Thursday, April 18, 2024
HomeResource Centerஊடகவியலாளர்களுக்கான கொள்ளைநோய் தொற்றுக்கு பிந்தைய 5 தரவுசார் கதை யோசனைகள்

ஊடகவியலாளர்களுக்கான கொள்ளைநோய் தொற்றுக்கு பிந்தைய 5 தரவுசார் கதை யோசனைகள்

தற்போது உலகின் பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள்  வேகமாக நடைபெற்று வரும் நிலையில் அல்லது நோயெதிர்ப்புசக்தியின் அடுத்த நிலையான  பூஸ்டர்(booster phase) கட்டத்திற்குச் செல்லும் நிலையில், கோவிட்-19 கொள்ளைநோயின் முடிவாக இருக்கும் காலகட்டத்தின் தொடக்கத்தை  நாங்கள் காணத் தொடங்கியிருக்கிறோம்.  

இன்னும் சில நாடுகள் கொள்ளைநோய் பரவலின் சமீபத்திய அலைகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர  போராடிக்கொண்டிருக்கும் வேளையில், மற்றவை தங்கள் பொருளாதாரம், கல்வி மற்றும் பிற சமூகத் துறைகளை மீண்டும் திறக்க திட்டமிட்டுள்ளன.

கொள்ளைநோயின் ஆரம்பமான  2020 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து, கோவிட்-19 பற்றிய தரவு சார்ந்த அறிக்கையிடல் பல கட்டங்களைக் கடந்துள்ளது. ஆரம்பத்தில், அவ்வறிக்கைகளில் பெரும்பாலானவை கொள்ளைநோய் தொடர்பில் அவற்றின் பரவல் மற்றும் போக்குகள் மட்டும் கவனம் செலுத்தின. பின்னர், இது தடுப்பூசியேற்றல்  வீதம் மற்றும் அதன் செயல்திறன் பற்றியதாக தொடர்ந்தது.

நீங்கள் தரவுகளை வைத்துக்கொண்டு செய்யக்கூடிய விடயங்கள் இது மட்டுமல்ல. கொள்ளைநோயின் இரண்டாம் கட்டத்திற்கு  செல்லும்போது, ​​ நம் உலகில் வைரஸின் மாற்றங்களையும் அதன் விளைவுகளையும் அளவிடமும் உலக நாடுகளில் தற்போதுள்ள  சுகாதார அமைப்புகளில் உள்ள குறைபாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டவும், அடுத்து வரும்  பேரழிவைத் தடுப்பதற்கான அல்லது குறைப்பதற்கான நீண்ட கால தீர்வுகளை பரிந்துரைக்க தரவுகளால் முடியும்.

ஜூன் 2021 இல் WAN-IFRA APAC (WAN-IFRA APAC (World Association of News Publishers, Asia Pacific Committee) முயற்சியால் Google News இன் அனுசரணையுடன் ஒழுங்கமைக்கப்பட்ட COVID-19 மற்றும் ‘பொது சுகாதாரத் தரவுகள் மூலம் செய்திக்கதை சொல்லல்’ என்ற தலைப்பிலான பயிற்சி பட்டறைத் தொடர் இது தொடர்பில் கவனம் செலுத்தியது.

தென்கிழக்கு ஆசியா முழுவதிலும் உள்ள 46 ஊடக நிறுவனங்களை சேர்ந்த 283 பத்திரிகையாளர்களுடன் மூன்று இணையவெளி அமர்வுகள் நடைப்பெற்றன.  கொள்ளைநோய் மற்றும் பொது சுகாதாரம் தொடர்புடைய பிரச்சனைகளை பற்றிய செய்தியறிக்கையிடலில் எவ்வாறு வலுவான தரவுக்களை பயன்படுத்தலாம் என்பது தொடர்பில் நான் சில விடயங்களை பகிர்ந்து கொண்டேன்.

தரவுகளை சேகரித்து கண்காணித்தல்

எனது பயற்சிப்பட்டறையில் இருந்து நான் கற்றுக்கொண்ட முக்கிய விடயங்களில் ஒன்று, கொள்ளைநோய் தொற்றுக்கு பின்னரான புலனாய்வுகளுக்கு ஊடகவியலாளர்கள் முன்னமே தரவுகளை சேகரிக்கவும், கண்காணிக்கவும் தொடங்க வேண்டும் என்பதாகும்.

ஆசியாவில் உள்ள பல நாடுகளில் உள்ள அரசாங்கங்கள் வருடாந்தர அடிப்படையில் மட்டுமே தரவுகளை பகிர்ந்து கொள்கின்றன. அதன்வகையில்  2020க்கான தரவுக்கள் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றன.  

கொள்ளைநோய் தொற்றின் தாக்கத்தை அளவிடவும் கொள்ளைநோய்த்  தொற்றை பயன்படுத்தி தங்களை வளப்படுத்தியது யார் என்பதையும் போன்ற மிக்கியமான சில முக்கியமான கேள்விகளுக்கு பதிலளிக்கவும் இது ஊடகவியலாளர்களுக்கு  இடமளிக்கிறது.

 உதாரணமாக, கொள்ளைநோய் தொற்று தொடர்பில் கொள்முதல் மற்றும் புதிய கொள்கைகளை அங்கீகரிக்க பல அரசாங்கங்கள் அனுமதிகளை பெற்றுக்கொண்டன. இருப்பினும், பிரேசிலில் உள்ள பத்திரிகையாளர்கள் தரவு சேகரிப்பு மற்றும் பகுப்பாய்வு மூலம் அரசினால் சுவாசக் கருவிகளை கொள்வனவு செய்யப்பட்டமை தொடர்பில்  முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் இடம்பெற்றதை  அம்பலப்படுத்தியுள்ளனர்.

இதேபோன்ற தரவு சார்ந்த புலனாய்வு செய்தியறிக்கைகள் மூலம், நைஜீரியாவில் COVID-19ஜ கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் சுகாதாரப் பொருட்கள் மிகவும் உயர்ந்த விலையில் கொள்வனவு செய்தமை   கண்டறியப்பட்டது.

பாதிக்கப்படக்கூடிய குழுக்களின் மீதான தாக்கத்தை கணித்தல்

கொள்ளைநோய் தொற்றினால்  கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பின்தங்கிய சமூகங்களின் மீட்பு மற்றும் பல்வேறு அரசாங்க உதவிகள் மற்றும் வலுவூட்டல் செயற்திட்டங்களின் செயல்திறனைக் கண்காணிக்கவும் தரவுகள் ஊடகவியலாளர்களுக்கு  பெரும் உதவியாக இருக்கும். தரமான அறிக்கையிடலுக்கு வழிவகுக்கும் வகையிலான சில கேள்விகள் பின்வருமாறு:

  • தொற்றுநோய் பரவத்தொடங்கிய  ஆறு முதல் 12 மாதங்களுக்குப் பிறகு, நமது சமூகத்தில் உள்ள ஏழ்மையான குடும்பங்களுக்கு என்ன நடந்தது?
  • வைரஸ் தாக்கத்தினால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு என்ன நடந்தது?
  • அரசு உதவி தேவைப்படுபவர்களுக்கு அது சென்றடைந்ததா?
  • தொற்றுநோய் தொடர்பான கொள்கைகள் அல்லது திட்டங்களை யாராவது தங்களது  சொந்த தேவைகளுக்காக  பயன்படுத்திக் கொண்டார்களா?

சமத்துவமின்மையைக் கண்காணிக்கவும்

தொற்றுநோய் பரவலானது வர்க்கங்களுக்கிடையிலான  இடைவெளியை அதிகரித்து, உங்கள் நாட்டில் சமத்துவமின்மையை அதிகப்படுத்தியிருந்தால், கோவிட்-19 தடுப்பூசியேற்றல்  நடவடிக்கைகளும் அதே பாதையைப் பின்பற்றும்.

ஊடகவியலாளர்கள் தவறுகளை அம்பலப்படுத்துவதற்கும், தரவுகளைப் பயன்படுத்தி செயற்பாடுகளில் திருத்தங்களைக் கோருவதற்கும் இது மற்றொரு வாய்ப்பாகும்.

இதற்கு ஒரு சிறந்த உதாரணம், தி லோக்கல் (The Local) எனப்படும்  – டொராண்டோவை தளமாகக் கொண்ட ஒரு சுயாதீன செய்தி இதழ் – ஒன்டாரியோ (Ontario) மாநிலத்தின் தடுப்பூசியேற்றல் உத்திகள் டொராண்டோவின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளை எவ்வாறு விடுபட்டன என்பதைக் காட்ட வரைபடங்களைப் பயன்படுத்தியது.

அடுத்த X தொற்றுநோய்க்கு தயாராகுதல்

பயிற்சிப்பட்டறைகளின் போது ஆராயப்பட்ட மற்றொரு கேள்வி, அடுத்த கொள்ளைநோய் தொற்றை தடுப்பது மற்றும் அதற்கான முன்னாயத்த பணிகளை மேற்கொள்ளல் ஆகும்.

பொதுவாக எதிர்வுகூறும் கலை ஊடகவியலாளர்களின்  நிபுணத்துவத்திற்குள் வரவில்லை என்றாலும், பதிய தோற்றுநோய் பரவல் தொடர்பான  குறிகாட்டிகளைக் கண்காணிப்பதன் மூலம் அவை பற்றி மக்களுக்குத் தெரியப்படுத்த முடியும் – உதாரணமாக, வனவிலங்கு வர்த்தகம் மற்றும் காடழிப்பு என்பவனவற்றை குறிப்பிடலாம்.

தரவுகளை கையாளும் புதிய திறன்களை உடனடியாகப் பயன்படுத்துங்கள்

செய்திக்கதைகளுக்கான யோசனைகளை மற்றும் தரவுகளைப் பயன்படுத்தி அறிக்கையிடலுக்கான வழிகாட்டுதல்களுக்கு மேலாக, இந்த பயிற்சிப்பட்டறை பங்கேற்பாளர்களுக்கு தரவுகளை காட்சிப்படுத்தலுக்கான (Data visualization ) சிறந்த நடைமுறைகள் மற்றும் இணையத்தில் காணப்படும் கருவிகளை அறிமுகப்படுத்தியது.

சில பங்கேற்பாளர்கள் புதிதாகப் தாங்கள் கற்றுக்கொண்ட  திறன்களை உடனடியாகப் பயன்படுத்த தொடங்கியிருந்தனர். அவர்களில் மலேசிய- சீன மொழி செய்தித்தாள் சின்செவ் டெய்லியின் (Sinchew Daily)  ஊடகவியலாளர்கள், இணைய காட்சிப்படுத்தல் கருவியான Flourish ஐப் பயன்படுத்தி, மலேசியாவின் சமீபத்திய கோவிட்-19 தொடர்பான நிலைமையை எடுத்துக்காட்டும் வகையில் பார்வையாளர்களை மிகவும் ஈர்க்கக்கூடிய வகையில் விளக்கப்படங்களை உருவாக்கியிருந்தனர்.

இந்த அறிக்கை  முதலில் WAN-IFRA இணையதளத்தில் வெளியிடப்பட்டது. மீள் பிரசுரம் செய்வதற்கான அனுமதியுடன் இங்கு மறுபிரசுரம் செய்யப்படுகிறது. எழுத்தாளர் குயெக் செர் குவாங் கெங் (Kuek Ser Kuang Keng)  வரும் நவம்பர் 2 ஆம் தேதி நடைபெறும் உலகளாவிய புலனாய்வு ஊடகவியல் மாநாட்டில், Data Journalism: Where We’ve Been, Where We’re Headed.  என்ற தலைப்பில் பேசுகிறார்.

 மேலதிக வளங்கள்

How the COVID-19 Pandemic Has Shaped Data Journalism

Tips on Making FOIA Requests About COVID-19

How Data Journalists Exposed the Real COVID-19 Death Toll in Brazil

Tips on Where to Get Coronavirus Data — and the Tools to Analyze It

குயெக் செர் குவாங் கெங் (Kuek Ser Kuang Keng), மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள ஒரு விருது பெற்ற டிஜிட்டல் ஊடகவியலாளர் ஆவார்.  GIJN தளத்தில் விவரமாக அறிமுகப்படுத்தப்பட்ட இவர் Data-N இன் நிறுவனரும் ஆவார். இந்நிறுவனம் தரவுகளை அன்றாட செய்திஅறிக்கையிடல்களுக்கு எவ்வாறு  பயன்படுத்துவது தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு உதவுகிறது. மேலும்   Data-N ஆனது,  Foreign Policy, BBC World Service, Mediacorp மற்றும் மலேசியாகினி (Malaysiakini) போன்ற வெளியீடுகளுக்கு தரவு, காட்சி மற்றும் ஊடாடும் கூறுகளுடன் கூடிய செய்திக்கதைகளை மேம்படுத்த உதவியுள்ளது.

மூலம்

This story was originally published by the Global Investigative Journalism Network (GIJN)

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments