Sunday, April 28, 2024
HomeResource Center ​தேர்தலை நோக்கிய குடைவுகள்

 ​தேர்தலை நோக்கிய குடைவுகள்

  • பிரசாரங்கள், சிவில் சமூக அமைப்புகள், மற்றும் சட்ட அமுலாக்கப் பிரிவுகளில் தகவல் வழங்கக்கூடிய மனித மூலங்களை நீங்கள் தேடிக் கொள்ளுங்கள்.  உங்களுக்காக தரவுகளை கசியவிடக்கூடியவர்கள் யார் என்பதை தேடிப்பாருங்கள்.
  • சமூக ஊடகங்கள் மற்றும் தரவுத்தளங்களைப் பயன்படுத்தி (பயனுள்ள உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தரவுத்தளங்களில் தேடுங்கள்), வேட்பாளர்களது நிதி மற்றும் அரசியல் தொடர்புகள் பற்றி புலனாய்வு செய்யுங்கள். 
  • சர்வதேச தலையீடுகள், பிராந்திய அரசியல் நலன்கள் மற்றும் அதிகாரப் போட்டி போன்ற தேர்தல் அச்சுறுத்தல்களை அடையாளம் காண்க. நம்பகமான ஆதாரங்கள் மூலம் கோடிட்டுக் காட்டப்படுமாயின், ஜனநாயக விரோத தாக்குதலொன்றின் அறி்குறிகளை ஆராயுங்கள்.
  • துப்புத் தருபவர்களால் கசியவிடப்படும் தகவல்களை தொடர்ந்தும் துணிவுடன் அரசியல் அறிக்கையிடுவதன் ஊடாக ஈர்க்கவும், மேலும் இரகசியத் தன்மையைப் பேணுவதற்காக துப்புத் தருபவர்கள்  ஆவணங்களை அனுப்புவதற்காக “புரோட்டன்மெய்ல்” (Protonmail) மற்றும் இரகசிய தொடர்பாடலுக்காக “சிக்னல்” செயலி (Signal) போன்ற தளங்களைப் பயன்படுத்தி அதிக நம்பிக்கையை அளிக்கவும்.
  • அரசியல் உரையாடல்கள், தவறான தகவல்கள், மற்றும் உங்களால் மேற்கொள்ளப்படும் புலனாய்வினால் தூண்டப்படக்கூடிய சாத்தியமான தாக்கங்கள் என்பவற்றை அறிந்துகொள்வதற்காக சமூக ஊடக தேடல் கருவிகளைப் பயன்படுத்துங்கள்.
  • நீங்கள் கண்டறியும் விடயங்களை வௌிக்கொண்டு வருவதற்காக சிறந்த மூலங்களைக் கொண்ட மற்றும் ஆழமான உள்ளடக்கத்தைக் கொண்ட செய்தி அறைகள் மற்றும் இலாப நோக்கமற்ற அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றுங்கள். கதைகளை வௌிக் கொண்டுவருவதற்கு பெரும்பாலும் குழுவாகப் பணியாற்றுவது அவசியமாகின்றது.
  • இலங்கையின் தேர்தல் சட்டங்கள், அரசியலமைப்பு விதிகள், வழிக்காட்டல்கள் என்பவற்றை அறிந்து வைத்துக்கொள்ளுங்கள் – மற்றும் சாத்தியமான விதிமீறல்கள் குறித்தும் கவனம் செலுத்துங்கள்.
  • நேருக்கு நேரான நேர்காணல்களை பெறுவதற்காக வீதிகள் ஊடாக ஊடாக நடந்து செல்லுங்கள். சாரதிகள், சமையல்காரர்கள், மற்றும் பிரசார புகைப்படக் கலைஞர்கள் உட்பட பேரணிகள் மற்றும் பொது நிகழ்வுகளின் போதான பிரசாரங்களில் இருக்கின்ற சாத்தியமான ஆதாரங்களைத் திரட்டுங்கள். பிந்திய பகுப்பாய்விற்காக பிரசார உத்தியோகத்தர்களுடன் உரையாடும் பரிச்சயமில்லாத முகங்களைப் புகைப்படம் எடுக்கவும்.
  • கதாநாயகர்களை அடையாளம் காண்பதற்கும், பின்தொடர்வதற்கும் திறந்த மூலங்களைக் கொண்ட கருவிகளைப் பயன்படுத்தவும். உங்கள் மூலங்களால் அடையாளம் காணப்படாத வௌித் தேர்தல் ஆலோசகர்கள் எவரேனும் இருந்தார்களா என்பதைக் கண்டறியவும்.
  • அத்தகைய தவறான நடத்தை தேர்தலில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம் , அல்லது வேறு நாடுகளில் போன்று இத்தகைய சமமான தந்திரோபாயங்கள் முன்னைய தேர்தல்களில் உருமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்பதை ஊர்ஜிதப்படுத்துவதற்காக அரசியல் நிபுணர்கள் மற்றும் தரவு பகுப்பாய்வாளர்களுடன் தொடர்புகொள்க.
  • தேர்தலில் பாரிய ஒரு புரட்சியை ஏற்படுத்துவதற்காக, எந்தவொரு தரவுத் தளத்திலும் நீங்கள் கண்டுபிடிக்க முடியாத, சிறப்பான மனித ஆதாரங்கள் அல்லது கசிவு கொண்ட முதன்மை தகவல் உங்களுக்குத் தேவை.
  • தகவல் உண்மைச் சரிபார்ப்புக்கும், மேலும் தோண்டுவதற்கும் அத்தகைய தரவுத் தளங்கள் உங்களுக்குத் தேவைப்படும், மற்றும் தனிநபர்களை பூஜ்ஜியமாக மாற்றுவதற்குரிய கருவிகளும் தேவைப்படும்.
  • கசிந்த பொருட்கள் செய்தியாளர்களின் கரங்களுக்கு எவ்வாறு கிடைக்கின்றன? கசிகள் பிரத்தியேகமாக பரிமாற்றிக் கொள்ளப்படுவது சிறந்தது. ஏனெனில் அந்த வழிமுறை டிஜிட்டல் ரீதியாக அகப்படுவதைத் தவிர்க்க உதவுகின்றது. நீங்களாகவே நேரில் சென்று கசிவுப் பொருட்களைப் பெறவேண்டாம். வேறொரு இடைத்தரகர் மூலம் அவற்றைப் பெற்றுக் கொள்வது சிறந்ததாகும்.  நேரடியாக தொடர்பின் மூலம் தகவல் மூலத்திற்கு ஆபத்து ஏற்படலாம்.

சர்வதேச புலனாய்வு ஊடகவியல் வலையமைப்பு (GIJN)

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments