Tuesday, April 23, 2024
HomeResource CenterGIJN கருவிப்பெட்டி: CrowdTangle, Echosec, மற்றும் சமூக ஊடகங்களில் தேடல்

GIJN கருவிப்பெட்டி: CrowdTangle, Echosec, மற்றும் சமூக ஊடகங்களில் தேடல்

GIJN கருவிப்பெட்டிக்கு வரவேற்கிறோம், இதில் புலனாய்வுப் ஊடகவியலாளர்களுக்கான சமீபத்திய உதவிக்குறிப்புகள் மற்றும் கருவிகளை நாங்கள் ஆய்வு செய்ய உள்ளோம். இந்தப் பதிப்பில், சமூக ஊடகங்களில் பயனர்கள் பதிவிடும் வீடியோ அல்லது புகைப்படங்கள் போன்ற – பயனர் உருவாக்கிய உள்ளடக்கத்தைக் (user-generated content -UGC) கண்டறிய ஊடகவியலாளர்கள்  பயன்படுத்தக்கூடிய பல்வேறு கருவிகள் பற்றி நாங்கள் ஆராய்வோம். Twitter, Facebook மற்றும் Reddit போன்ற தளங்களில் உள்ள உள்ளடக்கத்தைக் கண்டறிய CrowdTangle மற்றும் Echosec ஐ எவ்வாறு பயன்படுத்துவது என்பதை நாங்கள் பார்ப்போம். ஜூன் 2019 இல் வரைபடத் தேடலை முடக்கிய Facebook, புலனாய்வு ஊடகவியலாளர்களுக்கு அவர்கள் தேடுவதைக் கண்டறிவதைக் கடினமாக்கியிருந்தாலும், Facebook உள்ளடக்கத்தைத் அலசி ஆராய ஊடகவியலாளர்கள் பயன்படுத்தக்கூடிய பிற கருவிகளையும் விவரிப்போம்.

CrowdTangle: பழைய வரலாற்று UGC பதிவுகளைக் கண்டறிதல்

சமூக ஊடகங்களில் பிரபலமான உள்ளடக்கத்தைக் கண்டறிய ஊடகவியலாளர்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு கருவியைப் பற்றி  முதலில் பார்க்கலாம். Facebook இல் தவறான தகவல் பிரச்சாரங்களையோ அல்லது பரவலாகப் பரப்பப்பட்ட உள்ளடக்கத்தைத் தேடும் ஊடகவியலாளர்கள், உதாரணமாக, BuzzSumo அல்லது Facebook-க்குச் சொந்தமான CrowdTangle தளத்தை பாவிக்கலாம். இந்தக் கருவிகள் பயனர்கள் சமூக வலைப்பின்னல்களில் அதிகம் பகிரப்பட்ட மற்றும் அதிக ஈடுபாட்டினை பெற்றிருக்கும் உள்ளடக்கத்தைப் பார்க்கவும், அதனுடன் இணைக்கப்பட்ட Facebook பக்கங்கள், ட்விட்டர் கணக்குகள் மற்றும் பல விடயங்களை கண்டறிய உதவும் விரிவான பகிர்வுத் தரவைப் பார்க்கவும் அனுமதிக்கிறது.

இப்போது CrowdTangle க்குள் நுழைவோம், “Facebook இன் பொதுவான  நுண்ணறிவுக் கருவியானது சமூக ஊடகங்களில் பொது உள்ளடக்கத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பின்தொடர்வதையும், பகுப்பாய்வு செய்வதையும், அறிக்கையிடலையும் எளிதாக்குகிறது.” CrowdTangle ஒரு இலவச Google Chrome நீட்டிப்பைக் கொண்டுள்ளது, அது பொதுவெளியில் கிடைக்கக் கூடியதாக உள்ளது ஆனால் வரையறுக்கப்பட்ட செயல்பாட்டைக் கொண்டுள்ளது. CrowdTangle இன் மையப் பகுதியானது, Facebook பொதுப் பக்கங்கள், குழுக்கள் மற்றும் பொது Instagram கணக்குகளைக் கொண்ட தரவுத்தளத்தை வினவுவதற்கான திறனை பயனர்களுக்கு வழங்கும் ஓர் தளமாகும். உங்களிடம் ஏற்கனவே இதனை பாவிக்க அனுமதி இல்லை என்றால் புதிதாக அனுமதியைப்  பெறுவது கடினம் – குழு “குறிப்பிட்ட எண்ணிக்கையிலான புதிய கூட்டாளர்களை மட்டுமே இணைக்க முடியும்” என்று தளம் எச்சரிக்கிறது. ஆகவே ஏற்கனவே அனுமதி  உள்ளவர்கள் அல்லது கருவி எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றி மேலும் அறிய விரும்புபவர்கள், தளத்தின் அடிப்படைகள் மற்றும் UGC ஐத் தேடுவதற்கு அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைப் பற்றி அறிந்து கொள்வோம்.

முதலில், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் உள்ள அனைத்து பொது நிறுவனங்களும் CrowdTangle தளத்தில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 100,000 அல்லது அதற்கு மேற்பட்ட விருப்பங்கள், பின்தொடர்பவர்கள் அல்லது உறுப்பினர்களைக் கொண்ட பொது பேஸ்புக் பக்கங்கள் மற்றும் குழுக்களை இந்த கருவி தானாகவே சேர்க்கிறது – அமெரிக்காவை தளமாகக் கொண்ட பொதுக் குழுக்களைப் பொறுத்த வரையில், 2,000 உறுப்பினர்கள் வரை கொண்டிருந்தால்அவை   தானாகச் சேர்க்கப்பட்டிருக்கும் என்று CrowdTangle  இன் கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தொடர்பான முதன்மை ஆய்வாளர் நவோமி ஷிஃப்மேன் கூறுகிறார். 75,000 அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையுடைய  பின்தொடர்பவர்களைக் கொண்டிருக்கும்  அனைத்து பொது Instagram கணக்குகளையும், உறுதிப்படுத்தப்பட்ட(verified)  அனைத்து Facebook மற்றும் Instagram பொது பக்கங்களையும் இயங்குதளம் தானாகவே சேர்க்கிறது. இருப்பினும், பயனர்கள் எந்தவொரு பொது பேஸ்புக் பக்கம் அல்லது குழுவையும், அவை எந்த அளவு விருப்பங்கள், பின்தொடர்பவர்கள் அல்லது உறுப்பினர்களைக் கொண்டுள்ள போதிலும் அக்கணக்கையும் தாங்களாகவே சேர்க்கலாம்.

CrowdTangle இயங்கு தளத்தின் மூலம்  Reddit மற்றும் Twitter ஐயும் தேடலாம், ஆனால் அந்த நோக்கத்திற்காக CrowdTangle ஐப் பயன்படுத்துவதை விட, Echosec அல்லது TWINT அல்லது RStudioக்கான rtweet package  போன்ற திறந்த மூல குறியீட்டு கருவிகளைப் பயன்படுத்த நான் விரும்புகிறேன். ஏன்? ஏனெனில் வணிகரீதியான மூன்றாம் தரப்பினரால் வடிகட்டப்படாத மூலத் தரவை நீங்கள் பெறுகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். (ட்விட்டர் தரவை அகற்ற rtweet ஐ எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த பயிற்சிக்கு, மிசோரி பல்கலைக்கழகத்தின் (University of Missouri) மைக்கேல் டபிள்யூ. கியர்னியின்  (Michael W. Kearney) இந்த பட்டறையைப் பார்க்கவும்.)

CrowdTangle என்றால் என்ன என்பதை இப்போது தெரிந்து கொண்டோம், அதை எப்படி பயன்படுத்துவது என்று ஆராய்வோம்.

சிரியாவைப் பற்றி கடந்த 12 மாதங்களில் Facebook பக்கங்கள் அல்லது குழுக்களில் இடப்பட்ட UGC பதிவுகளில் நான் குறிப்பாக ஆர்வமாக உள்ளேன் என்று வைத்துக்கொள்வோம். நாம் அதை எவ்வாறு செய்ய முடியும்:

Image: CrowdTangle

எடுத்துக்காட்டாக  இந்தக் குறிப்பிட்ட உள்ளடக்கம் எப்போது முதலில் Facebook இல் வெளியிடப்பட்டது என்பதைக் கண்டுபிடிப்பதில் நான் ஆர்வமாக உள்ளேன் என்று வைத்துக் கொள்வோம். அதன் அசல் ஆசிரியர் யார், அதை அடுத்ததாக பரப்ப முடிவு செய்தவர் யார் என்பதைக் கண்டுபிடிப்பதில் நான் ஆர்வமாக இருக்கலாம். இதற்காக குறிப்பிட்ட UGCயின் வரலாற்றுத் தரவைப் பரிசோதித்து எனது புலனாய்வை ஆரம்பிக்கலாம்.

குறிப்பிட்ட பதிவின் வரலாற்றுத் தரவை .csv கோப்பில் பதிவிறக்கம் செய்யலாம்: கோப்பைப் பதிவிறக்க, CrowdTangle இல் உள்ள இடுகைப் பெட்டியின் மேல் வலது மூலையில் உள்ள கீழ்தோன்றும் அம்புக்குறியைக் கிளிக் செய்து, “Download CSV” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

Image: CrowdTangle

இந்தத் தகவலைப் பயன்படுத்தி, CrowdTangle இல் இந்த குறிப்பிட்ட உள்ளடக்கம் பயன்படுத்தப்பட்ட அனைத்து நிகழ்வுகளையும் தீர்மானிக்க முடியும்.

CrowdTangle இன் தரவுத்தளத்தில் குறிப்பிட்ட பதிவினை முதன்முதலில் உள்ளிட்டதிலிருந்து மட்டுமே வரலாற்றுத் தரவு தொடங்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம், மாறாக அப்பதிவு Facebook இல் தோன்றிய முதல் முறையிலிருந்து அல்ல.

உள்ளடக்கத்தின் ஒரு பகுதியின் மூலத்தை  தீர்மானிக்க உதவுவதற்கு இது பயனுள்ளதாக இருக்கும். (இணையத்தில் உள்ள ஓர் உள்ளடக்கம் முதன் முதல் வெளியானதை மூலம்  குறிக்கிறது.) ஒரு எச்சரிக்கை: UGC இன் ஒரு பகுதி எங்கிருந்து வந்தது என்பதை CrowdTangle உங்களுக்குத் திட்டவட்டமாகச் சொல்ல முடியாது, ஆனால் அதன் மூலத்தை  கண்டறிய சரியான திசையில் உங்களை அழைத்துச் செல்லும் அது எப்படி சமூக ஊடகங்களில் சடுதியாக பரவ ஆரம்பித்தது என்பது பற்றிய மேலதிக  தகவலையும் இத்தளம் கொடுக்கும்.

ஒரு குறிப்பிட்ட உள்ளடக்கம் எங்கிருந்து வந்தது என்பதை மேலும் புலனாய்வு செய்து அறிக்கையிடுதலின் மூலம் தீர்மானிக்க முடியும். (இதை விசாரிக்க நீங்கள் பயன்படுத்தக்கூடிய பிற கருவிகளில், நாங்கள் கீழே விவரிக்கும் இலவச, திறந்த மூல கருவிகள் மற்றும் கனேடிய ஊடகவியலாளரும் தவறான தகவல் தொடர்பான நிபுணருமான கிரேக் சில்வர்மேன் GIJN க்காக எழுதிய  விவரணத்தில் விவரித்த Hoaxyஆகியவையும் அடங்கும்.)

Facebook இல் மறைந்திருக்கும் UGC உள்ளடக்கங்களைக் கண்டறிதல்

சில விசாரணைகளுக்காக, பரவலாகப் பகிரப்பட்ட பிரபலமான உள்ளடக்கத்தைக் கண்டறிய ஊடகவியலாளர்கள் முயற்சிப்பதில்லை. அவர்கள் உண்மையில் அதற்கு எதிர்மாறான உள்ளடக்கங்களை கொண்டவற்றை தேட முயல்வர்: அவை சமூக ஊடக தளங்களில் மறைந்திருக்கும் அல்லது  மறக்கப்பட்டிருக்கும் உள்ளடக்கங்கள் பொறுப்புக்கூறல் தொடர்பான புலனாய்வுக்கு  பயன்படுத்துவதற்குக்கூட இருக்கலாம்.

உதாரணமாக, ஒரு வெளிநாட்டு போரில் வான்வழித் தாக்குதல் சம்பவமொன்றை சரிபார்க்க ஊடகவியலாளர்கள் முயலும் பட்சத்தில், அவர்கள் UGCயின் அதிகம் பரவலாகப் பகிரப்படாத அல்லது பார்க்கப்படாத பகுதிகளைக் கண்டறிய விரும்பலாம்.  இந்த விஷயத்தில், CrowdTangle போன்ற கருவிகள் அதிக உதவியாக இருக்காது, ஏனெனில் நாங்கள் அதிக ஈடுபாட்டினைக் கொண்ட உள்ளடக்கத்தைத் தேடவில்லை.  கடந்த காலத்தில், குறிப்பிட்ட Facebook உள்ளடக்கத்தைத் தேடும் போது, ​​நீங்கள் வரைபடத் தேடல் அடிப்படையிலான பின்வரும் கருவிகளைப் பயன்படுத்தியிருக்கலாம் – Who Posted What?, graph.tips? அல்லது Intelligence X இன் Facebook Graph Searcher – இது குறிப்பிட்ட உள்ளடக்கத்துடன் பொருந்தக்கூடிய உள்ளடக்கத்தைக் கண்டறிய Facebook இன் URL கட்டமைப்பை மாற்றிக் குறிப்பிட்ட வரையறைகளில் தேடக் கூடியதாக இருக்கும்.

புலனாய்வு ஊடகவியலாளர்களை பெரும் வருத்தத்திற்கு உள்ளாக்கும் வகையில், பேஸ்புக் 2019 இல் அதன் வரைபடத் தேடலுக்கான வசதியை  இடைநிறுத்தி, பல முந்தைய தேடல் செயல்பாடுகளை செயலிழக்கச் செய்தது. ஆனால் நாம் இன்னும் ஒரு தேடல் செயற்பாட்டை மேற்கொள்ள முடியும். எமது புலனாய்வை மேலும் தொடர, கீழே விவரிக்கப்பட்டுள்ள கருவிகளான Facebook இன்  சொந்த தேடல் தளத்தை அல்லது Google dorking போன்றவற்றை  ஒரு குறுக்குப்பாய்ச்சலுக்கானபுள்ளியாக பயன்படுத்த நாம் பரிந்துரைக்கிறோம்.  ஃபேஸ்புக்கின் தேடல் தளம் சரியானதாக இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்; இது உங்கள் தேடல் அளவுகோலில் ஒவ்வொரு முடிவையும் காட்டாது. ஒரு குறிப்பிட்ட சம்பவம் அல்லது தனிநபரை விசாரிக்கும் போது நீங்கள் தேடும் தரவைக் கண்டறிவதை இது மேலும் கடினமாக்குகிறது.

பழைய Facebook URL அமைப்பில், வரைபடத் தேடலைப் பயன்படுத்தி முழு குறிப்பிட்ட தேடலையும் நீங்கள் வடிவமைக்கலாம். இனி அவ்வாறு செய்ய முடியாது. நீங்கள் தேடுவதைக் கண்டுபிடிக்க நீங்கள் இன்னும் சற்று கடினமாக தகவல்களை ஆராய வேண்டும். Facebook இன் உள்ளடக்கங்களை ஒழுங்குபடுத்தும் நிரல் கோவை –அல்காரிதம் (algorithm) நீங்கள் தேடுவதாக நினைக்கும் முடிவுகளுக்கு முன்னுரிமை அளிக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும், எனவே உங்கள் விசாரணைக்கு பொருத்தமான உள்ளடக்கத்தைக் கண்டறிய பல்வேறு தேடல் சேர்க்கைகளை ஸ்க்ரோலிங் செய்து முயற்சிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.

Who Posted What? Facebook பயனர்களின் தனியாள் இலக்கத்தை (ID number) ஐடி எண்ணைக் கண்டறிய உதவும் இலவசக் கருவியாகும், அதை நீங்கள் குறிப்பிட்ட பயனரின் இடுகைகள் மற்றும் புகைப்படங்களை graph.tips இல் தேட பயன்படுத்தலாம். யார் என்ன பதிவிட்டனர்? ஒரு குறிப்பிட்ட நாள், மாதம் அல்லது வருடத்தில் குறிப்பிட்ட முக்கிய வார்த்தைகளைப் பற்றிய பதிவுகளைத் தேட பயனர்களை அனுமதிக்கிறது. எடுத்துக்காட்டாக, ஏப்ரல் 9, 2017 அன்று சிரியாவின் இட்லிப் கவர்னரேட்டிலுள்ள,(Idlib Governorate) சர்மினில் (Sarmin) நடந்த வான்வழித் தாக்குதலைப் பற்றிய தகவலைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறேன் என்று வைத்துக் கொள்வவோம். வான்வழித் தாக்குதல் நடந்த ஊரின் அரபு வார்த்தையை எடுத்து Who Posted What? தளத்தில் தாக்குதல் நடந்த திகதியைக் குறிப்பிட்டு இடும்போது, அக்குறிச்சொல்லை மையமாக வைத்து தேடல் நடைபெறுகிறது.

இது தொடர்பில் Facebook மீண்டும் கொண்டு வந்தவை இவையாகும்.  எனது வினவலுக்கு (சிவப்பு நிறத்தில் வட்டமிட்டது) தொடர்புடைய சில பதிவுகளை என்னால் கண்டுபிடிக்க முடிந்தது ஆனால் அவை மேலதிக  சரிபார்ப்புக்கு உட்படுத்த வேண்டும்.

வரைபடத் தேடல் மூலம் Facebook தேடல் திறனைக் குறைத்தாலும், மேலே பட்டியலிடப்பட்டுள்ள கருவிகள் மற்றும் Loránd Bodó இன் தனிப்பயன் சமூக ஊடகத் தேடுபொறி போன்ற வெளிப்படையாகக் கிடைக்கும் கருவிகள் அல்லது பணம் செலுத்தும் கருவிகளான   Echosec, X1 Social Discovery மற்றும் Samdesk, போன்றவற்றின் மூலம் நீங்கள் தேடும் UGC ஐக் கண்டறிய இன்னும் வழிகள் உள்ளன. ஆனால் இக்கருவிகளுக்கு பணச்செலவு என்பது ஓர் தடையாக இருகின்றது.

Image: Whopostedwhat.com

மேம்பட்ட கூகிள் தேடலைப் பயன்படுத்த மற்றொரு உதவிக்குறிப்பு – சில நேரங்களில் கூகிள் dorking என்று அழைக்கப்படுகிறது. GIJN இன் தளத்திலும் மற்ற இடங்களிலும் – Google dorking பற்றி விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது – எனவே நாங்கள் இங்கே விரிவாகப் பேச மாட்டோம். ஆனால் Facebook இன் சொந்த தேடலைப் பயன்படுத்துவதை விட Facebook உள்ளடக்கத்தைத் தேட Google ஐப் பயன்படுத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

அமெரிக்காவின் விஸ்கான்சின் (Wisconsin) மாநிலத்தில்  கெனோஷாவில் (Kenosha)  ஆகஸ்ட் 2020 இல் நடந்த போராட்டங்கள் தொடர்பான பதிவுகளை  நான் பேஸ்புக்கில் தேடிய கூகுள் டார்க்கின் விரைவான உதாரணம் கிழே தரப்பட்டுள்ளது. எனது தேடல் வினவல் பின்வருமாறு:

site:facebook.com protest AND kenosha –news

ஆபரேட்டர் தளம் site:facebook.com தேடலை பேஸ்புக்காக சுருக்குகிறது. எனது முக்கிய இரு குறிச்சொற்களான protest AND kenosha  பதிவில் இருப்பதை உறுதிசெய்கிறது, மேலும் செய்திகள் இடுகை உரையிலிருந்து news  என்ற வார்த்தையை விலக்குகிறது. நான் செய்தி நிறுவனங்களில் இருந்து பதிவுகளை  விலக்க விரும்பினேன், ஏனென்றால் நான் தரையில் உள்ள சாதாரண பொதுமக்களிடமிருந்து  வந்த அசல் பதிவுகளை பார்க்க விரும்பினேன், மற்றைய ஊடகவியலாளர்களின் பதிவுகளை அல்ல. எனது தேடல் முடிவுகளில் இன்னும் சில செய்தி நிறுவனங்கள்  பதிவுகள் கிடைத்துள்ளன, ஆனால் நான் விரும்பாத பல பதிவுகளை என்னால் வடிகட்ட முடிந்தது.

நான் தேடலை தேதி வாரியாக மட்டுப்படுத்தினேன் என்பதைக் கவனியுங்கள். ஆகஸ்ட் மாதத்தில் குறிப்பிட்ட அச்சம்பவம் நிகழ்ந்த நாளில் தொடங்கி மாத இறுதி வரை பதிவிடப்பட்ட  உள்ளடக்கங்களை நான் காண விரும்பினேன். நீங்கள் இதனை செயற்படுத்த “கருவிகள்”/ Tools” என்பதைக் கிளிக் செய்து “எந்த நேரத்திலும்”/“Any time”  என்று கீழ்தோன்றும் மெனுவைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் தேதி வடிப்பானை உருவாக்கலாம். பின்னர் ““Custom range…” என்பதைக் கிளிக் செய்து உங்கள் தொடக்க மற்றும் முடிவு தேதிகளை அமைக்க முடியும்.

Echosec : UGC கண்டுபிடிப்பதற்கான சக்திவாய்ந்த தளம்

Echosec என்பது ட்விட்டர், யூடியூப், ரெடிட், மீடியம் (Medium), கேப் (Gab), டிஸ்கார்ட் (Discord), 4சான் (4chan) மற்றும் ரஷ்ய சமூக ஊடக தளங்களான VK (VKontakte) மற்றும் OK (Odnoklassniki) போன்ற சமூக ஊடக தளங்களில் இருந்து உள்ளடக்கங்களை பெற்றுக்கொள்ள கட்டணம் செலுத்தி சேவையைப் பெற்றுக்கொள்ளும் கருவியாகும். இதில் தேவைப்படும்  புவியியல் பகுதியை வரையறுப்பது (geographical area of interest AOI) மற்றும் குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட பகுதிக்குள் ஜியோடேக் (geotagged) செய்யப்பட்ட இடுகைகளைத் தேட உங்களை அனுமதிக்கிறது. பயனர்கள் தங்கள் சொந்த AOIகளை மவுஸைப் பயன்படுத்தி வரைபடத்தில் வரையலாம் அல்லது தேடல் பெட்டியில் தட்டச்சு செய்வதன் மூலம் தமது இருப்பிடத்தை உள்ளிடலாம்.

உதாரணமாக நான் ஜூன் 1 ஆம் தேதி வாஷிங்டன், டி.சி.யில் நடந்த சம்பவம் தொடர்பான வீடியோக்களைக் கண்டறிய ஆர்வமாக உள்ளேன் என்று வைத்துக் கொள்வோம். அதில், செயின்ட் ஜான்ஸ் தேவாலயத்திற்கும் (St. John’s Church) லஃபாயெட் சதுக்கத்திற்கும் (Lafayette Square) இடையே உள்ள பிளாசாவில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அந்த பகுதி வழியாக தேவாலயம் சென்று புகைப்படம் எடுத்துக்கொள்ள அனுமதிப்பதற்காக போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

நான் எனக்குத் தேவையான பகுதியைச் சுற்றி ஒரு தோராயமான AOI ஐ வரைகிறேன், பின்னர் “ட்ரம்ப்” என்ற முக்கிய சொல்லைச் சேர்த்து, ஜூன் 1 அல்லது அதற்குப் பிறகு இடப்பட்ட பதிவுகளை மட்டுமே நான் விரும்புவதால் நேர வடிப்பானைச் சேர்க்கவும். Echosec கண்டுபிடித்தவை பின்வருமாறு:

Image: Echosec

இத்தேடலிற்கு நிறைய முடிவுகள் உள்ளன. Lafayette சதுக்கத்தைச் சுற்றியுள்ள குறிப்பிட்ட பகுதிக்குள் நாம் கவனம் செலுத்துவோம். இப்பகுதியில் Echosec குறைந்தது 10 வெவ்வேறு YouTube வீடியோக்களை அடையாளம் கண்டுள்ளது போல் தெரிகிறது.

Image: Echosec

Echosec கண்டறிந்த வீடியோக்களில் ஒன்றிற்கான உதாரணம் இங்கே:

Image: Echosec

வீடியோக்கள் அல்லது புகைப்படங்கள் போன்றவற்றின் உள்ளடக்கத்தைக் கண்டறிய ஊடகவியலாளர்கள்  இந்தக் கருவியைப் பயன்படுத்தலாம், பின்னர் அவர்கள் அவற்றின் புவிஇருப்பிடம் மற்றும் காலவரிசைப்படுத்தி ஒழுங்கமைக்கலாம் – அதாவது, வீடியோவை முறையே இடம் மற்றும் நேர ஒப்பீட்டளவில் கண்டறியலாம் – இதன் மூலம் வீடியோ உண்மையில் கூறப்பட்ட இடத்தில், குறித்த நேரத்தில் படமாக்கப்பட்டதா என்பதைச் சரிபார்க்க முடியும். இணையத்தில்  பதிவிடப்பட்ட புகைப்படம் அல்லது வீடியோவைச் சரிபார்ப்பதற்கான முதல் படிகளில் இதுவும் ஒன்றாகும். UGC ஐப் பயன்படுத்தி எவ்வாறு சரிபார்ப்பது என்பது பற்றிய கூடுதல் பயிற்சிக்கு, தவறான மற்றும் தவறான தகவல்களை எதிர்த்துப் போராடும் லாப நோக்கமற்ற அமைப்பான First Draftஇருந்து இந்த அடிப்படை மற்றும் மேம்பட்ட பயிற்சி வகுப்புகளைப் பார்க்கவும்.

Echosec Systems இன் இயங்கு தளத்தை பாவிப்பதற்கான விலை மாதிரியானது, கிளையன்ட் அடிப்படையில் மட்டுமே தீர்மானிக்கப்படும் காரணிகளைச் சார்ந்தது. எக்கோசெக் சிஸ்டம்ஸ் கடந்த காலத்தில் GIJN உறுப்பினர் Bellingcat போன்ற ஊடக நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளது; எக்கோசெக் விற்பனைக் குழுவுடன் டெமோ அழைப்பை இங்கே முன்பதிவு செய்ய ஊடகவியலாளர்கள் அழைக்கப்படுகிறார்கள். கூடுதலாக, சந்தாதாரர்கள் எக்கோசெக் எசென்ஷியல்ஸ் பயிற்சி நெறியினை இலவசமாகப் பெறுகிறார்கள்.

கருவிப்பெட்டியின் இந்தப் பதிப்பிற்கு அவ்வளவுதான். விரைவில்: NASA இன் ரிமோட் சென்சிங் தரவைப் பயன்படுத்தி சரிபார்த்தல், சமூக ஊடகங்களில் ஒரே மாதிரியான பயனர்பெயர்களைக் கண்டறிதல், முகத்தை அடையாளம் காணும் மென்பொருள் மற்றும் Pinpoint எனப்படும் Google News Initiative  இன் புதிய கருவி.

பரிந்துரைக்கப்பட்ட இணைப்புகள்

  • Social media timestamps infographic from First Draft
  • Mining the Social Web: Data Mining Facebook, Twitter, LinkedIn, Instagram, GitHub, and More, 3rd Edition (available for purchase on Amazon)
  • Social Media Search Strategies from Loránd Bodó’s blog

மேலதிக வாசிப்பு

My Favorite Tools: Malachy Browne

GIJN’s Resource Center: Fact-Checking & Verification

Online Investigative Techniques — GIJN Webinars and Workshops with Henk van Ess

பிரையன் பெர்ல்மேன் (Brian Perlman)  GIJN இல் உதவி ஆசிரியர் ஆவார். மேம்பட்ட டிஜிட்டல் தடயவியல், தரவு அறிவியல் மற்றும் திறந்த மூல நுட்பங்களைப் பயன்படுத்தி மனித உரிமை மீறல் ஆய்வில்  நிபுணத்துவம் பெற்றவர். அவர் UC Berkeley Graduate School of Journalism இன் பட்டதாரி மற்றும் பெர்க்லி சட்டத்தில் மனித உரிமைகள் மையத்தில் (Human Rights Center at Berkeley Law) முன்னாள் மேலாளராக உள்ளார்.

மூலம்

This story was originally published by the Global Investigative Journalism Network (GIJN)

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments