Saturday, April 27, 2024
HomeResource Centerசெயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ஊடகவியல் மீதான

செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ஊடகவியல் மீதான

பாரிஸ் சாசனம்

முன்னுரை

வெகுசன மற்றும் ஊடக சமூகத்தின் பிரதிநிதிகளாகிய நாம், செயற்கை நுண்ணறிவினால் (AI) மனிதகுலத்திற்கு ஏற்படக்கூடிய மாற்றங்களுடனான தாக்கங்களை ஒப்புக்கொள்கின்றோம். செயற்கை நுண்ணறிவானது, மனித உரிமைகள் பாதுகாக்கப்படல், அமைதி மற்றும் ஜனநாயகம் நிலைநிறுத்தப்படுதல், மற்றும் எமது பகிரப்படும் அபிலாஷைகள் மற்றும் பெறுமானங்களுடன் ஒத்துப்போதல் ஆகிவற்றை உறுதிசெய்வதற்கு உலகளாவிய ஒத்துழைப்புகளை உறுதிசெய்வதில் நாம் வெற்றிகண்டுள்ளோம்.

செய்தி மற்றும் தகவல் என்பவற்றின் வரலாறு எப்போதும் தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன் இணைந்தே காணப்படுகின்றது. AI ஆனது, அடிப்படை தன்னியக்கநிலையில் இருந்து பகுப்பாய்வு மற்றும் படைப்பாற்றல் முறைமைகள் வரை சுழன்றுகொண்டிருக்கின்றது, மனித சிந்தனை, அறிவு மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றுடன் இணையற்ற திறன்வாய்ந்த புதுவகையான தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துகிறது. இது தகவல் திரட்டல், உண்மையைக் கண்டறிதல், கதைசொல்லல் மற்றும் யோசனைகளைப் பரப்புதல் ஆகியவற்றில் கணிசமான மாற்றத்தைக் குறிக்கிறது. எனவே, இது ஊடகவியல் மற்றும் செய்தியறை நடைமுறைகளின் கீழ் தொழில்நுட்ப, பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை ஆழமாக மாற்றமடையச் செய்யும். AI முறைமைகள், அவற்றின் வடிவமைப்பு, நிர்வாகம் மற்றும் பயன்பாடு ஆகியவற்றைப் பொருத்து, உலகளாவிய தகவல் பரப்பில் புரட்சியை ஏற்படுத்தும் சாத்தியத் தன்மைகளைக் கொண்டுள்ளன. எவ்வாறாயினும், தகவல் அறியும் உரிமை மீது அவை கட்டமைப்பு ரீதியான சவாலை ஏற்படுத்தக்கூடியவை. தகவல் அறியும் உரிமையானது, நம்பகமான தகவல்களைத் தேடுவதற்கும், பெற்றுக் கொள்வதற்கும் மற்றும் அவற்றை அணுகுவதற்குமான சுதந்திரத்தைக் கொண்டுள்ளன. சர்வதேச மனித  உரிமைகள் சாசனம், சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை, மற்றும் தகவல் மற்றும் ஜனநாயகத்திற்கான சர்வதேச ஒத்துழைப்பு உட்பட இது சர்வதேச சட்டக் கட்டமைப்புகளுடன் வேரூன்றியுள்ளது. மேலும் இந்த உரிமையானது, கருத்து மற்றும் வௌிப்பாட்டுச் சுதந்திரத்தின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்துவதாகவும் உள்ளது.

ஊடகவியல் மற்றும் வெகுசன ஊடக நிறுவனங்களின் சமூகப் பங்கானது- சமூகம் மற்றும் தனிநபர்களின் நம்பத்தகுந்த இடைத்தரகர்களாக சேவையாற்றுதல் மூலம்- ஜனநாயகத்தின் முதுகெலும்பாக இருப்பதுடன், அனைவரதும் தகவல் அறியும் உரிமைகளை மேம்படுத்துவதாகவும் அமைகின்றது. AI முறைமைகள், இந்த பாத்திரங்களை வகிப்பதற்காக வெகுசன ஊடக நிறுவனங்களுக்கு பெரிதும் உதவியாக அமைகின்றது, எனினும், அவை வௌிப்படைத் தன்மையுடன் பயன்படுத்தப்படும்பட்சத்தில் மாத்திரமே அவ்வாறு உதவியாக அமையும் என்பதுடன், நேர்மையாகவும் மற்றும் பொறுப்புடனும் ஊடக நெறிமுறைகளைக் கடைப்பிடித்து பணியாற்றும் உறுதியானசெய்தியறைச்சூழலில் சாத்தியமாகின்றது. இந்தக் கொள்கைகளை உறுதிப்படுத்துவதுடன், தகவல் அறியும் உரிமையை நிலைநாட்டுதல், சுதந்திர ஊடகவியலின் வெற்றிக்காக உழைத்தல், மற்றும் AI தொழில்நுட்ப சகாப்தத்தில் நம்பகமான செய்தி மற்றும் ஊடக நிறுவனத்திற்காகவும் நாம் திடசங்கற்பம் கொள்கின்றோம்.

1. வெகுசன ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் தொழில்நுட்ப பயன்பாட்டிற்கான ஊடக நெறிமுறைகளின் வழிகாட்டல்.

தமது முதன்மைப் பணியை நிறைவேற்றும் திறன்களை மேம்படுத்திக் கொள்வதற்காக வெகுசன ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகின்றனர்: தரமான, நம்பகமான தகவலுக்கான அவர்கள் ஒவ்வொருவரினதும்  உரிமையை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும். தொழில்நுட்ப கருவிகள் தொடர்பான அவர்களின் தெரிவுகளைப் பயன்படுத்துவதே இந்த இலக்கின் நாட்டமும் சாதனையும் ஆகும்.

ஊடகத்துறையில் AI முறைமைகளின் பயன்பாடு மற்றும் வளர்ச்சியானது, உண்மை மற்றும் துல்லியத்தன்மை, நேர்மை, பக்கச்சார்பின்மை, சுதந்திரம், தீங்கு விளைவிக்காமை, பாகுபாடின்மை, பொறுப்புக்கூறல், தனித்தவம் மற்றும் தகவல்மூலங்களின் இரகசியத்தன்மை என்பவற்றிற்கு மதிப்பளித்தல்  உள்ளடங்கலாக, ஊடக நெறிமுறைகளின் ஆழமான பெறுமானங்களைப் பாதுகாத்தல் எற்பவற்றில் தங்கியுள்ளது.

2. ஊடக நிறுவனங்கள் மனித முகவரகங்களுக்கு முன்னுரிமை வழங்குகின்றன.

நீண்டகால திட்டமிடல் மற்றும் நாளாந்த செயதியறைத் தெரிவுகள் ஆகிய இரண்டிற்கும் இடையில் மத்தியஸ்தப் போக்குடன் மனித முடிவுகள்  எடுக்கப்படல் வேண்டும்.

AI முறைமைகளின் பயன்பாடு ஆலோசிக்கப்பட்டு மற்றும் நன்கு அறியப்பட்ட மனிதர்களால் எடுக்கப்பட்ட முடிவாக இருக்க வேண்டும். இலக்குகள், நோக்கம், மற்றும் பயன்பாட்டு நிபந்தனைகள் ஒவ்வொரு AI முறைமைக்கும் செய்தியறைக் குழுக்களால் தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும். பயன்படுத்தப்பட்ட AI முறைமைகளின் தாக்கங்கள் பற்றி குறுக்காக மற்றும் தொடர்ச்சியான மேற்பார்வையை அவர்கள் உறுதிசெய்ய வேண்டும், அவற்றின் பயன்பாட்டு கட்டமைப்புடன் கண்டிப்பாக இணங்குவதை உறுதிசெய்து, எந்த நேரத்திலும் அவற்றை செயலிழக்கச் செய்யும் திறனைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும்.

3. AI முறைமைகள் ஊடகவியலில் பயன்படுத்தப்படுவதற்கு முன்னரான சுயாதீன மதிப்பீடு.

ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் AI முறைமையை பயன்படுத்துவதற்கு முன்னர் ஊடகத்துறைக்கு ஆதரவு வழங்கும் குழுக்களின் பங்களிப்புடன், சுயாதீன, மற்றும் முழுமையான மதிப்பீட்டை மேற்கொள்வது அவசியமாகும். இந்த மதிப்பீடு, ஊடக நெறிமுறைகளின் ஆழமான பெறுமானங்களை உறுதியாகக் கடைப்பிடிப்பதை ஊர்ஜிதம் செய்ய வேண்டும்.

இந்த முறைமைகள் தனித்துவம், புலமைச் சொத்துகள் மற்றும் தரவுப் பாதுகாப்புச் சட்டங்கள் என்பவற்றுக்கு மதிப்பளிப்பதாக இருத்தல் வேண்டும்.  இந்த தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறும் பட்சத்தில் ஒரு தௌிவான பொறுப்புக்கூறல் கட்டமைப்பு அதற்கென நிறுவப்பட்டுள்ளது. கணித்துக்கூறத்தக்க செயற்பாடு மற்றும் எளிமையாக தௌிவுபடுத்தக்கூடிய முறைமைகள் விரும்பத்தக்கவையாகும்.

4. பிரசுரிக்கப்படும் உள்ளடக்கங்களுக்கு அந்தந்த ஊடக நிறுவனங்களே எப்போதும் பொறுப்புக்கூறுகின்றன.

AI பயன்பாட்டின் மூலம் தகவல்களை திரட்டுதல், செயற்படுத்துதல், அல்லது பரப்புதல் என்பவற்றுக்காக ஊடக நிறுவனங்கள் செய்தியறை பொறுப்புக்கூறலைக் கொண்டுள்ளன. தம்மால் பிரசுரிக்கப்படும் ஒவ்வொரு உள்ளடக்கத்திற்கும் அந்த நிறுவனமே சட்ட ரீதியாகவும், பொறுப்புக்கூறல் அடிப்படையிலும் பொறுப்பாவார்கள்.

AI பயன்பாட்டுடன் பிணைக்கப்பட்ட பொறுப்புகள், ஊடக நெறிமுறைகள் மற்றும் செய்தியறை வழிக்காட்டல்களைக் கடைப்பிடிப்பதை உறுதிசெய்வதற்கும், எதிர்ப்பார்ப்புடனும், கோடிட்டிக் காட்டும் வகையிலும் மனிதர்களுக்கு சாட்டப்படுதல் வேண்டும்.

5. AI முறைமையின் பயன்பாட்டில் ஊடக நிறுவனங்கள் வௌிப்படைத் தன்மையைக் கடைப்பிடித்தல்.

ஊடக உள்ளடக்கத்தின் உற்பத்தி அல்லது விநியோகத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் AI முறைமையின் எந்தவொரு பயன்பாடும், தெளிவாக வெளிப்படுத்தப்பட்டு மற்றும் தொடர்புடைய உள்ளடக்கத்துடன் தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் அனைவருக்கும் தெரிவிக்கப்படல் வேண்டும்.

AI முறைமைகளைப் பயன்படுத்தும் ஊடக நிறுவனங்கள், அவர்களால் பயன்படுத்தப்பட்ட AI முறைமைகள், அதன் நோக்கங்களை தௌிவுபடுத்தல், இலக்குகள், பயன்பாட்டு நிபந்தனைகள் என்பவற்றின் பொதுப் பதிவொன்றை பேணுவது அவசியமாகும்.

6. உள்ளடக்கத்தின் தோற்றம் மற்றும் சுவடு தொடரக்கூடிய தன்மையை ஊடக நிறுவனங்கள் உறுதிசெய்தல்.

இயலுமான சந்தர்ப்பங்களில் எல்லாம் வௌியிடுகின்ற உள்ளடக்கங்களின் நம்பகத்தன்மையை உறுதிசெய்யக்கூடிய நவீன கருவிகளின் பயன்பாடு,   மற்றும் வௌியிடுகின்ற உள்ளடக்கத்தை ஊர்ஜிதம் செய்தல், அதன் நம்பகத்தன்மைக்குரிய தகவல்களை வழங்குதல், மேலும் ஏதேனும்  தொடர்ச்சியான மாற்றங்களுக்கு உட்பட்டிருப்பின் அதுபற்றிய விடயங்கள் என்பவற்றை வௌியிடுதல் வேண்டும்.

இத்தகைய நம்பகத்தன்மைக்குரிய தரநிலைகளைப் பூர்த்திசெய்யாத எந்தவொரு உள்ளடக்கமும் தவறாக வழிநடத்தக்கூடிது என கருதப்படுவதுடன், அது முழுமையான தகவல் சரிபார்ப்புக்கு உட்படுத்தப்படல் வேண்டும்.

7. உண்மையான மற்றும் செயற்கையான உள்ளடக்கங்களுக்கு இடையே ஒரு தௌிவான கோடினை ஊடகம் வரைகின்றது.

ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள்  நிஜ உலகத்தின் இயற்கைப் பிடியிலிருந்து பெறப்பட்ட உள்ளடக்கம் (புகைப்படங்கள் மற்றும் கேட்பொலி மற்றும் காணொளிப் பதிவுகள் போன்றவை) மற்றும் AI முறைமைகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை அல்லது குறிப்பிடத்தக்க அளவில் மாற்றப்பட்டவை ஆகியவற்றுக்கு இடையே தெளிவான மற்றும் நம்பகமான வேறுபாட்டை உறுதிப்படுத்த முயல்கின்றன. உண்மையான நிகழ்வுகளை சித்தரிக்க உண்மையான காணொளிக் காட்சிகள் மற்றும் பதிவுகளைப் பயன்படுத்துவதை அவர்கள் விரும்ப வேண்டும்.

AI தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் ஊடாக பொது மக்கள் தவறாக வழிநடத்தப்படுவதை ஊடக நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும். குறிப்பாக  உண்மையான உலகில் கவரப்பட்டவை மற்றும் பதிவுகளைப் பிரதிபலிக்கும் அல்லது உண்மையான நபர்களை யதார்த்தமாக ஆள்மாறாட்டம் செய்யும்  AI யினால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும்.

8. AI-யினால் உந்தப்பட்ட உள்ளடக்க தனித்துவமயம் மற்றும் பரிந்துரையானது, தகவல்களின் பன்முகத்தன்மை மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றை உறுதிசெய்கின்றது.

ஊடக நிறுவனங்களில், வடிவமைப்பு மற்றும் AI பயன்பாடுகள், தன்னியக்க உள்ளடக்க தனித்துவமயமாக்கல் மற்றும் பரிந்துரைகள் ஊடகவியல் நெறிமுறைகள் ஊடாக வழிக்காட்டப்படல் வேண்டும். அத்தகைய முறைமைகள் தகவல் ஒருமைப்பாட்டிற்கு மதிப்பளிப்பதுடன், தொடர்புடைய உண்மைகள் மற்றும் கண்ணோட்டங்கள் பற்றிய பகிரப்பட்ட புரிந்துணர்வுகளை ஊக்குவித்தல் வேண்டும். பல்வகைமைத்துவ மற்றும் மாறுபட்ட தலைப்புகளில் நுணுக்கத்துடனான கண்ணோட்டங்கள்,  திறந்த மனப்பான்மை மற்றும் ஜனநாயக ரீதியிலான உரையாடல் என்பவற்றை அவர்கள் அழுத்தமாக பிரதிபலிக்கச் செய்தல் வேண்டும்.

இத்தகைய முறைமைகள் வௌிப்படைத்தன்மையுடன் இருப்பதுடன், செய்தியறை உள்ளடக்கத்திற்கான வடிகட்டப்படாத பிரவேசத்தைப் பெறுவதற்காக, பயனர்கள் அவற்றை முடக்கிக் கொள்வதற்கான விருப்பத் தேர்வு உறுதிசெய்யப்படுதல் வேண்டும்.

9. AI-யின் நிர்வாகத்திற்குள் ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடக ஆதரவு குழுக்கள் ஈடுபட்டுள்ளன.

தகவல் அறியும் உரிமையின் இன்றியமையாத காவலர்களாக, ஊடகவியளாலர்கள், ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடக ஆதரவு குழுக்கள் AI முறைமைகளின் நிர்வாகத்திற்குள் சுறுசுறுப்பான பாத்திரத்தை வகிக்க வேண்டும். AI நிர்வாகம் மற்றும் ஒழுங்குவிதிகளின் உலகளாவிய அல்லது சர்வதேச நிறுவன மேற்பார்வைகளிலும் அவர்கள் சேர்க்கப்படுதல் வேண்டும்.

AI நிர்வாகம் ஜனநாயக பெறுமானங்களுக்கு மதிப்பளிக்கின்றமை, மக்களின் பல்வகைமை மற்றும் கலாசாரங்கள் AI வளர்ச்சியில் பிரதிபலிக்கப்படுகின்றன என்பதையும் அவர்கள் உறுதிசெய்வது அவசியமாகும்.

AI களத்தில் அவர்கள் அறிவுபூர்வமாக முன்னிலையில் இருக்க வேண்டும். அத்துடன் துல்லியத்தன்மை, நுணுக்கம், மற்றும் விமர்சன மனப்பான்மை ஆகியவற்றுடன் AI இன் தாக்கங்களை ஆராய்ந்து அறிக்கையிடுவதில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

10. AI அமைப்புகளுடனான ஈடுபாடுகளில் ஊடகம் அதன் நெறிமுறை மற்றும் பொருளாதார அடித்தளம் என்பவற்றை நிலைநிறுத்துகின்றது.

ஊடகத்துறையின் நிலைபேற்றுக்கும், ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் நீண்டகாலமாகப் பகிரப்பட்டுவந்த நலன்கள் ஆகியவற்றைப் பாதுகாத்தலை உறுதிசெய்வதற்காகவும் AI முறைகளால் ஊடகங்களின் உள்ளடக்கத்திற்கான அணுகுமுறை உடன்படிக்கைகள் நிர்வகிக்கப்படல் வேண்டும்.  AI முறைமைகளின் உரிமையாளர்கள் தகவல்மூலங்களுக்காக கடன்வழங்க வேண்டும் என்பதுடன், புலமைச்சொத்து உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். உரிமைகளைக் கொண்டுள்ளவர்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்கவும் வேண்டும். நியாயமான ஊதியத்தின் அடிப்படையில் இந்த இழப்பீடு ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும். AI உரிமையாளர்கள், தமது முறைமைகளைப் பயிற்றுவிக்கவும், உணவளிக்கவும் பயன்படுத்தப்படும் ஊடக உள்ளடக்கத்தின் வௌிப்படையான மற்றும் விரிவான பதிவை ப் பராமரிக்க வேண்டும்.

தகவல் ஒருமைப்பாடு மற்றும் ஊடகவியல் நெறிமுறைகளின் அடிப்படைக் கொள்கைகளுக்கு மதிப்பளித்து AI முறைகளால் தமது உள்ளடக்கங்களை உரிமையாளர்கள் மறுபயன்பாட்டிற்கு மாற்றியமைக்க வேண்டும். AI முறைமைகள், உயர்தர, பன்மைத்துவ மற்றும் நம்பகமான தகவல்களுக்கு உத்தரவாதமளிக்கும் வகையில் வடிவமைக்கப்படல் வேண்டும் என அவர்கள் கூட்டாக அழைப்பு விடுக்கின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments