Home Blog Page 42

பிழையான தகவல் பிரச்சாரம் மற்றும் இணையவெளி துன்புறுத்தல்களை எதிர்கொள்ள ஊடகவியலாளர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்வது எப்படி?

தனது 15 வருட ஊடகப்பயணத்தில்,  எரிக்லிட்கேவிற்கு (Eric Litke) தனதுசெய்தி அறிக்கையிடலுக்கு எதிர்வினையாக கோபத்துடன் தனக்கு எழுதப்படும் இமெயில்கள்(email) மற்றும்சமூக ஊடகங்களினூடாகஅனுப்பப்படும் செய்திகள் போன்றவற்றை எதிர்பார்ப்பது ஒன்றும் புதிய விடயமல்ல. “அது இந்தத் தொழிலுடன் சேர்ந்து வருவதுதான்,” என்றுஅவர் கூறினார்.

ஆனால்அவர் USA TODAY மற்றும் PolitiFact போன்ற நிறுவனங்களுக்கு உண்மை சரிபார்ப்பவராக பணியாற்ற தொடங்கிய பின்னர், தனது அறிக்கையிடல் தொடர்பானபொதுமக்களின் கருத்துப்போக்கில் ஒரு மாற்றம் நிகழ்ந்திருப்பதை அவர் உணர்ந்தார். PolitiFact Wisconsin என்பது லாப நோக்கற்ற Milwaukee Journal Sentinel மற்றும்PolitiFact என்ற இரண்டு நிருவனங்களிற்குமிடையில் உள்ள ஒரு கூட்டு ஆகும்.  அவர் எப்போதும் தான் பெருமையாக நினைக்கும் தனதுசெய்தி அறிக்கையிடல்களை, சமுக வலைத்தளப்பக்கங்களில் பகிர்வது வழக்கமாயிருந்தாலும், சமீபத்திய மூன்று வருடங்களில் அவர் பெற்றுக்கொண்டவசைச்செய்திகளில் பெரும்பாலனாவை அவருக்கு நெருக்கமான வட்டாரங்களிளிருந்துதான் அதிகமாக வந்திருந்தது.

அறிக்கையிடுவதில் நடுநிலைத்தன்மைக்காக பாடுபட்ட போதிலும், அவரது உண்மைச் சரிபார்ப்பு அறிக்கைகள் சில பேஸ்புக் (Facebook) உள்ளடக்கத்தை சரி செய்ய உதவுகிறது. இவ்வறிக்கைகள், முரண்பாடான அதேநேரம் மிகவும் உணர்ச்சிபூர்வமான எதிர்வினைகளைத் தூண்டுவதாக காணப்படுகிறது. சமீபத்தில் அவரது  ஒரு நீண்டகால நண்பர் பேஸ்புக்கில் அவரிடம் “ஒருகாலத்தில் முக்கியமான வேலைகளைச் செய்தார்” என்று கூறியிருந்தார்.

“நான்ஒருஉண்மையை சரிபார்க்கும் விடயம் தொடர்பாக அறிக்கையிடும்போதும், புலனாய்வுஅறிக்கையிடலைமேற்கொள்ளும்போதும்எதிர்வினையாகவரும் கருத்துகளில் மிகக்குறிப்பிடத்தக்களவு வித்தியாசம் உள்ளது,” என்று லிட்கே கூறினார். “இப்போது உள்ள இந்த உள்ளுணர்வு எதிர்வினையானது, மக்கள் ஆரோக்கியமானவிவாதங்கள், தரவு மற்றும் விமர்சன சிந்தனையுடன் ஒரு கலந்துரையாடலில் ஈடுபடுவதில் ஆர்வம் காட்டவில்லை. அவர்கள் இவ்வாறு யோசிக்கிறார்கள், ‘சரி, நீங்கள் இந்த நபரை இந்த வழியில் மதிப்பிட்டீர்கள், எனவே நீங்கள் இவ்வுலகில் கறைபடிந்த ஒரு நபர், அல்லது நீங்கள் பாராட்டப்பட வேண்டிய ஒரு சிறந்த நபர்,’ – இது நாங்கள் இங்கு எந்தப்பக்கத்தில் நிற்கின்றோம் என்பதை அடிப்படையாகக் கொண்டது.”

இன்னும் மோசமானது என்னவென்றால்அவர் ஒரு அநாமதேய நபரிடமிருந்துபெற்ற மிரட்டல்  தொனியிலான மின்னஞ்சல்தான். அதில், அந்நபர்தெரிவித்தது என்னவென்றால் அவரும் அவரது ஆசிரியர்களும்முடிவு செய்த விடயமானது, காவல்துறையை எச்சரிக்கும் அளவுக்கு தீவிரமானது என்பதே.

“இதுவரை என் வாழ்க்கையில் இப்படி ஒன்று வரவில்லை,” என்று அவர் கூறினார். “இது இன்று விடயங்கள் எங்கே என்ன நிலையில் இருக்கின்றன என்பதற்கான ஒரு குறிகாட்டியாகும், அதே நேரம் இப்படியானமின்னஞ்சல்களை அனுப்ப மக்கள் தயாராக இருக்கிறார்கள், இவற்றினை பார்க்கும்போதுநாங்கள் யோசிப்பது என்னவென்றால்,” ‘நீங்கள் என் வீட்டிற்கு முன்னால் வந்து நிற்கப்போகிறீர்கள் என்று நான் நினைக்கவில்லை, ஆனால் நாங்கள் சிலருக்குத் இது தொடர்பில் தெரியப்படுத்த வேண்டிய கட்டாய நிலையில் இருக்கிறோம். “

நிருபர்களுக்கெதிரான தற்போதைய விரோத மனப்பாங்கு, முன்பு இருந்த சாத்தியக்கூறுகள் தொடர்பில்கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கின்றது: அதாவதுஉடல் அச்சுறுத்தல்கள், தனிப்பட்ட விடயங்களை பகிரல் (doxxing), டிஜிட்டல் தனியுரிமை, பாதுகாப்பு மீறல்கள் மற்றும் அவர்களின் சமூக ஊடக கணக்குகளிலிருந்து அவர்களின் தனிப்பட்ட புகைப்படங்களை எடுத்து திரிபுபடுத்தல் போன்றவையாகும். இத்தகைய தாக்குதல்கள்,ஊடகவியலாளர்களின் பாதுகாப்பிற்கான உயிர்அச்சுறுத்தல்களாகமாறலாம்.

மேலும்அவர்களைசுதந்திரமான வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்தும் அதேவேளை தொழில்துறையை முழுவதுமாக கைவிட்டுவிடும்படி கட்டாயப்படுத்தலாம்.

இணையவெளிகளின்நடுநிலையான-புறநிலைஉண்மைத்தன்மைதாக்குதல்களைஎதிர்கொள்வதால், நிருபர்களும் தங்கள் டிஜிட்டல் பாதுகாப்பைப் பற்றி இருமுறை யோசிக்க வேண்டும்.

பிரிக்கமுடியாத வகையில் இணைப்பு : தவறான தகவல் மற்றும் இணையவெளி  துன்புறுத்தல்

இணையவெளி துன்புறுத்தல் என்பது ஒரு தனிநபர் அல்லது குழு வேறு ஒருவரை கடுமையான, பரவலான மற்றும் தீங்கு விளைவிக்கும் வகையில் குறிவைப்பதாகும். இது வெறுக்கத்தக்க பேச்சு, பாலியல் துன்புறுத்தல், ஹேக்கிங் மற்றும் டாக்ஸிங் உட்பட பல வகையான தந்திரங்களை உள்ளடக்கிய ஒரு பொதுவான சொல் ஆகும்.டாக்ஸிங்  என்பதுஒருவரின் தனிப்பட்ட தகவல்களை இணையவெளியில் பரப்புதலாகும்.

பெண் நிருபர்கள் இந்த இணையவெளிதாக்குதல்களின் தாக்கத்தினைவெகுவாக தாங்கிக்கொள்ள வேண்டியுள்ளனர். ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ)-United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO)  மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கான சர்வதேச மையம்-the International Center for Journalists ஆகியவற்றின் சமீபத்திய அறிக்கைஇணையவெளி துன்புறுத்தலை “பெண் பத்திரிகையாளர்களுக்கு சவால் விடுக்கும் புது முன்னரங்கு (போர்)” என்று அறிவித்தது. ஊடகத்துறையில் உள்ள700 க்கும் மேற்பட்ட பெண்களின் உலகளாவிய கணக்கெடுப்பில், 73% சதவீதத்தினர் எதாவது ஒருவித இணையவெளி வன்முறையை தாம்அனுபவித்ததாகக் கூறினர்.

பாலியல் வன்கொடுமை மற்றும் உடல் ரீதியான வன்முறை, டிஜிட்டல் பாதுகாப்பு தாக்குதல்கள், தங்களின் பாலியல்ரீதியாக திரிபுபடுத்தப்பட்ட புகைப்படங்கள், தவறான மற்றும் துஷ்பிரயோக செய்திகள், அவர்களின் தனிப்பட்ட நற்பெயர் மற்றும் தொழில்முறை நம்பகத்தன்மையை குறைத்து மதிப்பீட்டுக்கு உட்படுத்தும் முயற்சிகள் மற்றும் நிதி அச்சுறுத்தல்கள் போன்ற அச்சுறுத்தல்கள் தங்களுக்கு வந்ததாக பதிலளித்தவர்கள் கூறினர். சுமார் ஐந்தில் இரண்டு பங்கு பேர் தங்கள் மீது நடைபெற்ற  தாக்குதல்கள் திட்டமிடப்பட்ட தவறான தகவல் பிரச்சாரங்களுடன் தொடர்புடையதாகக் கூறினர்.

இணையவெளி துன்புறுத்தல்கள் பெரும்பாலும் பிழையான தகவல் பிரச்சாரங்களுடன் “பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது”, இது செய்தித்தாள்கள் மற்றும் பிற ஜனநாயக நிறுவனங்களை இழிவுபடுத்த முயல்கிறது, ஆனால் தனிப்பட்டரீதியில்ஊடகவியலாளர்கள் மீது நோக்கி திரும்பும் என்று பென் அமெரிக்காவினை (PEN America) சேர்ந்த அமெரிக்காவின் முதல் அரசியலைமைப்பு திருத்தத்திற்கும் மற்றும் வாக்களிக்கும் உரிமைகளுக்காக போறாடும் சட்டத்தரணி நோரா பெனாவிடெஸ் கூறினார். PEN Americaநிறுவனமானதுநாடு முழுவதும் ஊடகவியலாளர்கள் மற்றும் செய்தி அறைகளுக்கு பாதுகாப்பு பயிற்சிகளை வழங்குகிறது.

“இவை இணையவெளியில்ஊடுருவி வரும் பிரச்சனைகளாகும், மேலும் அவை தனித்துவமான வழிகளில் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அவர்களின் தந்திரோபாயமானது மக்கள் மத்தியில்  தொடர்ந்து சந்தேகத்தை விதைப்பதும்மக்கள் பார்க்கும் கதைகளை இழிவுபடுத்துவதாகும்,” என்று அவர் கூறினார்.

இரண்டு சந்தர்ப்பங்களிலும், பாதிக்கப்பட்டவர் சீரற்ற முறையில் இலக்கு வைக்கப்பட்டிருப்பதாக தோன்றினாலும், இத்தாக்குதல்கள் மிகவும் கச்சிதமாகஒருங்கிணைக்கப்பட்டிருக்கலாம்.(Media Manipulation Casebookஎன்பது ஆழ்ந்த விசாரணைகளின் தொகுப்பாகும், இது இணையவெளிதுன்புறுத்தல் மற்றும் தவறான தகவல் பிரச்சாரங்களில் உயர் மட்ட ஒருங்கிணைப்பைக் காட்டுகிறது. கோவிட் -19 கொள்ளைநோயின் ஆரம்ப காலகட்டங்களில், இணையத்தில் உள்ள கறுப்பின சமூகத்தினரை இலக்கு வைத்து நோய்பற்றிய தவறான மருத்துவ தகவல்கள் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.)

“இணையவெளி துன்புறுத்தல் மற்றும் தவறான தகவல் என்பன ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் அல்லது ஒரே ஈட்டியின் இரண்டு முனைகள் என நான் நினைக்கிறேன், இல்லையா?” PEN அமெரிக்காவின் டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் சுதந்திரமாக வெளிப்படுத்தல் திட்டங்களின் இயக்குனர் விக்டோரியா வில்க் (Viktorya Vilk) கூறினார். “இரண்டு நிகழ்வுகளினதும் குறிக்கோள், தவறான தகவல் அல்லது திட்டமிட்டு பரப்பப்படும் பிழையான  தகவல்களை பரப்பி பெரிய அளவில்தாக்கத்தை ஏற்படுத்துவதாகும். அவர்கள் சர்ச்சைக்குள்ளாக்கி, மதிப்பிழக்க முயற்சிக்கும் துல்லியமான தகவல் நம்பத்தகுந்தஆதாரங்களில் இருந்து வருகிறது. அதைச் செய்வதற்கு, அந்த தொழில்முறை நம்பகரமான ஆதாரங்கள் நம்பகமானவை அல்ல என்பதை நிரூபிக்க வேண்டும். மேலும்அதன்நம்பகத்தன்மையைகேள்விக்குட்படுத்த அல்லது நீர்த்துப்போகச் செய்ய விரும்பினால், துல்லியமான, தொழில் ரீதியாக தயாரிக்கப்பட்ட தகவல்களுக்குப் பின்னால் உள்ளஊடகவியலாளர்களை அவமதிக்கவும், மிரட்டவும், அவர்களது குரலை நசுக்கவும்வேண்டியிருக்கும்,”

ஆனால் இரண்டு சிக்கல்களும் எப்பொழுதும் ஒன்றாகச் பயணிக்கின்றன என்று அர்த்தமல்ல. அனைத்து இணையவெளி துன்புறுத்தல்களும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இல்லை; சில நேரங்களில் இது உண்மையிலேயே மிகவும் குழப்பமகரமாக இருக்கிறது, ஏனெனில் கோபமடைந்த சமூக ஊடக பயனர்கள் அனைவரும்தங்கள் கோபத்துக்கு காரணமான ஒருவரை இலக்கு வைத்து செயற்படுவர்.

பிழையான தகவல்கள் மற்றும் இணையவெளி துன்புறுத்தல்களுக்கிடையேயானபலஒற்றுமைகள் இருந்தபோதிலும், அவைஅதே வழியில் ஆய்வு செய்யப்பட்டுபுரிந்து கொள்ளப்படவில்லை. பெனாவிடெஸ்(Benavidez) மற்றும் வில்க் (Vilk) ஆகியோரின் கருத்துப்படி, பிழையான தகவல்தொடர்பான ஆராய்ச்சிகள்,சமூக ஊடகங்களில் மோசமான செல்வாக்கு செலுத்துபவர்களின் வலையமைப்புகள், bots எனப்படும்சமூக ஊடக தானியங்கி கணக்கு வலையமைப்பு மற்றும் போலியான புதிய விற்பனை நிலையங்களை கண்டறிய அர்ப்பணிக்கப்பட்டுள்ள அதேவேளை, இணையவெளி துன்புறுத்தல்கள் தொடர்பில் மிகக்குறைவான விஞ்ஞான ஆராய்ச்சிகளே மேற்கொள்ளப்பட்டுளன. பெரும்பாலும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள்,  தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள சிக்கலானபொறிமுறைகளைத் தோண்டி எடுப்பதற்குப் பதிலாக, டாக்சிங் (doxing) எனப்படும் தனிப்பட்ட ஒருவரின் தகவல்களை வெளியிட்டு அவமானப்படுத்தல் அல்லது வேறுவிதமாக தனிநபர்களை இலக்காகக் கொண்டு நடாத்தப்படும் நிகழ்வுகளில் அதிகமாக கவனம் செலுத்துகிறார்கள்.

“இந்த விஷயங்கள் தொடர்பில்நல்ல தடயவியல் விசாரணைகள் கைவசம்இல்லாததால், எங்களிடம் நிறைய சான்றுகள் இல்லை” என்று வில்க் கூறினார். “இணையத்தின் இருண்ட மூலைகளில் அனைத்து வகையான ஒருங்கிணைப்புகளும் நடக்கலாம். ஆனால் இந்த [துன்புறுத்தல் பிரச்சாரங்கள்] எவ்வாறு ஒருங்கிணைக்கப்படுகின்றன என்பதை அளவிட எங்களுக்கு நிறைய ஆதாரங்கள் இல்லை. “

இலக்கு வைப்படுவதற்கு முன் உங்கள் இணைய இருப்பினை  எப்படி உறுதி செய்வது?

உள்ளூர் ஊடகவியலாளர்கள், டொக்ஸ்ட் (doxxed), எனப்படும் இணையவெளிதுன்புறுத்தல்களுக்குள்ளாவது என்பதுஒருதொலைதூர கற்பனையான சூழ்நிலையைப் போலவும்இது தேசிய ஊடகங்கள் சார்ந்த அல்லது மற்ற நாடுகளில் உள்ள ஊடகவியலாளர்களுக்கு  மட்டுமே நிகழ்கிறது என்றும் உணரலாம்.

“இது இன்னும் பெரும்பாலான மக்களை பொறுத்தவரையில்  தற்போதுநடைபெற்றுக்கொண்டிருக்கும் இணையவெளி தாக்குதல்களின் ஒரு புதிய பதிப்பாகும்” என்று லிட்கே கூறினார். “இவ்வாறான சம்பவம்  யாருக்காவது நடந்தது தொடர்பில் உங்களுக்குத் தெரியாமல் இருக்கும்வரை, அது உண்மையாக இருக்காது என்ற எண்ணமே இருக்கும்.”

ஆனால் பொதுமக்களின்அன்றாடசொற்றாடல் விடயங்களின்ஒவ்வொரு அம்சத்திலும் தவறான மற்றும்திட்டமிட்டு பரப்பப்படும்பிழையான தகவல்கள் ஊடுருவி வருவதால், ஊடகவியலாளர்கள்இணையவெளியில் துஷ்பிரயோகம் செய்பவர்களால் குறிவைக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. PEN அமெரிக்காவின் ஆன்லைன் துன்புறுத்தல் கள கையேட்டின் படி, இணையவெளிதுன்புறுத்தலால் டொக்ஸ்ட் (doxxed), ஆள்மாறாட்டம் அல்லது வேறுவிதமாக இலக்கு வைக்கப்படுவதற்கான சாத்தியப்பாடுகளை கருத்தில்கொண்டு அதனை எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறோம் என்றுஅதற்குதயாராக இருப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தெற்கு புளோரிடாவில் (South Florida) உள்ள செமினோல் ட்ரிப்யூனின் (Seminole Tribune) ஊடகவியலாளர் டாமன் ஸ்காட் (Damon Scott), பிழையான  தகவல்கள் தொடர்பில் அறிக்கையிடுவது மற்றையபெரும்பாலான செய்தித்தலைப்புகளில்அறிக்கையிடுவதை விட வித்தியாசமாக இருப்பதாக உணர்வதாக கூருகின்றார். 2020 ஆம் ஆண்டில், உலகளாவிய உண்மைச் சரிபார்ப்பு நிறுவனமானFirst Draft இன்தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தியாளராக (News Fellow), உள்ளூரில் மேற்கொள்ளப்பட்ட தவறான மற்றும்திட்டமிட்டு பரப்பப்படும்பிழையான தகவல்கள் தொடர்பில்அவர் கண்காணித்தார். கடந்த வருடத்திற்கு முன்புவரை, அவர் பிழையான தகவல்கள் தொடர்பில் ஆழ்ந்த ஆராய்ச்சியில் இறங்கவில்லை. இது தொடர்பில் மிகவும் மேலோட்டமானபார்வையுடன் சென்றிருந்த அவர், இவ்வாறான விடயங்களை பின்னாட்களில், தனதுதினசரி வாழ்க்கையில் அன்றாடம்பயன்படுத்த வேண்டியிருக்கும் என்று நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

“இந்த புலமைப்பரிசிலுக்காகநாங்கள் செய்ததைப் போல, இதற்கு முன்னர்  தவறான தகவல் தொடர்பில்  நான் ஒருபோதும் ஆற அமர்ந்து  பகுப்பாய்வு செய்யவில்லை, மேலும்அது என் மனநிலையையும் என் உயிர்த்துடிப்பையும் எவ்வாறு பாதித்தது என்பதற்கு நான் தயாராக இருக்கவில்லை,” என்று அவர் கூறினார். “முழு அனுபவமும் நான் நினைத்ததை விட மிகவும் வேதனையாக இருந்தது. நான் அதை மீண்டும் செய்ய வேண்டியிருந்தால், நான் அதை செய்வேன், ஆனால் நான் நினைத்ததை விட இது இத்துறைசார்ந்து நிறைய விடயங்களை நான் கற்றுக்கொண்டேன். “

அவர் குறிப்பாக இப்பிரச்சனையின் அளவு தொடர்பாக அவ்வளவு ஊக்கமற்று இருந்திருந்தார். அதற்கு இன்னுமொரு காரணம்,பல சமூக ஊடகங்களில்குறிப்பிடத்தக்க பின்தொடர்வோரை கொண்ட செல்வாக்கு செலுத்தும் நபர்கள்(influencers)பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டதுமாகும்.ஆனால் ஒரு உள்ளூர் நிருபராக புளோரிடா-குறிப்பிட்ட தகவல் கோளாறுகள் பற்றிய செய்திமடல்களைத் தயாரிக்க திரைக்குப் பின்னால் அவர்பெரும்பாலும் பணியாற்றினார். ஸ்காட் தனது டிஜிட்டல் பாதுகாப்பு குறித்து மிதமான அக்கறை கொண்டிருந்த காரணத்தால் சமூக ஊடகங்களில் மோசமாகசெயற்படும் நபர்களுடன்  நேரடியாக தொடர்புகள் எதுவும் கொண்டிருக்கவில்லை.

அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நண்பர்கள் பட்டியலில் அனேகமான எல்லோரையும் நீக்கி, தனது பயனர்பெயர் மற்றும் கணக்கையும் மாற்றி தொழில்சார் ரீதியாக சமூக ஊடகங்களில் தனது இருப்பை கடுமையாக்கினார்.

“இந்த [பேஸ்புக்] குழுக்களில் யாருக்கும் முன்பு நான் யார் என்று தெரிந்திருக்க முடியாது, ஆனால் அவர்கள் என்னை கண்டுபிடிக்க முயற்சித்தால், அவர்களால் கண்டுபிடிக்க முடியும்,” என்று அவர் கூறினார்.

ஒரு ஆதரவு வலையமைப்பை  உருவாக்குவது உயிர்ப்புடன்செயலில் இருக்க மற்றொரு பயனுள்ள வழியாகும். நிருபர்கள் துல்லியமானசெய்தி அறிக்கைகளை  உருவாக்கி, அவர்களின் இணையத்தள சமூகங்களில் நம்பகமான ஆதாரங்களாக மாறினால் அவர்கள் ஹேக்கர்கள் மற்றும் ட்ரோல்களால் தாக்குதல்களுக்குஇலக்காகும்போது பாதிப்புக்குள்ளாவதுகுறைவானதாக இருக்கும். “உங்களிடம் ஒரு நல்ல மதிப்புடன் ஒரு பெயர் கிடைத்தவுடன், உங்களுக்கு என்ன நடக்கிறது என்பதை நீங்கள் மக்களுக்குச் சொல்லலாம், மேலும் அவர்கள் உங்கள் உதவிக்கு வருவார்கள்.  நீங்கள் எந்த வகையான உதவியை விரும்புகிறீர்கள் என்று அவர்களுக்கு சில வழிகாட்டுதல்களையும்  வழங்க முடியும்,”என்றுவில்க் கூறினார்.

உதாரணமாக, ஒரு நிருபர் தொடர்பில்சமூக ஊடகங்களில் ஆள்மாறாட்டம் செய்யப்படுவதைக் கண்டறிந்தால், தான் சார்ந்த வலையமைப்பில் இருப்போரை  இது தொடர்பில் அவர்களை புகாரளிக்க கோருவது குறிப்பிட்ட  கணக்கைவிரைவாக அகற்றப்படும் வாய்ப்பை அதிகரிக்கும்.

“அந்த விஷயத்தில் அதனைப் பற்றி பேசுவது மிகவும் முக்கியம்,” என்று வில்க் கூறினார். “இது நான் அல்ல, தயவுசெய்து இந்தக் கணக்குக்கு எதிராக புகாரளிக்க எனக்கு உதவுங்கள். என்னைப்போல் யாரோ ஆள்மாறாட்டம் செய்கிறார்கள், இந்தக் கணக்கிலிருந்து வரும் எதையும் நம்ப வேண்டாம்.”

நிருபர்கள் தங்கள் வலையமைப்புகளுக்குள் நம்பிக்கையை வளர்ப்பதற்கான ஒரு வழி, சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி அவர்களின் செய்தி சேகரிப்பு செயல்முறை பற்றிய விளக்கங்களை வழங்குவதாகும், என்றுபெனாவிடெஸ் கூறினார்.

“இது சிலவேளைகளில் வீட்டுப்பாடமாகத் தோன்றலாம்ஆனால் அது போன்ற சிறிய விடயங்கள் மூலம் கட்டியெழுப்படுபவை  நம்பமுடியாத அளவிற்கு விடயங்களை நகர்த்தும் அதேவேளை வாசகர்களுக்கும்பிரயோசனமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் கூறினார்.

 “தவறான தகவல் பிரச்சாரம் உங்களை அல்லது உங்கள் செய்தி அறையை குறிவைக்கும்போது நீங்கள் முன்கூட்டியேபயன்படுத்தும் கருவிகளாக அவை உதவும்.”

துஷ்பிரயோகம் செய்பவர்களை விட ஒரு படி மேலே இருக்க மற்றொரு வழி, ஒருவரின் சமூக ஊடக கணக்குகள் மற்றும் இணையவெளி இருப்பை மேலும் இறுக்குவதாகும் என்று வில்க் கூறினார்.

“ஊடகவியலாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால், அவர்கள் விஷயங்களை புலனாய்வு செய்யநன்றாகபயிற்சி பெற்றிருக்கிறார்கள், அனால்அவர்கள் அதை ஒருபோதும் தம்பக்கம்திருப்பிவிட மாட்டார்கள்,” என்று அவர் கூறினார். “ஆனால் அவர்கள் இப்போது அதைத்தான் செய்ய வேண்டும் – அவர்கள் அடிப்படையில் ஒரு டாக்சரைப் போல சிந்திக்க வேண்டும். இணையத்தில் தங்களின் பெயரில்  என்ன இருக்கிறது மற்றும் அந்த தகவலை எப்படிப் பெறுவது என்பதைப் புரிந்து கொள்ள இணையவெளியில்  தங்கள் சொந்த தடங்களை தோண்ட ஆரம்பிக்க வேண்டும்.”

  1. உங்களை நீங்களே கூகிள் செய்து கொள்ளுங்கள்: இது “வெளிப்படையான நகைச்சுவையாக” தோன்றினாலும், வில்க் கூறியது என்னவென்றால் , உங்கள் பெயர், கணக்கு குறிச்சொற்கள், தொலைபேசி எண் மற்றும் வீட்டு முகவரியை பல்வேறு தேடுபொறிகள் மூலம் தேடிப் பாருங்கள். கூகிளில் இருந்து தொடங்கவும், ஆனால் அங்கு நிறுத்த வேண்டாம். கூகிளானதுஒவ்வொரு தனிப்பட்ட பயனருக்கும் விசேடமானதேடல் முடிவுகளைத் தருகிறது, அதாவது ஒரு டாக்ஸர் உங்கள் தனிப்பட்ட தகவலைத் தேடும்போது வெவ்வேறு முடிவுகளைப் பெறுவார். தனிப்பட்டரீதியில் தேடல்  முடிவுகளை வடிகட்டி அளிக்கும் தேடல்போறிகளை தவிர்த்து, பயனர்களின் தனியுரிமைக்கு முன்னுரிமை அளிக்கும் DuckDuckGoபோன்ற தேடுபொறியைப் பயன்படுத்தவும். உங்களின் இணையவெளி  தடம் பற்றிய இன்னும் முழுமையான பார்வைக்கு, சீன தேடுபொறி Baidu மூலம் உங்கள் தகவல்களை கொடுத்து இயக்கவும்.
  2. விழிப்பூட்டல்களை (alerts)உருவாக்கவும்: உங்கள் பெயர் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் இணையவெளியில்  குறிப்பிடப்படுவதை 24 மணிநேரமும் கண்காணிக்க முடியும் என்று எதிர்பார்க்க முடியாது – நீங்கள் அவ்வாறு  செய்ய வேண்டியதில்லை. உங்கள் பெயர், கணக்கு குறிசொற்கள், தொலைபேசி எண் மற்றும் வீட்டு முகவரிக்குGoogle alerts விழிப்பூட்டல்களை அமைக்கவும். உங்கள் தொடர்பான தகவல்கள்இணையவெளியில் பரவத் தொடங்குகிறதா என்று குறைந்தபட்சம் உங்களுக்குத் தெரியும். “நீங்கள் அதை வேண்டுமானால் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் செய்யலாம்” என்று வில்க் கூறினார்.
  3. உங்கள்இணையத்தள இருப்பை கண்காணியுங்கள்: உங்கள் சமூக ஊடகத்தளங்களில் இருக்கும் கணக்குகளில் settings இனை இறுக்குவது மிக முக்கியமான படியாகும், அதனால் மோசமான நபர்களுக்கு உங்கள் தனிப்பட்ட தகவல்களையோ அல்லது உங்கள் அன்புக்குரியவர்களையோ அணுக முடியாது. எந்த நோக்கத்திற்காக நீங்கள் எந்த கணக்குகளைப் பயன்படுத்துகிறீர்கள் என்பது பற்றி அவதானமாகவும் சில உத்திகளையும் கடைப்பிடியுங்கள்என்றுVilk பரிந்துரைகிறார்.
  • நீங்கள்உங்கள் கதைகளைப் பகிரவும், சக ஊழியர்களுடன் பழகவும், உங்கள் பார்வையாளர்களுடன் தொடர்பு கொள்ளவும் ட்விட்டரைப்(Twitter) பயன்படுத்தும் ஒரு ஊடகவியலாளர் எனில், அதைகண்டிப்பாகதொழில்ரீதியான நோக்கத்திற்கு மட்டும் வைத்திருங்கள்.இதுஉங்கள்பூனையின்படங்கள்அல்லது உறவினர்களுடனான விடுமுறை படங்களை பகிரும்இடம் அல்ல, மேலும் நீங்கள் மறந்துபோன சங்கடமான ட்வீட்டுகள் மற்றும் புகைப்படங்களை அகற்றுவது மிகவும் புத்திசாலித்தனமானது. நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள், உங்கள் பிறந்த நாள், உங்கள் செல்போன் எண் அல்லது உங்களது நடமாட்டத்தை கண்காணிக்கப் பயன்படும் வேறு எதையும் பகிர வேண்டாம். “உங்கள் நாய் மற்றும் உங்கள் குழந்தையின் புகைப்படங்களை பகிர  நீங்கள் இன்ஸ்டாகிராமைப் (Instagram) பயன்படுத்துகிறீர்கள் என்றால், உங்கள் கணக்கினை தனிப்பட்டதாக அமைத்து, நீங்கள் விரும்புவதை அங்கே பகிர வேண்டும்,” என்று அவர் கூறினார். “ஆனால் அது பொதுக் கணக்குகளிலிருந்து வேறுபட்டதாகஇருக்க வேண்டும்.”
  • பழையCVகள்மற்றும் சுயவிபரக்கொவைகளை தேடுங்கள்: இணையத்தின் சமீபகால சகாப்தத்தில், ஊடகவியலாளர்கள்  மற்றும் கல்வி ஆராய்ச்சியாளர்கள் தமதுCV கள், ரெஸூம்கள் மற்றும் சுயவிபரக்கொவைகளை தனிப்பட்ட வலைத்தளங்களில் பதிவேற்றுவது வழக்கம். இன்னும் இணையவெளியில் அவ்வாறு மறந்துபோன ஆவணங்களைத் தேடுங்கள், ஏனெனில்  டாக்ஸராக இருப்பவர்களுக்கு இவை  தங்கச் சுரங்கங்களாகச் செயல்படலாம்.
  • தரவு தொடர்பான  தரகர்களை மறந்துவிடாதீர்கள்: ஒரு ஊடகவியலாளராக, ஸ்போகியோ(Spokeo) மற்றும் வைட் பேஜஸ் (Whitepages) போன்ற தரவு சார் தரகர் வலைத்தளங்களை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இத்தகைய வலைத்தளங்கள் தனிப்பட்ட தகவல்களுக்காக இணையத்தை தேடி எடுத்து அதை விற்கின்றன. அவைடாக்ஸர்களுக்கு ஒரு இலக்கைக் கண்டுபிடிக்க மிக எளிதான வழியையும் கொடுக்கின்றன. ஆகஸ்ட் 2020 நிலவரப்படி, பயனர்கள் வலைத்தளத்தின் உதவிப் பக்கத்தில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் அவர்களின் தனிப்பட்ட தகவல்களை Whitepages.com இலிருந்து அகற்றுமாறு கோரலாம். படிப்படியான நெறிமுறை இல்லாத வலைத்தளங்களுக்கு, உங்கள் தனிப்பட்ட தகவல்களை நீக்குமாறு மின்னஞ்சல் மூலம் கோரலாம். இது அதிக நேரத்தை எடுத்துக்கொண்டால், DeleteMeஅல்லது PrivacyDuckபோன்ற சந்தா சேவைகளைக் கருத்தில் கொள்ளவும், இருப்பினும் செலவு ஒரு தனிப்பட்ட ஊடகவியலாளருக்கு ஈடுசெய்ய கடினமாக இருக்கலாம்.
  • நல்லகடவுச்சொல்பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள்:  இது ஊடகவியலார்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் பொருந்தும். உங்கள் அனைத்து இணையத்தள கணக்குகளுக்கும் உங்கள் பிறந்தநாளை ஒரே ஆறு எழுத்து கடவுச்சொல்லாகப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், நீங்கள் தேவையில்லாமல் உங்கள் தனிப்பட்ட தகவல்களை ஹேக்கர்களுக்கு வெளிப்படுத்துகிறீர்கள், மேலும் யாரோ ஒருவர் உங்களைப் போல ஆள்மாறாட்டம் செய்வதை எளிதாக்குகிறீர்கள். நீண்ட கடவுச்சொல்லானது மிகவும் பாதுகாப்பானது. இரண்டு அடுக்குபாதுகாப்பு பொறிமுறையானது (Two-factor authentication) இன்னும் சிறந்தது. ஒவ்வொரு கணக்கிற்கும் வெவ்வேறு கடவுச்சொல்லைப் பயன்படுத்துவது மேலும் புத்திசாலித்தனமானது.

செய்தி அறைகள் தங்கள் ஊழியர்களை எவ்வாறு ஆதரிக்கின்றன

அவர்கள் இணையவெளிகளில் தங்கள் இருப்பை அதிகரிக்க முடியும் என்றாலும், தவறான தகவல் மற்றும் இணையவழி துன்புறுத்தல்போன்றஇரட்டை அரக்கர்களை எதிர்கொள்ள ஊடகவியலாளர்கள் மட்டும் தனித்து விடப்படக்கூடாது. யுனெஸ்கோ அறிக்கையின்படி, பல ஊடக முதலாளிகள், “இணையவழி வன்முறையை தீவிரமாக எடுத்துக்கொள்ள தயங்குவதாக தோன்றுகிறது”. (இணையவெளி துன்புறுத்தல் பற்றி முதலாளிகளிடம் பேச PEN அமெரிக்காவின் வழிகாட்டியைப் பார்க்கவும்.)

“நாம் அனைவரும் ஏதாவது செய்ய வேண்டும்,” என்று வில்க் கூறினார். “தனிப்பட்ட ஊடகவியலாளர்கள் சில குறிப்பிட்ட விஷயங்களைச் செய்ய வேண்டி இருக்கிறது. செய்தி அறைகள், தற்போது செய்வதைவிட மேலும் அதிகமாகச் செய்ய வேண்டும். மேலும் ஊடகவியலாளர்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துகொள்வதற்குத் தேவையான சிறந்த கருவிகள் மற்றும் வளங்களைஇந்தலங்கள் வழங்க வேண்டும். இது ஒரு மிகப்பெரிய பிரச்சனை, இது பல பங்குதாரர்கள் தொடர்புபட்ட ஓர்  தீர்வாக இருக்க வேண்டும். “

தவறான தகவல்கள் மற்றும் அவப்பெயர் ஏற்படுத்தும் பிரச்சாரங்களிலிருந்து துஷ்பிரயோகத்தை எதிர்கொள்ளும் ஊழியர்களுக்கு உதவும் வகையில் கொள்கைகள் மற்றும் நெறிமுறைகளை உருவாக்குவதன் மூலம் மிக மோசமான சூழ்நிலைகளுக்கு செய்தி அறைகள் உதவ முடியும்.

“இதுஅவமதிப்பு பிரச்சாரங்கள் உண்மையானவை என்ற செய்தியை அனுப்புகிறது மட்டுமின்றிசெய்தி அறைகள் அவற்றை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கின்றன,” என்று வில்க் கூறினார், மேலும் ஊடகவியலாளர்கள்தங்களுக்கு என்ன நடக்கிறது என்பதைப் பற்றி நிறுவனத்திற்குள், தாமேமுன்வந்து பேசுவதற்கு வசதியாக இருக்கும் ஒரு கலாச்சாரத்தை இதுஉருவாக்குகிறது.

அவள் எப்போதுமே இது தொடர்பில் வெற்றிபெறவில்லை, ஆனால் வில்க் ஊடகவியலாளர்களுக்கு  குறிப்பாக, கடுமையான தாக்குதல்களை எதிர்கொள்வோர் அவைபற்றி நிறுவனத்திற்குஅறிவிக்கஓர் உள்வீட்டு-அறிக்கையிடல் பொறிமுறையை உருவாக்க செய்தி அறைகளை ஊக்குவிக்கிறார். குறிப்பிட்டசெய்தி நிறுவனம் இந்த சிக்கலை ஒரு தொழில்நுட்ப நிறுவனம், சட்ட அமுலாக்கம் அல்லது ஒரு தனியார் பாதுகாப்பு நிறுவனத்திற்கு கொடுத்து அடுத்த நடவைக்கைகளுக்காக விரிவுபடுத்தலாம். தீவிரமான சூழ்நிலைகளில் ஊடகவியலாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான தெளிவான வழிகாட்டுதல்களை உருவாக்குவது மிக முக்கியமானது.

“சில நேரங்களில், நீங்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படிருக்கும்போது, ​​அது மிகவும் பதட்டமாகவும், பயமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது; நீங்கள் முடங்கிவிட்டீர்கள், “என்று அவர் கூறினார்.”எனவே உங்களிடம் ஒரு நெறிமுறை இருந்தால் நீங்கள் ‘சரி, நான் இதை இப்படி செய்யப் போகிறேன். இது நடக்கும்போது என் செய்தி அறையில் யாரிடம் பேசுவது என்று எனக்குத் தெரியும். ” என்று நம்பிக்கையுடன் செயலாற்றலாம்.

தனியாள் தொடர்பான தகவல்-நீக்கல் சேவைகளுக்கு சந்தா சலுகை வழங்குவதன் மூலமும், மனநல பராமரிப்பு மற்றும் சட்ட ஆலோசனைகளுக்கான ஆதரவு  வழங்குவதன் மூலமும் செய்தியறைகள் தங்கள் நிருபர்களை ஆதரிக்கலாம். இறுதியாக, ஒரு நிருபர் வீட்டில் பாதுகாப்பற்றதாக உணர்ந்தால் – ஒருவேளை அவர்கள் டாக்ஸ் செய்யப்பட்டிருக்கலாம் அதாவது அவர்களின் வீட்டு முகவரி இணையத்தில்பகிரப்பட்டிருக்கலாம் – அவர்களுக்கு செல்ல பாதுகாப்பான இடம் இருப்பதை உறுதி செய்வது அவர்களின் முதலாளியின் பொறுப்பு என்றுவில்க் கூறினார்.

“உண்மையைச் சொல்வதானால், இவ்வாறான விடயங்கள் நிறைய நடக்கவில்லை, ஆனால் அது நடக்கலாம் அல்லது நடந்து கொண்டிருக்க வேண்டும்.”

இத்தகைய விரிவான ஆதரவை தனித்தனியாக வழங்குவது பல பணப்பற்றாக்குறைக்குள்ளான செய்தியறைகளுக்கு சாத்தியமாக முடியாது. தவறான தகவல் மற்றும் இணையவெளி துன்புறுத்தல் பிரச்சாரங்கள் சுதந்திரமான ஊடகத்துறைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் அதே வேளையில், பல செய்தி நிறுவனங்கள் மிகக்குறைந்த வளங்களுடன் உள்ள  இந்த விடயத்தில் பல சவால்களுக்குள் மத்தியில் முன்னெடுத்து செல்கின்றன.

ஆனால் கோவிட் -19கொள்ளைநோய்காலத்தில் பல செய்தி நிறுவனங்கள் உயர்தர அறிக்கையை வழங்குவதற்காகமற்ற நிறுவனங்களுடன் கைகோர்த்ததை ஒரு சிறந்த வாய்ப்பை வில்க் பார்க்கிறார். டாக்ஸ்சிங் மற்றும் இணையவழி துன்புறுத்தல்களிலிருந்து தங்கள் ஊடகவியலாளர்களை பாதுகாக்க அதே கூட்டாண்மை மனப்பான்மை பொருந்தும், என்று அவர் கூறினார். உதாரணமாக, பொதுவான ஓர் பாதுகாப்பு நிபுணர் அல்லது உள் அறிக்கையிடல் அமைப்புக்காக பல செய்தி அறைகள் ஓர் கூட்டிணைவுக்கு முன் வரலாம்.

“இதுதான் எதிர்காலம் என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் கூறினார். “அது நடக்க வேண்டும், ஏனென்றால் தவறான தகவல் மற்றும் துஷ்பிரயோக பிரச்சாரங்கள் எந்த நேரத்திலும் கைவிடப்படும் என்று நான் நினைக்கவில்லை.”

மேலதிக வாசிப்புக்கள்

How to Dox Yourself

Digital Self-Defense for Journalists: An Introduction

Tips on Investigating Disinformation Networks from BuzzFeed’s Craig Silverman

இந்த கட்டுரை முதலில் விஸ்கான்சின்-மேடிசன் பல்கலைக்கழகத்தில் பத்திரிகை நெறிமுறைகள் மையத்தின் (Center for Journalism Ethics at the University of Wisconsin-Madison) இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இது அனுமதியுடன் இங்கே மீண்டும் வெளியிடப்படுகிறது.

ஹோவர்ட் ஹார்டி(Howard Hardee) விஸ்கான்சினின்-Wisconsin மேடிசனை-Madison தளமாகக் கொண்ட ஒரு சுதந்திர ஊடகவியலாளர் ஆவார். 2020 ஆம் ஆண்டில், விஸ்கான்சின் புலனாய்வு இதழியல் மையத்தில் (Wisconsin Center for Investigative Journalism )தேர்தல் ஒருமைப்பாடு செய்தியாளராகவும்First Draft fellow ஆகவும் அவர் சமூக ஊடகங்களில் தவறான மற்றும் திட்டமிட்டு பரப்பப்படும் பிழையான  தகவல்கள் தொடர்பாக அறிக்கையிட்டார். அவர் கலிபோர்னியாவில் இயற்கை பேரழிவுகள் மற்றும் வன ஆரோக்கியம் பற்றியும் விரிவாக எழுதியுள்ளார்.

மூலம்

This story was originally published by the Global Investigative Journalism Network (GIJN)

கைத்தொலைபேசியில் படங்களை சரிபார்க்க நான்கு விரைவான வழிகள்

GIJN, சமூக ஊடகங்களில் நீங்கள் காணும் புகைப்படம் உண்மையானதாஎன்பதைச் சரிபார்க்க, படங்களைச் சரிபார்ப்பதற்கான எங்கள் பிரபலமான படிப்படியான வழிகாட்டியைப் புதுப்பித்துள்ளது.

இன்றுபோலி படங்கள் இணையத்தில் வெகு பரவலாக பகிரப்படும் ஒரு பொதுவான விடயமாக இருந்த போதிலும், TinEye, Google Reverse Image Search, Photo Sherlock மற்றும் Fake Image Detector உட்பட பல எளிமையாகபயன்படுத்தக்கூடிய இலவச கருவிகள் இருப்பது ஒரு வகையில் அதிர்ஷ்டம்தான்.  இவை மூலம், ஒரு படத்தின் மூலம் என்ன, அவை திரிபுபடுத்தப்பட்டதா போன்ற விடயங்களை நாமே பரிசீலிக்க முடியும்.

 ஒரு விளம்பர பலகை, நான்கு நாடுகள், நான்கு செய்திகள்

Disinformation/பிழையானதகவல்என்பது தவறாக வழிநடத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் குறிப்பாக ஒரு அரசாங்கம் அல்லதுஅமைப்பொன்றினால் ஊடகங்களூடாக நடைபெறும் பிரச்சாரமாகும்.

Misinformation/தவறான தகவல் என்பது வேண்டுமென்றே பார்வையாளர்களை ஏமாற்றும் நோக்கத்துடன்பரப்பப்படும் தகவல்களாகும்.

ஒரு போலி படத்தை பகிர்வதை விட தவறான தகவல் அல்லது வேண்டுமென்றே பிழையான தகவல்களை விதைக்க பல வழிமுறைகள் உள்ளன. ஒரு புகைப்படத்தை டிஜிட்டல் முறையில் திரிபுபபடுத்தல்  என்பது பெரும்பாலும் ஒரு அரசியல் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கும் வகையில் மக்களை தவறாக வழிநடத்த எடுக்கப்படும் மற்றொரு முறையாகும்.

உதாரணமாக, 2006 அல்லது 2007 இல் பெல்ஜியத்தின் Médecins Sans Frontieresகற்பழிப்பிலிருந்து தப்பிப்பிழைத்தவர்கள் எங்கு சிகிச்சை பெறலாம் என்று சொல்வதை நோக்கமாகக்கொண்டு  லைபீரியாவில் ஒரு  விளம்பரப்பலகையாய் அமைந்தது.

சமீபத்தில்,இந்த விளம்பர பலகையின் திரிபுபடுத்தப்பட்ட,குழப்பம் விளைவிக்கும் வகையிலான ஒரு  புகைப்படம்சமூக ஊடகங்களில் பரவியது.AFP செய்தி நிறுவனத்தின்உண்மைச் சரிபார்ப்பு பக்கத்தில் குறிப்பிட்டுள்ளபடி, இப்படம்கறுப்பின மக்கள் தென்னாப்பிரிக்காவில், ஆபிரிக்க தேசிய காங்கிரஸினால் வழிநடாத்தப்படும் அரசின் ஆதரவுடன் பின்விளைவுகள் பற்றிஎதையும் கவலைப்படாமல் வெள்ளையர்களை கொல்லலாம் என்றுகூறியது. 

படத்தை இவ்வாறு திரிபுபடுத்துவது இது முதல் முறை அல்ல. ஸ்னோப்ஸ் முதன்முதலில் அதே விளம்பரப் பலகையைப் பற்றி 2016 இல் எழுதினார். இந்த குழப்பகரமான பதிப்பில், விளம்பரப் பலகையில் பாதிக்கப்பட்டவர் என்று காட்டப்படும் ஒரு பொன்னிற தலைமுடியைக்கொண்டவெள்ளையினத்துப்பெண்,கறுப்பின மனிதர்களால் தாக்கப்படுவதாக சித்தரிக்கப்படுகிறது.  இந்த முறை இது உணர்த்தும் உட்பொருள் என்னவெனில் : பின்லாந்தின் கிரீன் லீக் அரசியல் கட்சி (Green League)புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவான நிகழ்ச்சி நிரல் ஒன்றை  ஊக்குவித்தது, இது வெள்ளை இனப்பெண்களை ஆபத்தில் தள்ளி அவர்கள் வெளிநாட்டவர்களின் தாக்குதலுக்கு உள்ளாக்கும் என்பதாகும். அதே திரிபுபடுத்தப்பட்ட விளம்பர பலகை படம் ஸ்வீடனில் உள்ள குடியேற்ற எதிர்ப்புவாத குழுக்களால் இணையத்தில்  பகிரப்பட்டது. இதன்போதுபாதிக்கப்பட்டவரின் இனமும் வெள்ளையாக மாறியது மட்டுமன்றிஇதில் கையாண்ட சொற்களும் ஃபின்னிஷ்(Finnish) விளம்பர பலகையில் உள்ளதைப் போன்று பயன்படுத்தப்பட்டன,

எனவே, நான்கு வெவ்வேறு செய்திகளைக் கொண்ட ஒரு அடையாளம் எங்களிடம் உள்ளது. ஆனால் நீங்கள் உண்மையான அடையாளத்திற்கு அப்பால் பார்த்தால், பின்னணியில், அனைவரும் பொதுவான பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பது தெளிவாகிறது. முன்புறத்தில் அதே மனிதன், பின்னணியில் அதே வாகனங்கள் மற்றும் விளம்பர பலகையின் வலதுபுறத்தில் மின் வயர்களை கொண்டு செல்லும் அதே கம்பம் போன்றவை நான்கு வெவ்வேறு விளம்பர பலகைகளிலும் தெளிவாக புலப்படுகின்றன. ஆனால் அவற்றில் எது அசலானது என்பதை நீங்கள் எவ்வாறு சரிபார்க்கத் தொடங்குவீர்கள்?

Pix caption: சில குழப்பமானவைஉள்ளிட்டமேலே உள்ள படங்கள் அனைத்தும் விளம்பரப் பலகையின் ஒரே புகைப்படத்திலிருந்து வந்தவை. முதலில் MédecinsSans Frontieres என்னும் நிறுவனத்தினால் லைபீரியாவில் பாலியல் துஷ்பிரயோக எதிர்ப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இவ்விளம்பரப்பலகை அமைக்கப்பட்டது.
மேல் இடமிருந்து கடிகார திசையில்: லைபீரியாவில் உள்ள விளம்பர பலகையின் அசல் புகைப்படம்; துணை சஹாரா- ஆபிரிக்காவில் வாட்ஸ்அப்பில் பரப்பப்பட்ட திரிபுபடுத்தப்பட்ட படம்; ஸ்வீடன் மற்றும் பின்லாந்தில் இனவெறி, குடியேற்ற எதிர்ப்பு செய்திகளுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டபடங்கள்.
படம்: கணினி திரையை படம்பிடிக்கப்பட்டது. (Screen shot)

ஊன்றுகோளாக தூக்கி நிறுத்தும் கருவிகள்

சில நேரங்களில் சமூக ஊடகங்களில் ஒரு புகைப்படம், வீடியோ அல்லது பதிவொன்றினை  சரிபார்ப்பது ஒரு இணையத்தேடலைப் போல எளிமையாக இருக்கலாம். ஒரு நம்பகமான உண்மைச் சரிபார்ப்பு நிறுவனம் ஏற்கனவே உங்களுக்காக இந்த வேலையைச் செய்துள்ளது என்பதை நீங்கள் நன்றாகக் காணலாம்.

உதவிக்குறிப்பு: நீங்கள் சரிபார்க்க விரும்பும் முக்கியசொற்களை  அடிப்படை கூகிள் தேடல்பொறியைப்பயன்படுத்தி fact-check –(உண்மை சோதனை) என்பதையும் சேர்த்து தேடவும்.

TinEye

TinEye, ஒரு இலவச மற்றும் சக்திவாய்ந்த, படங்களைமறுதலையாக தேடுவதற்கான ஒரு தேடல் கருவி ஆகும். தேடப்படும்அதே போன்ற ஒரு படம் வெளியிடப்பட்ட பிற நிகழ்வுகளை இணையத்தில் கண்டுபிடிக்கவும் இது உதவுகிறது.

இது எனக்கு மிகவும் பிடித்த கருவியாகும், ஏனென்றால் மற்ற மறுதலையாகதேடும் தேடல் கருவிகளைப் போலல்லாமல், புகைப்படத்தின் “மிகவும் மாற்றப்பட்ட”-(“most changed)” , “பழமையான”-(“oldest”) மற்றும் “புதிய” –(“newest”)மறு செய்கைகளுக்கான கூடுதல் தேடல் வசதிகள் இதில் உள்ளன. மேலும்”மிகவும் மாற்றப்பட்டது” என்றவசதியைப்பயன்படுத்தி, அசல் லைபீரிய கற்பழிப்பு விளம்பர பலகையின் முடிவுகளைத் தேடுவது, விளம்பர பலகையின் பல்வேறு பதிப்புகளை காண்பிக்கும் அதேவேளை  நீங்கள்  தற்போது ஆராயும் புகைப்பட பதிப்போடு அதனைஒப்பிடலாம்.

ஒரு புகைப்படம் முதன்முதலில் எப்போது பயன்படுத்தப்பட்டது என்பதை அடையாளம் காண “பழமையானது”(“Oldest”) என்ற வசதி  பெரும்பாலும் உதவுகிறது. முதல் அல்லது பிற பயன்பாடுகள், நீங்கள் சரிபார்க்கும் திகதிக்கு முந்தியிருந்தால், ஏதோ தவறு இருப்பதாக அர்த்தம்.

TinEye, மற்ற பின்நோக்கிதேடும்தேடல் கருவிகளைப் போலவே, இணையத்தில் ஏற்கனவே வெளியிடப்பட்ட புகைப்படங்களை மட்டுமே கண்டுபிடிக்க முடியுமானதாக இருக்கும் என்பதை நினைவில் கொள்வது அவசியம். எனவே, யாராவது படத்தை எடுத்து, ஒரு வாட்ஸ்அப் குழுவில் மட்டும் பதிவிட்டு, இணையத்தில் பகிரவில்லை என்றால், உங்களுக்கு இவ்வாறான தேடுதலில் வெற்றி கிடைக்காது.

TinEyeமூலம் தேடுவது எப்படி?

  1. உங்கள்தொலைபேசியின்இணையஉலாவியில்TinEyeஐத் திறக்கவும். மொபைலுக்கான குரோம் (Chrome) மற்றும் பயர்பாக்ஸில் (Firefox), உங்கள் திரையின் மேல் அல்லது கீழ் வலதுபுறத்தில் உள்ள மூன்று புள்ளிகளை அழுத்தவும். கீழ்தோன்றும் மெனுவில் add to home screen- (முகப்புத் திரையில் சேர்)-என்பதை அழுத்தவும், “TinEye” என்று எடிட் செய்து , add–(சேர்) என்பதை அழுத்தவும். உங்கள் தொலைபேசியின் முகப்புத் திரையில் இப்போது TinEyeக்கு ஒரு குறுக்குவழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பு: நீங்கள் ஆப்பிள் நிறுவனத்தின் iPhone அல்லது iPad கருவிகளைபயன்படுத்துபவராயின், Safari இணைய  உலாவியை பயன்படுத்தி எவ்வாறு பிரதான திரையில் குறுக்கு வழி தொடுப்பை உருவாக்குவது தொடர்பில் இங்கு மேலதிக தகவல்களை அறியலாம். உங்கள் ஆப்பிள் சாதனத்தில் நீங்கள் Chrome ஐப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்.

  1. நீங்கள்சரிபார்க்கவிரும்பும்படத்தைஒருகீழ்தோன்றும்மெனுதோன்றும் வரை அழுத்திப் பிடிப்பதன் மூலம் சேமிக்க (save) அல்லது பதிவிறக்க (download) விருப்பத்தை அழுத்தவும். நீங்கள் படத்தை ஸ்கிரீன் கிராப் (screengrab) செய்து உங்கள் தொலைபேசியில் உள்ள புகைப்படங்கள் கோப்புறையில் சேமிக்கலாம். இல்லையெனில், நீங்கள் சரிபார்க்க விரும்பும் படத்தின் இணைய முகவரியை புகைப்படத்தின் மேல் கிளிக் செய்து அதன்URL முகவரியை நகலெடுத்து கொள்ளவும். நினைவில் கொள்ளப்பட வேண்டியது என்னவென்றால் , அது உண்மையான புகைப்படத்தின் URL ஆக இருக்க வேண்டுமே தவிர, அது தோன்றும் முழு வலைப்பக்கத்தின் முகவரி அல்ல என்பதாகும்.
  • உங்கள்முகப்புத்திரையில் TinEye ஐத் திறக்கவும். இப்போது உங்களுக்கு இரண்டு தெரிவுகள் உள்ளன. நீங்கள் “படத்தைப் பதிவேற்று-upload image” என்பதைத் தேர்ந்தெடுத்து உங்கள் தொலைபேசியின் படக் கேலரியில் சேமிக்கப்பட்ட படத்தின் நகலைத் தேடலாம் அல்லது புகைப்படத்தின் URL முகவரியைTinEyeதேடல் பட்டியில் உள்ளீடு செய்து தேடலாம்.
  • தேடல் முடிந்ததும், மேல் இடதுபுறத்தில் உள்ள sort by- (வரிசைப்படுத்து) பெட்டியில் கிளிக் செய்து கீழ்தோன்றும் மெனுவில் உள்ள விருப்பங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும் –உதாரணமாக‘பழமையானது”, “மிகவும் மாற்றப்பட்டது” போன்றவை. “மிகவும்மாற்றப்பட்ட” என்றவிருப்பத்தைத் தேர்ந்தெடுத்து மேலே உள்ள விளம்பரப் பலகையைப் பயன்படுத்தி, உண்மையான அசல் லைபீரிய பொது சேவையின் விளம்பர பலகை வெவ்வேறு நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப திரிபுபடுத்தப்பட்ட நிகழ்வுகளைத் தேடுங்கள். இப்போது நீங்கள் பார்க்க விரும்பும் புகைப்படத்தின் மீது  கிளிக் செய்யவும்.
  • புகைப்படம் எவ்வாறு திரிபுபடுத்தப்பட்டுமாற்றப்பட்டுள்ளது என்பதைப் பார்க்க, “உங்கள் படம்” மற்றும் “படப் பொருத்தம்” ஆகியவற்றுக்கு இடையில் மாற்றி ஒப்பிடவும்.

கூகிளின் மறுதலையான படங்களை தேடல் –Google Reverse Image Search

மறுதலையானபடத் தேடல் ஒன்றை செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியத் தகவல் என்னவென்றால், ஒரு புகைப்படம் முதலில் எப்போது பயன்படுத்தப்பட்டது, அது எந்த சூழலில் பயன்படுத்தப்பட்டது, அப்புகைப்படத்தின் ஆதாரம் மற்றும் ஆதாரம் நம்பகரமானதா என்பதாகும்.சில வருடங்களுக்கு முன்பு, பறக்கும் மரங்கொத்தியின் பின்புறத்தில் மரநாய் ஒட்டிக்கொண்டிருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலானது, பலர் அந்தஅற்புதமான படத்தை வைத்து தங்கள் சொந்த மீம்ஸாக உருவாக்கினர்.

ஒருபோலியான திரிபுபடுத்தப்பட்ட படத்தின் அனைத்து அடையாளங்களை அப்புகைப்படம் கொண்டிருந்த போதிலும், அது உண்மையான புகைப்படம் என்பதை நம்ப மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் தேடலின்போதுஅது முற்றிலும் உண்மை என்று தெரியவந்தது.புகைப்பட கட்டுரைத்தொடரொன்றில் வெளியான இப்புகைப்படம்,  பொழுதுபோக்கு  புகைப்படக் கலைஞரால் எடுக்கப்பட்டது.

பெற்றுக்கொண்ட தேடல் முடிவுகளில் ஒன்று, இப்புகைப்படத்தை எடுத்த புகைப்படக்கலைஞர் பிபிசிக்கு(BBC) வழங்கியநேர்காணல் ஆகும். இதில்அவர் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே சாத்தியமாகும் இந்த நம்பமுடியாத புகைப்படத்தை எப்படி படம்பிடித்தார் என்பதை விளக்குகிறார்.

குறிப்பு: TinEyeஇன் “மிகவும் மாற்றப்பட்ட(most changed)”” என்றசெயல்பாட்டைப் பயன்படுத்தி அதே தேடளை இங்கும் மேற்கொள்ள முடியும்.

கூகிளின்மறுதலையான படத் தேடலைப் பயன்படுத்துவது எப்படி?

  1. TinEyeக்கு மேலே உள்ள அதே “add to home screen-முகப்புத் திரையில் சேர்” முறையைப் பயன்படுத்தி  https://images.google.comஐ உங்கள் முகப்புத் திரையில் சேர்க்கவும்.
  2. நீங்கள் சரிபார்க்க விரும்பும் படத்தை சேமிக்கவும் அல்லது பதிவிறக்கவும். அதே போல அல்லது நீங்கள் சரிபார்க்க விரும்பும் படத்தின் இணைய முகவரியை நகலெடுக்கவும். மீண்டும், இது உண்மையான புகைப்படத்தின் URL ஆக இருக்க வேண்டுமே தவிர முழு வலைப்பக்கத்தினதும் அல்ல.
  3. உங்கள் முகப்புத் திரையில் குறுக்குவழியை/shortcut நீங்கள் சேமிக்கவில்லை என்றால், உங்கள் தொலைபேசியின் உலாவியில் https://images.google.ஐத் திறக்கவும்.
  4. இணைய உலாவி மெனுவைத் திறந்து கீழ்தோன்றும் மெனுவில் “Request desktop site-டெஸ்க்டாப் தளத்தைக் கோரு” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். Google Chrome இல், பயர்பாக்ஸின் மேல் வலதுபுறத்தில் அல்லது கீழ் வலதுபுறத்தில் உள்ள மூன்று புள்ளிகளை அழுத்துவதன் மூலம் மெனு காணப்படுகிறது. ஆப்பிளின் சஃபாரி இணையஉலாவியில், இது திரையின் கீழே மையத்தில் உள்ளது.
  5. இப்போது தேடல் பட்டியில் உள்ள கேமரா ஐகானை அழுத்தவும்.
  6. உங்களுக்கு இப்போது சில தெரிவுகள் உள்ளன: தேடல் பட்டியில் புகைப்படத்தின் URL ஐ ஒட்டவும் அல்லது உங்கள் தொலைபேசியில் இருந்து படத்தை உள்ளீடு செய்ய  “upload an image-ஒரு படத்தை பதிவேற்று” என்னும் தெரிவை தேர்ந்தெடுக்கவும்.
  7. தேடல் கருவி தனக்கு தரப்பட்ட வேலையை  கச்சிதமாக செய்து முடித்துள்ளது. படம் எப்போது, ​​எங்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம், அதே போல் முந்தைய பயன்பாடுகளின் சூழல் ஆகியவற்றை சரிபார்க்க இப்போது முடிவுகளைப் பார்க்கவும். நீங்கள் போதுமான அளவு திரும்பிச் சென்றால், அது எப்போது முதலில் பயன்படுத்தப்பட்டது மற்றும் புகைப்படத்தின் பதிப்புரிமை யாருடையது என்பதை நீங்கள் கண்டுபிடிக்க முடியும்.

உதவிக்குறிப்பு: Google Chrome ஐ உங்கள் வழமையான மொபைல் இணைய உலாவியாகப் பயன்படுத்தினால், ஒரு இணையதளத்தில் ஒரு புகைப்படத்தை நீண்ட நேரம் அழுத்தவும் மற்றும் கீழ்தோன்றும் மெனு தோன்றும். மறுதலையானபடத் தேடலைச் செய்ய “search with Google LensGoogle -லென்ஸுடன் தேடு-” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். (இதன்பழைய பதிப்புகள் “search Google for this imageஇந்த படத்தை கூகுளில் தேடு” என்று கூறலாம்.)

Photo Sherlock

நான் குறிப்பாக ஃபோட்டோ ஷெர்லாக் Photo Sherlock app செயலியை பயன்படுத்துவதை விரும்புகிறேன், ஏனெனில், இலவசமாக இருப்பதைத் தவிர, மூன்று வெவ்வேறு தேடுபொறிகளைப் பயன்படுத்தி மறுதலையாக  படத் தேடலைச் செய்ய இது உங்களை அனுமதிக்கிறது: கூகுள், யாண்டெக்ஸ் (Yandex) மற்றும் பிங் (Bing). ஒரு பத்திரிகை அல்லது செய்தித்தாளில் ஒரு சுவரொட்டி அல்லது புகைப்படத்தின் ஆதாரத்தை சரிபார்க்கவும் இதில் வசதி உள்ளது. முதலில், ஆண்ட்ராய்டு அல்லது ஐபோனுக்காக உங்கள் மொபைல் ஃபோனில் இச்செயலியை பதிவிறக்கவும்.

புகைப்பட ஷெர்லாக் செயலியை பயன்படுத்துவது எப்படி?

நீங்கள் புகைப்பட ஷெர்லாக் செயலியை திறந்தவுடன், உங்களுக்கு சிலதெரிவுகள்காணப்படுகின்றன:

  1. ஷட்டர் ஐகானைக் கிளிக் செய்வதன் மூலம் – ஒரு பத்திரிகை அல்லது செய்தித்தாளில் உள்ளஒரு சுவரொட்டி அல்லது படத்தின் புகைப்படத்தினைஎடுக்கவும்.
  2. இரண்டு கருப்பு முக்கோணங்களுடன் கூடிய வெள்ளை சதுரத்தை அழுத்தி ஒரு படத்தை பதிவேற்றவும். இது “கேலரி,” [கூகிள்] “டிரைவ்” மற்றும் “கோப்புகள்” உட்பட பல்வேறு கோப்புறை விருப்பங்களைக் கொண்டுவரும், இது நீங்கள் புகைப்படங்களை சேமித்து வைத்திருக்கும் பல்வேறு இடங்களுக்கு அணுகலை வழங்கும். நீங்கள் சரிபார்க்க விரும்பும் புகைப்படத்தைக் கண்டுபிடித்து அதை  தெரிவு செய்து அழுத்தவும்.
  3. செயலியின் பயன்பாடு இயல்புநிலையாக கூகிளைப் பயன்படுத்தி புகைப்படத்தின் ஆன்லைன் பதிப்புகளைத் தேடும். தேடல் முடிந்தவுடன் நீங்கள் மற்றொரு தேடுபொறியைப் பயன்படுத்த விரும்பினால், முதல் தேடல் முடிவுகளுக்கு  கீழே நடுவில் உள்ள அம்புக்குறியுடன் கூடிய சிறிய சதுர பெட்டியை அழுத்தவும். ரஷ்யா மற்றும் கிழக்கு ஐரோப்பாவை மையமாகக் கொண்ட சக்திவாய்ந்த தேடுபொறியான பிங் அல்லது யாண்டெக்ஸைப் பயன்படுத்த உங்களுக்கு விருப்பம் இருக்கும்.
  4. இப்போது ஹிட்ஸ் மூலம் தோண்டி, புகைப்படத்தின் முந்தைய பயன்பாடுகள், அது முதலில் பயன்படுத்தப்பட்ட தேதி மற்றும் அது பயன்படுத்தப்பட்ட சூழல் ஆகியவற்றைப் பார்க்கவும்.

போலி படங்களை  கண்டறிதல்

ஒரு படத்தின் ஆதாரம் மற்றும் உண்மைத்தன்மையை சரிபார்க்கும் போது இந்த செயலி இரண்டு நிலைகளில் செயல்படுகிறது. முதலாவது அதை உருவாக்கியவர்கள் “பிழை நிலை பகுப்பாய்வு- error level analysis ” என்று அழைக்கிறார்கள் – அடிப்படையில், ஒரு படத்தின் சிதைவு விகிதத்தை அதன் பகுதி சிதைக்கப்பட்டுள்ளதா என்று பார்க்கிறது. மற்றொன்று மெட்டாடேட்டா, நீங்கள் ஒரு புகைப்படத்தை எடுக்கும்போது தானாகவே உட்பொதிக்கப்படும் “திரைக்குப் பின்னால்- behind-the-scenes ” தரவாகும்.

உதவிக்குறிப்பு: இந்த கருவி ஆண்ட்ராய்டுக்கு மட்டுமே வேலை செய்கிறது, ஆனால் வெராசிட்டி- Veracity ஐபோன் பயனர்களுக்கு இதுஒரு நல்ல கருவியாகும். இது ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து )Appstore) இலவசமாகக் கிடைக்கிறது, எனவே அதைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது.

போலி படங்களை கண்டறிதலை எவ்வாறு பயன்படுத்துவது?

இந்த செயலியை பயன்படுத்தத் தொடங்க, Chrome அல்லதுFirefox இணைய உலாவிகளிருந்து இருந்து Fake Image Detector மென்பொருளை முதலில் பதிவிறக்கி நிறுவவும். பின்னர் பயன்பாட்டைத் திறந்து இரண்டு தெரிவுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்:

  1. கேலரியில் இருந்து தேர்வு செய்தல்; இது உங்கள் தொலைபேசியில் புகைப்படங்கள் சேமிக்கப்படும் இடங்களுக்கான அணுகலை வழங்குகிறது, இதனால் நீங்கள் மறுதலையான படத் தேடலைச் செய்யலாம்.
  2. சமீபத்திய படங்களிலிருந்து தேர்வு செய்தல்; ஒரு பத்திரிகை அல்லது சஞ்சிகையிலிருந்துநீங்கள் எடுத்த புகைப்படத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  • “டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் திரிபுபடுத்தப்பட்டது ,” “கேமராவிலிருந்து பெறப்பட்டது அல்ல,” “50-50 வாய்ப்பு,” அல்லது “ஒரு உண்மையான கேமராவிலிருந்து எடுக்கப்பட்ட  படத்தை போல” என்ற பதிலைப் பெறுவீர்கள். இது ஏதோ ஒருவித அறிகுறியாகும் என்பதையும் நீங்கள் எச்சரிக்கையுடன் மேலும்  தொடர வேண்டும் என்பதையும் கவனியுங்கள்.
  • ஒவ்வொரு முடிவுக்கும் கீழே, உங்கள் படத்தைப் பற்றிய மெட்டாடேட்டாவை நீங்கள் காணலாம்.  நீங்கள்மிகவும்கவனமாகபார்க்க வேண்டிய மிக முக்கியமான தகவல் இதுவாகும். அத்தகவல் அகற்றப்படாவிட்டால், அசல் பிரதி முதன்முதலில் உருவாக்கப்பட்ட தேதி, நேரம்,  மற்றும்அது எப்போது எடுக்கப்பட்டது போன்ற விடயங்களை அதுஉங்களுக்குத் தெரிவிக்கும்.

புகைப்படங்களை சரிபார்க்க சில உதவிக்குறிப்புகள்

ஒரு நிருபராக இதுவரைநீங்கள் வளர்த்துக் கொண்ட திறமைகளுடன், உண்மையான அல்லது போலியான ஒரு படத்தை எதிர்கொள்ளும்போது கேட்கவேண்டிய சில கேள்விகள் இங்கே:

  1. புகைப்படத்தின் அசல் பதிப்பைப் பார்க்கிறீர்களா?
  2. இது எப்போது முதலில் பயன்படுத்தப்பட்டது, இந்த பயன்பாடு நீங்கள் சரிபார்க்கும் பயன்பாட்டிற்கு முந்தையதா?
  3. இது முதலில் பயன்படுத்தப்பட்ட சூழல் என்ன? உண்மையான, எடிட் செய்யப்படாத புகைப்படங்கள் பெரும்பாலும் தவறாக வழிநடத்தும் நோக்கத்துடன் வேறு சூழ்நிலையில் பயன்படுத்தப்படுகின்றன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
  4. புகைப்படம்  எடுத்தது யார் என்று தெரியுமா? யார் அதனை எடுத்தது என்று தெரிந்தால், மேலதிக தகவல்களையும் சம்பந்தப்பட்ட சூழலையும் கேட்க நீங்கள் அவர்களைத் தொடர்பு கொள்ளலாம்.
  5. புகைப்படம் எங்கு எடுக்கப்பட்டது தெரியுமா? அதில் இருக்கும் மக்கள் என்ன அணிந்திருக்கிறார்கள்? படம் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் நாட்டின் உடைபாணிக்கு அவர்களின் உடைகள் பொருந்துமா?
  6. கடை ஜன்னல்கள் மற்றும்விளம்பர பலகைகள் மீதுள்ள எழுத்துக்கள், வாகனபதிவுத்தகடுகள், போக்குவரத்து அடையாளங்கள் மற்றும் பிற குறியீட்டுத்தகவல்களை புகைப்படத்தில் அடையாளம் கண்டு அப்புகைப்படம் எங்கே எடுக்கப்பட்டது என்பதை கண்டறிய முயலுங்கள். 
  7. புகைப்படத்தில் வானிலை எப்படி இருக்கிறது? புகைப்படம் எடுக்கப்பட்ட தேதி உங்களுக்குத் தெரிந்தால், புகைப்படத்தில் உள்ள வானிலை தோற்றத்திற்கு  பொருந்துமா என்று பார்க்க அந்த குறிப்பிட்ட நாளில் நிலவிய வானிலை நிலவரங்களைப்பெற WolframAlpha எனும் தளத்தை பயன்படுத்தவும்.
  8. புகைப்படத்தில் சீரற்ற வெளிச்சப்போக்குகள் இருக்கின்றனவா என்று   பாருங்கள். ஒன்றுகொன்று நெருக்கமான பொருள்கள் அதே வழியில் வெளிச்சமாக உள்ளதா  அல்லது சில இடங்களில்பிரகாசமாக அல்லது மங்கலாகத் தெரிகின்றனவா? அப்படியானால், அவைகள் செயற்கையாக  சேர்க்கப்பட்டிருக்கலாம்அல்லது டிஜிட்டல் முறையில் திரிபுபடுத்தப்படிருப்பதற்கும் வாய்ப்பு உள்ளது.
  9. புகைப்படத்தில் உள்ள நபர்கள் அல்லது பொருள்களைச்சுற்றி  மங்கலான வெளிப்புறக்கோடுகள் தென்படுகின்றனவா? அப்படியானால், இது திரிபுபடுத்தப்பட்டிருக்கலாம் என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.
  10. நிழல்களைப் பாருங்கள்.குறிப்பாக, மோசமாக திரிபுபடுத்தப்பட்ட புகைப்படங்களில் ஏதாவது சேர்க்கப்பட்டிருந்தால், நிழல்கள் மீள் உருவாக்க கடினமாக இருப்பதால் அவை அவ்வாறே விடப்பட்டிருக்கும்.
  11. தரமற்ற பட வடிவங்கள் அல்லது அளவுகள் தொடர்பில் கவனியுங்கள். புகைப்படம் தொடர்பான முக்கியமான சூழ்நிலையை அகற்றுவதற்காக புகைப்படம் எடிட்செய்யப்படுள்ளது என்பதற்கான அறிகுறியாகும்.
  12. இயற்கையில், ஒளி மற்றும் நிறத்தின் நுட்பமான மாறுபாடுகள் எப்போதும் உள்ளன. ஒரு புகைப்படத்தின் பெரிய பகுதிகள் ஒரே நிறத்தில் இருந்தால், ஏதாவது ஒன்றை நகலெடுக்க, சேர்க்க அல்லது நீக்க எடிட் செய்து திரிபுபடுத்துவதற்கு பயன்படும் மென்பொருள் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் குறிக்கலாம்.
  13. நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் இருக்கும்ஒரு துல்லியமான  புகைப்படத்தைப் பார்க்கிறீர்கள் என்றால், அவர்களில் பிரதிபலிக்கும் ஒளி சீராக இருக்கிறதா என்று அவர்களின் கண்களைப் பாருங்கள்.

ஒரு நிருபராக அல்லது ஒரு சாதாரண குடிமகனாக நாங்கள் ஒரு படத்தை பார்க்கிறோமா என்பது நம் அனைவருக்கும் முன் உள்ள ஒரு முக்கிய கேள்வி: புகைப்படத்தை எடுத்த நபரின் உள்நோக்கம் உங்களுக்கு தெரியுமா? அப்புகைப்படம் உங்களை வருத்தமாக, கோபமாக, அல்லது மற்ற வலுவான உணர்வுகளைத் தூண்டும் வகையில் உள்ளதா? திரிபுபடுத்தப்பட்ட அல்லது சூழலுக்கு  முற்றிலும்அப்பாற்பட்ட புகைப்படங்கள் பெரும்பாலும் மக்களின் உணர்ச்சிகளுடன் விளையாடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

கடைசியாக,உங்களுக்கு உறுதியாக தெரியவில்லை என்றால், அதனைபகிர வேண்டாம். நீங்கள் “போலி செய்திகள்” அல்லது பிரச்சனையின் தீர்வுக்கு  ஒரு பகுதியாகக்கூட  இருக்க முடியும்.

வளங்கள்

படங்களைமறுதலையாக தேடுவதற்காகஇன்னும் சில பெறுமதியானதேடல் கருவிகள் இங்கே:

  • FirstDraftNewsஇன் Verification Toolbox -சரிபார்ப்பு கருவிப்பெட்டி புகைப்படங்கள் மற்றும் யூடியூப் வீடியோக்களின் ஆதாரத்தை எளிதில் சரிபார்க்க உதவுகிறது. FirstDraftNews இணையதளத்தில் பயனுள்ள உண்மை சரிபார்ப்பு கருவிகள் மற்றும் ஆதாரங்களை நீங்கள் காணலாம், இதில் புகைப்பட கையாளுதல் பற்றிய வீடியோ மற்றும் புகைப்படங்களைச் சரிபார்ப்பதற்கானபதிவிறக்கம் செய்யக்கூடிய வளங்கள் காணப்படுகின்றன.
  • கூகிளின் உண்மை சரிபார்ப்பு எக்ஸ்ப்ளோரர் Google’s Fact Check Explorerஎன்பது ஒரு நபர் அல்லது தலைப்பு தொடர்பான உண்மைச் சரிபார்ப்புகளைக் கண்டறிய உதவும்  ஒரு முக்கிய தேடலாகும்.
  • தவறாக வழிநடத்தும் மற்றும் திரிபுபடுத்தப்பட்டிருக்கும்  ஆன்லைன் படங்களை எவ்வாறு கண்டறிவது என்பதற்கான முழு –FullFactவழிகாட்டி.
  • ஒரு புகைப்படம் போட்டோஷாப் செய்யப்பட்டதா அல்லது திரிபுபடுத்தப்பட்டிருக்கிறதா  என்பதை எப்படி சொல்வது என்று How-To Geek இன்வழிகாட்டி.
  • GIJN இன் உண்மை-சரிபார்ப்பு மற்றும் உறுதிப்படுத்தல்தொடர்பான வளங்களில், வீடியோ மற்றும் படங்களின்சரிபார்ப்புக்கான முக்கிய விடயங்களும்உள்ளடக்கப்பட்டுள்ளன.

மேலதிக வாசிப்புக்கள்

Advanced Guide on Verifying Video Content

GIJN Toolbox: Tracking Names and Websites, Verifying Video, a Clustering Search Engine

The Daily Quiz That Teaches Journalists How to Geolocate Images

3 Quick Ways to Verify Images on a Smartphone


ரேமண்ட் ஜோசப் (Raymond Joseph) ஒரு சுதந்திர ஊடகவியலாளர் மற்றும் ஊடக பயிற்றுவிப்பாளரும் ஆவார். அவர் தைரியமான பத்திரிகைக்கான 2021 நாட் நாகசா சமூக இதழியல் விருதைப் (Nat Nakasa Community Journalism Award for Courageous Journalism) பெற்றவர். அவர் ஊடகவியலாளர்களுக்கு இணையம் மற்றும் சமூக ஊடக உள்ளடக்கங்களை  சரிபார்ப்பது தொடர்பில் பயிற்சியை வழங்குகிறார் மற்றும் பாயின்டர் (Poynter) நிறுவனத்தின்சர்வதேச உண்மை-சரிபார்க்கும் நெட்வொர்க்கின் (International Fact-Checking Network)மதிப்பீட்டாளரும் ஆவார்.

மூலம்

This story was originally published by the Global Investigative Journalism Network (GIJN)

වනජීවි මිනිස් ගැටුම පාලනය කළ හැක්කක් මිස සම්පූර්ණයෙන්ම අවසන් කළ හැක්කක් නොවේ

ශ්‍රී ලංකාවේ නොනවතින අරගලයක්ව පවතින වනජීවී හා මිනිස් ගැටුම පිළිබඳව සාකච්ඡා කිරීම සඳහා විමර්ශනාත්මක වාර්තාකරන මධ්‍යස්ථානය විසින් සංවිධානය කරන ලද වනජීවි මිනිස් ගැටුම: ගැටළු විසඳුම් සහ කළමනාකරණය යන තේමාව යටතේ පැවැත්වූ හරිත සංවාදය පසුගිය දා (16) සාර්ථකව පැවැත් වූ අතර මෙහිදී විශේෂයෙන්ම පරිසර විද්‍යාත්මක පැතිකඩ මෙන්ම කෘෂි ආර්ථික සහ සමාජමය බලපෑම් සහ තිරසර කළමනාකරණ ප්‍රවේශයන් සම්බන්ධව විද්වත් අදහස් රැසක් සාකච්ඡා විය.

මෙම සංවාදය සඳහා සම්පත් දායකයන් වශයෙන් ජේෂ්ඨ සත්ත්ව විද්‍යාඥ, ශ්‍රී ලංකා විවෘත විශ්වවිද්‍යාලයේ ජේෂ්ඨ කථිකාචාර්ය ආචාර්ය කාලිංග පද්මලාල්, ජේෂ්ඨ සත්ව විද්‍යාඥ ආචාර්ය ජිනී දෑල, වනජීවී සංරක්ෂණ දෙපාර්තමේන්තුවේ අධ්‍යක්ෂ (මෙහෙයුම්) රන්ජන් මාරසිංහ සහ ශ්‍රී ලංකා ප්‍රතිපත්ති අධ්‍ය‍යන ආයතනයේ පර්යේෂක/ ප්‍රධානි (කෘෂි ආර්ථික ප්‍රතිපත්ති) ආචාර්ය මනෝජ් තිබ්බොටුවාව මහතා සහභාගි විය.

මෙම හරිත සංවාදය සඳහා පර්යේෂකයන්, රජයේ නිලධාරීන්, විශ්වවිද්‍යාල ශිෂ්‍යයින්, පරිසරවේදීන් සහ පරිසර ක්‍රියකාරීන් රැසක් සම්බන්ධ වූ අතර Facebook හරහා සජීවීව ප්‍රචාරණය කෙරිණි. විමර්ශනාත්මක වාර්තාකරණ මධ්‍යස්ථාන‌යේ “Stories from the Margins” වැඩසටහන හරහා මෙම සජීවී සංවාදය සංවිධානය කරන ලද අතර, “Earth Journalism Network” හි සහ “Internews” හි සහ‌යෝගයෙන් ඉදිරිපත් කෙරේ.

මෙම හරිත සංවාදයේදී විද්වත් මඬුල්ල විසින් සාකච්ඡාවට බඳුන් කල කාරණා සම්බන්ධව විස්තරාත්මක ලිපියක් පාරිසරික පුවත් වාර්තාකරණය වෙනුවෙන් වෙන් වූ BufferZone.lk වෙබ් අඩවියෙහි පළකොට ඇත.

கைத்தொலைபேசி ஊடகவியல் (Mobile Journalism) கையேடு: உங்கள் Mojo வேலையினை செயற்படுத்துவது எப்படி?

COVID-19 புதுப்பிப்பு: பெருந்தொற்றின் போது செய்தி அறிக்கையிடலென்பது மிகவும் சவாலானதும் இடர்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாகும். இங்கே இது தொடர்பான சில உசாத்துணைவளங்கள் தரப்பட்டுள்ளன.

பிபிசி நிறுவனத்தைச் சேர்ந்த கைத்தொலைபேசி ஊடகவியல் பயிற்றுநரான மார்க் செட்டில் (Marc Settle) தயாரித்த கட்டுரை: கைத்தொலைபேசி ஊடகவியலில் கொரோனா தொற்றின் தாக்கம்- Coronavirus’ impact on mobile journalism

கைத்தொலைபேசி ஊடகவியல் பயிற்றுநரும் இத்தாலியின் RAI (Radiotelevisioneitaliana) விசேட நிருபரான நிக்பைரோ-Nico Piro சில குறிப்புக்களை பகிர்ந்து கொண்டார். Lessons from Italy: best practices for field reporting during the coronavirus lockdown

Thomson Foundation நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட கைத்தொலைபேசி ஊடகவியல் போட்டியில் வெற்றி பெற்ற லெபனானைத் தளமாகக் கொண்ட நிஷிரின் அஜாப்: Mojo stories from six finalists in the Mobile Journalism Challenge

ஆலன்கபேர்சக் (Alan Haburchak), ஊடகவியலாளாளர்கள் தொலைதூர நேர்காணல்களை மேற்கொள்ளும் போது எவ்வாறு மிகவும் எளிமையாகவும், தொழில்நுட்ப  சிக்கனத்துடன் கொண்டு செல்வது தொடர்பில் பகிர்கிறார்.

தொலைதூர நேர்காணல்கள் தொடர்பில் நீங்கள் அறிந்திருக்க வேண்டியவை-  Remote video interviews: All you need to know

Mojo வினை செயற்படுத்தல்  (Mojo Working)

Mojo Working என்பது கைத்தொலைபேசி கருவிகளை பயன்படுத்தி கதைகளை உருவாக்குதல் தொடர்பில் GIJNஇன் ஒருபத்தி ஆகும்.

எங்கள் நிபுணர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஐவோ பரம் (Ivo Burum ) ஆவார். இவர் ஒரு  விருது பெற்ற தொலைக்காட்சி, எழுத்தாளர், இயக்குனர், நிர்வாக தயாரிப்பாளர் மட்டுமின்றி  30 ஆண்டுகளுக்கும் மேலான ஊடகத்துறை அனுபவம் கொண்டுள்ளவராகவும் விளங்குகிறார். பரம் GIJN மாநாடுகளில் வழக்கமான பேச்சாளராக இருந்து வருவதோடு Smart Mojo என்ற இணையத்தளத்தையும்  நடாத்தி வருகிறார் .

பரம், சாதாரண ஐபோன் கமெராவினைப் பயன்படுத்தி இந்த ஆண்டு (2021) மேற்கொண்ட  சிறந்த செய்தி விவரணங்களை இந்த தொடுப்பில் காணலாம். உங்கள் ஸ்மார்ட் தொலைபேசியை பயன்படுத்தி சிறந்த படங்களை எடுப்பது எப்படி-How to Take Better Images on Your Smartphone

2019 இல் நடந்த GIJN மாநாட்டில் பரம்  Mojo சம்பந்தப்பட்ட பரவலாகக் கேட்கப்படும் 20 வினாக்கொத்து தொடர்பான விரிவுரையை வழங்கினார்.  MOJO Unpacked – the 20 Most Asked Questions.

GIJNஇனால் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்த பரம் அவர்களின் சேகரிக்கப்பட்ட பத்தி எழுத்துக்கள் மற்றும் உதவிக் குறிப்புக்களை இங்கே காணலாம். ஒரு பயனுள்ள தொடக்கப் புள்ளியாக கீழே உள்ள அவரது “அத்தியாவசிய கருவிகள்” தரப்பட்டுள்ளது.

Mojo Workin’: Choosing Your New Mojo Smartphone (Feb 11, 2019)

Mojo Workin’: Developing And Producing on a Smart Phone (Part 1)  இந்த பத்தியானது உங்களின் செய்திக் கதையின் உருவாக்கம், கதையின் அமைப்பில் உங்கள் பார்வைக் கோணம், கதையின் மாந்தர்கள் மற்றும் புகைப்படங்களின் உள்ளீடு என்பவவை தொடர்பான உதவிக் குறிப்புகளை உள்ளடக்கியுள்ளது.  (также нарусском). (June 5, 2018)

GIJC 17 மாநாட்டின் போது, பரம் அவர்கள் கெரில்லா Mojo – Guerilla Mojo.இனை சமர்ப்பித்தார். 

Mojo Workin’ — Essential Mobile Journalism Tools (также нарусском) (April 11, 2017)

Mojo Workin’: Recording Audio on a Smartphone (также нарусском) (June 6, 2017)

Mojo Workin’: Editing on a Smartphone (также нарусском) (Aug 8, 2017)

ஒரு சிறந்த மேலோட்டமாக, ஐவோ, 2016 இல் IJAsia 16 மாநாட்டில் வழங்கிய செயலமர்வில் பகிர்ந்து கொண்ட உதவிக் குறிப்புக்களை சற்று இங்கே பாருங்கள்.

மற்றைய வளங்கள்

Konrad-Adenauer-Foundation  என்னும் நிறுவனத்தின் வழிகாட்டுதலில் Media Programme  Asia  திட்டத்தின் கீழ், கைத்தொலைபேசி ஊடகவியல் கைநூல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இது செயலிகள், கருவிகள் தொடங்கி நேரடியாக சமூக ஊடகங்கள் மூலம் ஒளிபரப்புச் செய்தல் வரையான விடயங்களை உள்ளடக்கியுள்ளது. The Mobile Journalism Manual –French

சுதந்திர ஊடகவியலாளர் மற்றும் ஊடக பயிற்றுனர் பெர்ன்ஹார்ட் லில்-Bernhard Lill கைத்தொலைபேசி ஊடகவியலாளர் ஒருவர் வைத்திருக்க வேண்டிய ஆறு செயலிகள் தொடர்பாக Mojofest 2019 இல் குறிப்பிட்டிருந்தார்.- Six must-have apps for mobile journalists

பிபிசி (BBC) அக்கடமியானது படம்பிடித்தல், எடிட்டிங் போன்ற பல்வேறுபட்ட அறிவுறுத்தல் காணொளிகளை Smart phone Journalismஇல் கொண்டுள்ளது.

2015 இல் டப்ளினில் (Dublin) முதன் முதல் Mojocon Mobile Journalism மாநாட்டை ஏற்பாடு செய்த பிறகு Glen Mulcahy இன் Facebook பக்கம்.-#mojofest community Where the global Mojo Community meet and share

2019ம் ஆண்டு Journalism.co.uk தளத்தில் வெளியான இந்த கட்டுரையானது, டச்சு ஒளிபரப்பாளர் ஓம்ரோப் ஃப்ரைஸ்லான்- Omrop Fryslân தனது அனைத்து நிருபர்களுக்கும் கைத்தொலைபேசி ஊடகவியல் தொடர்பாக எவ்வாறு பயிற்சியளித்தார் என்பதை விவரிப்பதோடு மட்டுமல்லாது மொபைல் ஊடகவியலாளர் வைட்ஸ் வெலிங்கா- WytseVellinga, தான் உருவாக்கிய நிறுவனத்திற்குள்ளேயான ஒருகையேட்டில் இருந்து தனது சக ஊழியர்களை படிப்படியாக எப்படி இது தொடர்பில் வழிநடத்தினார் என்பதையும் கூறுகிறது. “Mobile journalism workflow: how to make quality content go further”

Four non-mojo apps essential for mobile journalism–  2019 ஆம் ஆண்டு Journalism.co.uk தளத்தில் வெளியான டேனியல் க்ரீனின் (Daniel Green) இக்கட்டுரை Evernote, iHandy Level, Prompt Smart மற்றும் Google Photos பற்றி விவாதிக்கிறது.

What iPhone do you need for your mobile reporting? 2019  ஆம்  ஆண்டு Journalism.co.uk தளத்தில் வெளியான ஜேக்கப் கிரேங்கரின் கட்டுரை.

7 photo editing apps for mobile journalists – 2020 இல் கேட்டி பாட்கோவைரோஃப் லூயிஸிடமிருந்து (Katy Podkovyroff Lewis) ஆலோசனைக் குறிப்புக்கள்.

மேலும் EIJ17 மாநாட்டில் Mike Reilley மற்றும் Victor Hernandezஇனால் காட்சிப்படுத்தப்பட்ட  கருவிகளின் வரிசையை இங்கு காணலாம்.

ஆபிரிக்க புலனாய்வு மாநாடு – 2016 இல் Seamus Reynolds இனால் பகிரப்பட்ட உதவிக் குறிப்புக்களை பார்க்கவும். இது பல பரிந்துரைகள் வீடியோ பத்திரிகை பற்றிய விவாதம், பிற வளங்கள் மற்றும் ட்விட்டரில் பின்பற்ற வேண்டிய நபர்கள் பற்றிய விடயங்களைக் கொண்டுள்ளது.

9 Types of Visual Storytelling on Mobile, எம்மா- லீனா ஓவாஸ்கைனென் (Emma-LeenaOvaskainen) பின்லாந்தின் மிகப் பெரிய தினசரி செய்தித்தாள் ஹெல்சிங்கின் சனோமாட்டின் (Helsingin Sanomat ) காட்சி ஊடகவியலாளர்.

5 iOS apps for creative mobile storytelling– பிபிசி அகாடமியில்- (BBC  Academy ) ஸ்மார்ட் ஃபோன் பயிற்சியாளரான மார்க் செட்டில் அவருடைய சில பயன்பாடுகளையும், மார்ச் 2018 இல் Journalism.co.uk தளத்தில் அவரது சில புதிய கண்டுபிடிப்புகளையும் பட்டியலிட்டார். செப்டம்பர் 2018 இல், iOS 12 பற்றி பிபிசி அகாடமியில் வெளியான செட்டிலின் நேர்காணல், குறிப்பாக இது சம்பந்தமாக புதிய அம்சங்களைத் தேடும் பத்திரிகையாளர்களுக்கு மிகவும் பயன்படும்.

IJNETஇல் இது தொடர்பில் வெளிவந்த இரு கட்டுரைகள் 3 mobile video editing apps to try in 2018 – How to experiment in a new medium: The rookie mobile journalist.

கைத்தொலைபேசி ஊடகவியல் தொடர்பான வளங்கள் –Journalist’s Tool Box.

“Seven Lessons Learned in a Year Teaching Mobile Journalism,” இது ஆஸ்திரேலியாவின் மேக்லே கல்லூரியில் (Australia’s Macleay College) இது தொடர்பான பாடத்தை கற்பித்த பிறகு கொரின் பாட்ஜரால் (Corinne Podger) எழுதப்பட்டது.

How to produce a 360 story with your mobile phone,  இக்கட்டுரை, விஆர்ஃஏஆர் ஸ்டுடியோ வ்ரக்மென்ட்களின் (VR/AR Studio Vragments) இணை நிறுவனர் மார்கஸ் பாஷ்( Marcus Bösch) எழுதியது.

Thomson Foundation- தாம்சன் அறக்கட்டளையின் கைத்தொலைபேசி ஊடகவியல் நிபுணர் மற்றும் பயிற்சியாளரான க்ளென் முல்காஹியின் (Glen Mulcahy) எட்டு நிமிட வீடியோ.

மூலம்

This story was originally published by the Global Investigative Journalism Network (GIJN)

The need for information consumers to practice critical thinking and restraint

As we engage more and more with social media platforms, there is a heightened need for responsible social media engagement. With greater engagement and increasing influence of platforms, the users’ ability to cause harm to others too has increased, says Senel Wanniarachchi, co-founder of # Hashtag Generation.  

Joining the popular program ‘Standby with Lahiru’ via HariTV, Senel speaks about the need for cautious and responsible engagement and the need for information consumers to practice critical thinking and restraint. 

The young digital activist and media literacy advocate speaks of the double-edged sword social media can be, and the need to be able to individually assess various claims that demand our attention. Senel also calls for discerning engagement that does not fuel the flames of hate or result in campaigns of disinformation targeting various groups of people.   

Supported by UNDP Sri Lanka and the European Union and designed by the Center for Investigative Reporting (CIR), the four-part discussion series looks at the prevalence of online hate and mis/disinformation, their collective impact on the Sri Lankan society, conflict through a gender lens and how hate and dangerous speech continue to influence the people and media narratives alike.

ஆட்கடத்தல் தொடர்பான அறிக்கையிடலுக்கான வளங்கள்: செய்தி அறிக்கையிடலில் சிறந்த நடைமுறைகள்

புலனாய்வு ஊடகவியலாளர்கள், ஆட்களைக் கடத்துதல் தொடர்பான அறிக்கையிடலில் ஈடுபடும் போது பல்வேறு தரப்பட்ட திறன்களை பயன்படுத்துகின்றனர்.

இதன் போது பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுபூர்வமான நேர்காணல் மிக முக்கியமானதாக காணப்படுகின்றது; பாதிக்கப்படக்கூடிய கதை மாந்தர்களை நேர்காணல் செய்வதற்கு பல பயனுள்ள வழிகாட்டிகள் உள்ளன.

இவ்விடயத்தில், சர்ச்சைக்குரிய தரவுகளை பெற்றுக்கொள்வதென்பது சில சந்தர்ப்பங்களில் மிகவும் சவாலானது. ஆகவே தான், சில ஊடகவியலாளர்கள் தங்கள் செய்தியறிக்கையிடலுக்கு பின்னர் கூறுவது போல் ஒரு குறிப்பிட்ட செய்தியறிக்கையில் பல நாடுகளைச் சேர்ந்த ஊடகவியலாளர்களின் ஒத்துழைப்பானது மிகவும் அவசியமான ஒரு காரணி ஆகும்.

இது தொடர்பான பிற தலைப்புகள் கீழே விவாதிக்கப்பட்டுள்ளன.

சிறப்பு உதவி தளங்கள்

Ethical Journalism Network என்னும் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட, Media and Trafficking in Human Beings Guidelines  என்னும் கைநூல் இவ்வாறு ஆரம்பிக்கிறது:  “ஆட்கடத்தல் தொடர்பான அறிக்கையிடலென்பது, ஊடகவியலாளர்களுக்கும் பத்திரிகையாசிரியர்களுக்கும் மிகச்சவாலானதும், ஊடக நெறிமுறைகளை பரிசோதிக்கும்  வகையில் அமையும் ஒரு பணியாகும்.”

இந்த திட்டம் ஐரோப்பிய ஒன்றியத்தால் நிதியளிக்கப்பட்டதுடன் சர்வதேச இடம்பெயர்வு கொள்கை மேம்பாட்டு மையத்தின் – International Centre for Migration Policy Development (ICMPD) தலைமையில் ஒரு சர்வதேச கூட்டமைப்பால் செயல்படுத்தப்பட்டது.

2017 இல் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, கடத்தலின் அடிப்படைகளை மட்டும் வரையறை செய்யாது, செய்தி அறை (News Room) நுணுக்கங்கள் மற்றும் பத்திரிகை நெறிமுறைகளைப் பற்றியும் விவாதிக்கிறது.  இதில் உள்ள  “தொடக்ககேள்விகள் -Starting Questions” என்னும் பிரிவானது,  பிழையான தகவல்கள், சமூக வலைப்பின்னல்களில் இருந்து வரும் பொய்யான செய்திகள் மற்றும் சொந்த நலன்களைக் கருத்தில் கொண்டு பிரச்சாரம் செய்தல் போன்ற  “பொறிகளைத் தவிர்க்கும் ” வகையில்  ஊடகவியலாளர்களை எச்சரிக்கிறது

Repórter Brasil என்னும் தளமானது பிரேசிலில் அடிமைத் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கான முக்கிய தகவலை வழங்கும் ” ஊடகவியலாளர் கைநூல்” ஒன்றினைக் கொண்டுள்ளது, ஆனால் அது பரந்த பொருந்தக்கூடிய தன்மையையும் கொண்டுள்ளது. பிரேசிலில் உள்ள மக்கள் மற்றும் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளின் மீறல், சமூக பிரதிபலிப்பு மற்றும் அவை சார் நடவடிக்கையை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் 2001 ஆம் ஆண்டில் பத்திரிகையாளர்கள், சமூக விஞ்ஞானிகள் மற்றும் கல்வியாளர்களால் Repórter Brasil நிறுவப்பட்டது.

University of North Carolina School of Media and Journalism என்ற அமெரிக்கப் பல்கலைக்கழகத்தின் The Irina Project என்பது மற்றுமொரு வளமாகும். இது தொடர்பான மேலதிக தகவல்கள் மற்றும்  ஊடகங்கள்,  ஆட்கடத்தல் சம்பந்தமான அறிக்கையிடல் பற்றிய மதிப்பீடு கீழ் உள்ள அத்தியாயத்தில் தரப்படுத்துள்ளது.

ஒரு குறுகிய, ஆனால் மிகவும் சவாலான வழிகாட்டியாக அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தால் (US State Department) 2017 இல் வெளியிடப்பட்ட “சிறந்த ஊடக நடைமுறைகள்” என்னும் கைநூல் விளங்குகிறது. இது இவ்வாறு தொடங்குகிறது:

ஆட்கடத்தல் தொடர்பாக ஊடகங்கள் எவ்வாறு அறிக்கையிடுகின்றன என்பது ஊடகங்களில் வெளியாகும் செய்தி அறிக்கைகைகளைப் போலவே மிகவும் முக்கியமானதாகும்.  மேலும், இவ்வாறான செய்தி அறிக்கையிடல்களின் தாக்கமானது, பொதுமக்கள், அரசியல்வாதிகள், சட்டம், ஒழுங்கு அதிகாரத்துறையினர் மற்றும் பிற ஊடகங்கள் கூட இந்த பிரச்சினையை புரிந்து கொள்ளும் விதத்தை பிரதிபலிக்கிறது. சமீபத்திய ஆண்டுகளில்,  ஆட்கடத்தல் பற்றிய பல செய்தியறிக்கைகள் தவறான தகவல், காலாவதியான புள்ளிவிவரங்கள், பாதிக்கப்பட்டவர்களை குற்றம்சாட்டுதல் அல்லது அறிக்கையிடலுக்காக அவர்களை தொடர்ந்து சுரண்டல் மற்றும் குழப்பமான சொற்களை உள்ளடக்கியதாக அமைந்தது.

இந்த பிரச்சனைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதற்கு மாறாக, இவ்வாறான செய்தியறிக்கைகள், ஏற்கனவே குறைவாகவே அறிக்கையிடப்படுவதும் மற்றும் பெரும்பாலான பொதுமக்களால் தவறாக புரிந்து கொள்ளப்படுகின்ற ஒரு குற்றத்திற்கு மேலும் குழப்பத்தை விளைவிப்பதாக அமைகின்றன. ஆட்கடத்தல் பிரச்சினையானது தொடர்ந்து பொதுமக்களின் கவனிப்பைப் பெற்றுவரும் போது, ஊடகங்களிலிருப்போர் முழுமையாகவும் பொறுப்புடனும் அறிக்கை செய்ய வேண்டியதும், பாதிக்கப்பட்டு சுரண்டப்படுவோரை பாதுகாக்கும் பொறுப்பும் உள்ளது.

அகதிகள், புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் குடியேறியவர்கள் பற்றிய அறிக்கையானது – Reporting on Refugees, Asylum Seekers and Immigrants, 90 Days 90 Voices  என்னும் இயக்கத்தால் ” ஊடக நெறிமுறைகளுக்கேற்ப குடியேற்றம் தொடர்பான அறிக்கையிடலுக்கான வழிகாட்டுதல்களை” வழங்கும் நோக்குடன் உருவாக்கப்பட்டது. அமெரிக்காவினை தளமாகக் கொண்ட இந்நிறுவனம், “தற்போதைய பல்வேறு குடியேற்ற நெருக்கடிகள் மத்தியில் அமெரிக்காவில் ஒரு புது வாழ்க்கையைத் தேடுவோரின் சொந்தக்கதைகள், ஒலிப்பேழை, புகைப்படம், காமிக்ஸ் மற்றும் நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்படும் ஊடக நிகழ்ச்சிகள் போன்றவற்றின் மூலம் அவர்களின் நிலைமையினை” எடுத்துக் காட்டுகின்றன. வழிகாட்டியின் ஓரு பகுதி இவ்வாறு கூறுகிறது:

“எல்லாவற்றிற்கும் மேலாக, சிந்தனையற்ற, தவறான மற்றும் கவனக்குறைவான அறிக்கையிடலினால் பாதிக்கப்படக்கூடிய புலம்பெயர்ந்தோர் மீது இழைக்கப்படும்  “இரண்டாவது காயத்தை” தவிர்க்குமாறு எங்களையும் மற்ற பத்திரிகையாளர்களையும் நாம் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறான செயற்பாடுகள், உள்நாட்டுப் போர், நாட்டின் நிச்சயமற்ற தன்மை மற்றும் பெருந்துயரங்களிலிருந்து தப்ப முயலும் அகதிகளை மேலும் நெருக்கடியில் தள்ளுவதாக அமையும்.

இந்தோனேசியாவிலுள்ள டெம்போ நியூஸ் ரூமின்-Tempo Newsroom (நிர்வாக ஆசிரியர் வஹ்யு தியாத்மிகா-WahyuDhyatmika ஆசியாவில் நவீன அடிமைத் தனத்தை வெளிப்படுத்துதல்- Exposing Modern Slavery in Asia. என்ற தலைப்பில் IJAsia18 மாநாட்டில் நடைபெற்ற உரையாடலில் இது தொடர்பான ஓர் ஊடக புலனாய்வின் தோற்றத்தை விவரித்தார்.

GIJC17 மாநாட்டில், ஆட்கடத்தல் வளங்கள் பற்றிய உதவிக் குறிப்புகளை Transparentem என்னும் இலாப நோக்கற்ற புலனாய்வு  ஊடகவியல் நிறுவனத்தின் இணை-முதன்மை மற்றும் புலனாய்வு இயக்குனரான டிம் சாண்ட்லர் (Tim Sandler) வழங்கினார். இந்நிறுவனமானது, புலனாய்வு ஊடகவியல் மற்றும் தடயவியல் நுட்பங்களை பயன்படுத்தி ஆட்கடத்தலுக்கான  வலையமைப்பு, மனிதாபிமான மற்றும் சுற்றுச்சூழல் மீது நிகழ்த்தப்படும் துஸ்பிரயோகங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவர உதவு புரிகிறது.

அடிமைத்தனம் பற்றிய அறிக்கை: நிபுணர்களிடமிருந்து  சில குறிப்புக்கள் என்பது, GIJC17 மாநாட்டில் AP செய்திச்சேவையின் நிருபர் மார்த்தா மெண்டோசா Martha Mendoza) , சுதந்திர ஊடகவியலாளர் மாலியா பொலிட்ஸர் (Malia Politzer) மற்றும் International Center for Development Reporting  என்னும் நிறுவனத்தின் எம்மானுவேல் மாயா (Emmanuel Mayah) ஆகியோரால் வழங்கப்பட்ட விளக்கங்களை கொண்டவையாகும்.

How They Did It: Investigating Trafficked Guatemalan Teens in the US என்னும் தலைப்பிலான இவ் விவரணம், அமெரிக்காவில் ஆட்கடத்தலுக்கு உள்ளாக்கப்பட்டோர் – (“Trafficked in America”) தொடர்பான ஆவணக் காணொளி எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதை விளக்குகிறது.

வரைவிலக்கணங்கள்

இவ்விடயத்தில் வரைவிலக்கணங்கள் தொடர்பான விளக்கங்களைக் கொண்டிருப்பது மிகமுக்கியமானது.

இதில் பல பிரிவுகள்உள்ளடங்குகின்றன: கடன் கொத்தடிமை, ஒப்பந்த அடிமைத்தனம், பாலியல் கடத்தல், கட்டாய அல்லது அடிமை திருமணம், வீட்டு வேலை, சிறுவர் தொழிலாளர் மற்றும் சிறுவர் போராளிகள் என்பனவாகும். இவற்றில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் மற்றும்  அவை தொடர்பான வாதங்களும் தொடர்ந்து இருக்கத்தான் செய்கின்றன. உதாரணமாக,  ஆட்கடத்தலில் (ஒப்பந்த சேவை) இருந்து மனிதர்களை கடத்துவதும் (துஷ்பிரயோகம்), பாலியல் கடத்தலில் இருந்து விபச்சாரத்தையும் வேறுபடுத்துவது பற்றி குறிப்பிடலாம்.

இது தொடர்பாக மேலும் அறிய, Free the Slaves  என்னும் இணையதளத்தில்  அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பக்கத்தைப் பார்வையிடவும். Liberty Asia என்னும் அமைப்பினால் தயாரிக்கப்பட்ட “பாதிக்கப்பட்டோரை அடையாளங் காணும் கருவிகள் “எனும் தொடுப்பானது சர்வதேச ஒப்பந்தங்களில் வரையறைகளின் பின்னணியை வழங்குகிறது.

The Irina Project இன் வரையறைகள் தொடர்பான பக்கத்தை பார்க்கும் போது,  அதில் “குழந்தை விபச்சாரிகள்” போன்ற வார்த்தைகளை பயன்படுத்தப்படக்கூடாது போன்ற பரிந்துரைகள் அடங்கியிருப்பதை காணலாம்.

லிபியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு புலம்பெயர்வோரின் ஆட்கடத்தல் மற்றும் மனித கடத்தல்கள்:  ஊடகங்கள் என்ன சொல்கின்றன? (Migrant smuggling and human trafficking from Libya to Europe: What does the media say? )-  Enact  என்னும் நிறுவனத்தினால்  வெளியிடப்பட்ட  இந்த 2019 அறிக்கை Ciara Aucoin மற்றும்  Gihane Ben Yahia ஆகியோரால்  எழுதப்பட்டது.  “இந்த ஆய்வு, ஆங்கில செய்தி ஊடகங்களில் லிபியாவிலிருந்து புலம்பெயர்வோரின் கடத்தல் மற்றும்  ஆட்கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் எவ்வாறு அறிக்கையிடப்பட்டது  என்பதை  ஆராய்வதோடு,   அதிகமாக பிரயோகிக்கப்பட்ட வார்த்தைகளான அடிமை,  துஷ்பிரயோகம் மற்றும் பணப்பரிமாறல்” தொடர்பாகவும் கவனம் செலுத்தியிருந்தது.

தனியாள் கதை சித்தரிப்புகளை சிறந்த முறையில் அறிக்கையிடல்


இவ்விடயத்தில் ஆட்கடத்தல்களினால் பாதிக்கப்பட்டவர்களை சிறந்த முறையில் நேர்காணல் செய்வதென்பது மிக முக்கியமான விடயமாக இருப்பதோடு,  இது வேறு  சில விசேட சவால்களையும் அளிக்கிறது.

“பாதிக்கப்பட்டவருக்கான எந்தவொரு அணுகுமுறையும் படிப்படியானதோடு மற்றும்  அச்சுறுத்தல் இல்லாத  ஒரு செயல் முறையாக இருக்க வேண்டும்” இவ்வாறு சட்ட அமலாக்கத்துக்கான அமெரிக்க நீதித்துறை (US Justice Department ) வழிகாட்டி தொடங்குகிறது, இது செய்தியாளர்களுக்கும் பொருந்தும்.

இவ்வழிகாட்டியின் கூற்றுப்படி, ஆட்கடத்தல் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டிருக்கூடியவர்கள் என்று கருதுவோர்களை ஒரு புலனாய்வு நேர்காணலுக்கு தயார் செய்து நடாத்தும் போது, பாதிக்கப்பட்டவரின் உண்மை நிலையே உங்களின் யதார்த்தம் என்பதை நினைவில் கொள்வது மிகவும் அவசியமாகும்.  இது தொடர்பான மேலதிக வளங்களுக்கான இணைப்புகளும் வழிகாட்டியில் தரப்பட்டுள்ளன.

அரச சார்பற்ற நிறுவனமான Project Reach, தனது வழிகாட்டியில் “நீங்கள் இது தொடர்பில் என்ன மாதிரியான விடயங்களை பார்க்க முடியும்” போன்ற சில குறிப்புகளை விவரிக்கிறது:  “ஞாபகங்களில் ஏற்படும் மாற்றங்கள், பொய்யை அல்லது கதை சொல்லலைக் குறிக்காது என்பது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும், ஆனால் அவை ஒரு அதிர்ச்சிகரமான சம்பவமொன்றின் பிரதிபலிப்பிற்கு சான்றாக இருக்கலாம்.”

ஊடகவியலாளர்களுக்கான  சில பரிந்துரைகள் என்பது, கலிபோர்னியாவைச் சேர்ந்த ஆட்கடத்தல் சம்பவங்கள் தொடர்பான ஆலோசகரான மின் டாங் (Minh Dang) அவர்களால் தயாரிக்கப்பட்டது. அவர் ஐந்து முக்கிய வழிகாட்டும்  கொள்கைகளை பட்டியலிடுகிறார்:

  • நீங்கள் நேர்காணல் செய்யும் நபர் விதிகளை உருவாக்குகிறார்.
  • ஒரு ஊடகவியலாளராக  வெளிப்படையாக, திடமாக இருங்கள்.
  • நேர்காணல் செய்யப்படும் நபர் ஒரு தனிநபர், பாதிக்கப்பட்டோரின் பிரதிநிதி அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
  • உங்கள் நோக்கம் உண்மையைத் தேடுவதும் அதை பொதுமக்களிடம் தெரிவிப்பதும் ஆகும்.
  • எல்லாவற்றிற்கும் மேலாக, எந்தத்  தீங்கும் செய்யாதீர்கள்.

அமெரிக்காவில் சிறுவர் துஷ்பிரயோகம், வல்லுறவு  மற்றும்  உள்நாட்டு  பாலியல் கடத்தலில் இருந்து தப்பித்த டாங் (Dang), 2013 ஆம் ஆண்டு வெளியான “Survivors of Slavery: Modern-Day Slave Narratives,” என்னும் அறிக்கையின் அறிமுகத்தை எழுதினார். அதில் அவர், ஆட்கடத்தல் எதிர்ப்பு  இயக்கத்திற்கான வழிகாட்டும்  கொள்கைகளை முன்வைக்கும் போது, ” தப்பிப்பிழைத்தவர்களை மீண்டும் மனிதாபிமானப்படுத்தல் ”  என்பதிலிருந்து தொடங்குவதாக குறிப்பிடுகிறார்.

சிறுவர் பாலியல் கடத்தலில் இருந்து தப்பிப்பிழைத்த ஒருவர் ஹோலி ஸ்மித் (Holly Smith).  அவர் நல்லுறவு மற்றும் நம்பிக்கையை வளர்ப்பதன் முக்கியத்துவம் பற்றி  எழுதியதோடு பாதிக்கப்பட்டவர்களுடனான உறவை புதுப்பிக்க நேரமும் பொறுமையும் தேவைப்படும் என்பதை வலியுறுத்துகிறார். அவர் மேற்கோள் காட்டும் மற்றொரு பாதிக்கப்பட்டவர் கூறியது போல, “முதல் சில கூட்டங்களில் நீங்கள் அவர்களின் நம்பிக்கையைப் பெற்று நல்லுறவை வளர்த்துக் கொள்கிறீர்கள்.”

லூசியானா மாநில பல்கலைக்கழகத்தின் (Louisiana State University’s Manship School of Mass Communication) வளாகத்தில் கற்பித்த ஸ்டீவ் பட்ரி  (Steve Buttry) தயாரித்த  உதவிக் குறிப்புகளில், “நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதை  நான் புரிந்து கொள்கிறேன்” என்று சொல்வதற்கு பதிலாக “நான் உங்களின் கதையை சொல்ல விரும்புகிறேன்”  என்று கூறுவது மிகப்பொருத்தமாக அமையும் என்பதுகூட இந்த குறிப்புகளில் அடங்கியுள்ளது. பாய்ன்டர் (Poynter) எனப்படும் நிறுவனத்தினால் “Journalism and Trauma” என்னும் இணையவழி கற்கைநெறி இலவசமாக   வழங்கப்படுகிறது.

பெண்கள் மற்றும் குழந்தைகளை நேர்காணல் செய்வதற்கான குறிப்பித்தக்க   ஆலோசனைகள் ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் அலுவலகத்திநாள் வெளியிடப்பட்ட The Toolkit to Combat Trafficking in Persons என்ற இணைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது. நேர்காணல் மற்றும் பிற தலைப்புகளில் UNDOC இனால் வெளியடப்பட்ட Anti-Human Trafficking Manual for Criminal Justice Practitioners.” எனும் வழிகாட்டி பயனுள்ளதாக  இருக்கும்.  உலக சுகாதார நிறுவனத்தின் பங்களிப்புடன் “நெறிமுறைகளுடன் கூடிய பாதுகாப்பான நேர்காணல்களை நடத்துதல்”  எனும் வழிகாட்டியும் காணப்படுகிறது.

தாய்லாந்து கடற்றொழில்துறையில் அடிமைத் தொழிலாளர்களின் பயன்பாட்டை முதலில் உலகிற்கு வெளிப்படுத்திய அசோசியேட்டட் பிரஸ்  (Associated Press-AP) செய்திச்செவை அணியின் உறுப்பினராக இருந்த நிருபர் மார்த்தா மெண்டோசா (Martha Mendoza), WHO மற்றும் UNODC வழிகாட்டிகளை ஏழு பாடங்களாக வடிவமைத்துள்ளார்:

ஒருபோதும் எவ்வித தீங்கும் செய்யாதே. ஒவ்வொரு பெண்ணையும், அப்போது நிலவும் சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு  எதிர்மறையான ஆதாரங்கள் இருக்கும் வரை தீங்கு விளைவிக்கும் சாத்தியம் தீவிரமானது என கருதுங்கள். குறுகிய கால அல்லது நீண்ட காலத்திற்கு ஒரு பெண்ணின் நிலைமையை மோசமாக்கும் என நீங்கள் கருதினால் எந்த நேர்காணலையும் மேற்கொள்ள வேண்டாம்.

மொழிபெயர்ப்பாளர்களையும்  சக பணியாளர்களையும்  போதுமான அளவு தேர்ந்தெடுத்து தயார் செய்யுங்கள். பாதிக்கப்பட்டவரை எப்படி அணுகுவது,  அவர்களின் அடையாளம் காட்டப்படுமா என்பது பற்றி புகைப்படக்காரர்கள்,  ஒளிப்பதிவாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களை முன்கூட்டியே தயார் செய்யவும். ஆட்கடத்தலினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் படங்களை ஒருபோதும் பிரசுரிக்க வேண்டாம்.

அநாமதேயத்தையும்  இரகசியத்தையும் மதிக்கவும். முழுமையான அறிக்கையிடல் செயல்முறையின் போது, ஒரு செய்தி மூலத்தின் அடையாளம் மற்றும் இரகசியத்தன்மையைப் பாதுகாக்கவும். கைகளின் படங்கள், நிழற்படங்கள் அல்லது அடையாளம் காணப்படாத பிற படங்கள் என்பவை போதுமானவை.

அவர்களின் வழியைப் பின்பற்றுங்கள். ஒவ்வொரு பெண்ணின் நிலைமையையும் அவளுடைய பாதுகாப்பிற்கான ஆபத்தையும் மதிப்பீடு செய்வதைக் கேட்டு மதிக்கவும். ஒவ்வொரு பெண்ணுக்கும் வெவ்வேறு கவலைகள் இருக்கும் என்பதையும், அவளுடைய கவலைகளை அவள் பார்க்கும் விதமும் நீங்கள் எப்படி மதிப்பிடுவீர்கள் என்பதிலிருந்து வேறுபட்டிருக்கலாம் என்பதையும் அங்கீகரிக்கவும்.

ஒரு பெண்ணை மீளவும் காயப்படுத்தாதீர்கள்.  உணர்ச்சிவசப்பட்ட பதிலைத் தூண்டும் வகையில், குறிப்பாக வீடியோ ஒளிப்பதிவுக்காக கேள்விகளைக் கேட்காதீர்கள். நேர்காணலில் இடைநிறுத்துவதன் மூலமும், ஓய்வு எடுத்துக்கொள்வதன் மூலமும், ஒரு சமூக சேவகர் அல்லது குடும்ப உறுப்பினரைக் கொண்டுவருவதன் மூலமும் ஒரு பாதிக்கப்பட்ட பெண்ணின் துயரத்திற்கு பதிலளிக்க தயாராக இருங்கள்.

அவசரநிலை  தலையீட்டிற்கு தயாராக  இருங்கள். ஒரு பெண் உடனடி ஆபத்தில் இருப்பதாக சொன்னால் அதற்கு பதிலளிக்க தயாராக இருங்கள். இதன் பொருள் உதவிக்கு என்ன ஆதாரங்கள் உள்ளன என்பதை அறிந்து,  அவற்றைப் பற்றி அவளுக்குத் தெரியும் என்பதை உறுதிப்படுத்துவதாகும்.

அவளுடைய கதையை நன்றாகப்  உபயோகப்படுத்துங்கள். யாராவது தங்கள் கதையைப் உங்களுடன்பகிர்ந்து கொள்ள தாராளமாக இருந்தால், அதை விரிவான துல்லியத்துடன், ஈடுபாட்டுடன் மற்றும் முழுமையான முறையில் அறிக்கையிடவும். இது ஒரு பிரச்சனைக்கு தீர்வை நோக்கி ஒரு படி நகரும்  வகையில், பொது மக்களின் கவனத்திற்குள் கொண்டுவருவதற்கான ஒரு வழியாகும்.

சர்வதேச இடம்பெயர்வு, மனித உரிமைகள் மற்றும் புலனாய்வு அறிக்கைகளில் நிபுணத்துவம் மற்றும் விருது பெற்ற விரிவான, ஆழமான கட்டுரை பாணியை கைக்கொள்ளும் ஊடகவியலாளர் மலியா பொலிட்சரால் (Malia Politzer) மற்றொரு தொகுதி பரிந்துரைகள் தொகுக்கப்பட்டன.

நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:                      

  • அதிர்ச்சியில் இருந்து  தப்பியவர்கள் தங்களுக்கு என்ன நடந்தது என்பதை மிகத் துல்லியமாக சொல்ல முடியாது.
  • தப்பிப்பிழைத்தவர்கள் வெவ்வேறு நேரங்களில் விஷயங்களை வித்தியாசமாக நினைவில் வைத்திருக்கலாம்.
  • அவர்கள் ஏன் சில நேரங்களில் அதிர்ச்சியை குணப்படுத்தும் சில வழிகளில் எதிர்வினை புரிந்தார்கள் என்பது அவர்களுக்கே புரியாமல் போகலாம்.
  • அவமான உணர்வு/குழப்ப நிலை போன்றன அவர்கள் சில விவரங்களை தவிர்ப்பதற்கு காரணமாக அமையலாம்.

அதிர்ச்சியில் பாதிக்கப்பட்டவர்களை நேர்காணல் செய்யும் போது:

  • அறிக்கையிடல் செயல்முறை முழுவதும் அவர்களது ஒப்புதல் கேட்கவும்.
  • அவர்கள் பின்னர் ஒப்புதலைத் திரும்பப் பெற்றால், நேர்காணலைப் பயன்படுத்த வேண்டாம்  (முதலில் அவர்கள் கொடுத்திருந்தாலும் கூட).
  • நீங்கள் அவர்களை எங்கே பேட்டி எடுக்க வேண்டும் என்பதை அவர்கள் முடிவு செய்கிறார்கள்.
  • அவர்கள் எந்த நேரத்திலும் நிறுத்தலாம்.
  • நீங்கள் வீடியோ/புகைப்படங்களை பதிவு செய்ய முடியுமா என்று அவர்களிடம் கேளுங்கள்; அனுமானிக்க வேண்டாம் (நீங்கள் வீடியோக்கள் அல்லது புகைப்படங்கள் எடுக்க வேண்டுமாயின் நேர்காணலுக்கு முன்கூட்டியே அவர்களுக்குத் தெரியப்படுத்தவும்,  அவற்றை நேர்காணலின்போது நீங்கள் எடுக்கும் போது மீண்டும் ஒருமுறை கேட்கவும்).
  • உங்கள் செயல்முறையை விளக்குங்கள், நீங்கள் ஏன் செய்கிறீர்கள் மற்றும் உங்கள் அறிக்கையின் சாத்தியமான விளைவுகள் என்ன என்பது பற்றியும் அவர்களுக்கு கூறுங்கள்.
  • நேர்காணல் செய்யப்படுபவர் எந்த சொற்களின் ஊடாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகிறார் என்று கேளுங்கள் (பாதிக்கப்பட்டவர்/உயிர் பிழைத்தவர்/உள்நாட்டு கடத்தல், CSEC – வணிக ரீதியாக பாலியல் சுரண்டப்பட்ட குழந்தை – தொழிலாளர் கடத்தல் போன்றவை- CSEC – commercially sexual exploited child – labor trafficking, etc.) மற்றும் அந்த வார்த்தையை கதையில் பயன்படுத்தவும்.
  • அவர்களை சிரம மான நிலைக்குத்தள்ள வேண்டாம்.
  • சாத்தியமானால், பாதிக்கப்பட்டவர்களின் அனுபவங்களை நேரடியாக சவால் விடுவதைத்  தவிர்க்கவும்  (மீண்டும் அவர்களை அதிர்ச்சியில் தள்ளும் வகையிலான  ஆபத்து),  ஆனால் பாதிக்கப்பட்டவர் வழங்கிய தகவலை வெளிப்புற ஆதாரங்களுடன் சரிபார்க்கவும்.

சிறுவர் துஷ்பிரயோகத்தில் இருந்து தப்பிப்பிழைத்தவர்களுடன் பணிபுரியும்  ஊடகவியலாளர்களுக்கு  ஆலோசனை-Advice for Reporters Working with Survivors of Child Abuse,  இது ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரத்தில்  2019 GIJN மாநாட்டில் நடைபெற்ற ஒரு குழுக்கலந்துரையாடலின்  சுருக்கமான கட்டுரையின் தலைப்பு. மூன்று முக்கிய புள்ளிகள்:

  • பாதிக்கப்பட்டவர்களிடம் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
  • உங்கள் செய்தி மூலங்களின்  நல்வாழ்வைக் கவனித்துக் கொள்ளுங்கள்.
  • தப்பிப்பிழைத்த சமூகங்கள் உங்களுக்கு உதவலாம் மற்றும் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் உதவலாம்.

2016 இல் வெளியான ஒரு  கட்டுரையில், சுதந்திர ஊடகவியலாளர் ஷெர்ரி ரிச்சியார்டி (Sherry Ricchiardi) கூறியது என்னவென்றால் , “என் வாழ்க்கையில், அதிர்ச்சியால் சிதைந்த டஜன் கணக்கான மக்களை நான் நேர்காணல் செய்தேன். ஒவ்வொரு முறையும், எனது அறிக்கை அவர்களின் துன்பத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை நினைத்து நான் வேதனைப்பட்டேன்,”

போர் மற்றும் வீரர்களின் விவகாரங்களை உள்ளடக்கிய அமெரிக்காவினைத் தளமாகக் கொண்ட War Horse இன் பரிந்துரைகளும் இத்தலைப்புக்கு  பொருத்தமானவை.

இவ்வழிகாட்டியில்  “கதவைத் திறந்து வைத்திருத்தல்” என்ற அத்தியாயமும் உள்ளடங்கியிருக்கிறது.  அது இவ்வாறு தொடர்கிறது, “இந்த விடயத்தில் உங்களுக்கு எவ்வளவு அறிவு இருக்கிறது என்பது முக்கியமல்ல, ஒரு குறிப்பிட்ட தனிநபரின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை அவர் எப்படி அனுபவித்தார் என்பதை உங்களால் ஒருபோதும் கணிக்க முடியாது.”

துன்பகரமான நிகழ்வுகளின் அறிக்கையிடல்: உணர்ச்சிபூர்வமான அறிக்கையிடுவதற்கான ஒரு ஊடகவியலாளர் வழிகாட்டி, 2019 இல் வெளியான ஜோ ஹீலியின் (Jo Healey) இந்த  புத்தகம் ஆசிரியரின் இந்த கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ளது.

ஆட்கடத்தல் தொடர்பான  தரவுகளில் சர்ச்சைகள் உள்ளன

அடிமைத்தனம் மற்றும் ஆட் கடத்தல் தொடர்பில்  அதிகாரப்பூர்வமான தரவுகளை பயன்படுத்தும் போது மிக அவதானமாக இருத்தல் வேண்டும்.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO), வாக் ஃப்ரீ ஃபவுண்டேஷன் (Walk Free Foundation) மற்றும் சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு (IOM) ஆகியன 2017 செப்டம்பரில், இது தொடர்பில் முக்கிய தரவு எண்ணை வெளியிட்டன.

இந்த மூன்று நிறுவனங்களும்  ஒரு புதிய, ஒப்பீட்டளவில் உயர்ந்த, மதிப்பீட்டை ஏற்றுக்கொண்டனர் – அதாவது 2016 இல் மேற்கொள்ளப்பட்ட  ஆய்வான  “நவீன அடிமைத்தனத்தின் உலகளாவிய மதிப்பீடுகளில் – (The Global Estimates of Modern Slavery)  சுமார் 40.3 மில்லியன் மக்கள் அடிமைகளாக சிக்கியுள்ளனர் என்பதாகும். இதன் படி சுமார் 25 மில்லியன் பேர் கட்டாய உழைப்பிலும், 15 மில்லியன் பேர் கட்டாய திருமணத்திலும் இருந்தனர். இதற்கு முன், ஒவ்வொரு நிறுவனமும்  வெவ்வேறு தரவு, வரையறைகள் மற்றும் முறைகளைப் பயன்படுத்தி மிகவும் மாறுபட்ட அதேநேரம் கணிசமான குறைந்த  எண்ணிக்கையை காட்டும் புள்ளிவிவரங்களை வெளியிட்டிருந்தனர். இது தொடர்பில் ராய்ட்டர்ஸ் செய்திச் சேவை வெளியிட்ட மாற்றங்களின் சுருக்கத்தையும், அமெரிக்க காங்கிரஸ் ஆராய்ச்சி சேவையினால் வெளியிடப்பட்ட(US Congressional Research Service.) மற்றொரு  ஆய்வையும் பார்க்கவும்.

எண்களின் வரையறைகள்

இம்மூன்று நிறுவனங்களுக்கிடையில்புதிய ஒருமித்த கருத்து தொடர்பில் இணக்கப்பாடு இருந்தபோதிலும், ILO ஆசிரியர்கள் ஒரு விடயத்தில் எச்சரித்தனர், “பிராந்திய ரீதியிலான புள்ளிவிவரங்கள் மிக முக்கியமானவை  ஆனால் தரவின் முக்கியமான வெற்றிடங்களையும், வரையறைகளையும் கருத்தில் கொண்டு கவனத்துடன் அவைவிளக்கப்பட  வேண்டும்.”  மேலும், யுத்தம்  நடைபெறும் பிரதேசங்களிலிருந்து நம்பகமான தரவு எதுவும் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.

ஆம்ஸ்டர்டாம்  பல்கலைக்கழகத்தின் (University of Amsterdam)  அரசியல் எண்கணிதப் பேராசிரியர் (professor of Political Arithmetic ) டேனியல் மேக் (Daniel Mügge) உட்பட பல விமர்சகர்கள் இது தொடர்பாக தமது ஆழ்ந்த கரிசனையை வெளியிட்டுள்ளனர். குறிப்பாக அவர் எச்சரித்த விடயம் என்னவென்றால், “பொதுவாக புள்ளிவிவர அறிக்கையிடுதலில், தரவின்  தரத்தைப் பற்றிய மறுப்பு மற்றும் அவை தொடர்பான எச்சரிக்கைகள் அத்தரவுகளை பயன்படுத்துபவர்களிடையே மிக விரைவில் தொலைந்து போகும்.”  என்பதாகும்.

ஆட்கடத்தலின் அளவை மதிப்பிடுவது மிகச்சிக்கலான ஒரு விடயமாக உள்ளது. இது தொடர்பாக அறியப்பட்ட, பாதிக்கப்பட்டவர்களைக் கணக்கிடுவது மற்றும் குற்றவியல் நீதித் தரவைப் பயன்படுத்துவது ஆட்கடத்தல் சம்பவங்களின் தீவிரத்தன்மையின் போக்கை அளவிட போதுமானதாக இருக்காது.

ஆட்கடத்தலில் 66,520  உறுதிசெய்யப்பட்ட பாதிக்கப்பட்டவர்களை உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் அடையாளம் கண்டுள்ளதாக 2017 ஆம் ஆண்டில் அமெரிக்க வெளியுறவுத் துறையால் (US State Department ) வெளியடப்பட்ட  குறித்த ஆண்டு  அறிக்கையில் கூறியுள்ளது. லிபர்ட்டி ஆசியாவினால் (Liberty Asia) வெளிடப்பட்ட அறிக்கையின்படி,  உலகளவில் மதிப்பிடப்பட்ட பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் அடையாளம் காணப்பட்ட உண்மையான எண்ணிக்கை ஆகியவற்றுக்கு இடையேயான இந்த மிகப்பெரிய ஏற்றத்தாழ்வானது, சர்வதேச மற்றும் தேசிய அளவில் கடத்தல் தடுப்பு இயக்கத்திற்கு முன்னால் இருக்கும் மகத்தான பணியின் அளவை எடுத்துக்காட்டுகின்றது.

2016 இல் வெளியான  ஐ.நா.வின் போதைப்பொருள் மற்றும் குற்ற அறிக்கை கூறுவது போல் (UN Office of Drugs and Crime report) சட்ட அமைப்பு தரவானது, தகவல் மூலங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட  நாடுகள் பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். அவ்வறிக்கை உதாரணமாக இவ்வாறு குறிப்பிடுகின்றது, “பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களாக இருந்தாலும், குழந்தைகள் மற்றும் ஆண்களின் கூட்டெண்ணிக்கையானது, மொத்தமாக  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மிகப்பெரிய இடத்தை வகிப்பதுடன்  ஒரு தசாப்தத்திற்கு முன்பு இருந்ததை விட  தற்போது அதிக எண்ணிக்கையாக  உள்ளது ,”

செப்டம்பர் 2017 இல்,  ஆட்கடத்தல் பற்றிய தரவுகளின் உலகளாவிய களஞ்சியமான, கடத்தல் தடுப்பு தரவு கூட்டுறவை உருவாக்குவது பற்றி ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த கூட்டு முயற்சிக்கு IOM, ஐ.நா. இடம்பெயர்வு முகாமை (the UN Migration Agency) மற்றும் போலரிஸ் (Polaris) எனப்படும் நவீன அடிமைத்தனத்தை எதிர்த்துப் போராடும் ஒரு சுயாதீன அமைப்பு என்பன தமது ஆதரவை நல்கின.

அளவீடானது, செயற்பாட்டு முறை மற்றும் வரையறைகளால் பாதிக்கப்படலாம். ஆட்கடத்தல்களை எண்ணும் விவாதமும்  தொடர்கிறது. இது மனித கடத்தல் ஜர்னலின் சிறப்பு -2017 இதழின் (Journal of Human Trafficking) தலைப்பாகவும்  இருந்தது. “வழக்கறிஞர்கள் குறிப்பிட்ட சில தரவை மட்டும் எடுத்தல், சந்தேகத்திற்குரிய முறையின் தரவை முன்னெடுக்கவோ அல்லது தமதுகொள்கை நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறு தரவை திரித்தல் போன்ற துரதிருஷ்டவசமான போக்குகளும் காணப்படுகின்றன,” என்று அறிக்கை கூறுகின்றது.

முக்கிய விளையாட்டு நிகழ்வுகள் அதிக எண்ணிக்கையிலான கடத்தப்பட்ட பாலியல் தொழிலாளர்களை ஈர்க்கும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் பல ஆண்டுகளாக பல செய்தி விவரணங்கள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் வாஷிங்டன், DC இல் உள்ள ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் (professor at George Washington University in Washington, DC) சமூகவியல் பேராசிரியரான ரொனால்ட் வெயிட்சரின் (Ronald Weitzer) கட்டுரையின் படி, மூல ஆதாரம் தொடர்பில் வேறுவிதமாகக் கூறப்பட்டுள்ளது .

தேசிய மற்றும் உள்ளூர் தரவு குறிப்பாக மிகப் பலவீனமாக உள்ளது, வல்லுநர்கள் சிலர் பத்திரிகையாளர்களுக்கான தலைப்பாகக்கூட இதை பரிந்துரைக்கின்றனர். மிக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாய்லாந்தில் மீன்பிடித் தொழிற்துறை  பற்றிய சமீபத்திய ஆய்வு போன்ற சில சிறப்பு, தொழில் நிதியளிக்கப்பட்ட ஆய்வுகளையும் நாம்  காணலாம்.

தொடரும் வரையறை விவாதங்கள்
“நவீன அடிமைகளாகக் கருதப்படும் சில பேர் தங்களை அப்படிப் பார்ப்பது விசித்திரமாக இல்லையா?” என்பது DFID நிதியு99 தவியின் இயங்கும் வறுமை ஆராய்ச்சி கூட்டமைப்பிலிருந்து (Poverty Research Consortium) ஆய்வு இயக்குனர் பிரியா தேசிங்கரின் (Priya Deshingkar) இவ்வாறான  அனுமானம் தொடர்பில் சவால் விடுக்கும் ஓரு கட்டுரையின் தலைப்பாகும்.

ஐரோப்பிய பல்கலைக்கழக நிறுவனத்தின் (European University Institute) நீல் ஹோவர்டின் (Neil Howard) 2014 கார்டியன் கட்டுரையின் படி, தரைமட்ட ஆராய்ச்சி அதிகாரப்பூர்வ பொதுமைப்படுத்தல்களுக்கு முரணாக இருக்கலாம். ஆபிரிக்காவின் பெனினில் வீட்டு வேலை செய்து சுரங்கங்களில் பணிபுரியும் குழந்தைகள், வேலைக்காக இடம்பெயர சுயாதீனமாக முடிவு செய்துள்ளதாக அவர் தனது ஆராய்ச்சியில் மேற்கோள் காட்டியுள்ளார்.

கட்டாய பாலியல் கடத்தல் மற்றும் ஒருமித்த சம்மதத்துடனான பாலியல் வேலை ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசம் என்ன என்பது பற்றியும் தொடர்ந்து விவாதிக்கப்படுகிறது.

“ஒரு நாட்டில் கூட எத்தனை பேர் அடிமைகளாக இருக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது என்பதே இதன் முக்கிய அம்சமாகும்” என்று வெயிட்சர் (Weitzer) கூறினார். “பெரிய எண்கள் ஊடக கவனத்தை ஈர்க்கின்றன, அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கின்றன மற்றும் சிக்கலை எதிர்த்துப் போராடுவதற்கான அதிக வளங்களை அர்ப்பணிப்பதாகவும் கூறுகின்றனர். ஆனால் உறுதியான ஆதாரங்கள் எதுவும் அவர்களிடத்தில் இல்லை.”

இன்னும் என்ன தேவை என்பது தொடர்பில் அவர் கூறியது என்னவென்றால் , , “உள்ளூர் அளவில் கவனமாக நடத்தப்பட்ட ஆய்வுகள்.” என்பதாகும்.

கூட்டு அறிக்கையிடல்

ஆட்கடத்தலின் புவியியல் அமைவிடங்கள் மற்றும் சிக்கலான தன்மை காரணமாக, ஒரு செய்திக்கதையைப் பெற குழுவாகப் பணியாற்றும் முறை பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. அவ்வாறான சில உதாரணங்கள் பின்வருமாறு:

ஆஸ்திரேலியாவின் உள்ள பழத்தோட்டங்களில் சட்டவிரோத தொழிலாளர்கள் மற்றும் மனித உழைப்புச் சுரண்டல் போன்ற சட்ட விரோத நடவடிக்கைகளை நடாத்திய பாதாள உலகத்தை வெளிக்கொணர, இந்தோனேசிய நிருபர் சைபுல் ஹசம் (Saiful Hasam) ஒரு தொழிலாளியாக போஸ் கொடுத்தார்.

அவரின் இப்புதிய பாத்திரம், நிக் மெக்கன்சி (Nick McKenzie) மற்றும் ரிச்சர்ட் பேக்கர் (Richard Baker) போன்ற  இணை எழுத்தாளர்களால் ஊக்கமளிக்கப்பட்டது. இந்தக் கட்டுரை உடுசன் மலேசியா, மெல்போர்னை தளமாகக் கொண்ட தி ஏஜ் (The Age) பத்திரிக்கை மற்றும் ஆஸ்திரேலியா பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் (Australia Broadcasting Corporation)  ஆகிய மூன்று நிறுவனங்களின்  எல்லை தாண்டிய  ஊடக ஒத்துழைப்பின் விளைவாகும்.

சைஃபுலின் (Saiful) செய்தியறிக்கை, வேலைத்தளத்தில் உள்ள ஒரு  தலைவரை அவரது கையடக்கத்தொலைபெசியில் ரகசியமாக வீடியோ பதிவு செய்யப்பட்டிருப்பதையும் உள்ளடக்குகிறது. “சைபுல் கடைசியாக மாறுவேடத்தில் அறிக்கையிடலுக்காக செய்த இரகசியச் செயல் அவருடைய உடமைகள் மற்றும் அவரது நான்கு நாள் வேலைக்காக அவருக்கு தரவேண்டிய பணத்தை சேகரிப்பதாகும்” என்று அவர் எழுதினார். எனினும் அவருக்குத் தரவேண்டிய பணத்திலும் குறைவாகவே கொடுக்கப்பட்டது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

புலனாய்வு அறிக்கையிடலுக்கான2016 கனேடிய தேசிய பத்திரிகை விருதை வென்ற விர்ஜில் கிராண்ட்ஃபீல்ட் (Virgil Grandfield), ” கூண்டு” என்ற தனது கட்டுரையை இந்தோனேஷியாவில் உள்ள தனது உதவியாளரை சுட்டும் வண்ணம் இவ்வாறு தொடங்கினார், , “அரை சாக்கு உருளைக்கிழங்கு அளவுள்ள துணிச்சலான, புத்திசாலி தொடக்கப் பள்ளி ஆசிரியர் அவர் . ”

தொழிலாளர் கடத்தல் தொடர்பான ஊழலை ஆராய்ச்சி செய்வதில் தொடங்கிய அவர்களின் கூட்டு  ஒத்துழைப்பு, ஒரு முக்கியமான, எதிர்காலத்தில்  சாத்தியமான ஒரு மூலமாக மாறக்கூடியவரின் சந்திப்பு அவர்களை ஒரு ஆபத்தான இடத்திற்கு  இட்டுச் சென்றது. அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.


ஈவா இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவின் தலைநகரான மேடானில் உள்ள எனது ஹோட்டலில் காலை உணவிற்காக 2015 கோடையில் என்னைச் சந்தித்தார். நாங்கள் அமர்வதற்கு முன்பே, “நீங்கள் இன்று இறக்கத் தயாரா?” “ஆம்,”  என்று நான் சொன்னேன். “நானும் அப்படி தான் நினைக்கிறேன்.”  “நான் இறப்பதற்கு பயப்படவில்லை” என்று அவள் சொன்னாள்.

“மத்திய தரைக்கடலின்  கடற்கொள்ளையர்கள் – Pirates of the Mediterranean Sea” என்ற ஓர் புலனாய்வு அறிக்கையை எழுத, ஆறு நாடுகளைச் சேர்ந்த எட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் ஆட்கடத்தல் விவகாரங்களில்  நிபுணத்துவம் மிக்க ஒருவர் என ஒரு குழுவாக களத்தில் இறங்கினர். அவர்களின் நோக்கம் மத்தியதரைக் கடலைக் கடந்து ஐரோப்பாவை அடைய விரும்பும் புலம்பெயர்வோர் மற்றும் அகதிகளுக்கு அடிக்கடி அபாயகரமான பயணங்களை விற்பதன் மூலம் லாபம் ஈட்டும் மக்களையும் நிறுவனங்களையும் அடையாளம் கண்டுகொள்வதே ஆகும்.

இந்த குழு, இவ்வாறான வழக்குகளை விசாரிக்கும் வழக்கறிஞர்களை சந்தித்திருக்கிறது, வர்த்தகம் மற்றும் நிறுவன பதிவேடுகளை ஆராய்ந்து, பல்வேறு கப்பல் தரவுத் தளங்களில் காணப்படும் தகவல்களுடன் குறுக்கு சோதனை செய்து, புலம்பெயர்ந்தவர்களைக் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட அல்லது அவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளின் காரணமாக கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட சந்தேகத்திற்கிடமான கப்பல்களின் பட்டியலைக் உருவாக்கியது, ” என்று அக்கட்டுரை கூறுகிறது.

நூலிழையில் இழுத்தல்          

தி கார்டியனுக்காக (The Guardian) ஐக்கிய இராச்சியத்தில் (United Kingdom) அடிமையாக இருக்கும்  புலம்பெயர்ந்த தொழிலாளர்களைப் பற்றி எழுதிய  ஃபெலிசிட்டி லாரன்ஸ் (Felicity Lawrence),  தனது செயல்முறையை இவ்வாறு விவரித்தார்:

 “விரிவான நேர்காணல் மூலம் முடிந்தவரை அதிகமான மக்களின் கருத்துக்களை கேட்பது எனது ஊடக அணுகுமுறை. அந்த நேர்காணல்களிலிருந்து, மாற்றத்தின் முக்கிய போக்குகளைப் புரிந்துகொள்ள முயற்சி செய்கிறேன், மேலும் சம்பந்தப்பட்ட விடயம் தொடர்பாக முழுமையான பார்வையை கருத்தில் கொண்டு, அது மற்ற ஆராய்ச்சி மற்றும் புள்ளிவிவரங்களால் உறுதிப்படுத்தப்பட்டதா என்பதைப் ஆராய்வேன். அங்கிருந்து, என்ன நடக்கிறது என்பதை விளக்குவதற்கு சிறந்த அடிமட்டத்திலிருக்கும் உதாரணங்களைக் கண்டுபிடிக்க நான் மீண்டும் கீழே செல்கிறேன். அதனால் நான் மிகவும் பெருமைப்படுகின்றபடி ஒரு துண்டு மட்டும் என்னிடம் இல்லை:  ஒன்று மற்றொன்றுக்கு வழிவகுக்கும். நீங்கள் ஒரு நூலை இழுக்கிறீர்கள், அது பல ஆண்டுகளாக வெவ்வேறு துண்டுகளாக அவிழ்க்கிறது,”

உதவிக்காக கண்களின் அலறல்

“தெற்கு ஆப்கானிஸ்தானின் அடிப்படை வசதிகள் கூட இல்லாதிருக்கும் மூலையில் ஒரு பொலிஸ் தளபதியால் பாலியல் அடிமையாக வைக்கப்பட்ட ஒரு பதின்ம பருவ பையனின் கண்கள் உதவிக்காக அலறின” என்று ஏஜென்ஸ் ஃபிரான்ஸ் பிரஸ் (Agence France Press-AFP) செய்தி நிறுவனத்தின்  அனுஜ் சோப்ரா (Anuj Chopra) தனது மிகப் பிரபலமான செய்தியறிக்கையிடல் தொடர்பாக விபரிக்கும் போது எழுதினார்.

ஆப்கானிஸ்தான் சிறுவர் பாலியல் அடிமை முறையான “பச்சா பாஸி-“bacha bazi.” பற்றி ஆராய்ச்சி செய்யத் தொடங்கிய போது சோப்ரா எதிர்பார்த்ததை விட மிக அதிக மான விடயங்களை கண்டடைந்தார். AFP க்கான அவரது இறுதி செய்தி அறிக்கை “தெற்கு உருஸ்கன் மாகாணத்தில் காவல்துறையினரால் குழந்தை பாலியல் அடிமைகளை வைத்திருக்கும் ஒரு பரவலான நடைமுறையையும், தாலிபான்கள் அவர்களை துஷ்பிரயோகம் செய்பவர்களைக் கொல்ல ட்ரோஜன் குதிரைகளாக எப்படிப் பயன்படுத்துகிறார்கள்” என்று அவர் தனது அறிக்கையின் மிக விரிவாக எழுதினார்.

“உருஸ்கானில் உள்ள ஒரு நம்பிக்கைக்குரிய மூலத்தின் மூலம் நான் முதலில் இது பற்றி கேள்விப்பட்டபோது, நான் அதை நம்பவில்லை,” என்று அவர் நினைவு கூர்ந்தார், “ஆனால் நான் அது பற்றி மேலும் தோண்ட ஆரம்பித்தபோது, பல ஆதாரங்கள் அக்கதையை மேலும் உறுதிப்படுத்தத் தொடங்கின.”

இந்த செய்தி அறிக்கையிடலுக்கு இரகசியம் தேவைப்பட்டது. இது தொடர்பில் சோப்ரா இவ்வாறு எழுதினார்:

அதிகாரமும் தடித்தனமும் கொண்ட  போலீஸ்காரர்களால் பச்சா பாஸி –bacha bazi பெரும்பாலும் தண்டனையின்றி நடைமுறைப்படுத்தப்படுவதால்,  இவ்வாறான மிகவும்  உணர்வுபூரமான விடயம் தொடர்பில் புகாரளிப்பது பாதுகாப்பு அபாயங்கள் நிறைந்ததாக இருந்தது. அவர்கள் என் விசாரணை தொடர்பில் அறிந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்த நான் அமைதியாக ஊருஸ்கனில் இருந்து மற்ற கதைகளை ஆராய்ச்சி செய்யும் போர்வையில் இரண்டு மாதங்கள் அமைதியாக இருந்தேன். இக்காலகட்டத்தில் இவ்விடயம் தொடர்பான மூலங்களை நேர்காணல் செய்வதும் மேலதிக தகவல்களை திரட்டுவதுமாக தொடர்ந்தது.

ஒரு திறந்த இரகசியம் தொடர்பில் ஆராய்தல்

நியூயார்க் டைம்ஸ் (New York Times) நாளிதழின் நிருபர் இயன் உர்பினா (Ian Urbina) இவ்வாறு எழுதினார், “சில நேரங்களில் திறந்த இரகசியங்கள் கூட ஆராயத் தகுந்தவை தான்,”

அவர் கேள்விப்பட்ட திறந்த ரகசியம் என்னவெனில் வெளிநாட்டுக் கப்பல்களில் வேலைவாய்ப்பு  என்று கூறி ஆட்களை வேலைக்கு எடுக்கும் ஏஜென்சிகள் அவர்களை வேறு கப்பல்களில், குறிப்பாக மீன்பிடிக்கப்பல்களில் வேலைக்கு அமர்த்துவதுதான்.

ஊடகவியாலாளரின் குறிப்புகளின்படி-Reporter’s Notebook, மோசடியான ஆட்சேர்ப்பு மற்றும் சந்தேகத்திற்கிடமான பிலிப்பைன்ஸ் நாட்டு பிரஜையான  “எரில் ஆண்ட்ரேட் (Eril Andrade)” என்பவரின் மரணத்தைப் பற்றி கேள்விப்பட்டு நான் எனது புலனாய்வை  தொடங்கினேன். “ஆனால் எனது நோக்கம் மிக விரைவாக விரிவடைந்தது.”

“நான் பிலிப்பைன்ஸில் உள்ள சிறிய கிராமங்களைச் சுற்றிப் பயணித்தபோது, காவல் ஆய்வாளர்கள், மாகாண வழக்கறிஞர்கள், கடற்படை வழக்கறிஞர்கள் மற்றும் முன்னாள் கப்பல் ஊழியர்கள்  ஆகியோர் கடத்தல் மற்றும் அதனுடன்தொடர்புடைய துஷ்பிரயோகத்தின் பரவலான முறைகள் பற்றி என்னிடம் சொன்னார்கள்” என்று அர்பினா கூறினார். பின்னர் கார்ப்பரேட் மற்றும் அரசு அதிகாரிகளுடன் பேசவும் (அல்லது பேச முயற்சி செய்தமை) மற்றும் அதிகாரப்பூர்வ பதிவுகளையும் ஆராய முடிந்தது.

ஒரு காத்திருப்பு அறையில் இருந்து

தாம்சன் ராய்ட்டர்ஸ் அறக்கட்டளையின் (Thomson Reuters Foundation) ரோலி ஸ்ரீவாஸ்தவா (Roli Srivastava) இவ்வாறு நினைவு  கூர்ந்தார், “ஒரு மூத்த காவல் அதிகாரிக்காக  இரண்டு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்தபோது எனது அறிக்கையிடலின் மிக முக்கிய திருப்பத்தை சந்திக்க கூடியதாக இருந்தது,”

அப்போது தான் அவர் அரேபிய வளைகுடா நாடுகளுக்கு இந்திய இளம் பெண்களைக் கடத்திச்செல்லப்படுவது தொடர்பான விசாரணையை ஆரம்பித்திருந்தார். அவர் காவல் நிலையத்தில் உட்கார்ந்திருந்தபோது, காவல்த்துறை அதிகாரிகளுடன் சேர்ந்தியங்கும் திருமண முகவரான  ஒரு நபருடன் சுமார்ஒரு மணி நேரம் பேசினார்.

அதன் பிறகு, ஸ்ரீவஸ்தவா தொடர்ந்து தனது தேடுதலைத் தொடர்ந்த போது, பாதிக்கப்பட்டவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியவர்களுக்கும் பேட்டி அளித்தார். “இவ்விடயம் தொடர்பாக பேசியவர்களிடமிருந்து நான் ஒரு மூத்த காதி நீதிபதி  (அவர் முஸ்லிம் திருமணங்களை நடத்துபவர்) ஒருவரைப்பற்றியும் நேர்காணல்களின் போது மேலதிகத கவல்களை எடுத்துக் கொண்டேன்,”

“நான் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இக்கதையை பற்றி அறிந்திருந்தேன்,”  என்று அவர் GIJN இடம் கூறினார். உண்மையில், ஹைதராபாத்தின் இந்த திருமண சந்தையில் இளம் பெண்களின் வர்த்தகம் குறித்து 1980 களில் ஒரு ஹிந்தி படம் வெளியாகி இருந்தது. இந்த முறை நான் புதிதாக கண்டுபிடித்தது என்னவென்றால் இந்த மோசடியின் அளவு, பாரிய வலையமைப்பு மற்றும் இதில் சம்பந்தப்பட்ட பணம் என்பனவாகும். மேலும் பொறுமை எப்போதுமே நல்ல – மேலதிக தகவலை அளிக்கிறது என்பதையும் நான் கற்றுக்கொண்டேன்.

மேலதிக வளங்கள்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் புலம்பெயர்ந்த தொழிலாளர் உரிமைகள் தொடர்பில் அறிக்கையிட்ட  ஐரிஷ் பத்திரிகையாளர் சீன் ஓ டிரிஸ்கோல் (Sean O’Driscoll) மற்றும் நைஜீரியாவின் கடத்தல் வட்டாரங்களில் அறிக்கையிட இரகசியமாகச் சென்ற நைஜீரிய பத்திரிகையாளர் டோபோர் மிட் ஓவூரி (Tobore Mit Ovuorie) ஆகியோரின் புலனாய்வு அறிக்கையிடல் அனுபவங்களைப் பற்றி கேளுங்கள்.

மார்த்தா மெண்டோசா (Martha Mendosa) மற்றும் எஸ்தர் ஹ்டூசன்( Esther Htusan) ஆகியோர் புலிட்சர் பரிசு வென்ற Associated Press – AP செய்தி நிறுவனத்தின்“அடிமைகளிருந்து கடல் உணவு-Seafood From Slaves எவ்வாறு ஆராயப்பட்டது என்பதை பகுப்பாய்வு செய்யுங்கள்:

நாம் வேறு வளங்களை இப்பக்கத்தில் சேர்க்க தவறியிருந்தால்.  எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். இந்த வளப் பக்கத்திற்கான மேலதிக பங்களிப்புகளை GIJN வரவேற்கிறது.

புகைப்படம்: அமெரிக்க வெளியுறவுத்துறைக்காக கே செர்னுஷ் (Kay Chernush)

இந்த வழிகாட்டியை GIJN இன் வள மையத்தின் இயக்குனர் டோபி மெக்கின்டோஷ் (Toby McIntosh) உருவாக்கியுள்ளார். அவர் வாஷிங்டனில் ப்ளூம்பெர்க் பிஎன்ஏவுடன் (Bloomberg BNA) 39 ஆண்டுகள் இருந்தார். அவர் FreedomInfo.org (2010-2017) இன் முன்னாள் ஆசிரியரும் ஆவார், அங்கு அவர் உலகளாவிய FOI கொள்கைகளைப் பற்றி எழுதினார். மேலும் FOIக்காக குரல்கொடுக்கும் சர்வதேச வலையமைப்புக்கான FOIANetஇன் வழிநடத்தல் குழுவிலும் அவர் பணியாற்றுகிறார்.

மூலம்

This story was originally published by the Global Investigative Journalism Network (GIJN)

Investigative Journalism 101 training series successfully completed

“It was a turning point in my career to have an opportunity to critically review my own reporting as a young journalist and I learned a lot about investigative reporting, building from the fundamentals” says Koshala Gunavardhana, a freelance journalist from Hambantota, in Sri Lanka’s deep-south. Koshala’s experience was not an isolated one. Many emerging, young journalists from across the country expressed similar sentiments after going through the intensive two-day training in investigative journalism.

The recently concluded “Investigative Journalism Fundamentals” virtual training series was designed and delivered by the Center for Investigative Reporting (CIR) offering a comprehensive understanding in the investigative journalism fundamentals, research and reporting methodologies, ethical standards and safety.

Under CIR’s flagship training series, “Investigative Journalism 101,” over 160 journalists have been trained through 10 training programs from August – September 2021.

The program’s objective was to offer cutting edge training in investigative reporting to a select group of journalists in the fundamentals of investigative journalism and mainstream the industry best practices. These enthusiastic participants included over 50 women journalists who valued to opportunity not just to upskill themselves but also to produce investigative reports following the training.

The trainings, conducted in Sinhala, Tamil and English, were delivered by Dilrukshi Handunnetti, Shihar Aneez and Ananda Jayasekara, three renowned investigative journalists.

A select group from among the participants were offered fellowships to develop an in-depth report under the mentorship of senior journalists, an additional step to capacitate the trained journalists to ensure the development of high quality reporting. Over 50 in-depth stories are currently being developed under the fellowship scheme.

The training series was delivered under the theme “Journalism for Change,” a unique initiative supported by the UNDP Sri Lanka and the European Union to positively influence the media landscape through new media narratives.

In addition to the IJ training series, CIR guided a group of journalists in visual storytelling and trained another group of 300 persons including journalists, civil society actors and concerned citizens in information literacy under CIR’s extremely popular media literacy initiative.

GIJN வழிகாட்டி: பெண் ஊடகவியலாளர்களுக்கான வளங்கள்

பெண்  ஊடகவியலாளர்கள் தங்கள் வேலைகளைச் செய்யும்போது தனித்துவமான சவால்களை எதிர்கொள்கின்றனர். உலகெங்கிலும் உள்ள நம் சக பெண் பத்திரிகையாளர்கள் தங்கள் பணியிடங்களில் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு  உதவும் பொருட்டு, GIJN பல்வேறு வளங்களைத்  திரட்டியுள்ளது. இவ்வளங்கள் பெண் ஊடகவியலாளர்கள் வலையமைப்புகளை  கண்டடையவும், உசாத்துணை வளங்கள், இணையரீதியிலான  துன்புறுத்தல்கள், பணியிட பாகுபாடு மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை போன்ற பிரச்சினைகளைக் கையாளும் வகையில்  கருவிகளை உள்ளடக்கியதாகும்.

இவ்வளங்கள்  நிருபர்களுக்கு எளிதாக வாய்ப்புகளைக் கண்டறியவும் மற்றும் பெண் ஊடகவியலாளர்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட வளங்களைக் கண்டறியவும் உதவும்.

வளங்களின்  தொகுப்பை நாங்கள் சேகரித்துள்ளோம். எங்கள் தலைப்புகள்:

நாம் ஏதாவது தவறவிட்டுள்ளோமா? எங்களுக்கு இங்கே ஒரு பரிந்துரையை அனுப்புங்கள், அவற்றைக்கொண்டு எங்கள் பட்டியலை மேலும் விரிவாக்குவோம்.

சர்வதேச வலையமைப்புக்கள்

தொழில்முறை சார்ந்த  வலையமைப்புகள், சகாக்களின் ஆதரவு, வழிகாட்டல், ஒத்துழைப்பு மற்றும் தொடர்புகளுக்கு சிறந்த வளங்களாக இருக்கலாம்.

ஆண் ஆதிக்கம் செலுத்தும் புலனாய்வு ஊடகவியல் துறையில், புரிந்துணர்வு மற்றும் ஆதரவுக்காக மற்ற பெண்களை அணுகுவது உதவியாக இருக்கும். அதனால்தான் பிராந்திய மற்றும் உலகளாவிய வலையமைப்புகளின் பட்டியலை குறிப்பாக உலகெங்கிலும் உள்ள பெண் பத்திரிகையாளர்களுக்காக நாங்கள் தொகுத்துள்ளோம்.

GIJN Women என்பது புலனாய்வு ஊடகவியலில் பெண்கள் எதிர்நோக்கும்  பிரச்சினைகள்  விவாதிக்க உலகளாவிய புலனாய்வு ஊடகவியல் வலையமைப்பு (GIJN) உருவாக்கிய இணையம் சார்ந்த   ஓர் குழுவாகும். 

2017 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட,‘பத்திரிகைத்துறையில் உள்ள   பெண் ஊடகவியலாளர்களுக்கான  கூட்டணி” –(  Coalition for Women in Journalism ) உலகெங்கிலும் உள்ள பெண் பத்திரிகையாளர்களிடையே நட்புறவை  வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அனுபவம் வாய்ந்த பெண் பத்திரிகையாளர்களிடமிருந்து வளங்கள், நிகழ்வுகள், ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் ஆகியவற்றை வழங்குகிறது. இக் கூட்டணி லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆசியா முழுவதும் தொடர்புகளை கொண்டுள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியைத் தளமாகக் கொண்ட  சர்வதேச மகளிர் ஊடக அறக்கட்டளை –( International Women’s Media Foundation ) 1990 இல் நிறுவப்பட்டதிலிருந்து  இன்றுவரை  உதவித்தொகைகள் பயிற்சிகள் மற்றும் பல விருதுகளை வழங்குகிறது. மேலும் இதுவரை கவனம் செலுத்தப்படாத செய்தி ஆய்வுகளில் ஈடுபட உலகெங்கிலும் உள்ள பெண் ஊடகவியலாளர்களுக்கான பயண அறிக்கையிடல்  ஏற்பாடுகளையும் செய்கிறது.

IMWF  ஒரு அவசர நிதிக்கட்டமைப்பை  கொண்டுள்ள அதேவேளை பெண் ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்பு பயிற்சிக்கும் அனுசரணை வழங்குகிறது. அவ்வாறான “பாதுகாப்பு”  சம்பந்தபட்ட  தகவல்களை கீழே காண முடியும்.

வானொலி மற்றும் தொலைக்காட்சியில் உள்ள பெண்களின் சர்வதேச சங்கம்-  International Association of Women in Radio & Television, ஒளிபரப்பு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் பணிபுரியும் பெண்களுக்கான உலகளாவிய வலையமைப்பாகும்.

இது ஆப்கானிஸ்தான், கேமரூன்,ஈராக்-குர்திஸ்தான், மால்டோவா, நோர்வே, தென்னாபிரிக்கா, உகண்டா, கம்போடியா, இந்தியா, கென்யா, நேபாளம், பிலிப்பைன்ஸ், தான்சானியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் கிளைகளைக் கொண்டுள்ளது.

IAWRT பெண்கள் மற்றும் ஊடகங்களை மையமாகக் கொண்ட உலகளாவிய திட்டங்களை ஆதரிக்கின்றதோடு மட்டுமில்லாது , மாநாடுகளை ஏற்பாடு செய்தல்  மற்றும் தொழில்முறை திறன் பயிற்சி வாய்ப்புகளை வழங்குதல் போன்ற நடவடிக்கைகளிலும்  ஈடுபடுகிறது.

Women Photograph  என்பது 2017 இல் தொடங்கப்பட்ட ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனமாகும். இந்நிறுவனம் ‘புகைப்பட ஊடகவியல்துறையின் பிரதான கதைசொல்லிகள், அவர்கள் சொல்ல விரும்பும்  பல்சமூங்களைப்போல இத்துறையையும் பல்வகைமைப்படுத்தல்’ என்ற  குறிக்கோளுடன் இயங்கி வருகிறது. 

இந்த வலையமைப்பு உலகெங்கிலும் 1,000 சுயாதீன ஆவணப்பட புகைப்படக்காரர்களின் காப்பகத்தை இயக்குகிறது, அவை பெண் மற்றும் பைனரி (binary) அல்லாத காட்சி ஊடகவியலாளர்கள் என்று அடையாளம் காட்டுகின்றன, மேலும் பத்திரிகையாசிரியர்கள்  பெண்களால் எடுக்கப்பட  புகைப்படங்களை அதிகளவில் பிரசுரிக்க பல்வேறுபட்ட பிரயத்தனங்களை மேற்கொள்கிறது. 

அவர்கள் சேகரித்த 2020இல் வெளியான பத்திரிகைகளின் முதற்பக்கத்தில் வெளியான புகைப்படங்கள் தொடர்பான  தரவை இங்கே பார்க்கலாம்.

Media Moms என்பது 500 அங்கத்தவர்களைக் கொண்ட  ஒரு மூடிய பேஸ்புக் குழுவாகும், இதில் தாயாரான பத்திரிகையாளராக செய்தி பீடங்களில் பணிபுரிவோர், ஊடகக்கல்வி  மற்றும் ஊடகங்களின் வணிகப் பக்கங்களில் பணிபுரியும் பல் தாய்மார் உள்ளனர். அதன் குறிக்கோள் கூற்று: “வீட்டிலும் வேலைத்தளத்திலும்  காலக்கெடு மற்றும் வாழ்க்கையை சமநிலைப்படுத்துவதிலும்  தனித்துவமான சவால்களை நாங்கள் எதிர்கொள்கிறோம். கதைகள், சிக்கல்கள், தீர்வுகள் மற்றும் மெய்நிகர் வெளியில் அரவணைப்புகளைப் பகிர்ந்து கொள்ள இது ஒரு ஆதரவான இடம்.” என்று அமைகிறது.

ஆபிரிக்காவிலுள்ள வலையமைப்புகள்

WanaData என்பது, Code for Africa என்னும் நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்ட, ஆபிரிக்க பெண் பத்திரிகையாளர்கள், தரவு வல்லுநர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் தரவு சார்ந்த கதைகளை உருவாக்க ஒத்துழைக்கிறது.    

#Wanadata என்ற குறியீட்டை பயன்படுத்தி ட்விட்டரில் கதைகள் மற்றும் உரையாடல்களைக் கண்டறிய முடியும். குழுவில் சேர அல்லது ஒரு கதை தொடர்பில் மேலதிக தகவல்களை இங்கே பெற முடியும். இவ்வலையமைப்பானது  அதன் கூட்டாளர்களுடன் சேர்ந்து, நவீன ஊடகவியல் சார்ந்த பயிற்சித் திட்டத்தை வழங்குகிறது.

2016 இல் நிறுவப்பட்ட, ஆபிரிக்க ஊடகப் பெண்கள் –African Women in Media (AWiM) ஆண்டுதோறும் கலந்துரையாடலில் ஈடுபடுவதோடு , பேஸ்புக்கில் ஒரு குழுவையும்  நடத்தி  வாராந்த செய்திமடல் ஒன்றையும் வெளியிடுகிறது. இது தொழில்துறையில் ஆபிரிக்க பெண்களின் தொழில்முறை வளர்ச்சி மற்றும் ஊடகங்களில் பாலினப் பிரச்சினைகளின் பிரதிநிதித்துவம் ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில், ஃபோஜோ (Fojo) மீடியா நிறுவனத்துடன் இணைந்து , துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் பெண் பத்திரிகையாளர்களுக்கான நுழைவு தடைகளை வெளிப்படுத்தும் ஒரு ஆய்வை அவர்கள் வெளியிட்டனர். இதற்காக அவர்கள் 17 ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த 125 பெண் பத்திரிகையாளர்களை ஆய்வு செய்தனர்.

1983 இல் நிறுவப்பட்ட, கென்யாவில் உள்ள கென்ய ஊடகப் பெண்கள் சங்கம் ;- Association of Media Women in Kenya என்பது இலாப நோக்கமற்ற உறுப்பினர் அமைப்பாகும், இது தொழில்துறையிலும் சமூகத்திலும் ஊடகங்கள் மூலம் பெண்களுக்கு சமத்துவம் மற்றும் தெரிவுநிலையை மையமாகக் கொண்டுள்ளது. AMWIK ஆனது பெண் பத்திரிகையாளரின் இணைய பாதுகாப்பு தொடர்பான  கணக்கெடுப்பு உள்ளிட்ட வளங்களை வெளியிடுவது மட்டுமின்றி உதவித்தொகை நிதியையும்  வழங்குகிறது.

நைஜீரிய பெண் ஊடகவியலாளர் சங்கம் – Nigeria Association of Women Journalists  25 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது மற்றும் ஊடகங்களில் பெண்களின் அணுகல் மற்றும் தலைமைத்துவத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. NAWOJ நைஜீரியாவில் பெண் பத்திரிகையாளர்களுக்கு ஆலோசனை மற்றும் பயிற்சியை வழங்குகிறது.

கெமரூன் ஊடகப் பெண்கள்- Cameroon Media Women ,#MeToo இயக்கத்திற்கு பதிலளிக்கும் விதமாக 2018 இல் ஒரு வாட்ஸ்அப் (WhatsApp) செயலியின் மூலம் குழுவாக மற்றும் ஒரு மூடப்பட்ட பேஸ்புக் பக்கமாக தொடங்கப்பட்டது. கேமரூனின் நாட்டின் இணைப்பு குறியீட்டெண்ணை குறிப்பிடும் வகையில் ;  #StopSexualHarassment237என்ற குறியீடு  மூலம், பெண் பத்திரிகையாளர்கள் ட்விட்டர் தளத்தில் கலந்துரையாடல் நடத்தினர் மற்றும் செய்தி அறைகளில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விவாதித்து வீடியோக்களையும்  பகிர்ந்து கொண்டனர்.

செனகலை தளமாகக் கொண்ட பெண்கள், ஊடகம், பாலின சமத்துவம் மற்றும் மேம்பாட்டிற்கான ஆபிரிக்காவுக்குள்ளான வலையமைப்பு-  Inter-African Network for Women, Media, Gender Equity and Development 2001 இல் நிறுவப்பட்ட மற்றும் மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்காவில் 22 நாடுகளில் இயங்கும் பெண்களுக்கான ஒரு ஊடக மற்றும் தகவல் தொடர்பு அமைப்பாகும். FAMEDEV ஆனது ஊடகம், பாலின சமத்துவம் மற்றும் ஆப்பிரிக்காவின் வளர்ச்சிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது பெண் பத்திரிகையாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் அதேவேளை, ஆலோசனை , தகவல் மற்றும் பயிற்சிக்கு வளங்களுடன் கூடிய கருவிகளை உருவாக்கி  சமூக தொழில்முனைவை ஊக்குவிக்கிறது.

லத்தீன் அமெரிக்காவிலுள்ள வலையமைப்புகள்

2013 இல் தொடங்கப்பட்ட Chicas Poderosas  லத்தீன் அமெரிக்கா மற்றும் ஸ்பெயின் உட்பட்ட  13 நாடுகளில் கிளைகளைக்  கொண்டுள்ளது. இது புலனாய்வு பத்திரிகை பட்டறைகள் மற்றும் இணைய பாதுகாப்பு பயிற்சிகளை ஏற்பாடு செய்கிறது.

மேலும் இந்நிறுவனம் தலைமை தாங்குதல் , டிஜிட்டல் மற்றும் புதிய ஊடக திறன்களில் பெண்களுக்கு பயிற்சி அளித்தல், வழிகாட்டுதல் மற்றும் உதவித்தொகை வழங்கும் வசதிகளையும்  ஏற்படுத்தியுள்ளது.

2017 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட, பத்திரிகையில் பணியாற்றும்  பெண்களுக்கான கூட்டணி- Coalition for Women in Journalism  “உலகெங்கிலும் உள்ள பெண் பத்திரிகையாளர்களிடையே நட்புறவை” வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, அனுபவம் வாய்ந்த பெண் பத்திரிகையாளர்களிடமிருந்து வளங்கள், நிகழ்வுகள், ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் ஆகியவற்றை வழங்குகிறது. இக்கூட்டணிக்கு மெக்ஸிகோவில் ஒரு கிளை உள்ளது.

மத்திய கிழக்கில் உள்ள வலையமைப்புகள்

1999 இல் நிறுவப்பட்ட, அரேபிய  பெண்கள் ஊடக மையம் (Arab Women Media Center) என்பது பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான வேலை பயிற்சி, திறன் மேம்பாடு மற்றும் ஊடக கல்வியறிவு ஆகியவற்றை மையமாகக் கொண்ட அம்மானை தளமாகக்  கொண்ட ஓர்  அரசு சாரா அமைப்பாகும். பெண்கள் மற்றும் ஊடகங்களை மையமாகக் கொண்ட ஆவணப்படங்கள் மற்றும் வளங்களை AWMC உருவாக்குகிறது, மேலும் இப்பிராந்தியத்தில்  உள்ள பெண் பத்திரிகையாளர்களை இணைக்க இணையரீதியிலான வலையமைப்பையும் கொண்டுள்ளது. 

நெதர்லாந்தை அடிப்படையாகக் கொண்டு, சிரியாவில் பெண் பத்திரிக்கையாளர்களின் குரல்களைப் பெருக்கவும், தலைமைப் பதவிகளில் சேர உதவுவதற்காகவும் சிரிய பெண் பத்திரிக்கையாளர் வலையமைப்பு – Syrian Female Journalists Network (SFJN) 2012 இல் நிறுவப்பட்டது. ஆண் மற்றும் பெண் உறுப்பினர்களைக் கொண்ட SFJN, சிரியாவிலும், துருக்கி, லெபனான் மற்றும் ஜோர்தானிலும் உள்ள பெண் ஊடகவியலாளர்களுக்கு பாலினம் மற்றும் பெண்ணியம் தொடர்பான பயிற்சிகளை வழங்குகிறது. மேலும் இவ்வலையமைப்பு அதன் உறுப்பினர்களுடன் வளங்களையும் புதிய வாய்ப்புகளையும் பகிர்ந்து கொள்கிறது.

மேரி கொல்வின் பத்திரிகையாளர்களின் வலையமைப்பு (The Marie Colvin Journalists’ Network) என்பது பெண் ஊடகவியலாளர்களின் இணையத்தளம் சார்ந்த  சமூகமாகும், அதன் உறுப்பினர்கள் நடைமுறை ஆதரவையும் வழிகாட்டலையும் பெறுவதோடு  மற்றவர்களுடன் ஆலோசனையைப் பகிர்ந்து கொள்கிறார்கள். அரபு உலகில் பணிபுரியும் அரபு மொழி பேசும் பெண் பத்திரிகையாளர்களுக்கு இது இலவசமாக தனது சேவையினை வழங்குகிறது.

வட அமெரிக்காவிலுள்ள வலையமைப்புகள் 

1985 இல் தொடங்கப்பட்ட, ஊடக மகளிர்( Journalism & Women Symposium), அமெரிக்காவில் உள்ள பெண் பத்திரிகையாளர்களுக்கான ஒரு சமூகத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. JAWS ஊடகங்களில் “வளங்கள், ஆதரவு, பயிற்சி மற்றும் பெண்களைப் பாதிக்கும் பிரச்சினைகள் பற்றிய தகவல்களை” வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. JAWS வருடாந்த மாநாட்டை நடத்துவதோடு தொடர்ந்து வழிகாட்டுதலையும் வழங்குகிறது.

அமெரிக்காவின் வாஷிங்டன், டிசியைத் தளமாகக்கொண்டு  சர்வதேச மகளிர் ஊடக அறக்கட்டளை –  International Women’s Media Foundation  1990 இல் நிறுவப்பட்டது.  இன்று உலகெங்கிலும் உள்ள பெண் ஊடகவியலாளர்களுக்கு மானியங்கள், பயிற்சி மற்றும் அறிக்கையிடல் பயணங்களை வழங்குவதோடு குறைவாக அறிக்கையிடப்பட்ட கதைகளில் கவனம் செலுத்துகிறது.

IWMF ஒரு அவசர நிதிக்கட்டமைப்பை கொண்டுள்ள அதேவேளை பெண் ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்பு பயிற்சிக்கும் அனுசரணை வழங்குகிறது. அவ்வாறான  “பாதுகாப்பு”  சம்பந்தபட்ட  தகவல்களை கீழே காண முடியும்.

ஐக்கிய அமெரிக்காவினை மையமாகக்கொண்டு 1909 இல் தொடங்கப்பட்ட-  Association for Women in Communications  ஆனது  பெண்களுக்கான கற்றல் வாய்ப்புகள், வேலைவாய்ப்பு மற்றும் பெண் தலைவர்களின் வலையமைப்பு மூலம் தொடர்புகளில் பெண்களின் பங்கை உயர்த்த உதவுகிறது.

ஆசியாவில் உள்ள வலையமைப்புகள்

இந்தியாவில் பெண்கள் ஊடகவியலாளர்களின் வலையமைப்பு –Network of Women in Media, India (NWMI) என்பது இந்தியாவில் உள்ள பெண் ஊடகவியலாளர்களுக்கு “தகவல் மற்றும் வளங்களைப் பகிர்ந்து கொள்ளவும், கருத்துகளைப் பரிமாறவும், ஊடக விழிப்புணர்வு மற்றும் நெறிமுறைகளை ஊக்குவிக்கவும், பாலின சமத்துவம் மற்றும் நீதிக்காகவும் வேலைத்திட்டங்களை” மேற்கொள்ளுவதற்கும் ஒரு தளத்தை தொழில்த்துறைக்குள்ளும், சமூகத்திற்கும் வழங்குகிறது.. NWMI நாடு முழுவதும் 16 கிளைகளை கொண்டுள்ளது.

உழைக்கும் பெண் ஊடகவியலாளர்கள் அமைப்பானது- Working Women Journalists   நேபாளத்தில் உள்ள  ஒரு ஆலோசனை நிறுவனமாகும். இது ஊடகங்களில் பெண்களுக்கு அதிக பங்கேற்பு மற்றும் சம வாய்ப்புக்காக குரலெழுப்புவதுடன்  பயிற்சிகள்இ கருத்தரங்குகள் மற்றும் பட்டறைகளை வழங்குகிறது.

NuVoices வலையமைப்பு, ஊடகவியலாளர்கள் உட்பட சீனா தொடர்பில்  பணிபுரியும் பெண்களுக்கு ஆதரவு வழங்குவதோடு  ஒரு மூடிய பேஸ்புக் பக்கத்தைக் கொண்டுள்ளது. மேலும் சீனா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் கிளைகளை கொண்டிருப்பதோடு சீனா தொடர்பான பெண் நிபுணர்களின் தரவுத்தளமொன்றையும் கொண்டுள்ளது.

2017 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டஊடகத்திலுள்ள “பெண் ஊடகவியலாளர்களுக்கான  கூட்டணி – Coalition for Women in Journalism  ” உலகெங்கிலும் உள்ள பெண் பத்திரிகையாளர்களிடையே நட்புறவை” வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அனுபவம் வாய்ந்த பெண் பத்திரிகையாளர்களிடமிருந்து வளங்கள், நிகழ்வுகள், ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் ஆகியவற்றை வழங்குகிறது. இக் கூட்டணி லத்தீன் அமெரிக்கா,பாகிஸ்தான், சீனா மற்றும் இந்தியாவில் கிளைகளை  கொண்டுள்ளது.

Women in Media Network Japan ஆனது 2018 இல் 86 பெண் பத்திரிகையாளர்களால் உருவாக்கப்பட்டதோடு  பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான #WithYou movement இயக்கத்தில் இருந்து வளர்ந்தது.

ஐரோப்பாவில் உள்ள வலையமைப்புகள்

ஐக்கிய இராச்சியத்தின் (UK) பெண் பத்திரிக்கையாளர்களின் குழு 2017 ஆம் ஆண்டில் இரண்டாவது மாற்று மூலம்- The Second Source எனப்படும் பெண்களுக்கான மாற்று தொழில்முறை வலையமைப்பாக உருவாக்கியது. அத்துடன் இவ்வமைப்பு  ஊடகங்களிருந்து வரும் தொந்தரவுகளை கையாளவும், விழிப்புணர்வை ஊக்குவிப்பதையும், பெண்களின் உரிமைகளைத் தெரிவிப்பதையும், தொழிலில் மாற்றத்தை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் இந்நிறுவனமானது  “முழு நேர தொழில்முறை ஊடகவியலாளர்களாகத் தொடங்கும் பெண்களை இலக்காகக் கொண்ட, தொழில்துறையிலிருந்து வெளியேறுவது தொடர்பில் ஆலோசிப்பவர்கள் அல்லது அவர்களுக்கு வழிகாட்டல் தேவை என்று சிந்திப்போருக்குமாக  ஒரு வழிகாட்டல் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.” இது தொழில் ஆலோசனை மட்டுமல்ல, வேலை தொடர்பான சவால்களைச் சமாளிக்கும் ஆலோசனையையும் வழங்கும் நோக்கம் கொண்டது.

லண்டனை தளமாகக் கொண்ட ஊடகத்துறையில் பெண்கள்- Women in Journalism  என்பது இங்கிலாந்தில் உள்ள ஊடகங்களில் பெண்களின் தொழில்முறை வலையமைப்பு ஆகும். WIJ கருத்தரங்குகள், குழு விவாதங்கள், ஆய்வுகள், மற்றும் வலையமைப்பு நிகழ்வுகளை நடத்துவதோடு மேலும் வளர்ந்துவரும் இளம் மற்றும் மற்றும் நடுத்தரவயது பெண் பத்திரிகையாளர்களுக்கான வழிகாட்டுதல் திட்டத்தை கொண்டுள்ளது.

பிரான்சில் – Prenons la une என்பது ஊடகங்களில் பெண்களின் நியாயமான பிரதிநிதித்துவம் மற்றும் செய்தி அறைகளில் தொழில்முறை சமத்துவம் ஆகியவற்றை ஆதரிக்கும் பெண் பத்திரிகையாளர்களின் சங்கமாகும். இவ்வலையமைப்பு சில மாதங்களுக்கு ஒருமுறை சந்தித்து பாகுபாடு மற்றும் தொந்தரவுகளை எதிர்கொள்ளும் பெண்களுக்கு ஆதரவை வழங்குகிறது.

ஜெர்மனியில், Journalistinnenbund என்பது நாடு முழுவதும், பத்திரிகை துறையில் பணிபுரியும் 400 க்கும் மேற்பட்ட பெண்களின் தலைமுறைகளுக்கிடையேயான  வலையமைப்பு ஆகும். 1987 இல் நிறுவப்பட்ட இந்த அமைப்பு, நாடு முழுவதும் பிராந்தியக் குழுக்களையும், வளர்ந்து வரும் பத்திரிகையாளர்களுக்கான வழிகாட்டுதல் திட்டத்தையும் கொண்டுள்ளது.

Chicas Poderosas Spain என்பது 2018 இல் 155 பேர் கலந்து கொண்ட மாநாட்டில் தொடங்கப்பட்டது. இது ஒரு லத்தீன் அமெரிக்கக் குழுவில் ஒரு அங்கமாகும். இதன் ட்விட்டர் தள முகவரி @PoderosasES.

பாதுகாப்பு வளங்கள்

பாதுகாப்பு என்பது அனைத்து பத்திரிகையாளர்களும் கவலைப்பட வேண்டிய விஷயம், ஆனால் பெண்களைப் பொறுத்தவரையில்   பாலின அடிப்படையிலான வன்முறை, துன்புறுத்தல்,  செய்தியறையில்  பாகுபாடு காட்டல்  மற்றும் இணைய வெளியில்  தாக்குதல் போன்றனவற்றால் கூடுதல் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர். இத்துறையில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த சில வளங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

வானொலி மற்றும் தொலைக்காட்சியில் உள்ள பெண்களின் சர்வதேச ( International Association of Women in Radio & Television) பெண் பத்திரிகையாளர்களுக்கான பாதுகாப்பு கையேட்டை வெளியிட்டது. இது மோதல் நடைபெறும் பிராந்தியங்களில் பணியாற்றும் பெண் நிருபர்களை இலக்காகக் கொண்ட 95 பக்க வழிகாட்டியாகும், மேலும் இது  இடர் மதிப்பீடு, இணையரீதியிலான துன்புறுத்தல் மற்றும் பயணப் பாதுகாப்பு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியது

உடல்ரீதியான  பாதுகாப்பு: தனியாள்  அறிக்கையிடல்  மற்றும் உடல் பாதுகாப்பு: பாலியல் வன்முறையைத் தணிப்பது (Physical Safety: Solo Reporting and Physical Safety: Mitigating Sexual Violence ) என்பது 2019 இல் ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் குழுவால் (Committee to Protect Journalists-CPJ)   உருவாக்கப்பட்ட வளங்களாகும். இந்த வலைப்பதிவில் விவரிக்கப்பட்டுள்ளபடி  அமெரிக்கா மற்றும் கனடாவில் பெண் பத்திரிகையாளர்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து CPJ  ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. புதிய பிரிவுகள் CPJ   பாதுகாப்பு குறிப்புகள் என்ற பக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளன, மேலும் பத்திரிகையாளர் பாதுகாப்பு வழிகாட்டியினை இந்த தொடுப்பில் காண முடியும்.

சர்வதேச மகளிர் ஊடக அறக்கட்டளை – International Women’s Media Foundation பெண் பத்திரிக்கையாளர்களுக்கு சட்ட, மருத்துவ செலவுகள்  மற்றும் இடமாற்ற செலவுகளுக்கு உதவ ஓர்  அவசர நிதியை அமைத்துள்ளது.

ஆபத்தில் இருக்கும் ஊடகவியலாளர்களுக்கு உதவி வழங்கும் பாதுகாப்பு வழிகாட்டிகள் மற்றும் உதவி வழங்கும் அமைப்புகளின் தகவல்களைக்கொண்ட வளங்கள் பக்கத்தை GIJN தொகுத்துள்ளது. மருத்துவம் மற்றும் சட்ட உதவி முதல் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள்ளாயிருக்கும் பத்திரிகையாளரை நாட்டை விட்டு வெளியேற்றுவது வரை உதவிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

பத்திரிகை மற்றும் ஊடக சுதந்திரத்திற்கான ஐரோப்பிய மையம் –(  European Center for Press & Media Freedom ) ஒரு எச்சரிக்கை மையத்தைத் தொடங்கியுள்ளது, அங்கு பெண் ஊடகவியலாளர்கள் மறைகுறியாக்கப்பட்ட செய்திபரிமாற்றம்  மூலம் தாக்குதல் சம்பந்தமாக புகாரளிக்கலாம் மற்றும் உதவி பெறலாம். ECPMF பெண் ஊழியர்களால் மட்டுமே செய்திகள் திறக்கப்படுவதோடு, அறிக்கைகள் மிகவும் ரகசியமாக வைத்திருக்கப்படும் .

சர்வதேச ஊடகவியலாளர் கூட்டமைப்பு (International Federation of Journalists ) சர்வதேச தொழிலாளர் அமைப்புடன் (International Labor Organization)  இணைந்து பெண் ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. வளங்களில் கருவிகள், வெளியீடுகள் மற்றும் தொடர்புடைய கொள்கைகளுக்கான இணையத் தொடுப்புகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. IFJ  பிரச்சனைகளை நேரடியாக நிவர்த்தி செய்ய மற்றும் அர்த்தமுள்ள மாற்றத்திற்கு உள்ளூர் அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுக்க ஆதரவு மற்றும் வளங்களை வழங்குகிறது. நவம்பர் 2019 இல், பெண் பத்திரிகையாளர்களை இணையத்தில் trolling என்பபடும் திட்டமிட்ட  துன்புறுத்தல்களுக்கு  எதிராக கூட்டாக போராட IFJ வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியது.

பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் போலவே சுய பாதுகாப்பும் முக்கியம் என்பதை நாங்கள் இப்போது அறிவோம். எரிச்சலைக் குறைக்கவும், அதிர்ச்சியைத் தணிக்கவும் மற்றும் உங்கள் கவனத்தை அதிகரிக்கவும், காலை மற்றும் மாலை பயிற்சிக்காக IWMF இலிருந்து இந்த யோகாசன   வீடியோக்களைப் பாருங்கள். இது குறிப்பாக பெண் பத்திரிகையாளர்களுக்காகவென வடிவமைக்கப்பட்டுள்ளது.

Troll-Busters.com என்பது உலகளாவிய பிரச்சாரமாகும், இது “ஊடகவியலாளர்களுக்கான இணைய வழி பாதுகாப்பை உறுதி செய்வதினூடாக” பெண்களை மையமாகக் கொண்ட அடையாளம் காணல், பாதிப்பைக்குறைத்தல், இணையத்தினூடாக விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் துன்புறுத்தல்கள் தொடர்பில் புகாரளிப்பதில் நிபுணத்துவம் பெற்றது. அவர்களிடம் பெண் ஊடகவியலாளர்களுக்கான குறிப்பிட்ட வளங்களும் பயிற்சிகளும் உள்ளன.

PEN America சமீபத்தில் இணையவழி வெறுப்பு மற்றும் துன்புறுத்தலுக்கு எதிராகப் பாதுகாப்பதற்கான நடைமுறை கருவிகள் மற்றும் தந்திரோபாயங்களுடன் ‘இணையவழி துன்புறுத்தல் தொடர்பான கள கையேட்டை’ வெளியிட்டது. PEN கையேட்டை “இணையத்தில் பின்தொடர்வது, குறுஞ்செய்தி அனுப்புதல், வெறுக்கத்தக்க வெறுப்புப்பேச்சு மற்றும் டிஜிட்டல் துன்புறுத்தலின் பிற வடிவங்களில் ஆலோசனை, வழிகாட்டுதல் மற்றும் பல்வேறு வளங்களை கொண்ட ஒரு கடை” என்று விவரிக்கிறது. “என்ன செய்வது” என்பது குறித்த உலகளாவிய ஆலோசனையைத் தவிர, வளத்தில் தொடர்புடைய அமெரிக்க மாநிலச் சட்டங்கள் பற்றிய தகவல்களும் உள்ளடக்கப்படுள்ளன.

இணைய ரீதியிலான கொடுமைப்படுத்துதல் மற்றும் பெண் ஊடகவியலாளர்கள் மீதான ஆன்லைன் துன்புறுத்தல்களை நிறுத்த  சர்வதேச பத்திரிகையாளர்கள் கூட்டாளர் அமைப்பு மற்றும் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள அமைப்புக்கள் இணைந்து பைட் பேக் (Byte Back) என்ற  பிரச்சாரத்தினை  2016 இல் தொடங்கின.

இணையத்தில் நடைபெறும் துன்புறுத்தல்கள்  மற்றும் தொந்தரவுகளை எதிர்ப்பதற்கு தேவையான வளங்கள், மற்றும் தந்திரோபாயங்களை இது வழங்குகின்றது.

Access Now’s Digital Security Helpline  எனப்படும் இலவச இணைய பாதுகாப்பு சேவை உலகெங்கிலும் உள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுடன் இலவசமாக வேலை செய்கிறது. அவர்கள் டிஜிட்டல் பாதுகாப்பு நடைமுறைகளை மேம்படுத்த உதவுவதுடன்  ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரஞ்சு, ஜெர்மன், போர்த்துகீசியம், ரஷ்யன், ஆஸ்ட்ரோனேசிய மொழி டாகலாக், அரபு மற்றும் இத்தாலிய மொழிகளில் இரண்டு மணி நேரத்திற்குள் விரைவான பதில் அவசர உதவியை அவர்களால் வழங்க முடியும்.

A DIY Guide to Feminist Cybersecurity  என அழைக்கப்படும் வழிகாட்டி இணையத்தில் தொடரும் தனிநபர் கண்காணிப்பு, அநாமதேய கருவிகளின் பிரயோகம், தகவல் திருட்டு, பாதுகாப்பற்ற  உள்நுழையும்  நடைமுறைகள், சமூக ஊடகங்களில் தனிநபரின்  உரிமை  மீறல் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கும் கருவிகளை உள்ளடக்கியது. மேலும் இது பாதுகாப்பான தொடர்பாடல் முறைக்கு குறியாக்கம் (ஸ்பானிஷ் பதிப்பு) தொடர்பான வளங்களையும் கொண்டுள்ளது.

Speak Up & Stay Safe (r): A Guide to Protecting Yourself From Online Harassment எனப்படும் உரத்துப் பேசுவதுடன் பாதுகாப்பாக இரு: இணைய வழி தொந்தரவுகளிலிருந்து உங்களை பாதுகாப்பதற்கான ஒரு வழிகாட்டி Feminist Frequency எனும் அமைப்பால் உருவாக்கப்பட்டது.

இது இணையத்தில் தனிநபர் மீதான தாக்குதல்கள், சமூக ஊடகங்கள் மற்றும் இணைய விளையாட்டு தளங்களில் தனி நபர் உரிமை, தனியொருவரின் இணையதளப் பாதுகாப்பு, மின்னஞ்சல் பாதுகாப்பு போன்ற விடயங்களில் உள்ள தந்திரோபாயங்களையும் எடுத்துக் கூறுகிறது.

அலெர்டா மச்சிட்ரோல்- (Alerta Machitroll )என்பது கொலம்பியாவை தளமாகக் கொண்ட ஸ்பானிஷ் மொழி பிரச்சாரமாகும், இது டிஜிட்டல் சூழலில் பெண்களுக்கு எதிரான வன்முறையை எதிர்த்து 2015 இல் Fundación Karisma i இனால் தொடங்கப்பட்டது. இணையத்தில் நடைபெறும் துன்புறுத்தலை நகைச்சுவையுடன் எதிர்த்துப் போராட இக்குழு எச்சரிக்கை உருவாக்கி-  Alert Generator  மற்றும் சுய உதவி உத்திகளை வழங்குகிறது.

Crash Override Network எனப்படும் வலையமைப்பின் வளங்களின்  மையம் இணையவழி  துஷ்பிரயோகம், தனியாள் தகவல் திருட்டு  மற்றும் உடன்படாத நெருக்கமான படங்களின்  வெளியீடு மற்றும் தனிப்பட்ட தரவு, கடவுச்சொற்கள் மற்றும் சாதனங்கள் ஆகியவற்றைப் பாதுகாக்கும் கருவிகள், வழிகாட்டிகள் மற்றும் சேவைகளை பட்டியலிடுகிறது.

Online SOS என்பது ஒரு இலாப நோக்கமற்ற அமைப்பாகும், இது எந்தவிதமான ஆன்லைன் துன்புறுத்தல்களையும் எதிர்நோக்கும் அமெரிக்க ஊடகவியலாளர்கள் மீது கவனம் செலுத்துகிறது, மேலும் சட்ட அமலாக்கம், சட்ட தீர்வுகள், வேலைவாய்ப்பு தொடர்பான விருப்பங்கள், வழக்கு மேலாண்மை, தளங்களுக்கு விரிவாக்கம், நிபுணர் பரிந்துரை மற்றும் நெருக்கடி, பயிற்சி பற்றிய இலவச ஆதரவை வழங்குகிறது.

Take Back the Tech என்பது பெண்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தொழில்நுட்பத்தைக் கையகப்படுத்தும்  நோக்கில் உலகளாவிய ஒத்துழைப்பு பிரச்சாரமாகும். தொழில்நுட்பம் தொடர்பான துன்புறுத்தல், சாதனங்களுக்கான டிஜிட்டல் பாதுகாப்பு கருவித்தொகுப்புகள் மற்றும் உரிமைகள்இ சுய பாதுகாப்பு மற்றும் உயிர்வாழும் உத்திகளுக்கான வளங்களை அவர்கள் வழங்குகிறார்கள். உள்ளூர் பிரச்சாரங்களைத் தொடங்கவும் மேலும் கொண்டுசெல்லவும் அவர்கள் உதவுகிறார்கள்.

2019 ஆம் ஆண்டில் தனியாள் பெண் பயணத்திற்கான மோசமான மற்றும் பாதுகாப்பற்ற  நாடுகள் என்பது (The Worst (& Safest) Countries for Solo Female Travel in 2019) பயண ஊடகவியலாளர்கள் ஆஷர் பெர்குசன் மற்றும் லிரிக் பென்சன் ஆகியோரின் 50 நாடுகளின் ஆய்வு ஆகும். மேலும் தனியாக பயணம் செய்யும் போது பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதற்கான 42 குறிப்புகளையும் அவர்கள் விவரித்துள்ளனர்.

200 பக்க வள வழிகாட்டியான “இணைய வெளியில்  பெண் பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்பு” ஊடக சுதந்திரத்திற்கான (Representative on Freedom of the Media -RFoM) OSCEபிரதிநிதியின் அலுவலகத்தால் உருவாக்கப்பட்டது.

பாகுபாடு மற்றும் துன்புறுத்தல் பற்றிய வளங்கள் 

பணியிடத்தில் பாகுபாடு மற்றும் துன்புறுத்தல் ஆகியவை ஊடகத்துறை உட்பட பல தொழில்களைப் பாதிக்கும் பொதுவான பிரச்சினைகளாகும். வெளிநாட்டு உறவுகள் கவுன்சிலின் சமீபத்திய அறிக்கையின்படி, 18 நாடுகளில் இன்னும் பெண்கள் வேலை செய்ய கணவரின் அனுமதி வேண்டும், 59 பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக சட்டபூர்வமான பாதுகாப்பு எதுவும் இல்லை, மேலும் 104 நாடுகளில்  பெண்கள் வகிக்கும் வேலைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊதியப் பாகுபாடு உலகளாவியது. பணியிடத்தில் பாலின பாகுபாடு மற்றும் பாலியல் துன்புறுத்தல்களை நிவர்த்தி செய்ய தற்போது சில வளங்கள் கைவசம்  உள்ளன.

முதலாளிகள் மற்றும் பணியாளர்கள் தங்கள் ஊடக நிறுவனங்களில் பாலியல் துன்புறுத்தல்களை சமாளிக்க (மற்றும் தடுக்க) ஒரு கருவித்தொகுப்பை Women in News என்னும் அமைப்பினர் உருவாக்கியுள்ளனர். இக்கருவித்தொகுப்பில் ஒரு நடைமுறை வழிகாட்டி, விழிப்புணர்வு சுவரொட்டிகள்,மாதிரி கொள்கைகள், ஆய்வுகள் மற்றும் தொடர்பு வார்ப்புருக்கள் உள்ளன. பெண்களுக்கு சிறந்த பணிச்சூழலை உருவாக்க மேலாளர்களுக்கு உதவ WIN பல்வேறு வளங்களைக் கொண்டுள்ளது. இந்த அமைப்பு துணை-சஹாரா ஆபிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் வேலை செய்கிறது. அவர்களின் ஒலிப்பேழையான , தி பேக்ஸ்டோரி (The Backstory), செய்தி அறைகளில் பெண் தலைமைத்துவத்தின் பிரச்சினைகளை ஆராய்கிறது.

யுனெஸ்கோ மற்றும் பத்திரிகையாளர்களுக்கான சர்வதேச மையம் (ICFJ) இணைந்து பெண் பத்திரிகையாளர்களுக்கு எதிரான இணைய வெளியில் வன்முறை குறித்த ஒரு ஆய்வை  வெளியிட்டன. “இணைய  வன்முறையின் கருப்பொருளில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மிக விரிவான மற்றும் புவியியல் ரீதியாக மாறுபட்ட கணக்கெடுப்பு,” 113 நாடுகளிலிருந்து  714 பெண் பத்திரிகையாளர்களிடமிருந்து பதில்களைப் பெற்றுக்கொண்டது .

சர்வதேச ஊடகவியலாளர் கூட்டமைப்பு-( International Federation of Journalists) , சர்வதேச தொழிலாளர் அமைப்புடன் ( International Labor Organization ) இணைந்து பெண் ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. வளங்களில் கருவித்தொகுப்புகள்இ வெளியீடுகள் மற்றும் பாலின ஊதிய இடைவெளி உட்பட தொடர்புடைய கொள்கைகளுக்கான இணைப்புகள் அடங்கும். IFJ ஆனது நேரடியாக தொந்தரவுகள்  உட்பட – பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கான ஆதரவையும் வளங்களையும் வழங்குவது  மட்டுமில்லாது  அர்த்தமுள்ள மாற்றத்திற்கு உள்ளூர் அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுக்கும்.

அமெரிக்காவில் TIME’S UP சட்டப் பாதுகாப்பு நிதி- TIME’S UP Legal Defense Fund பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பழிவாங்கும் அனுபவமுள்ள பெண்களை வழக்கறிஞர்கள் மற்றும் ஊடக நிபுணர்களுடன் இணைக்கிறது.

வாஷிங்டனை தளமாகக் கொண்ட Press Forward, பணியிடத்தில் பெண் ஊடகவியலாளர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்படுவதை தடுப்பது தொடர்பான வழிகாட்டி மற்றும் வளங்களைக் கொண்டுள்ளது. இவை அமெரிக்க சட்டங்கள் மற்றும் கொள்கைகளை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன,ஆனால் வேறு இடங்களில் உதவியாக இருக்கும்.

பிரான்சில்;>  Prenons la une   என்பது ஊடகங்களில் பெண்களின் நியாயமான பிரதிநிதித்துவம் மற்றும் செய்தி அறைகளில் தொழில்முறை சமத்துவம் ஆகியவற்றை ஆதரிக்கும் பெண் பத்திரிகையாளர்களின் சங்கமாகும். இந்த வலையமைப்பு பாகுபாடு மற்றும் தொல்லைகளை  எதிர்கொள்ளும் பெண்களுக்கு ஆதரவை வழங்குகிறது.

பிரேசிலிய புலனாய்வு இதழியல் சங்கம் (அப்ராஜி) Brazilian Association of Investigative Journalism (Abraji) தொழில்துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ஆராய்ச்சி நடத்தியது. கண்டுபிடிப்புகளின் அடிப்படையில்,  Mulheres No Jornalismo Brasileiro பாலின அடிப்படையிலான துன்புறுத்தல், பாகுபாடு மற்றும் வன்முறையை நிவர்த்தி செய்ய பிரேசிலின் ஊடகங்களுக்கான பரிந்துரைகளை பட்டியலிடுகிறார். 2018 ஆம் ஆண்டில், 50 பிரேசிலிய பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாகுபாட்டிற்கு எதிரான வீடியோ அறிக்கையை ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் #DeixaElaTrabalhar  என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி வெளியிட்டனர். ஹேஷ்டேக் சொற்றொடர் “அவள் வேலை செய்யட்டும்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

மீ டூ (MeToo) இயக்கத்திற்கு பதிலளிக்கும் விதமாக 2018 இல் ஒரு வாட்ஸ்அப் குழுவாக மற்றும் ஒரு மூடப்பட்ட பேஸ்புக் பக்கமாக கேமரூன் ஊடகப் பெண்கள் மையம் தொடங்கப்பட்டது. கேமரூனின் நாட்டின் குறியீட்டைப் பற்றி குறிப்பிடும் #StopSexualHarassment237 ஹேஷ்டேக் மூலம்இ பெண் பத்திரிகையாளர்கள் ட்விட்டர் கலந்துரையாடல் நடத்தி, செய்தி அறைகளில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கும் வீடியோக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

#MeToo இயக்கமானது ஆசியாவில் தனது  முத்திரையை  பதித்துள்ளது. சீனா மற்றும் ஜப்பானில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் அவை தொடர்பான தாக்குதல்லை விசாரிப்பது மற்றும் மறைப்பது பற்றிய கதைகள் மற்றும் உதவிக்குறிப்புகளை பெண் பத்திரிகையாளர்கள் குழுவொன்று 2018 -ல் நடைபெற்ற GIJN panel at Uncovering Asia 2018 மாநாட்டில் பகிர்ந்து கொண்டனர். மேலும், GIJN  இன் ஹாங்காங் பணியகத்திலிருந்து  சீனாவில் #MeToo   இயக்கத்தை உள்ளடக்கிய புலனாய்வு பத்திரிகையாளர்களின் பங்கு பற்றிய தொடர்பான பதிவுகளை  இங்கே காணலாம்.

இங்கிலாந்தில் The Second Source   என  அழைக்கப்படும் அமைப்பானது, ஊடகத்துறையில் இடம்பெறும் அச்சுறுத்தல்களை சமாளிக்கும் முகமாக  அமைக்கப்பட்டது. இந்த அமைப்பு விழிப்புணர்வை ஊக்குவிப்பதையும், பெண்களின் உரிமைகள்  தொடர்பான பிரச்சாரங்களை  முன்னெடுப்பதையும் ,  மற்றும் ஊடக தொழில்துறையில் மாற்றத்தை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Women in News என்னும் நிறுவனம்,  சமீபத்திய நடாத்திய ஆய்வான Glass Ceilings: Women in South African Media Houses” ஊடக நிறுவனங்களில் தொடர்பான பொதுவான பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவற்றை நிவர்த்தி செய்வதற்கான பரிந்துரைகளை வழங்குகிறது.

Women in News என்னும் நிறுவனம், சமீபத்தில்  Glass Ceilings: Women in South African Media Houses” என்ற தலைப்பில் ஆய்வொன்றை நடாத்தி, ஊடக நிறுவனங்களில் காணப்படும்” பால் நிலை  தொடர்பான பொதுவான பிரச்சினைகளை அடையாளம் கண்டுஇ அவற்றை நிவர்த்தி செய்வதற்கான பரிந்துரைகளை வழங்குகிறது.

Digital Women Leaders  என்னும் அமைப்பானது, பெண் பத்திரிகையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளான பணியிட பாகுபாடு, துன்புறுத்தல் மற்றும் சம்பள இடைவெளி போன்ற பிரச்சினைகள் தொடர்பான 30 நிமிட நேரடி  வழிகாட்டுதல் பயிற்சிகளையும் வழங்குகின்றனர்.

சர்வதேச பெண்கள் ஊடக அறக்கட்டளை- – International Women Media Foundation (IWMF) மற்றும் The Totem Project இணைந்து பல்வேறு மொழிகளில் துன்புறுத்தல் குறித்து பல இணையவெளி கற்கைநெறிகளை உருவாக்கியுள்ளது.

படம்: Shutterstock

நீண்டகால அனுபவம் மற்றும் துறைசார் அறிவுடன் உள்ள வழிகாட்டிகள் உங்களுக்கு பல்வேறு வகைகளில் உதவுவர். குறிப்பாக உங்கள் திட்டத்துடன் முன்னோக்கி செல்வது, நியாயமான சம்பளத்தை பெறுவதற்காக  பேச்சுவார்த்தை நடத்துவது அல்லது ஆரோக்கியமற்ற பணிச்சூழலில் இருத்தல் அல்லது சக ஊழியருடன் கடினமான உறவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு அவர்களால் உங்களுக்கு  உதவ முடியும். சரியான பொருத்தமான ஒரு வழிகாட்டியைக் கண்டுபிடிக்க நேரம் எடுக்கலாம், ஆனால் பல வளங்கள் குறிப்பாக பெண் பத்திரிகையாளர்களுக்கு கிடைக்கின்றன.

Digital Women Leaders அமைப்பானது, பெண் ஊடகவியலாளர்களுக்கு 30 நிமிடங்களுக்குள் ஒரு  நேரடியான   வழிகாட்டல்  பயிற்சியினை இலவசமாக அளிக்கினறது. இதில் பட்டியலிடப்பட்ட பெரும்பாலான பயிற்சியாளர்கள் அமெரிக்க ஊடகங்களில் பணிபுரிந்தாலும், உலகத்தின் பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் ஊடகவியலாளர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.  இருந்த போதும் சில பிரச்சினைகள் – பணியிட பாகுபாடு மற்றும் சம்பள இடைவெளி போன்றவை – உலகளாவியவை ஆகும்.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஊடகவியல் மற்றும் பெண்கள் கருத்தரங்கில்- Journalism & Women Symposium  அதன் உறுப்பினர்களுக்கு ஆண்டு முழுவதும் வழிகாட்டுதல் திட்டம் நடைமுறையில் உள்ளது. தேவைகள் மற்றும் இருப்பிடத்தின் அடிப்படையில் ஊடகவியலாளர்கள் தமக்கேற்ப வழிகாட்டிகளுடன் நேரசூசி மற்றும் தொடர்புகொள்ளும் முறையை இணைந்து ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.  இந்த திட்டமானது  தொழில் பயிற்சி, சுய விபரக்கோவையை சரிசெய்தல் , தொழில்துறை  நேர்காணல்கள், மேலாண்மை மற்றும் தலைமைபண்பு , எழுத்துப்பயிற்சி, சம்பள உயர்வு கேட்டல் போன்று பலவற்றை உள்ளடக்கியது.

மெக்சிகோவில் உள்ள ஊடகத்துறையில் பெண்களுக்கான கூட்டணி – Coalition for Women in Journalism , லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆசியாவில் அனுபவம் வாய்ந்த பெண் பத்திரிகையாளர்களிடமிருந்து வழிகாட்டுதல்களை வழங்குகிறது.

Chicas Poderosas  எனும் அமைப்பானது 16 நாடுகளில் கிளைகளை கொண்டுள்ளது மற்றும் புலனாய்வு இதழியல் பட்டறைகள் மற்றும் ஹேக்கத்தான்களை ஏற்பாடு செய்கிறது; தலைமைப்பண்பு, டிஜிட்டல் மற்றும் புதிய ஊடக திறன்களில் பெண்களுக்கு பயிற்சி அளிப்பதோடு,  வழிகாட்டுதல் மற்றும் உதவித்தொகை வசதிகளையும்  வழங்குகிறது.

லண்டனை தளமாகக் கொண்ட Women in Journalism என்பது இங்கிலாந்தில் உள்ள ஊடகங்களில் பெண்களின் தொழில்முறை வலையமைப்பு ஆகும். WIJ ஆனது வளர்ந்து வரும் ஊடகவியலாளர்கள் மற்றும் தங்கள் துறைசார் உயர் பதவிகளை அடைய விரும்பும் மூத்த பத்திரிகையாளர்களுக்கான வழிகாட்டுதல் திட்டத்தை கொண்டுள்ளது.

துணை சஹாரா, ஆபிரிக்கா நாடுகள், மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பெண் பத்திரிகையாளர்களுக்கு குழு வழிகாட்டல் மற்றும் பயிற்சியை Women in News வழங்குகிறது.

Journalistinnenbund ஜெர்மனியில் வளர்ந்து வரும் பெண் பத்திரிகையாளர்களுக்கான வழிகாட்டுதல் திட்டத்தை கொண்டுள்ளது.

லத்தீன் பெண்கள் மற்றும் பைனரி அல்லாத செய்திகளில் பணிபுரியும்  லத்தீன் ஊடகவியலாளர்கள்  மற்றும் தொழில்துறையில் சக லத்தீனியர்களிடமிருந்து வழிகாட்டுதலைத் தேடுவதற்காக அமெரிக்காவினைத் தளமாகக்கொண்ட திட்டம்  Latinas in Journalism Mentorship Program ஆகும்.

புலமைப்பரிசில்களும் உதவித்தொகை திட்டங்களும்

பெண்கள் அல்லது பெண்களாக தங்களை அடையாளப்படுத்திக்கொள்வோருக்கென வடிவமைக்கப்பட்ட புலமைப்பரிசில்கள்   மற்றும் உதவித்தொகைகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பொதுவான ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலாருக்கும் கிடைக்கும் புலமைப்பரிசில்கள் மற்றும் உதவித்தொகைகள் தொடர்பான பட்டியலுக்கு, GIJN வளங்கள் பக்கத்தைப் பார்வையிடவும்

சர்வதேச மகளிர் ஊடக அறக்கட்டளை– International Women’s Media Foundation உலகெங்கிலும் உள்ள பெண் பத்திரிகையாளர்களுக்கான பல உதவித்தொகை திட்டங்களை வருடம் முழுவதும் மாறுபட்ட   காலக்கெடுவுடன் கொண்டுள்ளது. மகளிர் சமத்துவ மையத்துடன்(Women’s Equality Center) இணைந்து, அமெரிக்காவில் இனப்பெருக்க ஆரோக்கியம், உரிமைகள் மற்றும் நீதி பற்றிய மகளிர் சுகாதார அறிக்கையிடல்  ஆகியவையும் இதில் அடங்கும்.

மேலும் Secular Society என்னும் நிறுவனத்தின் அனுசரணையுடன் வழங்கப்படும் குறைவாக அறிக்கையிடப்பட்டுள்ள  தலைப்புகளின் பாலின-உணர்திறன் தொடர்பில் அறிக்கையிடுவதற்கான உதவித்தொகை, துணைக் கலாச்சாரங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்  Wall குடும்பத்தின் அனுசரணையில் நிறுவப்பட்ட Kim Wall Memorial Fund போன்ற திட்டங்களும் உள்ளன. IWMF ஆனது   Howard G. Buffett Fund for Women Journalists எனப்படும் பெண் பத்திரிகையாளர்களுக்காவெண் உருவாக்கப்பட்ட நிதியையும் நடத்துகிறது. இது கல்வி வாய்ப்புகள், புலனாய்வு அறிக்கையிடல்  மற்றும் ஊடக மேம்பாட்டு முயற்சிகள் உள்ளிட்ட திட்டங்களை ஆதரிக்கிறது.

WanaData என்பது பெண் ஆபிரிக்க பத்திரிகையாளர்கள், தரவு விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் ஒரு வலையமைப்பு ஆகும், இது தரவு சார்ந்த கதைகளை உருவாக்க ஒத்துழைக்கிறது. சமீபத்தில் இவ்வலையமைப்பு, அதன் பங்காளிகலுடன் இணைந்து  உகாண்டா பெண் பத்திரிகையாளர்களுக்கு டிஜிட்டல் ஜர்னலிசம் தொடர்பான பயிற்சித் திட்டத்தை வழங்கினர்.

நைஜீரியாவின் லாகோஸை (Lagos) தலைமையிடமாகக் கொண்டியங்கும் Wole Soyinka Center for Investigative Journalism,   Free Press Unlimited ஆதரவுடன் பெண் பத்திரிகையாளர்களுக்கான தலைமைத்துவ உதவித்திட்டங்களை   வழங்குகிறது. இந்த திட்டம் குறைந்தபட்சம் மூன்று வருட அனுபவம் கொண்ட நைஜீரிய பெண் ஊடகவியலாளர்களுக்கு, திறன் மேம்பாடு, ஆதரவு மற்றும் கருவிகள் மூலம் தாம் சார்ந்த நிறுவனங்களில் தலைமைப் பதவிகளை வகிக்க தேவையான உதவிகளையும்  பெண் ஊடகவியலாளர்களின் வலையமைப்பு ஒன்றை திரட்டுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட Online News Association , டிஜிட்டல் புதுமையை முன்னெடுக்கும் பெண்களின் தலைமை மற்றும் மேலாண்மை திறன்களை ஊக்குவிக்கும்முகமாக  ஒரு வருட கால திட்டமான Women’s Leadership Accelerator இனை வழங்குகிறது. மாறுபட்ட பின்னணி மற்றும் நிபுணத்துவத்துடன் கூடிய ஆங்கிலம் பேசும் இப்பங்கேற்பாளர்களின் கூட்டு, உலகெங்கிலும் உள்ள பல்வேறு செய்தி அறைகளிலிருந்து ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்படுகிறது.  இந்திட்டத்தின்கீழ், ஒரு வார கால தீவிர பயிற்சி அமெரிக்காவில் வழங்கப்படுகிறது. ONA சில பயிற்சி சார்ந்த சில வளங்களை பொதுமக்களுக்கு கிடைக்கும்வண்ணம் அதன் இணையத்தளத்தில்  கிடைக்கச் செய்கிறது.

Poynter Leadership Academy for Women in Media  என்பது மக்களை நேரடியாக நிர்வகிக்கும், அதேவேளை முதல் ஐந்து வருடங்களிற்குள்ளான முறையான தலைமை அனுபவத்தில் இருக்கும் பெண்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு திட்டமாகும். “டிஜிட்டல் மீடியா மற்றும் ஊடகத்தில் பெண்கள் புதிய பாதை படைக்கிறார்கள் ” என்ற Poynter இன் செய்திமடலான The Cohort இல் நீங்களும் இணைந்து கொள்ள முடியும்.

Women in News ஆண்டுதோறும் துணை-சஹாரா ஆபிரிக்காவைச் சேர்ந்த 50 பெண்களையும், மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவைச் சேர்ந்த 30 பெண்களையும் தேர்வு செய்கிறது. அனுபவம் வாய்ந்த மூத்த ஊடகவியலாளர்களையும் , ஆசிரியர்களையும் கொண்ட இந்த குழுவிற்கு செய்தி அறை மேலாண்மை, தலைமைத்துவம்   மற்றும் ஆசிரியர்பீட கையாளுகைத் திறன்களை மேம்படுத்துவது தொடர்பில் பயிற்சிகளை வழங்குவது இதன் நோக்கமாகும்.  இந்த திட்டம் ஆன்லைன் மூலம் நடாத்தப்படும்  தலைமைத்துவ  மற்றும் ஊடக மேலாண்மை, நேரடி வழிகாட்டுதல், மற்றும் தேசிய மற்றும் பிராந்திய வலையமைப்பாக செயற்படுதல் தொடர்பில் பயிற்சிகளை  வழங்குகிறது.

Chicas Poderosas லத்தீன் அமெரிக்கா மற்றும் ஸ்பெயின் உட்பட்ட 13 நாடுகளில் கிளைகளை கொண்டுள்ளது, மேலும் அமெரிக்க செய்தி அறைகளில் புலமைப்பரிசில்களை பெற்றுக்கொள்வதை எளிதாக்கியுள்ளது. இவ்வமைப்பின் New Ventures Lab, பெண்கள் தலைமையிலான சுயாதீன ஊடக முயற்சிகளுக்கு வழிகாட்டுதலையும் நிதியையும் வழங்குகிறது.

Foreign Policy Interrupted வெளியுறவுக் கொள்கை தொடர்பில் அறிக்கையிடும் பெண்களுக்காக ஒரு புலமைப்பரிசில் திட்டத்தை வழங்குகிறது. இந்த திட்டம் இணையம் மூலமான கல்வி மற்றும் ஆசிரியர்பீட  கையாளுகைகள்  மூலம் ஊடகங்கள் மற்றும் புதிய ஊடக முயற்சிகளை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறது. இந்த திட்டம் உலகளாவிய அளவில் பெண்கள் பங்கேற்ககூடியதாக உள்ளது.

 The Doria Feminist Fund (MENA பிராந்தியம்), இப்பிராந்தியத்தில் புதிதாக நிறுவப்பட்ட மற்றும் ஏற்கனவே கட்டியெழுப்பட்ட பெண்ணியவாதக் குழுக்களுக்கு தங்கள் பணிகளைத் தொடர உதவித்தொகைகளை வழங்குகிறது.

பெண் ஊடகவியலாளருக்கான விருதுகள்

விருதுகளானது, உங்களுக்கான அங்கீகாரத்தை பெறவும் உங்கள் செய்தி அறிக்கையிடல்களுக்கான கவனத்தைப் பெற்றுக்கொள்ளவும் ஒரு சிறந்த வழியாகும். சர்வதேச விருதுகளுக்கு விண்ணப்பிக்க கூடியதான, திறந்த- உலகளாவிய மற்றும் பிராந்திய விருதுகள் பற்றிய பொதுவான கோப்பகத்திற்கு, GIJN இன் வளங்கள்  பக்கத்தைப் பார்க்கவும். இதில் டசின் கணக்கான வாய்ப்புக்கள் பட்டியலிடப்படுள்ளன. கீழே காணப்படும் விருதுகள் பெண்களுக்கு, அல்லது பெண்களாக தம்மை அடையாளம் காணும் நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்க கூடியதாக உள்ளது.

சர்வதேச மகளிர் ஊடக அறக்கட்டளை(International Women’s Media Foundation-IWMF), Courage in Journalism Awards என்னும் விருதுகளுக்கு நிதி உதவி செய்கிறது. இவ்விருதானது ஆபத்தை எதிர்கொள்ளும் பெண் பத்திரிகையாளர்களை கௌரவிக்கும் முகமாக, உண்மையை வெளிக்கொணரவும், அச்சுறுத்தல் அல்லது வற்புறுத்தலின் கீழ் செய்தியறிக்கையிடுவதற்கான தரத்தை  உயர்த்தவும் செய்கிறது. உலகெங்கிலும் உள்ள பெண் பத்திரிகையாளர்கள்விண்ணப்பிக்க கூடியதாக இருக்கும் இவ்விருதுகளுக்கு, தனியாள் பரிந்துரைகளையும் பரிசீலிக்கிறார்கள்.

IWMF இன் வாழ்நாள் சாதனையாளர் விருதானது அசாத்திய துணிச்சலும், ஊடக சுதந்திரம் மற்றும் உலகெங்கிலும் உள்ள பெண்களின் குரல்களை முன்னேற்றுவதற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்திய பெண் தலைவர்களை கௌரவிக்கும் பொருட்டு வழங்கப்படுகிறது. இவ்விருதிற்கு ஓய்வு பெற்ற முன்னாள் பத்திரிகையாளர்களும் கருத்தில் கொள்ளப்படலாம்.

துணை-சஹாரா ஆபிரிக்காவில் ஒரு பெண் பத்திரிகையாசிரியருக்கும், மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் ஒரு பெண் ஆசிரியருக்கும் Women in News – Editorial Leadership Award விருது வழங்கப்படுகிறது. இந்த விருதானது, செய்தி அறைகளில் முன்மாதிரியாக திகழ்ந்த பெண்களின்  பங்களிப்பை அங்கீகரிக்கும் முகமாகவும், அவர்களின் தலைமையின் கீழ், சமூகத்திற்கு அவர்கள், தாம் சார்ந்த   ஊடகங்களின் மூலமான வழங்கிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையிலும் வழங்கப்படுகிறது.

வானொலி மற்றும் தொலைக்காட்சியில் உள்ள பெண்களின் சர்வதேச சங்கம் (The International Association of Women in Radio & Television ) ஒலிபரப்பு மற்றும் இலத்திரனியல்  ஊடகங்களில் பணிபுரியும் பெண்களுக்கான உலகளாவிய வலையமைப்பாகும், இதற்கு ஆபிரிக்கா, ஆசியா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் கிளைகள்  உள்ளன. IAWRT ஆவணப்பட விருதுகள் சமூக பாதிப்பு, புதுமை மற்றும் வளர்ந்து வரும் திறமை உட்பட மூன்று வெவ்வேறு பிரிவுகளில் ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் அமெரிக்க டொலர் $ 1,000 பெறுமதியான பரிசுகளை வழங்குகின்றன. உலகெங்கும் உள்ள வானொலி, தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் மீடியாவுடன் பணிபுரியும் பெண் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் விண்ணப்பிக்க முடியும்.

வருடம்தோறும் வழங்கப்படும் Caroline Jones Women in Media Young Journalists Award  விருது கிராமப்புற மற்றும் பிராந்திய ஆஸ்திரேலியா முழுவதும் பணிபுரியும் இளம் பெண்களை அங்கீகரிக்கும் முகமாக வழங்கபடுகிறது. வெற்றியாளர்களுக்கு கான்பெர்ராவில் (Canberra)  நகரத்தில் பத்திரிகை, அரசியல் மற்றும் அரசாங்கத்துடன் தொடர்பான  அனுபவத்தைப் பெற தனிப்பட்ட கற்றல் நிதி, வழிகாட்டுதல் மற்றும் பயண ஏற்பாடுகளை கொண்ட அடிப்படை பயிற்சிகளை வழங்கப்படுவது அவசியமாகும்.

பெண் நிபுணர்களைக் கண்டறிதல்

உலகெங்கிலும் உள்ள ஊடகங்களில் பெண் நிபுணர்கள் குறிப்பிடத்தக்க அளவு பிரதிநிதித்துவம் செய்யப்படவில்லை என்பதை பல ஆய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. ஆண் மற்றும் பெண் நிபுணர்களின் சமநிலையை பேணுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் தற்போதைய நிலைமையை  மாற்ற உதவும்.

பிபிசி (BBC) 50:50 திட்டம் 2018 இல் தொடங்கப்பட்டது, இது பிபிசி வானொலி, தொலைக்காட்சி  மற்றும் அதன் இணையத்தள  உள்ளடக்கங்களில்  பெண்களின் பங்களிப்பின் விகிதத்தைக் காண்பிப்பதை உறுதி உறுதி செய்யும் நோக்கத்துடன் தொடர்புபட்டது. குளோபல் மீடியா கண்காணிப்பு திட்டமானது  (The Global Media Monitoring Project) உலக ஊடகங்களில் பாலினம் குறித்து மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய மற்றும் நீண்ட  ஓர் ஆய்வு ஆகும்.

நிபுணர்களைத் தேடும் ஊடகவியலாளர்களால் பயன்படுத்தப்படும்    நம்பகமான மற்றும் செயற்பாட்டு தரவுத்தளங்களைக் கொண்ட வளங்களுக்கான வழிகாட்டியை GIJN தொகுத்துள்ளது. பெண்கள் சார்ந்த மூலங்களை தேடக்கூடிய வேறு சில இடங்கள் இங்கே தரப்பட்டுள்ளன:

Request a Woman Scientist என்பது 500 பெண் விஞ்ஞானிகளின் அனுசரணையுடன் உருவாக்கப்பட்ட ஓர் தளமாகும். இது ஊடகவியலாளர்களுக்கு,  அறிவியல் நிபுணத்துவம் வாய்ந்த பெண்கள் மற்றும் பல்துறைசார் நிபுணத்துவம் வாய்ந்த பெண் நிபுணர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளவும் உதவுகிறது. இது  துறைசார் பெண் நிபுணர்களுடன், தம் துறை சார்ந்த குறிப்பிட்ட விடயங்கள்,  செயற்பட்டுத்திட்டங்கள். மாநாடுகள் மற்றும் குழு விவாதங்கள் போன்றவற்றில் பங்கேற்றல் போன்ற விடயங்களை ஒருங்கமைத்தலுக்கு உதவியாக அமையும்.

பெண்கள் ஊடக நிலையத்தின் (Women’s Media Center), SheSourceஎனப்படுவது 1,100 -க்கும் மேற்பட்ட பல்துறைசார் பெண் நிபுணர்களின் தரவுத்தளமாகும். இதில் பல்வேறு தலைப்புகள், பெயர், முக்கிய தேடல் சொற்கள் மற்றும் தம் துறைசார் நிபுணத்துவத்தின் அடிப்படையில் விடயங்களைத் தேடக்கூடிய வகையில் அமைந்துள்ளது. நிபுணர்களின் சுயவிபரக்கோவை  தொடர்பான மூலாதாரங்கள்  மற்றும் அவர்களின் புகைப்படங்களை பெற்றுக்கொள்வதோடு,  இவ்இணையதளத்தில் ஒரு படிவம் ஒன்றினை நிரப்புவதன் மூலம் அவர்களை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.

Women Plus என்பது 750 க்கும் மேற்பட்ட சுயமாக-பரிந்துரைக்கப்பட்ட “தொழில்நுட்ப வல்லுநர்களின்” ஓர் வகைப்படுத்தப்பட்ட பட்டியலாகும்.

The Women’s Room  /மகளிர் அறை என்பது அங்கீகரிக்கப்பட்ட ஊடகவியலாளர்களினால் பயன்பாட்டிற்காக   வடிவமைக்கப்பட்ட பெண் நிபுணர்களின் தரவுகளைக்கொண்ட ஓர் உலகளாவிய தரவுத்தளமாகும். நீங்கள் நிபுணத்துவம், முக்கிய தேடல் சொற்கள்  மற்றும் புவியியல் அமைவிடம் தொடர்பில் தேடலாம். தொடர்புடைய முக்கிய  தலைப்புகளில் கலந்துரையாடல் மன்றமும் குறுஞ்செய்தி உரையாடலை மேற்கொள்ளும் வசதியும் இங்கு உள்ளது.

வெளியுறவுக் கொள்கையில் பெண்களின் குரல்களை முன்னிலைப்படுத்தவும் அதிகரிக்கவும்  தொடங்கப்பட்ட Foreign Policy Interrupted (FPI) என்னும் தளமானது , உலகெங்கிலும் உள்ள பெண் வெளியுறவுக் கொள்கை நிபுணர்களின் பட்டியலைக் கொண்டுள்ளதோடு தற்போது செய்திகளில் அவர்களின் ஆர்வ -விடயப்பரப்புகளின்  அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. பெண் நிபுணர்களுக்கான கருவிகளையும் பயிற்சியையும் FPI வழங்குகிறது.

Quote This Woman+ என்பது தென்னாபிரிக்காவின் உள்ள ஓர் இலாப நோக்கமற்ற அமைப்பாகும், இது விவசாயம் முதல் இனவெறி போன்ற தலைப்புகளில் நிபுணத்துவம் வாய்ந்த 200 க்கும் மேற்பட்ட பெண் நிபுணர்களின் தரவுத்தளத்தைக் கொண்டுள்ளது.

 நீங்கள் போதுமான நேரத்தை முன்னமே  வழங்கினால், உங்களுக்காக ஒரு குறிப்பிட்ட நிபுணரைக் கண்டுபிடிக்க இக்குழு உதவும். பாலின மூல இடைவெளியை மூடுவதற்கு இந்த அமைப்பு வலியுறுத்தும் அதேவேளை, ஆண் மற்றும் பெண் வல்லுநர்களின் சமநிலையை சமீபத்தைய அறிக்கையிடல்களை  கண்காணித்து பெண் நிபுணர்களுக்கு ஊடக பயிற்சியை வழங்குகிறது. அண்மைய செய்திப் போக்குகள் தொடர்பான உங்களுக்கு அனுப்பப்படும் நிபுணர் பட்டியல்களைப் பெற இச்செய்திமடலுக்கு  பதிவு செய்யவும்.

Voces expertas என்பது ஊடகவியலாளர்கள் கலந்துரையாடி ஆலோசிக்க கூடிய வகையில் லத்தீன் அமெரிக்காவில் உள்ள பெண் நிபுணர்களின் இணையதள கோப்பகமாகும். (ஸ்பானிஷ் மொழியில்)

இந்த திறந்த கோப்பகம் ஜப்பான் மற்றும் கொரியாவில் உள்ள  257 பெண் நிபுணர்களை பட்டியலிடும் அதேவேளை  ஹாங்காங், மக்காவ், சீனா மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் உள்ள 495 பெண் நிபுணர்களையும்  மற்றொரு பட்டியலிடுகிறது.

செய்திகளை உருவாக்கும் பெண்கள் – தாய்லாந்து (Women Make the News – Thailand)  என்பது பத்திரிகையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட தாய்லாந்து பெண் நிபுணர்களின் தரவுத்தளமாகும். நீங்கள் குறிப்பிட்ட துறை, நிபுணத்துவம், கருப்பொருள், இடம் மற்றும் முக்கிய தேடல் சொற்கள் மூலம் தேடலாம்.

அமெரிக்காவின் வாஷிங்டன், டிசியைத் தளமாகக்கொண்ட The Brookings Institution  என்னும் சிந்தனைக் குழாமானது, தொழில்நுட்பக் கொள்கை தொடர்பில்  அமெரிக்காவினை சேர்ந்த  பெண்கள் மற்றும் மிகக்குறைவாக பிரதிநிதித்துவப்பட்டிருக்கும்  பாலினத்தவர்களை உள்ளடக்கிய சுமார்  600-க்கும் மேற்பட்ட நிபுணர்களின் மகளிர் + மூலாதாரங்களின்  பட்டியலைத் தொகுத்துள்ளது. இவ்வளமானது, ஊடகவியலாளர்கள் நிபுணர்களின் தொகுப்பை அவர்களது பின்னணி அல்லது விசேட சிறப்புத்தன்மை தொடர்பில் தேட அனுமதிக்கிறது.

Women Also Know Stuff    என்னும் தளமானது அரசியல் விஞ்ஞானம் மற்றும் உலகெங்கிலும் உள்ள பல விடயங்களில் நிபுணத்துவம் பெற்ற பெண் நிபுணர்களைப் பற்றிய 50 பிற தளங்களின் பட்டியலையும் கொண்டுள்ளது.

Women for Media என்பது அவுஸ்திரேலியாவில் 200 க்கும் மேற்பட்ட சிறந்த பெண் நிபுணர்கள் மற்றும் தலைவர்களின் தரவுத்தளமாகும், இது பெயர் அல்லது முக்கிய தேடல் சொற்களால் தேடப்படக்கூடியதாக உள்ளது.

ExpertWomen என்பது கனடாவில் உள்ள பெண் நிபுணர்களின் தரவுத்தளமாகும். இதில்  குறி சொற்கள் மற்றும்  தொடர்பு பொத்தான் மூலம்  நிபுணர்களை தொடர்புகொள்ள முடியும்.

புலனாய்வு இதழியல் தொடர்பில்  பெண்கள் மீதான கவனம்

ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரத்தில் நடந்த 11 வது உலகளாவிய புலனாய்வு இதழியல் மாநாட்டில் (#GIJC19), பத்து பெண் புலனாய்வு பத்திரிகையாளர்கள் தங்கள் தனிப்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு, பத்திரிகை நிலை மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் விளக்கினர். இவ் விவாதத்தின் வீடியோவை நீங்கள் இங்கே காணலாம்:


GIJN இன் 10 வது உலகளாவிய புலனாய்வு இதழியல் மாநாட்டில் பாரம்பரியமாக ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் துறையில் வெற்றிபெற எட்டு உதவிக்குறிப்புகளை அனுபவம் வாய்ந்த பெண் ஊடகவியலாளர்கள் பகிர்ந்து கொண்டனர்.
இந்தியாவில், பெண் பத்திரிகையாளர்கள் கிராமப்புற, பெண்களை மையமாகக் கொண்ட ஓர் செய்தித்தாளைத் தொடங்கினர். அது இப்போது ஓர் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக மாறி உள்ளது.
மெக்சிகோவில், புலிட்சர் பரிசு (Pulitzer Prize) வென்றவர்கள் மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் Nieman ஊடக புலமைப்பரிசில்களை பெற்ற  -Harvard Nieman Fellows) பெண் ஊடகவியலாளர்கள் புலனாய்வு இதழியல் துறையில் முன்னணியில் உள்ளனர்.
பிரேசிலில், பெண் பத்திரிக்கையாளர்கள் அந்நாட்டின் வடகிழக்கில் உள்ள மாநிலமான பெர்னாம்புகோவில் (Pernambuco) கொலை செய்யப்பட்ட பெண்களின் கதைகளைச் சொல்ல  #OneByOne என்ற திட்டத்தை தொடங்கினர்.
அமெரிக்காவில், பெண்கள் புலனாய்வு இதழின் பொற்காலத்தை வழிநடத்துகிறார்கள் – 2018இல் நடைபெற்ற  #WomenWhoDare என்ற தலைப்பிலான கலந்துரையாடல் தொடரின் விவாதம்.
இரண்டு அமெரிக்க பேராசிரியர்களால் எழுதப்பட்ட, “Data Feminism” என்ற புத்தகமானது  “தரவு அறிவியல் மற்றும் தகவல் தொடர்புத் துறையில் எப்படி பெண்ணிய சிந்தனைகள்” பயன்படுத்தப்படலாம் என்பதைப் பார்க்கிறது. இக்கையெழுத்துப் பிரதி, தற்போது சக மதிப்பாய்வு மற்றும் கருத்துகளுக்காக முன்வைக்கப்பட்டிருக்கும் அதேவேளை, தரவு இதழியலின் பல எடுத்துக்காட்டுகளையும்  கொண்டுள்ளது.  மேலும் இது “பல்வேறு வகையான கட்டமைப்பு ஏற்றத்தாழ்வுகள் மற்றும் அதிகார ஏற்றத்தாழ்வுகளை சவால்விடுக்கும் வண்ணம் ” தரவுகளைப் பயன்படுத்துகிறது.
உலகெங்கிலும் பாலினம், பாலியல் மற்றும் சமூக நீதியை உள்ளடக்கிய OpenDemocracy நிறுவனத்தின் சுதந்திர ஊடகங்களுக்கான 50.50 திட்டத்திலிருந்து ஆசிரியர்களால் நிர்வகிக்கப்படும் “நமக்கு ஏன் பெண்ணிய புலனாய்வு இதழ் தேவை” என்ற குழுவின் வீடியோவினை  இங்கே காணலாம். சமீபத்தில் 50.50 இயக்கம் பாலியல் மற்றும் இனப்பெருக்க உரிமைகளுக்கு எதிராக பழமைவாத மற்றும் அடிப்படைவாதக்கருத்துக்களை கொண்டிருக்கும்  குழுக்களின் வலையமைப்புகளை  தோண்டியெடுக்கும் ஒரு கண்காணிப்பு திட்டமான Tracking the Backlash என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
Refuge Woman என்பது இங்கிலாந்தின்The Bureau of Investigative Journalism in the UK,  என்ற நிறுவனத்தின் ஒரு தனித்துவமான திட்டமாகும், இது வீட்டு வன்முறை பற்றிய ஒரு புலனாய்வுச்செய்தி அறிக்கையிடலை பேசுபொருளாக முன் கொண்டு வந்தது.
இந்த வளங்களின் தொகுப்பை ஒருங்கிணைத்த GIJN பங்களிப்பு ஆசிரியர் கிரா ஜலானுக்கு (Kira Zalan) நன்றி. பெண் பத்திரிகையாளர்களுக்கான வேறு ஏதாவது வளங்களை நாம் சேர்க்க தவறியுள்ளோமா?  தயவுசெய்து உங்கள் பரிந்துரைகளை எங்களுக்கு மின்னஞ்சல் மூலம்  அனுப்புங்கள், நாங்கள் இப்பட்டியலை மேலும் விரிவாக்குவோம்.
மேலதிக வாசிப்பு வளங்கள்
·        Investigating Femicide: A GIJN Guide
·        Freelancing: Safety and Security
·        Fundraising: Essential Reading
மூலம்
This story was originally published by the Global Investigative Journalism Network (GIJN)

වනජීවී – මිනිස් ගැටුම: ගැටළු, විසඳුම් සහ කළමනාකරණය

නොනවතින වනජීවී – මිනිස් ගැටුම පිළිබඳ විවිධ මානයන් සාකච්ඡාවට ගැනෙන හරිත සංවාදය 2021 ඔක්තෝබර් 16 දින ප.ව. 6.00 සිට පෙ.ව. 7.30 දක්වා පැවැත්වේ. මෙහිදී විශේෂයෙන්ම පරිසර විද්‍යාත්මක පැතිකඩ මෙන්ම කෘෂි ආර්ථික සහ සමාජමය බලපෑම් සහ තිරසර කළමනාකරණ ප්‍රවේශයන් සම්බන්ධයෙන් අවධානය යොමු කෙරේ.මෙම සංවාදයේ ප්‍රධාන සම්පත් දායකයන් වශයෙන්

  • සත්ත්ව විද්‍යාඥ, ශ්‍රී ලංකා විවෘත විශ්ව විද්‍යාලයේ ජ්‍යෙෂ්ඨ කථිකාචාර්ය, ආචාර්ය කාලිංග පද්මලාල්
  • සත්ත්ව විද්‍යාඥ, ශ්‍රී ලංකා විවෘත විශ්ව විද්‍යාලයේ බාහිර කථිකාචාර්ය, ආචාර්ය ජිනී දෑල,
  • වනජීවී සංරක්ෂණ දෙපාර්තමේන්තුවේ අධ්‍යක්‍ෂ (මෙහෙයුම්) රංජන් මාරසිංහ

සහ

  • ශ්‍රී ලංකා ප්‍රතිපත්ති අධ්‍යයන ආයතනයේ පර්යේෂක/ ප්‍රධානී  (කෘෂිකාර්මික ආර්ථික ප්‍රතිපත්ති), ආචාර්ය මනෝජ් තිබ්බොටුවාව

දායකත්වය සපයනු ලැබේ.

විමර්ශනාත්මක වාර්තාකරණ මධ්‍යස්ථානය විසින් සංවිධානය කරනු ලබන මෙම හරිත සංවාද මාලාව හරහා වත්මන් පරිසර සංරක්ෂණ සාකච්ඡාවන් තුළ මග හැරෙන ආන්තික පරිසර සහ සමාජ පදනම් වාර්තාකරණය දිරි ගැන්වීම අරමුණු කෙරේ. Earth Journalism Network සහ Internews විසින් මෙම වැඩසටහන සඳහා අනුග්‍රාහක දායකත්වය සපයනු ලැබේ.මෙම සංවාදය Zoom හරහා විවෘත සංවාදයක් ලෙස සංවිධානය කෙරෙන අතර ෆේස්බුක් හරහා සජීවීව විකාශය කෙරේ.