறிக்கைகள் உள்ளிட்ட நிதி நிலைமை அறிக்கைகள் என பத்தாயிரம் வருடாந்த அறிக்கைகளுடன் ஆரம்பமாகின்றது. EDGAR முறையின் கீழ் அமெரிக்காவில் காலக்கிரம  அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டிய வௌிநாட்டு் நிறுவனங்களின் வருடாந்த அறிக்கைகளின் பட்டியல்கள் International Registered and Reporting Companies எனும் தளத்தில் பேணப்படுகின்றன.

பல வணிகங்கள் டெலாவேர் மாநிலத்திலேயே ஆரம்பிக்கப்படுகின்றன. எனவே அங்கிருந்து Delaware Division of Corporations என்ற இணைப்பின் ஊடாக ஆரம்பிப்பது சிறந்ததாகும். உண்மையான உரிமையாளர்கள் பற்றிய தரவுகள் திரட்டப்படவில்லை, எவ்வாறாயினும், “நிறுவன ஸ்தாபக முகவர்கள்” நியமனப் பணிப்பாளர்களாக செயற்பட முடியும். (இதுபற்றி ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பின் விளக்கத்தைப் பார்க்க).

மாநில செயலாளர்களின் தேசிய சங்கத்தின் National Association of Secretaries of State இணையத்தளம் ஊடாக மாநிலத்தின் அனைத்து இணையத்தளங்களுக்கமான பிரவேசத்தைப் பெறலாம். (அதில் இணைத்தளமொன்றினுள் பிரவேசித்ததும், கீழ்ப் பகுதியில் காணப்படும் “online business services” என்ற இணைப்பை பார்க்கவும்.)

அங்கு கலிபோர்னிய கூட்டு நிறுவனத் தேடலுக்கான California corporation search மற்றும் நியூயோர்க்கின் கூட்டு நிறுவன மற்றும் வணிக உரிமையாளர்களுக்கான தரவுத்தளம் Corporation and Business Entity Database. ஆகியவற்றுக்கான இணைய இணைப்புகளையும் காணலாம்.

அமெரிக்க அரச ஒப்பந்தக்காரர்கள் தொடர்பான தகவல்களை இங்கு தேடலாம்.

ஐக்கிய இராஜ்ஜியம்

Companies House எனும் இணையத்தளத்தின் மூலம் பின்வரும் சில விடயங்கள் உள்ளடங்கலாக தகவல்களைப் பெறமுடியும்:

  • நிறுவனத் தகவல்கள், உதாரணமாக, பதிவுசெய்யப்பட்ட முகவரி மற்றும் நிறுவனமாக பதிவு செய்துகொண்ட திகதி என்பவை
  • தற்போதைய மற்றும் பதவி விலகிய அதிகாரிகள்
  • ஆவணங்களின் நிழற்படங்கள்
  • அடைமானக் கட்டணத் தரவுகள்
  • முன்னைய நிறுவனப் பெயர்கள்
  • வங்குரோத்து நிலை பற்றிய தகவல்

கனடா

SEDAR என்பது கனடாவின் பொது நிறுவனத் தாக்கல்களுக்கான தளமாகும். இது 1997 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது..

பிரான்ஸ்

Infogreffe நிறுவனங்களின் அடிப்படைத் தகவல்களை பிரெஞ்சு மொழியில் இலவசமாகத் தருகின்றது.

ஜெர்மனி

Company Register இலவசமாக தேடல்களுக்கு அனுமதியளிக்கின்றது. பல்வேறு மொழிகளில் தேடல் மேற்கொள்ள முடியும் என்பதுடன், சில ஆவணங்களுக்கு பணம் அறவிடப்படுகின்றது.

சீனா

“தேசிய கைத்தொழில் கடன் தகவலுக்கான பொது முறைமை” யின் கீழ் இங்கு சீன நிறுவனங்கள் பற்றிய தகவல்களுக்குள் பிரவேசிக்கலாம்.  இதன்மூலம் பெற்றுக்கொள்ளக்கூடிய தகவல்களின் விளக்கத்தை China Checkup இணையத்தளம் மூலம் பெற்றுக் கொள்ளமுடியும்.

வேறு தகவல்மூலங்கள்

துறைசார் ஆய்வாளர்களிடம் இருந்து முன்வைக்கப்பட்டுள்ள சில தொடர்ச்சியான ஆலோசனைகள் வருமாரு:

  • நிறுவன அதிகாரிகள் மற்றும் பணிப்பாளர்கள் தொடர்பில் தேடுங்கள். 2017 இல் நடைபெற்ற சர்வதேச புலனாய்வு ஊடகவியல் வலையமைப்பு (GIJN) மாநாட்டில் முன்னாள் ஊழியர்களைத் தேடுதல் (Finding Former Employees) தொடர்பாக வௌியிடப்பட்ட வழிமுறைகளைப் பார்க்கவும்.
  • ஊடக அறிக்கைகளைப் பார்க்கின்றபோது, வணிக மற்றும் விசேட செய்தியாளர் மாநாடுகள் மீது கவனம் செலுத்தவும். அவர்களைக் கண்டுபிடிப்பதற்காக, Ulrich’s Periodicals Directory அல்லது வணிக வௌியீடுகள் போன்ற சந்தா ​சேவைகளைப் பெறுவதற்கு முயற்சிக்கவும்.
  • நிறுவன முகவரி மற்றும் தொலைப்பேசி இலக்கத்தை தேடவும்.
  • கூட்டு நிறுவனங்களின் மனித நேயம் என்பது சில வேளைகளில் தகவலுக்கான பின்கதவாக இருக்கலாம். அமெரிக்காவின்  CitizenAudit, புரோபப்ளிகாவின் Nonprofit Explorer, மற்றும் Guidestar ஆகியனவும், பிரித்தானியாவின், Open Charities மற்றும் CharityBase  போன்ற இணையத்தளங்களில் இதற்கான விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
  • மாசடைதல் அல்லது ஆட்கடத்தல் தொடர்பாக ஆர்வம் காட்டும் குழுக்களுடன், குறிப்பாக அரச சார்பற்ற அமைப்புகளுடன் தொடர்புகொண்டு அவர்களிடம் இருக்கின்ற தகவல்கள் மீது கவனம் செலுத்துங்கள்.
  • விதிமீறல்களைத் தொடர்வதற்கான Violation Tracker என்ற அமெரிக்கத் தேடல்பொறி மூலம் அமெரிக்க கூட்டு நிறுவனங்களின் விதிமீறல்கள் குறித்து தேடிப்பார்க்க உதவும்.

மேலும் கவனம் செலுத்தவேண்டிய உத்தியோகபூர்வ இடங்கள்

அரசாங்கங்களுக்கும், வர்த்தகத் துறைக்கும் இடையிலான ஒவ்வொரு வெட்டுப்புள்ளியிலும் ஒரு பொதுவான பதிவு உருவாகலாம்.

அரசாங்கத்துடனான நிறுவனமொன்றின் தொடர்புகள் குறித்து எங்கு கவனம் செலுத்தவேண்டும் என்பதற்கான பரிந்துரைகள் தரப்பட்டுள்ளன:

  • காணி உரிமை – பெயர்கள் மற்றும் விளக்கங்கள்
  • காணி அபிவிருத்தி – கட்டடங்கள், மண்டலமாக்கல், விசேட அனுமதிகள்.
  • சூழல் ஒழுங்குவிதிகள் – வௌியேற்றும் அனுமதிகள், அமிழ்வு அறிக்கைகள், அமுலாக்கல் செயற்பாடுகள்.
  • தொழிலாளர் ஒழுங்குவிதிகள் – துறைசார் பதிவுகள், தொழிலாளர் பிணக்குகள்.
  • நீதிமன்றப் பதிவுகள் – சார்பு மற்றும் எதிர் சட்ட நடவடிக்கைகள்.
  • நிதி ஒழுங்குவிதிகள் – தாக்கல்கள் அல்லது அமுலாக்கல்.
  • புலமைச் சொத்துக்கள் – காப்புரிமைகள் மற்றும் வர்த்தகநாமம் பதிவுகள்.
  • அரசாங்க ஒப்பந்தங்கள் – ஏலங்கள் மற்றும் விருதுகள் தொடர்பான பதிவுகள்.
  • அரசாங்க மானியங்கள் – கட்டணங்கள் தொடர்பான பதிவுகள்.
  • அரசியல் நன்கொடைகள் – அதிகாரிகளுக்கான பங்களிப்புகள்
  • ஆதரவு திரட்டல் பதிவுகள் – செல்வாக்கு செலுத்தல் பற்றிய வௌிப்பாடுகள்.

நிறுவனம் எந்த துறையில் இயங்குகின்றது என்பதை சிந்தித்துப் பார்த்தால், பொருத்தமான தகவல்களைக் கண்டறிவதற்கு அது ஏதுவாக இருக்கலாம்.

எத்தகைய சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகள் வர்த்தகத்தின் மீது தாக்கம் செலுத்துகின்றன, என்ன வகையான ஆவணங்களை உள்வாங்கப்பட்டுள்ளன போன்ற விடயங்கள் மீது கவனம் செலுத்துக. இந்த தொடர்புகளில் உள்ளூர் மற்றும் வர்த்தக வகைகளின் அடிப்படையில் மாற்றங்கள் ஏற்படலாம், எனினும் அவை தலைப்புகளை வழங்கக்கூடும்.

சில உத்தியோகபூர்வ நடவடிக்கைகள், அல்லது உத்தியோகபூர்வ நடவடிக்கைகளுக்கான கோரிக்கைகள் அரசாங்கப் பதிவுகள் தொடர்பான  வௌியீடுகளில் பிரதிபலிக்கக்கூடும். ஐரோப்பாவில் எனின், Open Gazettes எனும் இணையத்தளத்தைப் பார்வையிடவும். அதில் ஐரோப்பிய வர்த்தமானி அறிவித்தல்கள் அதிக பிரசன்னத்தைக் கொண்டுள்ளன.

சர்வதேச புலனாய்வு ஊடகவியல் வலையமைப்பு (GIJN)

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments